Saturday, May 18, 2019

ARUPATHTHU MOOVAR

அறுபத்து மூவர் J K SIVAN
திருநாவுக்கரசர் - 2
2. நாமார்க்கும் குடியல்லோம்.

ஹிந்துக்களின் எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு தனித்துவம் ஏதாவது ஒன்று இருக்கும். அது நமது முன்னோர்களின் அருமை. நமக்கு தருகின்ற பெருமை. சிற்பக்கலை, சித்திரக்கலை, , கட்டிடக் கலை, இயற்கை பொலிவு, இசை மாண்பு, இதெல்லாம் கலந்த பக்தி தத்வம், புராண சிறப்பு, பண்பாடு, சரித்தி




ர புகழ் ஏதாவது நிச்சயம் இருக்கும்.

அப்பர் எனும் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழகத்தில் பக்தியை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர். இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால், சைவர்கள் அனைவருக்கும், ஹிந்துக்கள் பெரும்பாலோருக்கும் அவர் அப்பர்.
சமண மதத்தை நாடி சைவத்தை துறந்த அவரை மீண்டும் சைவனாக்கி நமக்கு அப்பராக கொடுத்த ஒரு ஆலயம் திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் ஆலயம். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்.. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற ஸ்தலம்.

இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை எனும் ஊர் இருக்கிறது. அங்கு தான் எட்டு வீர சைவக்கோவில்களுள் ஒன்ரான வீரட்டானேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பரமேஸ்வரன் சம்பந்தருக்கு திரு நடனம் புரிந்து காட்டினான். அப்பரின் சூலைநோய் நீக்கினான். திரி புரத்தை ஈசன் எரித்த இடம்.

ஒரு விஷயம்.இன்றும் இந்த ஸ்தல சித்தி விநாயகரை தொழுது அவரது விபூதி, தீர்த்த பிரசாதம் உண்பவர்கள் வயிற்று வலி (அல்சர்) உபாதைகள் தீருகிறது என்று எண்ணற்ற பக்தர்கள் ஓடிவருகிறார்கள். வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்று நம்பிக்கை.

அப்பர் 49000 தேவார பாடல்கள் அவர். அவரது முதல் பாடல் இறைவன் அருளால் தோன்றிய ஸ்தலம் இது.
நான் இந்த ஆலயத்தை தரிசிக்க யாத்திரை சென்றபோது பிரம்மாண்டமான இந்த ஆலயத்தின் முகப்பில் ஒரு புத்தர் சிலை பெரிதாக அமர்ந்த நிலையில் கண்டேன். என்னைப் பொறுத்தவரை அதை சமணர் சிலையாக தான் கலருதினேன்.சமணர் தர்மசேனராக உள்ளே நுழைந்த மருணீக்கி அப்பராக, திருநாவுக்கரசராக மாறிய சைவனான இடம். என்பதால் . சமணர்கள் புத்தர்கள் போல் இருக்கிறார்கள். சென்னை யாரும் பொருள் காட்சி நிலையத்தில் நிறைய சமணர், புத்தர் சிலைகள் உள்ளன. மஹாவீரரை புத்தராக கண்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன்.

திருவீரட்டானேஸ்வரர் ஆலயம் பல்லவ காலத்து 7 ஏக்கர் பரப்பு நிலம் கொண்ட கோவில். கோவிலை ஒட்டி கெடிலநதி ஓடுகிறது. மணல் கொள்ளை இல்லாத ஒருகாலத்தில் நிறைய நீர் இருந்தது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு முந்தையது. இந்த ஆலயத்தை பார்த்துவிட்டு தான் ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில் கட்டினான் என்று பேச்சு.
கிழக்கு பார்த்த 7 நிலை கோவில். ராஜகோபுரத்தில் 7 கலசம். அபூர்வ சிற்பங்களை கொண்ட ஆலயம். 16 பட்டை கொண்ட ஷோடச ஸ்வயம்பு லிங்க மாக வீரட்டானேஸ்வரர் அருள் பாலிக்கிறார். அம்பாள் இங்கே பிரஹந்நாயகி, பெரிய நாயகி.
திரிபுராந்தகனை சம்ஹாரம் செய்ய சிவபெருமான் ரத்தத்தில் வந்து இங்கு அவனை தீர்த்ததால் ஆலயம் தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது ஒரு அதிசயம்.

இதுவரை சமணமதத்தில் தர்ம சேனனாக சமண மதத்தை பரப்பியவன் திருவதிகையில் ஓரே ராத்திரியில் வீர சைவனாக மாறி திருநாவுக்கரசர் என்று பெயரும் மாறி விட்டது என்று அறிந்த சமணர்கள் அரசனிடம் அவன் ஆத்திரத்தைக் கிளப்ப ''மஹாராஜா தர்ம சேனன் ஒரு பெரிய அயோக்கியன், உங்களை பற்றி சென்ற இடமெல்லாம் தவறாக சொல்கிறான். சமணமதத்தை இழிவு படுத்துகிறான். தெற்கே திருவதிகை எனும் ஊருக்கு தப்பி ஓடி நாவுக்கரசன் என்று மாற்றிக்கொண்டு தலைமறைவாக வாழ்கிறான்'' என்று பொய்யுரைத்தனர். கடுங்கோபத்துடன் மகேந்திர வர்ம பல்லவன் இதுவரை தர்மசேனனை நண்பனாக நம்பிக்கைக்குரிய சமணனாக ஆதரித்தவன் படை ஒன்றை அனுப்பி திருநாவுக்கரசரை கைது செய்து கொண்டு வருமாறு அனுப்புகிறான்.
பல்லவனின் மந்திரிகள் திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து ஈசனைதொழுது கொண்டிருக்கும் அப்பரை அழைக்கிறார்கள்.

'' நீ பல்லவ ராஜ்ய பிரஜை, அரசனின் அடிமை. அரசன் கட்டளை. உடனே புறப்படு. தண்டனை காத்திருக்கிறது '' என்கிறார்கள்.

அப்பர் அவர்களை அன்போடு அழைத்து மந்திரியிடம் கீழ்கண்ட பதிலை பதிகமாக பாடுகிறார்

''நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்
நற்சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்
மலர்ச் சேவடி குறுகினோமே

சிவனே கதி அவன் ஆலயத்துக்கு, அடியார்க்கு தொண்டு செய்வதே என் கடன் என்று மாறி விட்ட அப்பர் மஹேந்திர வர்மன் ஆணைக்கு அஞ்சுவாரா?

'' ஐயா, நான் யாருக்கும் அடிமையோ, குடிமகனோ அல்ல, மரணத்தையோ, காலதேவனைக் கண்டு அஞ்சுபவனோ அல்ல,
கூற்றுவனே லக்ஷியம் இல்லை எனும் போது கொற்றவன் எந்த மூலை ,இனி என் இறைவன் பரம சிவன் என்னை தடுத்து நோய் தீர்த்து ஆட்கொண்டுவிட்டபோது எனக்கு புகழோ, பெருமையோ, நோயோ, பயமோ, வேறு எவரிடமாவது அடிமைத்தனமோ, பணிவோ இல்லை. எவருக்கும் கட்டுப்பட்டவராக இல்லாத தான் தோன்றீஸ்வரர், சங்கரரின், அடியாராக உள்ள யாம் அவர் திருமலரடிகளை விழுந்து வணங்குவதின்றி வேறு அறியோம்.''

.இனி அரசன் என்ன செய்தான் என்று பார்ப்போம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...