Thursday, August 19, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


65     காஞ்சிபுரம்  தென்னாற்காடு  ஆலய  தர்சனம் 

1931ம் வருஷம்,  ஜனவரி மாதம் 25, மஹா பெரியவா  காஞ்சிபுரம்  வந்து சேர்ந்தார்.  தமிழ் வருஷம்  ப்ரமோதூத,  தை  மாசம்.  காஞ்சியில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அம்பாளுக்கு முக்கியமானது  ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில்.  ஏகாம்பரேஸ்வரர்  ஆலயம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கைப்பிடி  மண் எடுத்து  சிவலிங்கமாக பிடித்து  பூஜை செய்து தியானம் பண்ணின இடம்.  ப்ரித்வி  என்றால் மண்.    பஞ்ச பூதங்களான     நீர், நிலம், காற்று, நெருப்பு,  ஆகாசம் இதில்   மண், நிலம்,  எனும் ஐம்பூதங்களில் ஒன்றானது  காஞ்சிபுரம்.  ப்ரித்விக்ஷேத்ரம்.   நகரேஷு காஞ்சி ,  அதாவது நகரங்களில் சிறப்பானது காஞ்சிபுரம். எண்ணற்ற கோவில்கள், சைவ வைணவ வழிபாட்டு ஸ்தலங்கள் கொண்டது.  புண்ய க்ஷேத்ரம்.   காஞ்சிபுரத்தில்  எந்த சிவன் கோவிலிலும் அம்பாள் விக்ரஹம்  சந்நிதி கிடையாது.  காமாக்ஷி எனும் தவம் செய்யும் பார்வதி கோவில் கொண்ட ஒரே ஆலயம்  காமாக்ஷி அம்மன் ஆலயம்.  இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு?   காஞ்சியில் உள்ள  எல்லா சிவாலயங்களில் வாசல் கோபுரம் காமாக்ஷி அம்மன் ஆலயத்தை நோக்கியபடி தான் இருக்கும்.  நகரத்தின் நடுநாயக ஆலயம்.  எந்த கோவில்  உத்சவ விக்ரஹ  ஊர்வலங்கள்  வந்தாலும் அது காமாக்ஷி அம்மனை சுற்றிவரும்படியாக தான் இருக்கும்.   காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்து பிரதிஷ்டை செய்த  ஸ்ரீ சக்ரம் இருக்கிறது.  இங்கே தான் ஆதி சங்கரர் சர்வஞ பீடத்திலேறி சித்தி அடைந்தார் என்பார்கள். காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்குள்ளே  ஆதி சங்கரர்  சிலா ரூபத்தில் காட்சி அளிக்கிறார்.

மஹா  பெரியவா  காமகோடி பீடாதிபதியாக   காஞ்சிபுரம்   வருகை தரப்போகிறார் என்ற சேதி பரவியதும் அளவற்ற மார்கிஸ்ச்சியோடு பக்தர்கள்  வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக செய்தார்கள்.   காஞ்சிபுரம்  ரெண்டு பிரிவு கொண்டது. பெரிய காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் என்று.  பெரிய காஞ்சிபுரத்தில் தான்  ஏகாம்பரேஸ்வரர்  ஆலயம்  காமாக்ஷி அம்மன் ஆலயம், காஞ்சிமடம் ஆகியவை உள்ளன.  ஒரு மாத காலத்துக்கும் மேலாக  மஹா பெரியவா   காஞ்சிபுரத்தில் வாசம் செய்தார்.  அடிக்கடி  ஏகாம்பரேஸ்வர்  வரதராஜர்  ஆலயம் எல்லாம் சென்று தரிசனம் செய்தார்.  காமாக்ஷி அம்மன் தரிசனம் நித்யம் உண்டு.

