Wednesday, May 22, 2019

lalitha sahasranamam

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(695-713) - J.K. SIVAN

दीक्षिता दैत्यशमनी सर्वलोक-वशङ्करी ।
सर्वार्थदात्री सावित्री सच्चिदानन्द-रूपिणी ॥ १३६॥

Deekshitha Dhaitya Shamani Sarva loka vasam kari
Sarvartha Dhatri Savithri Sachidananda Roopini

தீக்ஷிதா தைத்யஶமனீ ஸர்வலோக வஶங்கரீ |
ஸர்வார்த்ததாத்ரீ ஸாவித்ரீ ஸச்சிதானந்த ரூபிணீ || 136 ||

देश -कालापरिच्छिन्ना सर्वगा सर्वमोहिनी । सरस्वती शास्त्रमयी गुहाम्बा गुह्यरूपिणी ॥ १३७॥
Desa kala parischinna Sarvaga Sarva mohini
Saraswathi Sasthra mayi Guhamba Guhya roopini

தேஶகாலா‌பரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினீ |
ஸரஸ்வதீ ஶாஸ்த்ரமயீ குஹாம்பா, குஹ்யரூபிணீ || 137 ||

सर्वोपाधि-विनिर्मुक्ता सदाशिव-पतिव्रता । सम्प्रदायेश्वरी साध्वी गुरुमण्डल -रूपिणी ॥ १३८॥
Sarvo padhi vinirmuktha Sada Shiva pathi vritha
Sampradhayeshwari Sadhu Ee Guru mandala roopini

லலிதா ஸஹஸ்ரநாமம் - (695- 713 ) அர்த்தம்

* 695 * தீக்ஷிதா - பக்குவப்பட்ட சிஷ்யனுக்கு, குரு தக்க சமயத்தில் சன்யாசம் பெற மந்த்ரோபதேசம் வழங்குவது தீக்ஷை. தீக்ஷை பெற்ற சீடன் புது நாமகரணம் பெறுவான். சந்யாசிகள் ... ..........ஆனந்தா'' என்ற பெயர் பெறுவார்கள். ஸ்ரீவித்யா உபாசனையில் புதிய உபாசகர்களுக்கு குரு வாக, குருமூலமாக அம்பாள் தீக்ஷை அருள்கிறாள்.

* 696 * தைத்யஶமனீ - சமனம் என்றால் மிதப்படுத்துவது, கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவது. மற்ற தீய சக்திகளை, பிற தேவதைகளை அடக்குபவள் ஸ்ரீ அம்பாள் எத்தனை கொடிய ராக்ஷஸர்களை அழித்தவள் . அம்பாள். நம்முள்ளே இருக்கும் ஆசா பாசங்கள், மோகங்


கள், தாபங்களை அழிப்பவளும் கூட.

* 697 * ஸர்வலோக வஶங்கரீ - ஈரேழு புவனத்தையும் தன்னதிகாரத்தில், கட்டுப்படுத்தி ஆள்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை. காயத்ரி மந்திரம் ஓம் பூர் , புவ , சுவ, ஜன, தப, சத்ய என்று லோகங்களை வெல்லும் சக்தியை தானே சொல்கிறது.

* 698 * ஸர்வார்த்ததாத்ரீ - சகல சர்வ சம்பத்துகளும் அளிப்பவள் ஸ்ரீ லலிதை.

* 699 * ஸாவித்ரீi - தக தக என்று பூரண ஒளி கொண்ட சூர்யநபி போல் ஜொலிப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை.

* 700 * ஸச்சிதானந்த ரூபிணீ - முடிவான, அசைக்க முடியாத மாறாத சத்யம் ஆகியவற்றின் ஸ்வரூபமானவள் ஸ்ரீ அம்பாள். ஒரே வார்த்தையில் சொன்னால் பரப்பிரம்மம்.

