Wednesday, August 17, 2022

JANMASHTAMI

 


ஜன்மாஷ்டமி   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கிருஷ்ணன் எங்கே  எப்போது பிறந்தான்?
 இந்த கேள்விக்கு எல்லோரும் என்ன பதில் சொல்கிறோம்? 
வடமதுரையில் கம்சன் அரண்மனை சிறையில் வசுதேவருக்கும் தேவகிக்கும்   எட்டாவது மகனாக பிறந்தான் என்பது நமது பதில்.  

வேறு பதிலும் இருக்கிறது. கோகுலத்தில் நந்த கோப மகாராஜாவைக் கேளுங்கள்.  சந்தோஷமாக  ''எனக்கு ஒரு கருப்பு குண்டு பிள்ளை பிறந்தான்''  என்பார்.   எல்லோருக்கும் பசுவும், பொன்னும், நெல்லும், பாலும் தயிரும் வழங்குகிறார் பாருங்கள். 

 ஸ்ரீமத் பாகவதம் அதை அழகாக விவரிக்கிறதே.  அப்படி என்றால் கிருஷ்ணன் சிறையில் பிறக்கவில்லையா?  யார் சொன்னது இல்லை என்று?  அவன் அங்கும் பிறந்தான், இங்கும் பிறந்தான் எங்கும் பிறக்கிறான். இதோ நாளை நம் எல்லோர் வீட்டிலும் அழகாக  பிறந்து வாசல் வரை அவன் நடந்து செல்லும் காலடி சுவடுகள் வெள்ளை மாவில் தெரியுமே.  சிலர் வீட்டில் பெர்மனெண்ட் ஆகவே அந்த மாக்கோலம்  இருப்பதை பார்த்திருக்கிறேன்.

நங்கநல்லூரில் கிருஷ்ணா மாமி என்று ஒரு பக்தை வீட்டில் அவனை எங்கும் பார்த்திருக்கிறேன். தி.நகரில் கிருஷ்ணா மாமா வீட்டில் நான் அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது  சத்தம் போட்டு பேசாதீர்கள் குழந்தை தூங்குகிறான் என்று தொட்டிலை காட்டினார். குட்டியாக  வெல்வெட்டு தலையணையில் கண்ணுறங்கி மேலே பட்டு போர்த்திக்கொண்டு தொட்டில் மெதுவாக  ஆட,  மேலே மின் விசிறி சத்தம் போடாமல் சுற்ற, அவனை தரிசித்தேன்.  வீடு முழுதும் எங்கு திரும்பினாலும்  கிருஷ்ணன்கள்.  

இது போல் எண்ணற்றவர்கள் வீட்டில் இருக்கும் மாஜயலக்காரன் கிருஷ்ணன் அவனால்  பல இடங்களில் பிறந்து மகிழ்ச்சி தரமுடியாதா?   ஸ்ரீமத் பாகவதம் இதை எப்படி சொல்கிறது: ஸ்ரீமத் பாகவதம்  10.5.1-2 ஸ்லோகங்கள் அர்த்தம்.

नन्दस्त्वात्मज उत्पन्ने जाताह्लादो महामना: । आहूय विप्रान् वेदज्ञान्‍स्‍नात: शुचिरलङ्कृत: ॥ १ ॥ वाचयित्वा स्वस्त्ययनं जातकर्मात्मजस्य वै । कारयामास विधिवत् पितृदेवार

nandas tv ātmaja utpanne   jātāhlādo mahā-manāḥ āhūya viprān veda-j�ān snātaḥ śucir alaṅkṛtaḥ vācayitvā svastyayanaṁ jāta-karmātmajasya vai kārayām āsa vidhivat pitṛ-devārcanaṁ tath

கோகுலத்தில் நந்த கோப மஹாராஜா வீட்டில் தடபுடல்.  தெருவெல்லாம்  கோகுலம்  பூரா கல்யாண கோலம்.  ராஜா வீட்டில் ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான்.  கருப்பு அழகன் என்பதால்  கருப்பன் என்ற அர்த்தம் கொண்ட  கிருஷ்ணன் என்று பெயர் வைக்க போகிறார்கள்.   எங்கே பார்த்தாலும் வேத பிராமணர்களின் தலைகள்.  அத்தனைபேருக்கும் கொடுக்க  லக்ஷக்கணக்கான பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிற்கின்றன. அவற்றின் கழுத்தில்  விலை உயந்த ஆபரணங்கள். எல்லாமே பிராமணர்களுக்கு தானம். அவர்களுக்கு பித்ரு தானமும் கொடுக்க ஏற்பாடு செயதாகி விட்டது.  ஊரில் எல்லோர் வீட்டிலும் கோலாகலம். எல்லோர் வீட்டிலும் கிருஷ்ணன் பிறந்தது போல்  ஆனந்தம். 

அது தான் கிருஷ்ணன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...