Wednesday, August 18, 2021

REBIRTH


புனர் ஜென்மம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


என் பிரிய  சகோதர சகோதரிகளே,

சற்று முன்பு  ஒரு  நிமிஷ  வீடியோ ஒன்று பார்த்தேன். .அசந்து போனேன்.
ஒரு   நவீன  கால சிங்காரி,  வாய் உதடெல்லாம் ரத்தம் குடித்தது போல்  உதட்டு சாயம், நெற்றியில் கண்ணுக்கு தெரியாமல் ஒரு பொட்டு.   குங்குமமா  அப்படின்னா என்னாங்க ? டைப்.   ஆடி  வெள்ளியோ, வரலக்ஷ்மி நோன்போ, அதெல்லாம் தெரியாது.  பூவை செடியில் பார்ப்பவள்.  தலை விரி கோலி.  

அவள்  மொபைல்  ''மேரீ சப்னோம்   கீ  ராணி...... ''ஒலித்தது அது தான் அவள் ரிங் டோன் .  
''ஹலோ''
''ராஜி அவதூத்''   இருக்காங்களா''
''நான் தான் பேசறேன்.  யாரு நீங்க?''
'' பெங்களூர்  காண்டோன்மோன்ட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்  பேசறேன் ''
'' என்ன விஷயம் சொல்லுங்க ?''
'  RG  அவதூத்  யாருங்க ?''
''என் கணவர்  ...   என்ன விஷயம் ?''
''சாரி மேடம் ,  அவர்   ரயில்வே வளாகத்தில்  திடீர்னு மாரடைப்பால்  இறந்துட்டார். உடல்   பெங்களூர்  கண்டோன்மெண்ட்  ரயில்வே ஹாஸ்பிடல் மார்ச்சுவரிலே வச்சிருக்கு'' வந்தீங்கன்னா  அடையாளம் காட்டிட்டு  பாடி  எடுத்துக்கிட்டு போகலாம் ''என்ன உளர்றீங்க. என் புருஷன் இப்போ என்னோடு வீட்டிலே தான் இருக்காரு''
''அம்மா  பதட்டமா பேசாதீங்க.  அவர்  பாடிலே  பாக்கெட்டிலே  இருக்கிற பர்ஸில்  இருந்து  உங்க போட்டோ,  அவர் விசிட்டிங்  கார்டு இருக்கு. அதை பார்த்துட்டு தான்  போன் போடறேன். நேரே வாங்க''
ராஜிக்கு தலையை சுற்றியது.
எங்கே அவதூத் ?  இப்போ  இங்கே இருந்தானே.   ஏன்  ரெண்டு நாள் முன்னாலேயே  ஊர்லேருந்து திரும்பிட்டேன்னு கேட்டப்போ,  வேலை முடிஞ்சுடுத்து, உன்னை பாக்க ஓடோடி வந்தேன்ன்னு சிரித்தானே .

ஓடினாள். ஹாலில், பெட்ரூமில், கிச்சனில்,  மொட்டை மாடியில் எல்லாம்  தேடினாள் ,  கீழே கராஜில், அவன் கார் நின்றுள்ளது எங்கேயும் போகவில்லையே. எங்கே  காணோம். மொட்டை மாடிக்கு ஓடினாள். அவதூத். என்று கத்தினாள்.
அவர்கள் வளர்க்கும்  கிளி கூண்டில்  அவதூத்  என்று எதிரொலித்தது.  
அவதூத்  இல்லையா. நான் கண்டது கனவா?.  
சற்று முன்பு என்னோடு பேசினானே .  
முதல்லே உன்னை பார்த்துட்டுன்னு சொல்லி முத்தம் கொடுத்துட்டு  அப்புறம் தான் பல் தேய்க்கப்போறேன்' னு  சொன்னவனை எங்கே காணோம் .
நான் கண்டது பிரமையா?  எங்கேயோ  புத்தகத்தில் படித்தேன்.  உயிர்  பிரிந்ததும் முதலில் தனக்கு பிடித்த இடத்தில் சற்று  நேரம் சுற்றுமாமே.  அது தான் அவதூத் இங்கே வந்தது போல்  நான் கொண்டதா.   போலீஸ்  அவன் பர்சில் என் போட்டோ பார்த்துள்ளதே. என் நம்பருக்கு சரியாக போன் பேசியதே.  பாடியில்  பர்ஸ் இருக்கிறது என்கிறதே......
ஹா  என்று  கத்தினாள்.  மூர்ச்சையானாள் ...
கண் விழித்தபோது  எதிரே  அவதூத் .
என்னாயிற்று உனக்கு ஏன் ஹா என்று கத்தினாய்?
உன் பர்ஸ்....  என் போட்டோ..  நீ  நீ தானே...
ஐயோ  பெண்கள் என்றாலே  இது தான்..  எப்பவும்  என் பர்ஸ் மேலேயே  கண்.. உடனே  சொல்லவேண்டாம்  கொஞ்சம்  நேரம் கழித்து  அப்புறம் சொல்லலாம்னு பார்த்தேன். அதுக்குள்ளே  அது தொலைஞ்சு போச்சு, எவனோ   பிக்கபாக்கெட் பண்ணிட்டான்னு  சொல்றதுக்குள்ளே கண்டுபிடிச்சுட்டே....
ராஜி  அப்படியே  அவனை  எலும்புகள் நொறுங்கும்படியாக  கட்டிக்கொண்டாள். கண்களில்  ஆறாக கண்ணீர்.  ''இனிமே  உன்னை திட்டமாட்டேன், கோவிச்சுக்க மாட்டேன். குறை சொல்லமாட்டேன். என்னை மன்னிச்சுடு... எனக்கு புத்தி வந்தது.. உன்னை ஒரு செகண்ட் கூட பிரிய மாட்டேன்..
''என்ன ஆச்சு உனக்கு?''
''விக்கலோடு, திக்கி திணறி  போலிஸிலிருந்து வந்த  டெலிபோன் பற்றி சொன்னாள் . 
அன்பர்களே, குடும்பத்தில்  உறவுகளை  புண்ணாக்காதீர்கள். வீணாக்காதீர்கள் .   அன்பு, பாசம், பரிவு இது ஒவ்வொருவருடனும் இருக்கட்டும்.  நேரம் பொன்னானது. எப்போது எந்த நிமிஷமும் பிரிவு எப்படியோ நேரலாம். போனால் வராது பொழுது போனால் நிக்காது.. மனித இனம் ஒன்று தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த  வசதிகள் அதிகம் கொண்டது.   இறைவனுக்கு நன்றி சொல்லி ஒவ்வொரு கண த்தையும் அன்போடு ஆனந்தமாக  அனுபவிப்போம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...