*701*தேஶகாலா‌பரிச்சின்னா - அம்பாள் ஸ்ரீ லலிதைக்கென்று குறிப்பிட்ட காலமோ, நேரமோ, தேசமோ இல்லை. சர்வமும் கடந்தவள் . எல்லாமும் என்றும் தானே ஆனவளுக்கு காலம் எது,ஏது? his yoga sūtra

*702* ஸர்வகா - யாதுமானவள் அம்பாள். எங்குமிருப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை. எதுவுமாக இருப்பவள் ஸ்ரீ அம்பிகை. ஈசாவாஸ்ய உபநிஷத் (5) “asya sarvasya antaḥ, asya sarvasya bāhyataḥ” ''எதிலும் அந்தர்யாமியாக பரிணமித்து இருக்கும் அந்த ப்ரம்மம் எதிலும் எங்கும் பகிரண்டமாக காண்கிறது '' . அம்பாள் பரப்பிரம்மம்.

*703* ஸர்வமோஹினீ - காணும் யாவையும் அவள் அடிமையாக கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவள் அம்பாள். மாயையை தன்னுள் அடக்கி, செயல்படுத்துபவள் ஸ்ரீ லலிதை. ஸ்ரீ தேவி மஹாத்ம்யத்தில் 1.55 ஒரு ஸ்லோகத்தில் ''மஹா மாயா,..... ஞானிநாமபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா ..'' என்று வரும். மகா மாயையாக தோற்றமளித்து ஸ்ரீ பகவதி தேவி, ஞானிகளின் மனதையும் ஆட்டுவிப்பவள்..''

*704* ஸரஸ்வதீ - வித்யா சம்பன்ன நாயகி . ஞான காரிணி. ஞானஸ்வரூபி தான் சரஸ்வதி. கலைக்கடவுள்.

*705* ஶாஸ்த்ரமயீ - சகல ஸாஸ்த்ரங்களாக காண்பவள். புரிபடாத மாயாரூபிணியாக ஆள்பவள். சாந்தோக்ய உபநிஷத் (III.14.1) என்ன சொல்கிறது: ''சர்வம் கல்விதம் ப்ரஹ்ம '' அதாவது ''என்ன சந்தேகம், எல்லாமே ப்ரஹ்மம் தானே ''

*706* குஹாம்பா, - மறைந்து இருப்பது என்று ஒரு பொருள். சுப்பிரமணியன் அவன் தாய் அம்பா இருவரையும் இணைந்து போற்றப்பட்ட நாமம். கதோபநிஷத் (I.iii.1) ல் மனமெனும், இதயமெனும், புத்தியெனும் மறை பொருளில் உறைவது எதுவோ அது ... ப்ரம்மம் ...

*707* குஹ்யரூபிணீ - மேலே சொன்ன நாமத்தின் தொடர்ச்சியாக இந்த நாமம் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை மறைபொருளாக , ஹ்ருதய குகையில், புத்தியின் அஸ்திவாரமாக உறைகிறாள் என்று விளக்குகிறது.

*708* ஸர்வோபாதி வினிர்முக்தா - எந்த விதமான எல்லைகளும் கட்டுப்படுத்தாதவள் ஸ்ரீ அம்பாள். இதை உபாதி என்பார்கள். உபாதி அற்றவள். அருகில் காணப்படும் வாஸ்துவின் குணத்தை பற்றிக்கொள்வதும் உபாதி ஆகும். சிவன் ஒருவனே அம்பாளின் அருகே இருப்பவன். அவனது குணங்கள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்பவள் அம்பாள் என்பதும் பொருத்தம் தானே. சிவன் வேறு சக்தி வேறு இல்லையே.

*709* ஸதாஶிவ பதிவ்ரதா- இந்த நாமம் எளிதில் அற்புதமாக புரியுமே. விளக்கம் தேவையா? சிவனுக்கு பல நாமங்கள் ரூபங்கள், பக்தர்கள் விரும்பும் வண்ணம் தோன்றுபவன். எப்போதும் ஆனந்த , மங்கள, ஸ்வரூபமாக இருப்பவன் சதாசிவன். சிவனின் சகல ரூபங்களிலும் மிக உயர்வானது சதாசிவ ஸ்வரூபம். சிவசக்தி தத்துவத்தில் 34வது தத்வம் சதாசிவம். இதற்கு அடுத்தவையாகத்தான் சிவனும் சக்தியும் அமைந்து மொத்தம் 36 தத்வங்களாகிறது. இந்த நாமம் நிர்குண பிரம்மத்தை சகுண பிரம்மமாக உணர்த்துகிறது.

