Tuesday, October 27, 2020

PESUM DEIVAM



ஆதி சங்கரர்   J K  SIVAN  


                                  நிர்வாண  தசகம் -   4 

ஆதி சங்கரர்  அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர்.  ஷண்மத ஸ்தாபகர்.  அற்புதமான சமஸ்க்ரித ஸ்லோகங்களாக  வேத சாரம், உபநிஷதுகளை வழங்கி இருக்கிறார்.   அவரது நிர்வாண தசகம் என்னவென்றால்  தனது குருவை எதிர் நோக்கி  சிறுவன் சங்கரன் கேரளா காலடியிலிருந்து   காலடி எடுத்துவைத்து  நடக்கிறான்.  காடும் மலையும்  கொடிய வனவிலங்குகளையும்   கள்வர்களும்  கொன்று தின்னும் அரக்கர்களும் வாழும்  இடங்கள் எல்லாம் கடந்து  வடமேற்கே  நர்மதா  நதிக்கரை செல்கிறார். அங்கே  ஒரு முதியவர்  சிறுவர்  நீ யார்  என்று கேட்கிறார். 

நான் யார் என்பதை தான் நானும் தேடி அலைகிறேன் குருநாதா என்று ஆரம்பித்து 10 ஸ்லோகங்கள் அக்கணமே  படுகிறார்  ஆதி சங்கரர்.  அவை தான் நிர்வாண தசகம்.   அந்த முதியவர் தான்  ஆதிசங்கரரின்  குரு கோவிந்த பாத ஆச்சாரியார். 

இதுவரை  7 ஸ்லோகங்கள் விளக்கமளித்து இந்த பகுதியில் கடைசி மூன்று ஸ்லோகங்களை நான் புரிந்து கொண்டவரை விளக்குகிறேன்.  
                                                                 
न चोर्ध्वे न चाधो न चान्तर्न बाह्यं न मध्यं न तिर्यङ न पूर्वा परादिक ।
वियद्व्यापकत्वादखण्डैकरूपस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥८॥8

ந சோர்த்வே ந சாதோ ந சாந்தர்ந பாஹ்யம் ந மத்யம் ந திர்யங் ந பூர்வா பராதிக் |
வியத்வ்யாபகத்வாதகண்டைகரூபஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௮||

''இன்னொன்று சொல்லட்டுமா? நான் மேலே மட்டும் இல்லை, கீழேயும் கிடையாது. உள்ளேயும் காணமுடியாது, வெளியேயும் தேட முடியாது, அப்படியென்றால் எங்காவது நடுவே கிடைப்பேனா என்றால் அதுவும் இல்லை. குறுக்கே, எதிர்புறம், பக்கவாட்டில்,,  ஹுஹும்,  இல்லவே இல்லை. கிழக்கில் இருப்பாயோ? ஒருவேளை மேற்கே?  அங்கும்  நான் கிடையாது.  காற்றில் கலந்த உயிர் சத்து போல் எங்கும் கலந்து வியாபித்து இருக்கிறதே ''ஈதர் ''(ether) அதுபோல தான் நான். எங்கும் காணப்படுபவன். சிவன், ஆத்மன். நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

9 अपि व्यापकत्वादितत्त्वात्प्रयोगात्स्वतः सिद्धभावादनन्याश्रयत्वात ।
जगत्तुच्छमेतत्समस्तं तदन्यस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम  ॥९॥9

அபி வ்யாபகத்வாதிதத்த்வாத்ப்ரயோகாத்ஸ்வத: ஸித்தபாவாதநந்யாச்ரயத்வாத் |
ஜகத்துச்சமேதத்ஸமஸ்தம் ததந்யஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௯||9

எங்கும் எதிலும் இருந்தும், ஒரே  நோக்கமாக,  ஆத்ம  லட்சியமாக இருப்பவன். எனக்கு யாரும் அவசியமில்லை, எவரையும் எதிர்பார்த்து நான் இல்லை. எனக்கு நானே போதும். எதுவும் தேவை அற்றவன். உலகம் எனக்கு லக்ஷியம் இல்லை. நான் இல்லையே அது. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

न चैकं तदन्यद्द्वितीयं कुतः स्यान्न चाकेवलत्वं न वा केवलत्वम ।
न शून्यं न चाशून्यमद्वैतकत्वात्कथं सर्ववेदान्तसिद्धं ब्रवीमि ॥१०॥

ந சைகம் ததந்யத்த்விதீயம் குத: ஸ்யாந்ந சாகேவலத்வம் ந வா கேவலத்வம் |
ந சூந்யம் ந சாசூந்யமத்வைதகத்வாத்கதம் ஸர்வவேதாந்தஸித்தம் ப்ரவீமி ||௧0||

நான் உருவமே இல்லாதவன். என்னை ஏதோ ஒன்றாக நி-னைக்க முடியாது. ஆகவே நான் இரண்டாக பிரித்தும் பார்க்க முடியாதவன். நான் இப்படித்தான் என்று குறிப்பிட்டு கூற முடியாதவன், இல்லை அவன் அப்படியில்லை என்று வேறு மாதிரியாகவும் என்னை பார்க்கமுடியாது. நான் ஒன்றுமே இல்லாத சூன்யம் அல்ல, அதில்லாமல் வேறு என்று அறுதியிட்டு எவரும் விவரிக்க முடியாதவன். இரண்டற்ற ஒன்றின் சாரம் சத்ய ஸ்வரூபம் என்பார்கள். யார் எப்படியெல்லாம் என்னை வித விதமான தத்துவங்களால் கோட்பாடுகளால் எடுத்துச் சொன்னாலும் அதிலும் நான் அகப்படமாட்டேனே .விவரித்தாலும் அது நான் நிச்சயம் இல்லை. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.

மற்றவை சில என்ன சொல்கிறது என்றால் ஆதி சங்கரர் இந்த உலகை விட்டு நீங்கும்போது அவரது சிஷ்யர்கள் அனைவரும் ''குருநாதா தங்களது உபதேசங்களை அத்வைத சாரத்தை சுருக்கமாக எங்களுக்கு சொல்லவேண்டும் என்று கேட்ட பொழுது இந்த பத்து ஸ்லோகங்களை ஆதி சங்கரர் அவர்களுக்கு உபதேசித்தார் என்று சொல்கின்றன.

எது எப்படியானாலும்    நாம்  கேக்காமலேயே,   நமக்கு இந்த  நிர்வாண தசகம் பத்து ஸ்லோகங்கள்  விலைமதிக்க முடியாத பொக்கிஷம் கிடைத்திருக்கிறதே.  அவருக்கு நாம் நன்றி சொல்வது இவற்றை கொஞ்சம், கொஞ்சமாக, அல்லது  கொஞ்சமாவது  பின் பற்றுவதே.

சங்கரர் மேலே சொன்னதெல்லாம் ப்ரஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.   இந்த  நிர்வாண தசகத்தை  தவிர்த்து நிர்வாண ஷட்கம் என்று  ஆறு   வைராக்கியத்தைப் பற்றி  ஆதி சங்கரரே  எழுதி இருக்கிறார். அதையும்  படித்துவிடுவோம்.  லட்டு மாதிரி கொடுக்கிறார். வேண்டாம் என்று சொல்வார்களா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...