Monday, September 19, 2022

SURDAS

 ஸூர் தாஸ்   -  நங்கநல்லூர்  J K SIVAN 


இணைபிரியாத ஜோடி 

ஸூர்தாஸ்  இணையில்லாத ஒரு  கிருஷ்ண பக்தர்.  பிறவியிலிருந்தே  ஊனக்கண் இல்லாத  ஞானக்கண் கொண்டவர்.ஆயிரக்கணக்கான கிருஷ்ணன் பஜனை பாட்டுகள் இயற்றியவர்.   அவர் பாடுவதைக்  கேட்டு யாரோ எழுதி வைத்த பாடல்கள் தான் நமக்கு கிடைத்தவை.  அவர் வல்லபாச்சார்யரின் சிஷ்யர்.  பிரிஜ்பாஷா எனும்  மொழியில் தான் அவர் பேசினார் பாடினார்.  அதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்கள்.  கிருஷ்ணன் அருளை முழுதும் பெற்ற  அற்புத பக்தர் ஸூர்தாஸ். பிருந்தாவனம், கோகுலம், மதுரை, த்வாரகா என்று கிருஷ்ணன் வாழ்ந்த இடங்களில் அவனோடு சேர்ந்து அவன் லீலைகளை அனுபவித்து அவற்றை வார்த்தைகளில் படம் பிடித்துக் காட்டுபவர்.

ஸூர்தாஸ் கவிதைகளில் ஒன்று:

मेरो मुख नीको, कि तेरो राधा प्यारी?
दरपन हाथ लिये नंद-नंदना,साची कहो वृषभानु-दुलारी।
हम से कहो, तुम ही क्यों न देखो, हम गोरी तुम श्याम बिहारी,
मेरो मुख जैसो चंदा उजियारो, तुमरो मुख जैसे रैन अंधियारी,
तेरो नयनन में मोटो-मोटो कजरा, हमरे नयन में तुम बनवारी,
तुम तो नख पर गिरिवर धार्यो, हम उर धारि रहे गिरधारी,
सूर श्याम या छवि की शोभा, इन नयनन सो टरत ना टारी।

கிருஷ்ணன் கையில் ஒரு கண்ணாடி. அதில் அவன் முகத்தை பார்க்கிறான். தனியாக அல்ல, ராதையின் முகமும் சேர்த்து. 

''ராதா, நீயே  சொல்லு  நம்  இருவர் முகமும் தெரிகிறதே, யார் முகம்  அழகாக இருக்கிறது?

'கிருஷ்ணா, உனக்கே தெரியுமே,  என் முகம்  பூர்ண சந்திரன் போல,  அது ஒளியை எடுத்துக் காட்டும் கருப்பு இருட்டு வானம் போல உன் முகம்.  நிலவில்லாத  காரிருள்  வானம்  மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?  இருட்டு இல்லாமல் சந்திரன் ஒளி எப்படி  பளிச்சென்று  தெரியும்? இரண்டும் ஒன்று மற்றொன்றோடு இணைந்ததல்லவா?

உன் கருப்பு கண்களுக்கு கருப்பாக மை  வேறு இட்டு விட்டிருக்கிறாள் உன் அம்மா யசோதை.அதனால் உன்  கண் பெரிதாக அழகாக காண்கிறது.  உன்  அழகிய உருவம் என் கண்களில் பிரதிபலிப்பதால் என் கண்ணும் அழகாக தெரிகிறது. நீ  தான் கோவர்த்தன மலையை இடது கை சுண்டு விரலால்  உயர்த்தியவன்.  ஆனால்  அந்த  மலையையே தூக்கிய உன்னையும்  அந்த மலையோடு  சேர்த்து என் இதயத்தில், மனத்தில் நான் தூக்கி வைத்துக்  கொண்டுள்ளவள்.  

''கிருஷ்ணா உனக்கு தெரியுமா, தெய்வத்தையும் பக்தனையும்  பிரிக்கவே முடியாது''. ரெண்டாக பார்க்கவே முடியாது.''  என்கிறார் ஸூர்தாஸ் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...