Thursday, August 18, 2022

LIFE LESSON


 மறவேன் நான் மறவேன். #நங்கநல்லூர்_J_K_SIVAN


கலிகாலத்தைப் பற்றி சுகப்பிரம்ம ரிஷி ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே சரியாக கணித்து பரிக்ஷீத் ராஜாவுக்கு சொன்னதை படித்துக்கொண்டு வருகி றோம்.

அம்மா பிள்ளை அப்பா என்ற மூன்று பேர் கொண்ட அமைப்பில் அம்மா அப்பா ரெண்டுபேரும் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசத்துக்கு அளவு ஈடு இணை, கிடை யாது. வளர்த்த பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்கள் பாசம் பெற்றோர் மேல் குறைவதைக் காண்கிறோம். அதுவும் அதிகம் படிக்காத அம்மாவை ஏசும், இகழும், பிள்ளைகளைப் பார்க்கும்போதும், அவர்களை பற்றி கேட்கும்போதும் நெஞ்சம் உடைகிறது.

''பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு'' என்று யார் அப்பட்டமாக எழுதியது?? இன்னொரு சுக ப்ரம்ம ரிஷியோ?

கலியுகத்தில் பணத்தால் பிள்ளை- பெற்றோர் உறவு துண்டாவதை பார்க்கும்போது தவறு நாம் சரியான பாதையில் போகாமல் பிள்ளைகளையும் அந்த தவறான பாதையில் கூட்டிச் சென்றதால் விளைந்த வினையோ என தோன்றுகிறது. பாசம் இருக்க வேண்டிய இடத்தை பணம் பிடித்துக் கொண்டு விட்டால் கோர்ட்டில் தான் ரெண்டு பேரும் சந்திக்கிறார்கள். கொலையும் நடக்கிறது.

அன்பு தெரியவில்லை ரெண்டு பக்கத்துக்கும். பாசத்தை ஊட்டத் தவறிய பெற்றோர்கள் பணத்தை நம்பி பாழுங்கிணற்றில் பிள்ளைகளோடு விழுகி றார்கள். பணம் தவிர மணமும் மனத்தை மாற்றி விடுகிறது. மணமான பிள்ளைகள் மாறி விடுகிறார்கள் என்று ஒரு வழக்கு பொதுவாக உள்ளது.

''அன்னையும் பிதாவும் தான் முன்னறி தெய்வம்'' என்று அப்போதெல்லாம் சின்ன வயதில்பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்தார்கள் . இது வேண்டாம் என்று யார் மாற்றி அமைத்தது? நாம் தானே.

புதிய கல்வி முறை எந்த விதத்தில் பாசத்தை வளர்க் கிறது? ''பணமா பாசமா ?'' சினிமாவில் மட்டும் அல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதற்கு நாம் தானே காரனம். சிறு தலைகள் தறுதலைகளாக மாற வழி கோரியது யார்?

பள்ளியில் இல்லாவிட்டாலும் வீட்டிலாவது அந்த உணர் வை ஊட்டவேண்டாமா? இனியாவது செய்வோமா? குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்து நம் முன்னோர்கள் நமக்கு தெரிவித்ததை நாம் அவர்க ளுக்கு அளிப்போமா? அப்போது பிள்ளைகள் பெற்ற தாயை மறக்க மாட்டார்கள். கடவுள் பக்தி அவர்களை ஒன்று சேர்க்கும் வீடுகளில் சேர்ந்து வழிபடுவது நின்று போனது ஒரு காரணம்.

வள்ளலார் மனமுருகி ஒரு பாடல் பாடுவது காதில் விழுகிறதா?

'' பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே''

''என்னப்பனே, பரமேஸ்வரா, பெற்று பாசமாக வளர்த்த பிள்ளை அம்மாவை மறந்து போகட்டும். அந்த அம்மா வுக்கும் பிள்ளை பின்னாலே அலைந்து அலுத்துப் போய் அவன் நினைவே அவளுக்கு மரத்து , மறந்து போகட்டும். தேகம் உயிர் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்திருந்தாலும் உடலை உயிர் மறந்து போகட் டும். தன்னுள்ளே கடைசி வரை இருக்கும் உயிரை அந்த உடல் மறக்கட்டும் . பள்ளிக்கூடத்தில் காலேஜ் மற்றும் பெரிய கலாசாலையில் எல்லாம் படித்தது அத்தனையும் மனது மறந்து போகட்டும். கண்ணை இமை மூடி மூடி இமைத்து காப்பது நின்று போகட்டும், பரவாயில்லை,

''என்னப்பனே, எல்லாம் அறிந்த தவ யோகிகள் மனதில் நிறைந்திருக்கும் ''ஓம் நமவசிவாய '' எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தை மறக்க மாட்டேன். அதன் உருவகமான உன்னையும் மறக்கவே மாட்டேன் மாட்டேன் மாட்டேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...