Monday, August 29, 2022

BRINDHAVANUM NANDHAKUMARANUM

 பிரிந்தாவனமும் நந்தகுமாரனும்  -    நங்கநல்லூர்   J.K. SIVAN 


1,   ராதா  கல்யாண  வைபோகமே...

பிரிந்தாவனத்திலிருந்து  திரும்பி வந்தவுடன்  நான் தெரிந்து கொண்ட  சில உண்மைகள்.

பிருந்தாவனத்தை ''இது இவ்வளவு தான் '' என்று ஒரு  அளவிட்டு எவராலும் சொல்ல முடியாது.  அப்படி யாராவது  சொன்னால் அவர் சரியாக, முழுமையாக  நிறைய  பார்க்கவில்லை என்று அர்த்தம்.  பார்க்கவும் முடியாது.

ராமாயண காலத்தில் தேவர்கள் வானரங்களாக அவதரித்து ராமனுக்கு உதவி  ராவணாதியர்களை துன்புறுத்தினார்கள்.  பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் காலத்தில் இருந்தார்களா என்று  சந்தேகம் வேண்டாம்.    இருந்தவர்களின் சந்ததிகள் இக்காலத்தில் அங்கு வரும் எல்லோரையும் துன்புறுத்துகிறார்கள்.  கண்ணனைப்  பார்க்க வந்த உனக்கு ''கண்ணாடி எதற்கு?'' என்று  மூக்கிலிருந்து கண்ணாடியை உருவி கடித்து உடைத்து விடுகிறார்கள்.   உலக பற்றை எல்லாம் ஒழித்தால் தானே நீ கண்ணனை அடையலாம் என்பதற்காக  கைப்பைகளை பிடுங்கிக்  கொண்டு  உச்சாணிக்கிளைகள், கோபுரங்கள் மீது போய்  அமர்ந்து அவற்றை கிழித்து வீசுகிறார்கள்.   பணப்பை வேண்டுமென்றால்  ஐநூறு ரூபாய் கொடுத்தால்  குரங்குக்கு  டூட்டி டப்பா கொடுத்து கவனத்தை மாற்றி பையை திரும்ப பெற வழி வகுக்கா என்றே  சில  சிலர்  பிழைக்கிறார்கள். 

கிருஷ்ணன் ராதா சம்பந்தப்பட்ட இடங்கள் எத்தனை எத்தனையோ இருக்கிறது. அவைகள்  வனங்கள் என்று அழைக்கப் படுகிறது, ஒன்றே ஒன்றைப்  பற்றி  மட்டும் இன்று சொல்கிறேன்.

மதுரா ஜில்லாவில்  பிருந்தாவனம் ஒரு கிராமம். அதற்குள்  குட்டி க்ஷேத்ரம்  பண்டீரவனம் எனும்  நந்தவனம். அங்கே இப்போது ஒரு குட்டி கோவில்.  இந்த குட்டி காட்டில் தான் ராதைக்கும் கிருஷ்ணனுக்கும்  கல்யாணம் நடந்ததாம்.  ப்ரம்ம வைவர்த்த புராணம்,  சொல்கிறது.  ப்ரம்மா தான் கல்யாணம் பண்ணி வைத்தார்.  பூலெரா தூஜ் PHOOLERA  DOOJ  என்று  ஒரு விழா ஒவ்வொரு  வருஷமும் இதை கொண்டாடுகிறது. வ்ரஜ பூமியில் இது ஒரு முக்கிய க்ஷேத்ரம். வேணு கூபம்  ஒரு கிணறு இருக்கிறது. அதை கிருஷ்ணன் புல்லாங்குழலால்  உருவாக்கினார். பண்டீர வனம் என்றால்  ஆலங்காடு.  ஒரு பெரிய  ஆலமரம்.  பண்டீர் வடம்.   அதன் கீழ் தான் கல்யாணம் நடந்தது. நம்மைப்போல  கல்யாண மண்டபங்கள், ஒளி, ஒலி  பெருக்கிகள் இல்லை.    பலராமனுக்கும் அங்கே ஒரு கோவில் உள்ளது.

இந்த வனத்தில் தான்  தன்னுடைய  கோபர்கள் நண்பர்களுடன் கண்ணன் அமர்ந்து பகலில் சாப்பிடுவான். விளையாடு வான். சூரியனையே மறைக்கும் அளவு அடர்ந்த  பண்டீர வடம்  அடர்த்தியாக, ஜிலுஜிலுவென்று  குளிர்ந்த காற்றை வீசும் இடம்.

