Thursday, October 22, 2020

BAGAVAN RAMANA MAHARSHI

 மனிதனும் மிருகமும்   -   J K SIVAN

மகரிஷி  ரமணர் எல்லா உயிர்க
ளிடத்தும் ஒரே மாதிரி அன்புடையவர். அவருக்கு ஆண்  பெண், ஜாதி, வயது,  சமூக அந்தஸ்து  வித்யாசங்கள் கிடையாது. பறவைகள் மனிதர்கள்  எல்லாமே  ஒன்று தான்.
அவரைப் பார்க்க  ஒரு வியாபாரி,
ரங்க சாமி அய்யங்கார்  மெட்றாஸ்
லிருந்து வந்தார். 1906ல்  பச்சையம்மன் கோயிலில்  பகவான்  அப்போது தங்கி இருந்தார்.   அப்போதிலிருந்து  ஐயங்
காருக்கு  பகவான்  தொடர்பு. அடிக்கடி திருவண்ணாமலை வருவார்.
அக்கால கட்டத்தில்  தமிழகத்தில் பல பகுதிகளில் பிளேக் PLAGUE  எனும் கொள்ளை நோய் பல உயிர்களை பலி கொண்டது. இப்போது கொரோனா  மாதிரி. திருவண்ணாமலை அதற்கு தப்பவில்லை.
ரங்கசாமி அய்யங்கார் ரயிலிலிருந்து திருவண்ணாமலையில் இறங்கும்
போது  நல்ல உச்சி வெய்யில்.  நெருப்பாக கொதித்தது. நடந்து வந்து சேர்ந்தார்.  பகவான் ரமணர் அவரை மலர்ந்த முகத்தோடு வரவேற்றார்.
ஆஸ்ரமத்தில் அவரை  ''ஐயங்கார்வாள்  சீக்கிரம்  போய்  ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ  நல்ல பசியோடு வந்திருப் பீர்கள்.  பக்கத்திலேயே ஒரு குளம் இருக்கு. சுகமாக சில்லென்று ஸ்னானம் பண்ணிட்டு வாங்கோ. போஜனம் ரெடியாக இருக்கு''   குளம்
பச்சையம்மன் கோவில் வாசலிலேயே இருந்தது. சுற்றிலும் மரங்கள், ஒரு காடு மாதிரி. மனித நடமாட்டம் அதிகம் கிடையாது.
திடீரென்று  கோயிலில் அமர்ந்திருந்த பகவான் விருட்டென்று எழுந்தார்.  கோயிலை நோக்கி நடந்தார்.  அதன் பக்கமாக இருந்த குளக்கரை சென்றார். எதற்கு பகவான் இப்படி கிளம்பி போகிறார்?  எல்லோருக்கும் ஆச்சர்யம். காரணம் தெரியவில்லை.
ஒருவேளை அவர் இயற்கை உபா
தைக் காக ஒதுங்க போகிறாரோ? பகவான் குளக்கரை வந்துவிட்டார்.  அவர் வந்த நேரத்தில்  ஒரு  பெரிய  சிறுத்தைப்புலி காட்டிலிருந்து தாகத்திற்கு தண்ணீர் குடிக்க குளத்
திற்கு வந்தது.
''சீக்கிரம் தாகம் தீர்த்துக்கொண்டு  போய்விடு.  அப்புறம் நிதானமாக வா. ஐயங்கார் உன்னை பார்க்க
வில்லை. வடக்கு பக்கம் குளிக்கிறார். பயப்படுவார்''

நீர் பருகிவிட்டு  பூனைக்குட்டி மாதிரி சிறுத்தை புலி காட்டிற்குள் சென்று
விட்டது.
ஐயங்கார்  அருகே சென்று பகவான் அவரை அழைத்துக்கொண்டு  கோயி லுக்கு திரும்பினார்.
''இங்கே  வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு.   சிலது   வெயிலுக்கு நீர் பருக வருவது வழக்கம். வாருங்கள் போக
லாம்'' என்றாரே தவிர  சிறுத்தை வந்தது பற்றி  சொல்லி அவரை பயப் படுத்தவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...