Thursday, August 18, 2022

ADHI SANKARA

 


ஆதி சங்கரரின் வினா விடை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ப்ரஸ்னோத்ர  ரத்ன  மாலிகா.

  ३३. किमहर्निशमनुचिन्त्यं? भगवच्चरणं न संसारः।  चक्षुष्मन्तोऽप्यन्धाः के स्युः? ये नास्तिका मनुजाः॥
  33.  kimaharnishamanuchintyam? Bhagavachcharanam na samsaarah  Chakshushmanto’pi andhaah ke syuh? Ye naastikaa manujaah

77. எதைப்பற்றி ஒருவன் இரவும் பகலும் சிந்திக்கவேண்டும்?
உலக சமாச்சாரங்கள்  எதுவுமே மனதில் இடம் பிடிக்கக்கூடாது.பகவான் திருப்பாதம் ஒன்றே மனதை நிரப்பவேண்டும். 
        
78. யாரை  கண்ணிருந்தும் குருடர்கள் எனலாம்?
கடவுள் இல்லை என்பவன்,  வேதங்களை பழிக்கிறவன் நிச்சயம் குருடன்.
  
३४.  कः पंगुरिह प्रथितो? व्रजति च यो वार्धके तीर्थं ।  किं तीर्थमपि च मुख्यं? चित्तमलं यन्निवर्तयति॥            
34.    kah Panguriha prathito? Vrajati cha yo vaardhake teertham  kim teerthamapi cha mukhyam? Chittamalam yannivartayati

79. எவன்  காலிருந்தும் முடம்?
ரொம்ப வ்ரிருத்தாப்பியத்தில், முதிய வயதில்  தீர்த்த யாத்திரை கிளம்புகிறவன் (என்னைப்போல)

80. எது ரொம்ப ரொம்ப உன்னத  தீர்த்தம், குளமா, ஏரியா, நதியா, கடலா, இதில் முழுகி பாபத்தை தொலைக்கலாம்
எதுவாக இருந்தாலும்  உடல் அழுக்கு நீங்கி பயனில்லை. தீய  நெடுங்கால  வாசனைகளை அகற்றி  மனதை எது சுத்தப்படுத்துகிறதோ அந்த நீர் நிலை உன்னதமானது.

३५. किं स्मर्तव्यं पुरुषैः?हरिनाम सदा,न यावनी भाषा।   को हि न वाच्यः सुधिया? परदोषश्चानृतं तद्वत्॥   
35.  kim smartavyam purushaih? Harinaama sadaa, na yaavanee bhaashaa  Ko hi na vaachyah sudhiyaa? Paradoshashchaanrutam tadwat
  
81. எதை ஒருவன் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்?
ஹரிநாமத்தை விட வேறு எது இருக்கிறது நினைக்க?  யவனர்களின் பாஷையா  ஞாபகத்தில் இருக்க வேண்டும்?

82. அறிவாளி, கற்றவன் எதை  உச்சரிக்கமாட்டான்?
உண்மையற்ற,  சாத்தியமில்லாத  விஷயங்களை, பிறர் குற்றங்களை வாயை திறந்து சொல்லமாட்டான்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...