ராதா-  கிருஷ்ணன் கல்யாணம் காதும் காதும் வைத்தது போல் ரஹஸ்ய  நிகழ்ச்சி இல்லை. லக்ஷக் கணக்கானோர்  பங்கேற்ற ஒரு அற்புத  வைபவம்.  ராதா  கிருஷ்ணன் இருவரின் தோழர்கள் தோழியர்கள்,எண்ணற்ற மயில்கள், கிளிகள், பசுக்கள், வானரங்கள். நம்மைப் போன்ற மற்றவர்கள் இல்லை.   பார்த்தீர்களா?  வானரங்கள்  கிருஷ்ணன் காலத்திலும் உண்டு.  நம்மைப்போன்று  உடல் சம்பந்தப்பட்ட  ''ஸ்வகீய ரஸம் '' உறவு  கல்யாணம் இல்லை, இது  ''பரகீய ரஸம் ''  மனதளவில். கர்க் ஸம்ஹிதை  நிறைய  சொல்கிறது.

ஒருநாள்  நந்தகோப மஹாராஜா  குழந்தை கிருஷ்ணனோடு  பசுக்களை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது ஒரு பெரிய  சுழல் காற்று வீசியது.  எங்கும்  இருள் சூழ்ந்தது.  ஓ வென்ற பேரிரைச்சல். ''ஆஹா கிருஷ்ணா'' என்று நந்தகோபன் பயப்படும்போது, தானும் பயப்படுவது போல் நடித்து அப்பாவை கட்டிக்கொண்டான் கிருஷ்ணன். எங்கிருந்தோ  ராதா ராணி  ஒளிவீசி  தேவதைபோல் ஜொலித்து, தெய்வ ஸ்வரூபமாக  அங்கே ஓடிவந்தாள்.  நந்தகோபனுக்கு  ராதா  கிருஷ்ணன் இருவரின்  அளவு கடந்த பிரேமையையும்,  உயிரும் உடலும்  போல் பிரிக்கமுடியாதவர்கள் அவர்கள் என்றும்  தெரியும்.   கர்க  ரிஷி  சொல்லி இருக்கிறாரே. 

''அம்மா, ராதிகா,  நீ கிருஷ்ணனைப் பார்க்க தான் ஓடிவந்தாய் என்று எனக்கு தெரியும்.  போ அவனுடன் விளையாடிவிட்டு, குழந்தையை  ஜாக்கிரதையாக அழைத்துச்சென்று அவன் அம்மா  யசோதையிடம்  ஒப்படைத்து விடு.''  என்கிறார்  நந்தகோபன்.   

அப்போது அங்கே ஒரு அதிசயம் நேர்ந்தது.  ஒரு புத்தம் புதிய மாளிகை. மரகத மாணிக்க ரத்ன  கோமேதக கற்கள்  இழைத்த  மாளிகை.  அவள்  மடியிலிருந்த குழந்தை கிருஷ்ணன்  மறைந்து, அங்கே ஒரு நவயௌவன  சுந்தர புருஷன்  மணி மகுடம், மயிற்பீலி, ஆபரணங்களுடன் கிருஷ்ணனாக தோன்றினான்.  

''ராதா,  நான் உன்னில்  ''ஆதா'' பாதி என்றான். அது உண்மைதானே.  RADHA  என்றாலே  ADHAR. அவனுக்கு அவள் தானே  ஆதாரம்.  RADHAKRISHNAN ல்  ''R;;   இல்லாவிட்டால்  ADHAKRISHNAN  தானே.  ஒரு கணமும் பிரியா இருவருக்கும் அங்கே  சேர்ந்திருந்ததில் எவ்வளவு ஆனந்தம்!  தேவர்கள் மலர்மழை பொழிய,   ப்ரம்மா இருவரையும் மாலை சூட வைத்து, மந்திரங்கள் சொல்லி, மனம் செய்து வைத்தார்.  க்ஷண காலம் தான். இதோ கிருஷ்ணன் மீண்டும்  குழந்தை ஆகி  ராதையின் மடியில் விளையாடுகிறான்.  அவனை  ஆசை தீர ஆயிரம் முத்தங்கள் கொடுத்து அணைத்து  விளையாடி விட்டு அம்மா யசோதையிடம்  '' அம்மா இதோ உங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை '' என்று ஒப்படைக்கிறாள் ராதை.  பண்டீரவனம்   ''ராதா கிருஷ்ண  விவாஹ ஸ்தலம்'' என்று அழைக்கப்படுகிறது.
பண்டீரவன  கோவில் புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளேன்.  ரசிக்கவும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...