Friday, May 31, 2019

ADHI SANKARA


ஆதி சங்கரர் 
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் 

                        
                          2    மௌனம் ஸர்வார்த்த சாதகம். 


चित्रं वटतरोर्मूले वृद्धाः शिष्या गुरुर्युवा ।
गुरोस्तु मौनं व्याख्यानं शिष्यास्तुच्छिन्नसंशयाः ॥३॥

Citram Vata-Taror-Muule Vrddhaah Shissyaa Gurur-Yuvaa |
Guros-Tu Maunam Vyaakhyaanam Shissyaas-Tuc-Chinna-Samshayaah ||3||

சித்ரம் வடதரோர்மூலே வ்றுத்தாஃ ஶிஷ்யாஃ குருர்யுவா |
குரோஸ்து மௌனவ்யாக்யானம் ஶிஷ்யாஸ்துச்சின்னஸம்ஶயாஃ ||

இது நம்பமுடியாத ஒரு அதிசயம் அல்லவா?  அதோ அந்த  பெரிய  கல் ஆலமரத்தினடியில் ஒரு இளம் வயதுக்காரர் போல்  தோன்றும் குரு.  ஞானம் முகத்தில் ஒளி வீசுகிறது. அவருக்கு எதிரே  வயதான, வயது முதிர்ந்த  ரிஷிகள் சிலர்  சிஷ்யர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.  அந்த  இளம் குரு  தெற்கு நோக்கி அமர்ந்தவராக,   வெறும் ஜாடையாக கையில் ஒரு முத்திரை பிடித்து காட்டுகிறார்.   அவர்களை நோக்குகிறார்.  அந்த சிஷ்யர்களோடு  அவர்  எதுவும்  பேசவில்லை,  அவர்களும் எதுவும் கேட்கவுமில்லை.  ஆனால் அந்த முதிய சிஷ்யர்கள் தங்கள் மனதில் எழுந்த ஐயங்கள், சந்தேகங்கள்  அனைத்தும் தீர்ந்ததை, மனம் தெளிவடைந்ததை உணர்கிறார்கள்.  மௌனத்திற்கு இவ்வளவு சக்தியா? ஆமாம் என்பதை  நமது வாழ்வில்  சமீபத்தில் ஒரு வெள்ளைக்காரர் தனது சுய அனுபவத்தில் அனுபவித்ததை மறந்து விட்டீர்களா?  திருவண்ணாமலையில்  ஸ்ரீ ரமணரை  சந்திக்க சென்ற  பால் ப்ரண்டன் என்ற வெள்ளையர், 30க்கு மேல் கஷ்டமான கேள்விகளை எழுதிக்கொண்டு  அவற்றை ராமணரிடம் கேட்டு அவர் பதில் பெற்று  அவர் ஒரு  யோகி /ஞானி என்று  தீர்மானிக்க தயாரானார்.  ரமணர்  அமர்ந்த அவரை  ரமணரின் கண்கள் சந்தித்தன.  அரைமணி முக்கால் மணி நேரம் அசையாமல் அமர்ந்து அவரை  பால் ப்ரண்டன்  கடைசியில்  எந்த கேள்வியும் அவரிடம் கேட்கவில்லை.  அருகில் இருந்தவர் கேட்டதற்கு, என் கேள்விகளுக்கெல்லாம்  சரியான விடை கிடைத்து விட்டது என்று எழுதினார் .
மௌனம் ஸர்வார்த்த சாதகம் என்று  நமது  முன்னோர் அனுபவித்து தான்  சொல்லி இருக்கிறார்கள்.

निधये सर्वविद्यानां भिषजे भवरोगिणाम् ।
गुरवे सर्वलोकानां दक्षिणामूर्तये नमः ॥४॥

Nidhaye Sarva-Vidyaanaam Bhissaje Bhava-Roginnaam |
Gurave Sarva-Lokaanaam Dakssinnaamuurtaye Namah ||4||

நிதயே ஸர்வவித்யானாம் பிஷஜே பவரோகிணாம் |
குரவே ஸர்வலோகானாம் தக்ஷிணாமூர்தயே னமஃ ||

தக்ஷிணாமூர்த்தே, நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்து  கொள்ளவேண்டிய அனைத்து சாஸ்திர, உண்மைகளும்  கல்வி கேள்வி ஞானம் அனைத்தும்  தன்னுள் கொண்ட ஒரு  அரும்  பெரும் பெட்டகம். இந்த  சம்ஹார  சாகரத்தில் விளையும்  சர்வ வியாதிகளையும்  குணமாக்கும், நோய்  தீர்க்கும் அருமருந்து. விஸ்வநாதன்  வைத்யநாதன் அல்லவா? ஈரேழு லோகங்களுக்கும்  குரு, ஆசான்,   உங்களுக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம்.  

ॐ नमः प्रणवार्थाय शुद्धज्ञानैकमूर्तये ।
निर्मलाय प्रशान्ताय दक्षिणामूर्तये नमः ॥५॥

Om Namah Prannava-Arthaaya Shuddha-Jnyaanai[a-E]ka-Muurtaye |
Nirmalaaya Prashaantaaya Dakssinnaamuurtaye Namah ||5||

ஓம் நமஃ ப்ரணவார்தாய ஶுத்தஜ்ஞானைகமூர்தயே |
நிர்மலாய ப்ரஶாம்தாய தக்ஷிணாமூர்தயே நமஃ ||

ஹே  தக்ஷிணாமூர்த்தே,  ஓமெனும் ப்ரணவ மந்திரத்தின்  வடிவமே, உருவமே,  பரிசுத்தமான இரண்டற்ற  அத்வைத ஞான ஸ்வரூபமே, பரிபூர்ண  ஆனந்த மயமே, பளிங்குபோல  ஞான ஒளி வீசும் மௌன சிகரமே, உங்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.


चिद्घनाय महेशाय वटमूलनिवासिने ।
सच्चिदानन्दरूपाय दक्षिणामूर्तये नमः ॥६॥

Cid-Ghanaaya Mahe[aa-Ii]shaaya Vatta-Muula-Nivaasine |
Sac-Cid-Aananda-Ruupaaya Dakssinnaamuurtaye Namah ||6||

சித் கணாய மஹேஶாய வடமூலநிவாஸினே |
ஸச்சிதானந்த  ரூபாய தக்ஷிணாமூர்த்தயே நமஃ ||

ஹே  தக்ஷிணாமூர்த்தே,   சர்வ சகல உணர்வுகளுக்குமான  உருவமே, ஞான ஸ்வரூபமே,  ஆத்மஞான அடையாளமே,  சர்வ ஈஸ்வரர்களுக்கும் தலைவனான சர்வேசா,  மஹா  ஈஸ்வரா,   கல் ஆல  மரத்தடியில் அமர்ந்த வாறு  ஞான  அலைகளை பரப்பிக்கொண்டிருக்கும் வள்ளலே, எங்கும் எப்போதும் எல்லையில்லா  ஆனந்தத்தில்  அமிழ்ந்திருக்கும் மஹேஸ்வரா, உங்களை  சாஷ்டாங்கமாக  விழுந்து வணங்குகிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...