முப்பெரும் சக்திகளில்  மதுரை மீனாக்ஷி , காசி விசாலாக்ஷியோடு  காஞ்சி காமாக்ஷி முக்கியமான அம்மன். சக்தி பீடம்.   
 இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில்  காமாக்ஷி அமர்ந்திருப்பவள்.ரு கைகளில்  கரும்பு வில், தாமரை, கிளி  ஆகியவற்றை ஏந்தி காட்சி தருபவள்.  சதி யின்  முதுகெலும்பு  விழுந்த ஸ்தலம் காஞ்சிபுரம் காமாக்ஷி ஆலயம்.  காமாக்ஷி  ஆரம்பத்தில்   'உக்ர ஸ்வரூபிணி' யாக இருந்து,  ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில்,  இங்கே வந்து அவர்   ஸ்ரீ சக்ரம்  பிரதிஷ்டை செய்த பின்  அம்பாள்  ''உக்ரம் '' குறைந்து ''ப்ரஹ்ம ஸ்வரூபிணி'' யாக மாறி  அவரால்   சௌம்யமான காமாக்ஷி ஆக நமக்கு  அருள் பாலிக்கிறாள்.பூசைகள் செய்யப்படுகின்றன

1840ல்  அப்போதைய  காமகோடி  64வது  பீடாதிபதி  ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட  ஆலயம் இது.   மஹா பெரியவா இந்த ஆலயத்துக்கு புனருத்தாரண  கும்பாபிஷேகம் நடைபெற  விருப்பப்பட்டார்.    துபாஷ்  தண்டலம்  ஸ்ரீ   T.S. ராமஸ்வாமி ஐயர்  என்பவர்  கும்பாபிஷேக  குழுத்தலைவராக  நியமிக்கப்பட்டார். அவர்  பெஸ்ட் அண்ட் கம்பெனி  யில் பணி புரிந்தவர்.  ஆலயத்தின்  குறைபாடுகள்,  சரி செய்யப்பட்டன.  கும்பாபிஷேகம்  திருப்திகரமான  நிறைவேறியபின்  மஹா பெரியவா  உத்தரமேரூர்  யாத்திரை சென்றார்.  கிராம அதிகாரிகளுடைய  உதவியோடு  அங்குள்ள  செப்பேடுகள், கல்வெட்டுகளில்   காணப்பட்ட  விஷயங்களை ஆர்வத்தோடு  அறிந்தார்.  தெற்கு செங்கல்பட்டுகளுக்கு விஜயம் செய்த பின் மஹா பெரியவா அங்கிருந்து  வந்தவாசி, அச்சிறுபாக்கம், திண்டிவனம், பாலூர்,  ஆகிய  ஊர்களுக்கு சென்றார்.  தென் ஆற்காடு பகுதிகளை விஜயம் செய்தபோது  மரக்காணத்திற்கும்  சென்றார்.  இரண்டு மாத காலம் இந்த பகுதிகளில் விஜயம் செய்து  ஆலயங்களை தரிசித்தார். 

மஹா பெரியவாளின் பூர்வாஸ்ரம தந்தையர் சுப்ரமணிய ஐயரின்  நண்பர்  திவான் பஹதூர்  C . அருணாச்சல முதலியார்  மஹா பெரியவாள்  தங்குவதற்கு வேண்டிய  வசதிகள் செய்து கொடுத்தார். 

பின்னர் அங்கிருந்து மஹா பெரியவா ஸ்ரீ பெரும்புதூர்  சென்றார். ஸ்ரீ ராமானுஜரின் ஜென்ம ஸ்தலம் ஸ்ரீ பெரும்புதூர்.   ஆலய  தேவஸ்தான கமிட்டீ அங்கத்தினர்கள்  மஹா பெரியவா வருகை அறிந்து வரவேற்று வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்கள்.

ஸ்ரீ பெரும்புத்தூரில் மஹா பெரியவா தங்கியிருந்த பொது  ஸ்ரீ யதிராஜவல்லி சமேத  ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் தரிசனம் செய்த பின்  அந்த ஊர்  மஹாத்மியத்தை  எடுத்துரைத்து  உபன்யாசம் செய்தார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...