*710* ஸம்ப்ரதாயேஶ்வரீ -- வழக்கமாக, பழக்கத்தில் மாறாமல் பின்பற்றி வரப்படுத்துவது தான் சம்ப்ரதாயம். ஞானம் சடங்குகளாலும், சாஸ்த்ரனுபவத்தாலும் அறியப்படுவது, பெறப்படுவது. இதற்கெல்லாம் தலைவியாக கண்காணித்து வருபவள் ஈஸ்வரி. அம்பாள் ஸ்ரீ லலிதை.

*711 ஸாது - ஸாத்வி என்கிற நாமத்தை ரெண்டாக பகுத்து சாது + ஈ என்று விளக்கம் தரப்படுகிறது. இப்படி பிரிப்பதை புனருக்தி தோஷம் என்பார்கள். ஸாது என்றால் பல அர்த்தங்கள் உண்டு., பேசாமல் தொந்தரவு பண்ணாமல் இருப்பது மட்டும் தான் நமக்கு தெரிந்தது. பிரம்மத்தை மாயை மறைக்கிறது. சக்தி சம்பூர்ணமாக இருப்பது ஸாது என்கிற பதத்தில் வரிகுறது.

*712* ஈ: - ஈ என்பது காமகலாவை சுட்டுகிற நாமம். இ என்று முடியும் அக்ஷரம் சக்தியை குறிக்கும்.

*713* குருமண்டல ரூபிணீ - அம்பாளுக்கு காமகலா என்று ஒரு நாமம் உண்டு அல்லவா. அதை தொடர்ந்து விளக்கும் நாமம் இது. இந்த பெயருக்கு எத்தனையோ மஹான்கள் வெவ்வேறு வ்யாக்யானங்கள் சொல்வார்கள். குரு மண்டலம் என்றால் குருவை அனுசரித்து பின் தோன்றும் பாரம்பரியத்தையும் குறிக்கும். சூரியனைச் சுற்றி அதன் பிரகாசம் பல யோசனை தூரத்துக்கு பறந்து காணப்படவில்லையா அது போல. குருவின் ஞானத்தை பரப்பும் சிஷ்யகோடிகள் போல அம்பாளின் சக்தி வியாபித்து இருக்க உதவும் பிற தேவதைகள் பற்றியும் குறிக்கிறது. அதாவது தானே பலவாக அவள் அருள்வது பற்றியும் இது குறிப்பிடுகிறது.

சக்தி பீடம்: தாரிணி பர்வதம்
ஒரிசா மாநிலத்தில் கஞ்சம் ஜில்லா இருப்பது அநேகருக்கு தெரியும். அதில் பிரம்மபுரி என்று ஒரு நகரம் உள்ளது. இதை இப்போது பெர்ஹாம்பூர் என்று மாற்றி அழைக்கிறோம். அதன் அருகே ருஷிகுல்யா என்கிற நதி ஓடுகிறது. இந்த நதியை சரஸ்வதி நதியின் சகோதரி என்று சொல்வார்கள். அந்த நதிக்கரையில் அருகே ஒரு சிறிய குன்று உள்ளது. அந்த குன்றின் பெயர் குமரி மலை. அந்த மலையின் மீது அமைந்துள்ள அற்புதமான சக்தி ஆலயத்தின் பெயர் தாரா தாரிணி அம்மன் ஆலயம். மிக புராதனமான ஒரு சக்தி பீடம். இந்த பிரதேசத்தில் முக்கியமான நான்கு தந்த்ர உபாசன , சக்தி பீடங்களில் ஒன்று. நான்கு முக்கிய சக்தி பீடங்கள் என்று சொன்னது 1. தரதாரிணி அம்மன் ஆலயம் (ஸ்தன காண்டம் ) இது பிரம்மபுரியில், 2 பிமலா தேவி ஆலயம் , பாத காண்டம் ) பூரி ஜகன்னாதர் ஆலயத்தில், 3. காமாக்யா தேவி (யோனி காண்டம்) இது கௌஹாத்தி அருகே உள்ளது. 4. தக்ஷிண காளிகா தேவி ஆலயம் . (முக காண்டம்) இது கொல்கத்தாவில் உள்ள காளி கோவில். மொத்தத்தில் 52 மற்ற சக்தி பீடங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. எல்லாமே மாத சதியின் உடலிலிருந்து தெறித்து விழுந்த பாகங்கள் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன்.

