Saturday, August 13, 2022

kaliyugam

 அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN  

கலிகாலம் 9

शाकमूलामिषक्षौद्रफलपुष्पाष्टिभोजना: । अनावृष्टय‍ा विनङ्‌क्ष्यन्ति दुर्भिक्षकरपीडिता: ॥ ९ ॥  

śāka-mūlāmiṣa-kṣaudra-phala-puṣpāṣṭi-bhojanāḥ anāvṛṣṭyā vinaṅkṣyanti durbhikṣa-kara-pīḍitāḥ

ஶாகமூலாமிஷக்ஷௌத்³ரப²லபுஷ்பாஷ்டிபோ⁴ஜநா: ॥ 9॥ அநாவ்ரு’ஷ்ட்யா விநங்க்ஷ்யந்தி து³ர்பி⁴க்ஷகரபீடி³தா: । ஸ்ரீமத் பாகவதம் 12.2.9

எதிலும் விலையேற்றம், வரிச்சுமை, எங்கும்  எதிர்பார்ப்பு வீணாகி  ஏமாற்றம்.  இந்த நிலை எல்லாம்  கலிகாலத்தில் ஏற்படும் என்று எப்படியோ சுகப்பிரம்ம ரிஷி 5000 வருஷங்களுக்கு முன்பே தெரிந்து வைத்திருக்கிறார். யாருக்கும் சந்தோஷம் இல்லை.  மக்கள் எதை கிடைத்தாலும் சாப்பிட ஆரம்பிப்பார்கள். பஞ்சம் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சேர்க்கும்.   இலை , காய், கிழங்குக்கு கூட    டிமாண்ட் வரும். தண்ணீரை பிடித்து விற்பவர்கள்  காற்றைக்கூட சீசாவில் அடைத்து விற்பார்கள். அப்புறம் சிலநாளில் சூரிய ஒளிக்கும் அந்த கதி தான்.   கிளையிலிருந்து பச்சை இலை  காய்ந்து உலர்ந்து உதிர்வதைப்  போல பகவானை  நினைப்பதை விட்டு மக்கள் விலகி வீழ்வார்கள்.  சாமி இல்லை, அவனை வணங்குபவன் அயோக்கியன் என்று கூட குரல் கேட்கும். எங்கும் அக்கிரமம், அடாவடி, தீங்கின் பலம் தெரிய ஆரம்பிக்கும்.  கம்பியூட்டர்  மழை கொண்டுவராது. இயற்கை  தான்  மழை சுபிக்ஷம் தரும்.  ஊழல் மலிந்த அரசுகள் , நியாயமற்ற கொடுமையான வரிகளை  விலைவாசிகளை  மக்கள் மீது திணிக்கும். . இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி, துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9)  

இதெல்லாம் படிக்கும்போது  ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...