Tuesday, August 16, 2022

PAAV AAHAARI BABA

 


பாவ் ஆஹாரி பாபா - #நங்கநல்லூர்_J_K_SIVAN

காற்றை உண்டு வாழ முடியுமா? ஒருவர் வாழ்ந்ததாக சரித்திரம் இருக்கிறது. விவேகானந்தர் அவரை பார்த்து வணங்கி, பேசி இருக்கிறார்.
காசி பிராமணன் ''பாவ் ஆஹாரி'' air eater பாபா. காற்றை ஆகாரமாக கொண்டவர். காசிபூரில் மாமாவிடம் கல்வி கற்றார். பிறகு மேற்கே கத்தியவார் சென்று யோகம் கற்று காசிப்பூர் திரும்பினார். வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி அந்த சிறு குகையில் நாட்கணக் கில் யோகம் செய்வார்.
ஒரு தடவை ஒரு திருடன் ஏதோ நகைகளை திருடி பிடி படும் முன் பாவ் ஆஹாரி பாபா குகையில் போட்டு விட்டான். பாபா அதெல்லாம் எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி திருடனைப் பிடித்து ''இந்தா நீ விட்டு விட்டுப் போனவை'' என்று ஆபரணங்களை அவனிடம் கொடுத்தபின் அந்த திருடன் மனம் மாறி அவர் சிஷ்யனானான் என்று ஒரு கதை.
1890ல் விவேகானந்தர் பாபாவை காசிபூர் சென்று தரிசித்தார்.
''நீ இங்கேயே காசிப்பூரில் இருந்து விடுகிறாயா ?'''
''இல்லை பாபா எனக்கு நிறைய வேலைகள் இருக்கி றது. முதுகு வலி தொந்தரவு செயகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து தியானம் பண்ண முடிய வில்லை.
'இனிமேல் இருக்காது . போ''
நான்கு நாட்கள் காசி பூரில் தங்கி இருந்தார் விவேகா
னந்தர். .அப்புறம் விவேகானந்தருக்கு முதுகு வலி இல்லை
'.நான் உங்கள் சீடனாக விரும்புகிறேன்' -விவேகானந் தர்.
''நாளைக்கு உனக்கு தீக்ஷை தருகிறேன் '' என்கிறார்
பாபா. அன்றிரவே விவேகானந்தர் கனவில் ராம கிருஷ்ண பரமஹம்சரின் விரக்தி கொண்ட முகம் தெரிகி றது. உடனே விவேகானந்தர் மனதை மாற்றிக் கொண் டார்.
'' ராமகிருஷ்ணரை தவிர வேறு எவருக்கும் எனக்கு ஆசானாக முடியாது'' என்று தீர்மானித்தார். ஆனால் பாவ் ஆஹாரி பாபாவை தனது ரெண்டாவது குருவாக மனதில் ஏற்றுக்கொண்டார்.
''பாபா நீங்கள் ஏன் பூமிக்கடியில் குகையிலேயே வாழ்கிறீர்கள். வெளியே வந்து சமூகத்துக்கு மற்ற வருக்கு உபதேசங்கள் செய்வது உபயோகமாக இருக்குமே ?''
''உடல் மூலம் தான் மற்றவருக்கு உழைக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்.? மனது உடலின் தேவை இல்லாமலேயே, பல மனங்களை எளிதில் அடைந்து அதில் மாற்றங்களை உண்டுபண்ணி உதவ முடியும் என்பது உனக்கு தெரியாதா? என்றார் பாபா.
பாவ் ஆஹாரி பாபாவுடன் விவேகானந்தர் பேசும் போது '' சிஷ்யன் குருவின் வீட்டு வாசலில் நாய் போல் காத்து கிடக்கவேண்டும்' என்றதன் அர்த்தம் விவேகா னந்தருக்கு புரிந்தது:
'சிஷ்யன் குருவுக்கு சேவை செய்து கொண்டு நன்றி
யுடன் அவரிடம் விசுவாசமாக இருந்து அருள் ஞானம் பெறவேண்டும் ''
ஞானிகள் பூடகமாக பேசுபவர்கள். சேஷாத்ரி ஸ்வாமி கள் பேசுவது எல்லாமே புரியாமல் பேத்தலாக தான் இருந்தது என்று அர்த்தம் புரியாதவர்கள் சொன்னார்கள்.
1898ல் பாபா 100 வது வயதில் தனது குகைக்குள் தீமூட்டி தீக்குளித்தார். பல நாள் குகை மூடி இருந்து புகை வந்ததும் பலர் மாமிசம் வேகும் நாற்றம் அறிந்து பாபா உடலை நீத்ததை புரிந்துகொண்டார்கள் என்று சரித்திரம்.இந்த சேதி விவேகானந்தாவுக்கு அவர் அல்மோராவில் இருந்தபோது தெரிந்தது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...