Friday, August 12, 2022

KALIYUGA DHARMAM

 


கலியுக  தர்மம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

கடவுள் மேல் பக்தி, நம்பிக்கை கொண்டவன் தான் கோவிலுக்கு  போவான்.  மற்றவன் கண்ணுக்கு அவன்  தன்னைப் போலவே  காட்டு மிராண்டியாக தோன்றினால் அது பரிதாபம். பாவம்  எதற்கு  அவன்  கல்வெட்டில் தன்னைப் பற்றி  பொறிக்கவேண்டும்!.  கோவிலுக்கு போக பிடிக்கா தவனுக்கு கோவில் வாசலில் என்ன வேலை?  

கோவில் செல்பவன் நிச்சயம்  பசு வதைக்கு  தலை ஆட்டமாட்டான்.  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பற்றி மனதில் கூட  இடம் கொடுக்க மாட்டான்.  நிச்சயம்  கடவுள் மேல் நம்பிக்கை பக்தி இருப்பவன்  கோவில் சொத்தை திருடமாட்டான். ஆக்கிரமிக்க மாட்டான். உண்டியல் பணம்  சரியாக கணக்கு காண்பித்து கோவிலுக்கே செலவு செய்வான்.  அர்ச்சகர் வாயிலும் வயிற்றிலும் மண் நிரம்பாது.

பசு வளருங்கள் என்று சொல்வதில்லை.   இருக்கும்  பசுக்கள் தானாகவே வளர உதவுவது தான்  கோ  சம்ரக்ஷணம், பசுக் களை பாதுகாப்பது.   ஏதோ கொஞ்சநாளாக  தூக்கம்  கலைந்து அநேகர் சுற்றிலும்  நடக்கிறது என்ன என்று பார்க்க ஆரம்பித்துவிட்டதால்   சில கோவில்கள் சிதில நிலையிலிருந்து சீர் பட வாய்ப்பு உண்டு.  பல கால பட்டினியோடு இருந்த தெய்வச்  சிலைகளுக்கு   சாமிகளுக்கு   இடுப்பு துணியும் ஒரு  வேளை  ஆகாரமும், இருட்டிலிலுருந்து தீபமும் கிடைக்கிறது.  இது போதாது.. ஆலயங்கள் முற்றிலும்  பக்தர்கள் மூலம் பராமரிக்கப்படவேண்டும். 

பசுவைப் பற்றி....  நான் இதை எழுதும்போது, நீங்கள் படிக்கும்போது எத்தனையோ பசுக்கள்  கேரளாவிலோ, மற்றுமெங்கோ கத்திக்கிரையாவது தொடரலாம். .காசுக்காக  உயிர்விட்ட பசுக்களின் ஆன்மா அமைதியுறட்டும்.  மனிதன் வயதாகிவிட்டால் வெட்டப்படுகிறானா?  மனிதனுக்கு   இலவசமாக தனது பாலைக் கொடுத்து  வளர்த்த பசுவுக்கு மட்டும்  ஏன்  இந்த துரோகம். பசு பால் கொடுக்க   காசு கேட்பதில்லை, தனது பாலில் தண்ணீர் ஊற்றி நீர்த்து விட வைத்து அதிக விலைக்கு விற்பதில்லை.  அதை வைத்து வயிறு நிறைப்பவன் தான் இதெல்லாம் செயகிறான்.  பஸ்சுக்கு தேவை புல் , கீரை, இலை  நீர்.
அதை நாம் நிறைய கொடுப்போம்.

 இருக்கும் கோ சாலைகள் போதாது. இன்னும் உருவாகவேண்டும்.  எல்லா உயிர்களும் ஆத்மா  என்பது  ஏனோ நமக்கு  மறந்து போகிறது.

உலகத்தில் பலர்  சைவ உணவுக்கு திரும்புகிறார்கள்.  சீனாவில்   கோரோனோ வைரசுக்கு பிறகு  அது அதிகமாகிவிட்டது..  அமெரிக்காவில் 29 மில்லியன் மக்கள் சைவர்கள்.  மாமிச உணவு அநேக  நோய்களை, புற்று நோய் உட்பட,  அளிக்கிறது என்று புரிந்து விட்டது.  மிருக  உரிமை போராட்ட வாதிகளும்  எண்ணைக்கையில்  கூடி விட்டனர்.  வேட்டையாடுவது குறைந்து விட்டது.  மிருக வதையால் சுற்று  சூழல் கெட்டுவிடுகிறது. பழைய கால  ஜமீன்தார்கள் தாம் சுட்ட  புலி, மான் உடல்களோடு போட்டோ எடுத்து வீட்டில் மாட்டுவது இப்போது காணாமல் போய்விட்டது. ரொம்ப நல்லது. ஜமீன்தாரே காணாமல் போய்விட்டார்.  இது தான் தெய்வம் நின்று கொல்லும்  என்ற  வாக்கின் உண்மையா?

 வேதங்கள் சொல்லும் சனாதன  தர்ம சித்த்தாந்த  கோட்பாடு புரிய இன்னும்  அதிக காலம்  தேவை என்று தோன்றுகிறது. .   அஹிம்சை தான் பரம தர்மம்  என்பது எழுத்தில் தான் இன்னும் உள்ளது.  தயை, காருண்யம்,  இரக்கம், மனதில் புகுந்தால் தானே  அஹிம்சை  எனும் கொல்லாமை வளரும்  . எல்லா உயிரும் ஒன்றே  என்ற சித்தாந்தம் புரியவேண்டாமா?  மற்ற உயிரினங்களை விட  ஆறு அறிவாக அதிகம் அறிவு  பெற்றவர்கள் என்பதால்  மற்ற உயிரினங்களை அழிக்க  யார்  நமக்கு  அதிகாரம் கொடுத்தது?   நம்மைப் போல்  மிருகங்களுக்கு  அறிவு பூர்வமாக சிந்திக்க தெரியாது. ஆனால்  பரிசுத்த அன்பை வெளிப்படுத்தும்  கள்ளம் கபடு அறியாதவை.  ரொம்ப முக்கியமாக  அவை பேச்சினால் விரோதத்தை வளர்க்க அறியாத வை.  இதனால் அவை கொல்லப்படவேண்டுமா ? வாய் பேசாதவன்,  மூளை வளர்ச்சி இல்லாதவன்  மிருகமா? அவனை கொல்வது ஞாயமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...