Wednesday, August 17, 2022

SHOULDER



 


முக்கிய உறுப்பு.      நங்கநல்லூர்  J K  SIVAN 

பள்ளிக்கூடத்தில்  கற்றுக்கொடுக்காத  பாடம் ஒன்று அம்மா கற்றுக்கொடுத்தாள். நிறைய படித்த, பட்டம், வாங்கிய  நிறைய சம்பளம் வாங்கும்  ஆசிரியைகள் சொல்லிக் கொடுக்க தவறியதை   எட்டாம் க்ளாஸ் படித்த அம்மா சொல்லிக்கொடுத்தாள்.

அடிக்கடி கேள்விகள் கேட்பான், அவள் பதில் சொல்வாள் .  சில சமயம்  அவள் கேள்விகள் கேட்க அவன் பதில் சொன்னதும் ஞாபகம் வந்தது.

''ராகவ்.  நீ  ஐந்தாவது வகுப்பு,  ஆங்கில மீடியத்தில் நிறைய  படிக்கிறாய்.  உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா?''
''கேளும்மா''
''நம்ம உடம்பிலேயே முக்கியமான உறுப்பு எது?''

''நமக்கு சப்தம் அவசியம்  ஆகவே  காது தான்  அம்மா,  சிறந்த உறுப்பு. அதால் தான் எதையுமே  கேட்க,  பார்க்க, புரிந்து கொள்ள, தெரிந்துகொள்ள, பதில் சொல்ல முடிகிறது''என்று சொன்னான்.

''இல்லேடா, எத்தனையோ பேர்  பிறவி செவிடர்களாக இருந்தும்  நீ சொன்னதெல்லாம் செய்ய முடிகிறதே'' 

சில மாதங்கள் கழித்து அதே கேள்வியை அம்மா கேட்டபோது ராகவ் சொன்ன பதில்:

''எனக்கு தெரிந்து விட்டது. கண் தான்  அம்மா உடம்பிலேயே முக்கியமான உறுப்பு' அதால் தான் பார்க்க வாழ முடிகிறது''
.
''இல்லேடா எத்தனையோ  பேர்  பிறவிக் குருடர்களாக இருந்தும்  வாழ்கிறார்களே . யோசித்து சொல்லு''

ராகவ் வளர்ந்துகொண்டே யோசித்துக்கொண்டும் இருந்த போது  சில மாதங்களுக்குப் பிறகு  ஒருநாள் வீட்டில் அவன் தாத்தா காலமானார். அப்பா  கதறி அழுவதை, மற்ற உறவுகள் கண்ணீர் விட்டு கலங்குவதை, அம்மா  சோகமாக இருப்பதை அன்று தான் பார்த்தான். எது சிறந்த உறுப்பு உடலில் என்ற கேள்விக்கு பதில் அப்போதும் தேடிக்கொண்டே இருந்தான். அவனும் அழுதபோது அம்மா அவனை அரவணைத்து தாங்கிக்கொண்டாள். 

''மகனே,  ஒருவன் வாழ்க்கையில் நல்லபடியாக இரக்கத்தோடு,பிறருக்கு ஆறுதலாக  வாழ்ந்தானா என்பது தான் முக்கியம். இன்று அந்த கேள்விக்கு  பதில் தெரிந்து  கொள்ள  வேண்டிய நாள்.

உடலின் முக்கிய  உறுப்பு  தோள் தான். ஒருவர் சோகமாக இருக்கும்போதோ, உடைந்து போனபோதோ,அவர் அழும்போது   அவருடைய தலையை, உடலை  ஆதரவோடு, ஆதங்கத்தோடு  தாங்குவது  தோள் தான்.  ஒருவர்  துக்கத்தை வெளிப்படுத்த, ஆற்றிக்கொள்ள , மனத்தின் பாரம், அழுத்தம் கலைய ,  மனம் உருகி  அழுவதற்கு  தேடுவது, அன்பான ஒரு  தோள் தான் அப்பா. உனக்கு நல்ல நட்பும், அன்பும்  பரிமாறிக்கொள்ள  இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கவேண்டும். அவர்கள்  தோள்கள்  நீ அழும்போது   உன் கண்ணீரை துடைக்க, உன் துயரை மாற்றிக்கொள்ள  ரொம்ப  அவசியம். 

உடலின் மற்ற உறுப்புகள்  சுய லாபத்துக்காக சுய  நலனுக்காக படைக்கப்பட்டவை என்று ராகவனுக்கு அப்போது புரிந்தது. திடமான தோள் அவனுக்கு வாழ்வில் தேவையான  பாரம் சுமக்கவும், அதோடு கூட  பிறருக்கு  ஆறுதலளிக்கவும்  இறைவனால் அளிக்கப்பட்டது என்று புரிந்தது.   

நாம் செய்த  காரியங்கள், சொன்ன சொல், கொடுத்த பணம், எதுவுமே மறந்து விடும். ஆறுதலாக கைத்தாங்கலாக தோளில்  அழுத்தி அணைத்துக்கொண்டு  ஒருவர அழும்போது  முதுகில் தடவி விட்டது மறக்கவே மறக்காது. மற்றவர் துயர் தீர்க்க உதவும் தோள்  கடவுள் மாதிரி.   பிறர் நலம் பேணும் உறுப்பு.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...