Monday, June 10, 2019

SURSAGAR




சூர் சாகரம் J K SIVAN
சூர்தாஸ்
பவ சாகர படகோட்டி
ஸூர்தாசருக்கு ஒரு சௌகர்யம். சுற்றியுள்ள மனிதர்களோ, உலகமோ கண்ணில் பட்டு தொந்தரவு செய்யாது. இருண்ட வெளியுலகு என்றாலும் வெளிச்சமான உள்ளுலகம். அங்கு எல்லாம் கண்ணைப்பறிக்கும் இயற்கை வளம். அது எப்படி எல்லாமே பிரிந்தவனமாக காட்சி அளிக்கிறது. அந்த கண்ணன் பயல் வேறு இருக்கிறானே! இப்படி ஊனக்கண்ணின்றி ஆனந்தமாக வாழ்ந்த சூர்தாஸரின் ஒரு பாடல் இதோ:

கிருஷ்ணா ஒரே ஒரு வேண்டுகோள். நான் சுத்தமானவன் இல்லை. என் மனதில் எத்தனையோ கோணல் மாணல் எண்ணங்கள். விபரீதங்கள். எவ்வளவோ முயற்சித்தும் எப்படியோ உள்ளே புகுந்து என்னை குடை கின்றன. உன்னிடம் அதை மறைக்க முடியாதே. நீ தான் எதிலும் எங்கும் எப்போதும் நிறைந்தவனாயிற்றே. ஆகவே தான் தயவு செயது அதை எல்லாம் லக்ஷியம் பண்ணாதே. உன்னை சமதர்ஸி என்பார்களே. நல்லது கெட்டது எல்லாம் ஒன்றே தானே உனக்கு. அப்படியே என்னையும் பார்த்துவிடு.

சாக்கடை கங்கை நீர் எல்லாமே ஒன்றாக கடலில் கலந்தபின் கங்கை எது, கழிவு நீர் எது? எல்லாம் சாகரம். நீ அப்படிப்பட்ட கருணா சாகரமல்லவா? நீ குடி புகுந்த பின் என் மனத்தில் கெட்டது எது? எல்லாமே நீயானபின் எல்லாம் நல்லதாகமட்டுமே தானே இருக்க முடியும்!.

இரும்பு எல்லாமே ஒன்று தான். ஒன்று நம் வீட்டில் பூஜை அறையில் வைத்திருக்கும் விளக்கு சங்கிலி. இன்னொன்று ஆடு மாடுகளை வெட்டும் கத்தி. ரெண்டையும் கொண்டுவந்து தங்கமாக்கும் மந்திரக் கல்லில் தேய்த்தால் ரெண்டுமே தங்கமாகிவிடுகிறது அல்லவா?. அதே போல் தான் அப்பா என் மனதில் உள்ள அநேக தீய எண்ணங்களும் ஒரு சில நல்ல எண்ணங்
களும். நீ வந்து குடிபுகுந்தபின் எல்லாமே தங்கமயம். எல்லாமே உயர்ந்த உன் மீதான எண்ணம் ஆகிடுமே..

ஆகவே என் குறைகளை மன்னித்து என்னை உன் திருவடி நிழலில் எந்நேரமும் இருக்க அருள்புரிவாய். இன்னொன்று கட்டாயம் உன்னைக் கேட்டு தான் ஆகவேண்டும். அது நிறைவேறும் வரை உன்னை விடமாட்டேன்.

இதோ பார் என் ஆணவத்தால் என்னால் இந்த சம்சார சாகரத்தை கடக்க இயலாது. இந்த பவ சாகரத்தை நீல மேக சியாமளா நீ தான் நான் கடக்க உதவ வேண்டும். உன்னைத்தவிர வேறு படகோட்டி யாரப்பா? நீ தேரையும் ஓட்டுவாய் பாரையும் ஓட்டுவாய். படகு மட்டும் ஓட்டமாட்டாயா என்ன. நான் தான் கேள்விப்பட்டேனே கண்டசாலா பாடி. ''ஆஹா இன்ப நிலாவினிலே.... அழகாக படகோட்டினாயே.

அந்த அற்புத சூர் தாஸ் பாடல் இது தான்:
Prabhu more avagun chit na dharo
samdarshi hai naam tiharo chahe to paar karo
ek nadiya ek naar kahave mailo neer bharo
jab dou mil ke ek baran bhaye sursari naam paryo
ek loha pooja mein raakhat ek ghar badhik paryo
paaras gun avagun nahi chitvat Kanchan karat kharo
ek jeev ek brahma kahave Sur Shyam jhagaro
abki ber mohi paar utaaro nahi pan jaat taryo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...