Thursday, May 30, 2019

DHAKSHINAMURTHY STOTHRAM



ஆதி சங்கரர் 
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் 


                      1  குருவாய் வருவாய்  


मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं
वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।
आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं
स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥

Mauna-Vyaakhyaa Prakattita Para-Brahma-Tattvam Yuvaanam
Varssisstthaam-Te Vasad Rssigannaih Aavrtam Brahma-Nisstthaih |
Aacaarye[a-I]ndram Kara-Kalita Cin-Mudram-Aananda-Muurtim
Svaatmaaraamam Mudita-Vadanam Dakssinnaamuurti-Miide ||1||

ஓம் மௌனவ்யாக்யா ப்ரகடிதபரப்ரஹ்மதத்வம்யுவானம்
வர்ஶிஷ்டாம்தேவஸத்றுஷிகணைராவ்றுதம் ப்ரஹ்மனிஷ்டைஃ |
ஆசார்யேம்த்ரம் கரகலித சின்முத்ரமானம்தமூர்திம்
ஸ்வாத்மராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்திமீடே ||

அத்வைதம் என்றாலே  ரெண்டல்ல  எல்லாம் ஒன்றே.    ஒவ்வொரு ஜீவனுடைய  ஆத்மாவும்  பரமாத்மாவும் ஒன்றே தான் என்று விளக்குவது.  இந்த தத்வத்தை ஆதிசங்கரர்  போதித்தார்.  ஜீவனும்  பிரம்மமும்  வேறல்ல  ஒன்றே  என்று  காட்டும்  முத்திரை தான் சின் முத்திரை.  இதை தான்  தட்சிணாமூர்த்தியாக பரமேஸ்வரன்  கல்லாலமரத்தினடியில் மௌனகுருவாக அறிவிக்கிறார்.  மௌனம் ஒன்றே  சிறந்த  சம்பாஷணை.  மௌனமே ப்ரம்மஞானத்தின்  மொழி.  இதை அறியாத அஞ்ஞானிகளுக்கு  தனது வழியில்  அறியாமையை போக்குகிறார்  ஆதி சங்கரர்.

இந்த  உலகம் சப்தம் நிறைந்தது.  அதை  ஒரு கண்ணாடியில்  பிம்பமாக  பார்க்கிறோமே. சப்தம் கேட்கிறதா. நிசப்தமாக  ஊமைப்படமாக அல்லவோ நகர்கிறது.   ஆனால்  எவ்வளவு  துல்லியமாக நடப்பவை சப்தமில்லாம லேயே உணர முடிகிறது. பரமாத்மாவை  ஆத்மா இப்படித்தான்  மௌனமாக  காட்டுகிறது.   அசந்து தூங்குகிறேன். கனவில் ஒரு பெரிய சண்டை யாரோடு போடுகிறேன்கத்துகிறேன்.  சப்தம் கேட்கவில்லையே. சப்தமில்லாமலேயே   சம்வாதம்.

தக்ஷிணாமூர்த்தே,   ஏன்  நீ  தெற்கு பார்த்து அமர்ந்தாய்?  அது  காலனின் இடமாச்சே. ஓ!  நீ  கால காலன் அல்லவா? சம்ஹார மூர்த்தியே  நீ  என்றாலும் என்ன சாந்தமான முகம். இளம் முறுவல். மௌனம் தானே  சிறந்த பூரண பாஷை.  தன்னில் தானே லயித்து சர்வம் ப்ரஹ்ம மயம்  என்றுணர்ந்து பிரம்மமே யாகி, உன்னிலும் முதிய  ரிஷிகள் (சனகர், சனாதனர், சனந்தனர், ஸநத்குமாரர் )  சுற்றி அமர்ந்து உன்னை உணர்ந்து மௌனத்தில் உன் பரிபூர்ண உபதேசம்  வைத்தவர்கள். தென் திசை  கல் ஆல மரத்தடியில்  கால் மேல் கால் மடக்கி அமர்ந்த கங்காதர ஜடாதரா, ஜீவாத்மா  பரமாத்மா ஒன்றே என்ற அத்வைதத்தை  சொல்லாமல் சொல்கிறதே உன்  சின் முத்ரை.  மௌனம் தருவது தான்  பேரானந்தம்.  பிரம்மமாக அமர்ந்த நீயல்லவோ  சதானந்தன்.  குருவே உனக்கு நமஸ்காரம்.  


वटविटपिसमीपेभूमिभागे निषण्णं
सकलमुनिजनानां ज्ञानदातारमारात् ।
त्रिभुवनगुरुमीशं दक्षिणामूर्तिदेवं
जननमरणदुःखच्छेद दक्षं नमामि ॥२॥

Vatta-Vittapi-Samiipe-Bhuumi-Bhaage Nissannnnam
Sakala-Muni-Janaanaam Jnyaana-Daataaram-Aaraat |
Tri-Bhuvana-Gurum-Iisham Dakssinnaamuurti-Devam
Janana-Maranna-Duhkhac-Cheda Dakssam Namaami ||2||

வடவிடபிஸமீபே பூமிபாகே னிஷண்ணம்
ஸகலமுனிஜனானாம் ஜ்ஞானதாதாரமாராத் |
த்ரிபுவனகுருமீஶம் தக்ஷிணாமூர்திதேவம்
ஜனனமரணதுஃகச்சேத தக்ஷம் னமாமி ||

மௌனம் தானே  சகலத்தையும் சாதிக்க வல்லது.  ஞானத்தின் உச்சமே மோனம். இதை உணர்த்த தான் ஆடாத அசையாத கல் ஆலமரமா!     எல்லா அசைவுக்கும் காரணம் அசையாத நீயா!    இதுதான்  ''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே '' யாதியானத்துக்கு சிறந்த சாதனம் மோனம் என்று ரிஷிகளுக்கும்  உணர்த்தும்  தெய்வமே  உனக்கு நமஸ்காரம்.  பிறப்பிறப்பு  அறுக்கும் பிஞகன்  என அதனால் தானே  உன்னை போற்றுகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...