Sunday, August 22, 2021

gitanjali

கீதாஞ்சலி -  நங்கநல்லூர்  J K  SIVAN --
தாகூர்

103.  நின் திருவடி சரணம் அப்பா 

103.  In one salutation to thee, my God,
let all my senses spread out and touch this world at thy feet.
Like a rain-cloud of July hung low with its burden of unshed showers
let all my mind bend down at thy door in one salutation to thee.
Let all my songs gather together their diverse strains into a single current


தாடி  தாத்தா ரவீந்திர நாத் தாகூர்  எழுதிய  கீதாஞ்சலி 103  பாடல்களையும்  படித்து ரசித்து ருசித்து விட்டோம். இந்த கடைசி பாடலில் சரணாகதி த்வனிக்கிறது.
இந்த   பாடலை எழுதும்போது  கிருஷ்ணா நான் இதை உனக்கே  அர்ப்பணிக்கிறேன்.   
இந்த ஒரே நமஸ்காரம் தான் பாக்கி.  அதில் என் புலனுணர்வுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து உன் திருவடிகளின் அடியே  காணும்  மண்ணில் என் சிரம் பணிந்து தொடட்டும்.  மாரிக்காலத்தில் மேகம் சூல் கொண்டு கன்னங்கரேல் என்று   நிறைய மழை நீரை   மடியில் தாங்கிக்கொண்டு கீழே பூமியை தொடும்படி இறங்கி வருமே  அது போல் என்னுள்ளே  உள்ள சகலத்தையும்,   நல்லது கெட்டது எல்லாவற்றையும் சுமந்து என் உடல் உன் வாசலில்  நெடுஞ்சாண்கிடையாக விழட்டும். 
இந்த ஒரு நமஸ்கரத்தில் நான் இதுவரை  எண்ணி எழுதிய  பலவித  உணர்ச்சிகள் சேர்ந்த கவிதைகள் எல்லாம் ஒன்று கலந்து மௌனக்கடலில் ஒரே சீராக  அசைந்து உன் திருவடியில் கலக்கட்டும். வானத்தில்  தொலை தூரம்  பறந்து ஒரு  நாரைக் கூட்டம்  மலைகளை கடந்து தனது கூட்டுக்கு தஞ்சம் அடைய திரும்பும் அது தான் நான். எனது ஒரே தஞ்சம் நின் திருவடி தான். 
என்  சகல உணர்வுகளும் ஒன்று கலந்து உரு விழந்து, உன்னை வணங்கி உன் திருவடிகளில் இந்த உலகத்தை தொடட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...