Sunday, August 7, 2022


 


நமது பாரம்பரிய விசேஷம்:- #நங்கநல்லூர்_J_K._SIVAN

சந்தியாவந்தனம் மந்த்ரங்கள் முழுமையும் அல்ல இது. ஒரே ஒரு மந்திரத்தின் அர்த்தம். சந்தியாவந்தனம் பண்ணும்போது கையில் ஜலத்தை எடுத்து ப்ரோக்ஷணம் பண்ணிக்கொள்கிறோமே அந்த மந்திரம்.

நமக்கு ரிக் வேதம் தெரியாது. மண்டலம் 10 ? என்னவென்றே புரியாது. அதில் சூக்தம் 9 எது என்று அறியாதவர்கள். ஆனால் அந்த மந்த்ரத்தை தினமும் இருவேளையாவது சந்தியாவந்தனம் பண்ணுபவர்கள் சொல்கிறோம். அர்த்தம் தெரிந்து கொண்டு சொன்னால் அற்புதமான சுவாரஸ்யம் உண்டாகுமே !

அந்த மந்த்ரம் இதுதான்:

आपो हि ष्ठा मयोभुवस्था न ऊर्जे दधातन । महे रणाथ चक्षसे ॥१॥
यो वः शिवतमो रसस्तस्य भाजयतेह नः । उशतीरिव मातरः ॥२॥
तस्मा अरं गमाम वो यस्य क्षयाय जिन्वथ ।आपो जनयथा च नः ॥३॥

शं नो देवीरभिष्टय आपो भवन्तु पीतये ।शं योरभि स्रवन्तु नः ॥४॥
ईशाना वार्याणां क्षयन्तीश्चर्षणीनाम् ।अपो याचामि भेषजम् ॥५॥
अप्सु मे सोमो अब्रवीदन्तर्विश्वानि भेषजा । अग्नि च विश्वशंभुवम् ॥६॥
आपः पृणीत भेषजं वरूथं तन्वेऽ मम । ज्योक्च सूर्यं दृशे ॥७॥
इदमापः प्र वहत यत्किं च दुरितं मयि ।यद्वाहमभिदुद्रोह यद्वा शेप उतानृतम् ॥८॥
आपो अद्यान्वचारिषं रसेन समगस्महि । यस्वानग्न आ गहि तं मा सं सृज वर्चसा ॥९॥


Aapo Hi Sstthaa Mayo-Bhuvasthaa Na Uurje Dadhaatana | Mahe Rannaatha Cakssase ||1||
Yo Vah Shivatamo Rasas-Tasya Bhaajayate-Ha Nah |Ushatiiriva Maatarah ||2||
Tasmaa Aram Gamaama Vo Yasya Kssayaaya Jinvatha |Aapo Janayathaa Ca Nah ||3||
Sham No Deviir-Abhissttaya Aapo Bhavantu Piitaye |Sham Yorabhi Sravantu Nah ||4||
ishaanaa Vaaryaannaam Kssayantiish-Carssanniinaam |Apo Yaacaami Bhessajam ||5||
Apsu Me Somo Abraviid-Antar-Vishvaani Bhessajaa |Agni Ca Vishva-Shambhuvam ||6||
Aapah Prnniita Bhessajam Varuutham Tanve Mama | Jyokca Suuryam Drshe ||7|
Idam-Aapah Pra Vahata Yat-Kim Ca Duritam Mayi | Yad-Vaaham-Abhidu-Droha Yadvaa Shepa Uta-[A]anrtam ||8||
Aapo Adya-Anv[nnu]-Acaarissam Rasena Sam-Agasmahi | Payasvaan-Agna Aa Gahi Tam Maa Sam Srja Varcasaa ||9||


பல நூறு வருஷங்களுக்கு முன்பு அல்ல, ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்பே, தண்ணீரை பிடித்து விற்பது என்றால் சிரிப்பார்கள். தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்படாத காலம். நீரின்றி அமையாது உலகம். நிறைய குளங்கள் குட்டைகளை கிணறுகள் இருந்த காலம். ரெண்டு மூன்று வேளை கூட ஸ்நானம் செய்தவர்கள். மஹா பெரியவா ஸ்னானம் பண்ணாத புண்ய நதியே இல்லை என்று சொல்லலாம்.

ஜலம் இல்லாமல் சந்தியாவந்தனம் கிடையாது. பஞ்சபாத்ர உத்ரணி தாம்பாளம் கட்டாயம் இருக்கும். குந்தியிட்டு உட்கார்ந்து இரு கைகளை இரு முழங்கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு அர்க்கியம், ஆசமனம் பண்ணுவது வழக்கம். தரையில் உட்காரமுடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தாவது பண்ணுகிறோம்.

ஹே . ஜலமே, நீ இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சமே கிடையாது. நீ இருப்பதால் தான் எங்கும் செழுமை, வளமை. பலம், சக்தி எல்லாமே.
புனிதமான ஜலமே, உன்னை போற்றி மகிழ்கிறோம்.
எல்லா வஸ்துக்களுக்கும் தேவையான புனித உயிர்ச் சத்தே, எங்களுக்கும் அதில் பங்கு கொடு. நீ ஒரு தாய் எங்களுக்கு. தாயன்புடன் தேவையறிந்து ஆதரிப்பாய்.
சக்தி இழந்தவனிடம் நீ செல்லும்போது அவன் புத்துயிர் பெறுகிறான். (ஆஸ்பத்திரியில் முதலில் ட்ரிப்ஸ் DRIPS தான் முதலில் ஏற்றுகிறார்கள். அப்புறம் அதில் மருந்து கலந்து சிகிச்சை அளிப்பார்கள்).
ஜலமே , நீ எங்கள் வாழ்வின் ஜீவாதாரம்.
நான் வணங்கும் என் தெய்வம் உன்னில் கலந்து என்னுள்ளே புகுந்து என்னை காப்பாற்றட்டும்.
உன்னில் இருக்கும் புனிதம் என்னுள்ளேயும் பாய்ந்து பரவி என்னை பரிசுத்தமாக்கட்டும்.
ஜாலமே , உன்னில் கலந்த தெய்வீகம், புனிதம், வயல்களில் நிரம்பி உணவாக வளரட்டும்.
ஜலமே, உன்னால் தாவரங்கள் உயிரூ ட்டம் பெறட்டும்
ஜலமே, உன்னில் தான் உலகில் உள்ள மூலிகைகள் அனைத்தின் சக்தியும் அடங்கி இருக்கிறது.
ஜலமே , உன்னில் தான் பிராணன் அக்னி ஸ்வரூபமாக கலந்திருக்கிறது. H2O உன்னால் உயிர் நிலைத்து பார்த்து கை கூப்புகிறேன். எங்களை வாழவைப்பது நீங்களல்லவா?
அழுக்கை நீக்கும் ஜாலமே , என்னுள்ளே கறை படிந்துள்ள தீய எண்ணங்களை, பொய் முதலிய கெட்ட குணங்களை நீக்கி சுத்தமாக்கு.
ஜலமே, உன்னுள்ளே உள்ள ஜீவரஸத்தால் தான் உயிர் உடலில் நிற்கிறது.
இதோ உன்னை வணங்கி, உன்னுள்ளே நிரம்பி இருக்கும் அக்னியையும் போற்றி என்னை ஞான ஒளிமயமாக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...