Wednesday, May 22, 2019

JUDGMENT



மயக்கமா கலக்கமா
J K SIVAN


குப்புஸ்வாமி- கோகிலா விவாகரத்து வழக்கு நீதிபதி நடராஜன் முன் அன்று விசாரணைக்கு வந்தது.

வக்கீல்கள் பேசி முடித்தார்கள். நீதிபதி நடராஜன் கோகிலாவை பார்த்தார்.

அவளும் அவரை சிரித்துக்கொண்டே பார்த்தாள் . இந்த சம்பாஷணை ஆங்கிலத்தில் கொஞ்சம் சேர்த்து சொன்னால் ரசிக்கமுடியும்

'' எந்த கிரௌண்ட் (GROUND) மேல் நீங்கள் விவாகரத்து தொடர்கிறீர்கள்? ஆங்கிலத்தில் கேட்டார்.

'' எங்க கிரௌண்ட் பெரிசுங்க 4 ஏக்கர் நிலம் தோட்டம் நடுவிலே தான் எங்க பண்ணை வீடு, சுத்தி ஆறு ஓடும் '

" அடடா, நான் கேக்கலேம்மா, என்ன பவுண்டேஷன் லே (FOUNDATION ) ஆதாரத்திலே உங்க வழக்கு இருக்கீங்க? ன்னு கேட்டேன்.

" அது எங்கப்பாரு காலத்திலேயே கட்டினது.ஸ்ட்ராங் பவுண்டேஷன்ங்க - கான்க்ரீட், செங்கல் கலவை சுத்தமா மேஸ்திரி வச்சு பக்கத்திலே நின்னு கட்டின வீடுங்க..''என்றாள் கோகிலா .

'' ஐயோ, நான் அதை கேக்கலீங்கம்மா, உங்க ரிலேஷன்ஸ் (RELATIONS ) எப்படின்னு தான் கேட்டேன்? புரியுதா?

" ரிலேஷன்ஸ் க்கு என்னா பஞ்சம். பன்னிரண்டு பேர் எப்போவும் இருப்பாங்க.அத்தை, மாமா, பெரியப்பா, அவங்க பிள்ளைங்க பொண்ணுங்க, குழந்தைங்க .... வச வசன்னு வீடு .நிறைய.. போதாததுக்கு எங்க ஊட்டுக்காரருக்கு சொந்தக்காரங்க வேறே.''

'' எனக்கு என்ன கேக்கறதுன்னே . தெரியலே. உங்களுக்கு ஏதாவது கிரட்ஜ் (GRUDGE ) கம்பளைண்ட் இருக்குதா.

'' இல்லீங்களே.எப்பவும் வீட்டுலே ரெண்டு கார் நிக்க கார் பார்க் இருக்குதே. கார் கீர் எதுவும் தேவைன்னு குறையே இல்லையே.

''தயவு செயது சரியா சொல்லுங்க. INFIDELITY (மறைத்த துரோகம்) ஏதாவது மண வாழ்க்கைலே இருக்குதுங்களா''?'' நீதிபதி நடராஜனுக்கு வியர்த்து போய் விட்டது.

"ஹைபி HIFI ன்னு பசங்க பொண்ணு பிள்ளைல்லாம் சொல்வாங்களே பெரிசா சத்தம்போட்டு வீடெல்லாம் அதிரும் ஸ்டீரியோ பாட்டு போடுவாங்க. எனக்கு பாட்டே புடிக்காது. காரே மூரே ன்னு கத்தும். இந்த கால பசங்கன்னா அப்படித்தான்.

"அம்மா, உங்களை புருஷன் இப்பன்னா பீட் (BEAT ) அடிப்பது, பண்ணி இருக்கிறாரா?

''. ஹுஹும். அவரை என்னாலே பீட் பண்ண முடியாதுங்க. எனக்கு முன்னாலே எழுந்து டுவாரு காப்பி போட்டு குடிப்பாரு எனக்கு வச்சிருப்பாரு.

''இனிமேயும் எனக்கு பொறுமை இல்லை. நான் செத்தேன். ''எதுக்கும்மா நீ டிவோர்ஸ் DIVORCE கேக்கறே?

" அது இன்னாங்க அப்படி கேக்கறீங்க. நான் எங்க கேட்டேன். அவரு தாங்க எப்போவும் எனக்கு டிவோர்ஸ் வேணும் உன்னோடு பேசவே என்னாலே முடியலேங்கறாரு''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...