Wednesday, September 14, 2022


 ஆதி சங்கரரின் வினா விடை - #நங்கநல்லூர்_J_K_SIVAN


ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா.

மன்னிக்கவும். நடுவில் சிலகாலம், உடல் நிலை சரியில்லாததாலும் , வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டதாலும், ஆதிசங்கரரை தொடர்ச்சியாக படித்து எழுத சக்தி இல்லை, நேரமுமில்லை, மீண்டும் தொடர்கிறேன். இதுவரை 82 கேள்விகளை அவரே கேட்டு அவரே பதில் சொல்லியிருப்பதை உங்களுக்கு அளித்திருக்கிறேன். அவரது கேள்விகளுக்கு அவரால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும். அவரைப் போல் பதில் சொல்ல முடிந்தால் நாம் எல்லோரும் எப்போதோ சங்கரர்களாகியிருப்போமே.

३६. किं सम्पाद्यं मनुजैः?विद्या बलं यशः पुण्यं। कः सर्वगुणविनाशी? लोभःशत्रुश्च कः? कामः॥
36. kim sampaadyam manujaih? Vidya balam yashah punyam kah sarvagunavinaashee? Lobhah shatrushcha kah? Kaamah

83. மனிதன் எதை சம்பாதிக்கவேண்டும்?
இதிலென்ன சந்தேகம்? ஞானம் தேடல், பலம் , புகழ், பெருமை பெறுதல், புண்ய காரியங்கள் இவற்றை செய்து பலனை அடைவது ஒன்று தான் அவன் லக்ஷியமாக இருக்கவேண்டும்.

84.ஒருவனது நல்ல குணத்தை எல்லாம் எது அழிக்கிறது?
ஐயோ, இந்த பேராசை ஒன்று தான் அவனை பாழாக்குகிறது.

85. மனிதனின் விரோதி யார்?
ஆசை, அதிலும் பேராசை, எதைப்பார்த்தாலும் அது தனக்கே வேண்டும் என்ற சுயநலம்

३७. का च सभा परिहार्या? हीना या वृद्धसचिवेन। इह कुत्र अवहित स्यान्मनुष्यः किल राजसेवायां॥
37. kaa cha sabhaa parihaaryaa? Heenaa yaa vriddhasachivena Iha kutra avahitah syaanmanushya: Kila raajasevaayaam

86. எந்த உறவை, நட்பை, சங்கத்தை ஒருவன் தவிர்க்க வேண்டும்?
நல்ல அறிவை, ஞானத்தை, சிறந்த பொதுநல சேவையை, நல்வழியை, தர்மத்தை, போதிக்காத தீய மனிதர்களின் உறவை அடியோடு தவிர்க்க வேண்டும்.

87.உலகத்தில் ஒருவன் எப்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
ராஜாங்க சேவையில் ஈடுபடும்போது, எப்போது என்ன வேண்டுமானாலும் எதிர்பாராமல் நேரலாம்.

38. प्राणादपि को रम्यः? कुलधर्मः साधुसंगश्च। का संरक्ष्या? कीर्तिः पतिव्रता नैज बुद्धिश्च॥
38. Praanaadapi ko ramyah? Kuladharmah saadhusangashcha Kaa samrakshyaa? Keertih pativrataa naija buddhishcha

88. உயிரைக்காட்டிலும் அரிதானது எது?
உன்னத மஹான்களின் நட்பு, குலதர்மங்களை பின்பற்றும் தர்மிஷ்டர்களின்உறவு.

89. எதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும்?
ஒருவன் அடையும் புகழ், பெருமை, உத்தம பத்னிகள் , ஒருவனுடைய சுய அறிவு, ஸ்வதர்மம்.

३९. का कल्पलता लोके? सच्छिष्यायार्पिता विद्या। कोऽक्षयवटवृक्षस्यात्? विधिवत् सत्पात्रदत्तं दानं यत्॥।
39. kaa kalpalataa loke? Sachchhishyaayaarpitaa vidyaa Ko’kshayavatavrikshasyaat? Vidhivat satpaatradattadaanam yath

90. இந்த உலகில் எதற்கு ஈடாக, விரும்பியதை எல்லாம் தரும் கற்பக கொடி, கல்பலதாவை, ஒப்பிடலாம்?
தகுதி உடைய அற்புதமான சீடனுக்கு ஒரு நல்ல குரு உபதேசிக்கும் ஞானம், கல்வி, பக்தி மார்க்க உபதேசங்கள் அவனால் எல்லோருக்கும் அவரவர் விரும்பிய ஞானம் பெற உதவும்.

91. எது ஸாஸ்வதமான அக்ஷயவட விருக்ஷம், அரசமரம் போன்றது?
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டபடி ஒரு தகுதியுள்ளவனுக்கு அளிக்கப்படும் தானம்.

४०. किं शस्त्रं सर्वेषां? युक्तिः, माता च का? धेनु:। किं नु बलम्? यद्धैर्यं. को मृत्युः? यदवधारणारहितत्वं॥
40. kim sastram sarveshaam? Yuktih, maataa cha kaa? Dhenuh Kim nu balam? Yaddhairyam,ko mrityuh? Yadavadhaanarahitatwam

92. ஒவ்வொருவருக்கும் எது தற்காப்பு ஆயுதம்?
சாமர்த்தியம், சமயோசிதம். தக்க நேரத்தில் புத்திக்கூர்மையோடு செயல் புரிதல்.

93. எல்லோருக்கும் தாய் யார்?
ஆஹா இது தெரியாதா? பசு ஒன்று தான்.

94. எது ஒருவனுக்கு பலம்?
தைர்யம், துணிவுள்ள மனம்.

95.எது மரணத்துக்கு சமம்?
அறிவின்மை, பொறுப்பற்ற அலக்ஷியம் .

ATTACHED PICTURE  IS  DRAWN BY RAJA RAVI VARMA 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...