தாரா தாரிணி அம்மன் ரெட்டையாக தாரா, தாரிணி என்ற பெயரில் இரு கற்சிலையாக வடிக்கப்பட்ட உருவம். தங்க வெள்ளி ஆபரணங்கள் சாற்றி இருக்கிறார்கள். பித்தளையில் இரு தலைகள் அம்மனின் வடிவங்களாக இந்த இரு சிலைகளின் இடையே ஸ்தாபிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. ஒரிசாவில் பிரம்மபுரியிலிருந்து சுமார் 30 கி.மீ. கிழக்கே சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். குமரி மலை என்று சொன்னேனே அதற்கு இன்னொரு பெயர் தாரிணி பர்வதம். மஹா பாரத யுத்தத்தின் போது அர்ஜுனனை இந்த ஆலயத்துக்கு சென்று அம்மனை வேண்டிக்கொள். வெற்றி நிச்சயம் என்று கிருஷ்ணன் அனுப்பின ஸ்தலம்.
அசோகரால் கலிங்கம் போரில் ஜெயிக்கப்பட்டு, புத்த பிக்ஷுக்கள் கலிங்க தலைநகர் ஸமாபாவில் மலிந்தனர். அது தாரிணி ஆலயத்திலிருந்து 7 கி.மீ. தூரம் தான். தாரா என்பதே பௌத்த வார்த்தை என்கிறார்கள்.
ஆரம்பத்தில் மஹாயான பௌத்த மதம் கலிங்கப்போருக்கு முன்னால் சிலை வழிபாட்டில் ஈடுபட வில்லை. பிறகு கலிங்கத்தில் தாரிணி அம்மன் அவர்களை கவர்ந்தாள் . பௌத்தர்கள் தாந்த்ரீக சாஸ்திரம் கற்றார்கள். தாரிணியை வழிபட்டார்கள்.

இந்த ஆலயத்தை பற்றி ஒரு சின்ன கதை. 17ம் நூற்றாண்டில் ஒருநாள் இரவு பாசு ப்ரஹராஜ் என்பவர் வீட்டு கதவை யாரோ தட்ட, திறந்து பார்த்த பாசு ரெண்டு பெண்கள் நிற்பதை பார்த்து வீட்டுக்குள் அழைக்கிறார். பாசு, நன்றாக வேதம் கற்ற பிராமண அம்பாள் பக்தர். புத்ர பாக்யம் இல்லாதவர். ஜெகந்நாத பூர் கிராமத்தை சேர்ந்தவர். சிலகாலம் அவர் வீட்டில் அந்த இரு பெண்களும் விருந்தாளிகளாக வசிக்கிறார்கள். சில வருஷங்கள் கூட ஓடிவிட்டது. ஒருநாள் அவர்கள் பாசுவின் வீட்டை விட்டு செல்கிறார்கள். அந்த இரு பெண்களும் பாசு வீட்டிலிருந்து தாரிணி பர்வதம் சென்றதை சில கிராமத்தார்கள்கள் பார்த்ததாக சொல்கிறார்கள். அங்கே அவர்கள் தாரிணி சந்நிதியில் மறைந்ததாக சிலர் கூறினார்களாம்.
பாசு அவர்களைத் தேடி சென்று இதெல்லாம் அறிகிறார். அடாடா அம்பாள் அல்லவோ தாரா தாரிணியாக நம் வீட்டிற்கு வந்து சில வருஷங்கள் வாழ்ந்து அருளினார்கள் என்று அறியாமல் போய்விட்டோமே என்று வருந்துகிறார். அவர்களை வரவேற்று உபசரித்த சந்தோஷம். அன்றிரவு அவர் கனவில் தாரிணி அம்மன்.
நாங்கள் உன் பெண்களாக வந்து மகிழ்ந்தோம். இனி நீ இந்த கோவிலை தாரிணி பர்வதத்தில் புனருத்தாரணம் செய்து பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்க வழி செய்'' என்கிறாள், அதற்கு பிறகு பாசு தாரிணி பர்வதத்தில் இப்போதுள்ள ஆலயத்தை நிறுவி, சாஸ்த்ரோக்தமாக மந்த்ர தந்த்ர பூஜைகளோடு அதை ஒரு சிறந்த சக்தி பீடமாக அமைத்து அம்பாள் வழிபாட்டுக்கு ஏற்பாடு செயகிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...