Sunday, October 4, 2020

 

பேசும் தெய்வம்       J  K  SIVAN 

           

               ஒரு  மஹா யோகியின்  கதை 

பஸவன்குடி கர்நாடகாவில் ஒரு ஊர். அங்கே  13.11.1917 (பிங்கள  வருஷம், அஸ்வனியில்,  ஸ்வாதி நக்ஷத்ரத்தில்)  கைபு ராம சாஸ்திரி-வெங்கடலட்சுமி அம்மா தம்பதிக்கு   ஸ்ரீனிவாசன் எனும் ஒரு பையன் பிறந்தான்.  எட்டாவது வரை ஆர்ய வித்யாசாலாவில்  பெங்களூரில் படித்தான். அதீதமாக  அவனிடத்தில்  தார்மீக,  கருணை, அன்பு, பக்தி, ஆன்மீக  குணம் அதிகமாக இருந்தது. 


அந்த  ஊரில் ஒரு குளத்தில் பேய் இருக்கிறது என்று அவன் நண்பர்கள் பயமுறுத்தினார்கள். ஸ்ரீனிவாசனுக்கு பயமே கிடையாது.  

''தைரியசாலியாக இருந்தால் நீ அங்கே  போய் உயிரோடு வா''  என்று நண்பர்கள் அவனை அனுப்ப
10 வயது  ஸ்ரீனிவாசன் அமாவாசை  நள்ளிரவில்  தனியே   அந்த குளத்திற்கு சென்று இறங்கி கைகால் கழுவிவிட்டு வந்ததும் நண்பர்கள்  அசந்து போனார்கள்.

''எப்படிடா  நீ பேயிடம் மாட்டிக்கொள்ளாமல் திரும்பி வந்தாய்?''
''பரமேஸ்வரனை  பிரார்த்தித்துக்கொண்டு போனேன், அப்புறம்  என்ன பயம்?''

ஸ்ரீனிவாசனின்  நண்பன் ஒருவன் பரிக்ஷை சரியாக எழுதவில்லை,  அந்த பையன்  அப்பா ஒரு பெரிய பாறையை  பையன் முதுகில்  வைத்து மத்தியானம் வரை நில் என்று தண்டனை கொடுத்து, அவன்  வலிதாங்க முடியாமல் அழுதான். அப்போது ஸ்ரீனிவாசன் நண்பன் வீட்டில் இருந்ததால்  நண்பனின் அப்பாவிடம் 
 
''மாமா தயவு செய்து அவனை அழவிடாதீர்கள்.அவன் தண்டனையை நான் ஏற்கிறேன்  என் முதுகில் அந்த கல்லை வையுங்கள்''  என்று கெஞ்சியதும் அந்த கல் நெஞ்ச அப்பா கலங்கினார். என்ன தயாள குணம், கருணை  மனம் இந்த சிறுவனுக்கு!

ஸ்ரீனிவாசன் மற்ற நண்பர்களுக்கு பாடம் சொல்லிக்  கொடுப்பதில் நேரம் செலவழிப்பதால் அவன் சரியாக பாடத்தில் கவனம்  செலுத்துவதில்லை, படிப்பதில்லை, என்று நினைத்த  அவனுடைய  அப்பா, கைபு ராம சாஸ்திரி ஒரு பிரம்பால் அவன் உள்ளங்கையில் வெளுத்து வாங்கினார்.  முகம் சுளிக்காமல் மரியாதையோடு அத்தனையும் வாங்கிக்கொண்டு அடுத்த கையையும்  நீட்டினான் ஸ்ரீனிவாசன்.  அப்பாவின்  நண்பர் சிறந்த ஜோசியர்  வெங்கட்ராம சாஸ்திரி அப்போது அங்கே இருந்தவர் அசந்து போய்விட்டார்.  பிரம்படியால் சிவந்த அவன் கைககளைப்  பார்த்தார்.  வழக்கமான ஜோசிய பழக்கம் அவன் ரேகைகளை படிக்கத்  தோன்றியது.  அவன் கை  ரேகைகளை அலசிய  ஜோசியர் ஆச்சர்யமடைந்து 

'அடே  கைபு  ராமா,   உன் மகன் ஸ்ரீனிவாசன் கையை இப்போது  தான்  பார்த்தேன். நீ  பாக்கியவான் டா, உன் மகன் ஒரு பெரிய  மஹா யோகி. அவன் ஜகத் குருவானால் கூட  சந்தேகமே இல்லை. அவனைப் போய் மிருகம் மாதிரி அடிக்கிறாயே.   அவன் காலிலே ஒருநாள் நீ விழுவே'' .      இதைக்கேட்டு ஸ்ரீனிவாசன் பெற்றோர்  ஆச்சர்ய மடைந்தார்கள்.  

வீட்டில் தரித்திரம் தாண்டவமாடியது. ''அம்மா  எனக்கு பூணல் போட்டதும் தான்  நான் பிக்ஷைக்கு போக முடியும், அதில் கிடைக்கும் தானியங்கள்,காசு நமது குடும்பத்துக்கு  உதவுமே. எனக்கு பூணல் போட்டு விடுங்கள்''  என்றான் ஒருநாள் ஸ்ரீனிவாசன்.

ஒரு முக்கியமான விஷயம்.  அந்த கால கட்டத்தில்  சிருங்கேரி சாரதா  பீட ஜகத்குரு  மஹா சன்னிதானம் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் பட்டத்துக்கு  வரவேண்டிய  அடுத்த  சிஷ்ய பீடாதிபதியை தேடிக் கொண்டிருந்தார்.  சாஸ்திரிகள்,ஜோசியர்கள்  பலரை ஆலோசனை கேட்டுக்  கொண்டிருந்தபோது வெங்கட்ராம சாஸ்திரி  ஸ்ரீனிவாசன் ஜாதகத்தை தான் பார்த்ததில் அது நேர்த்தியாக  சிலாக்யமாக இருப்பதை பார்த்துவிட்டு ஜகதகுருவிடம்  விளக்கிச் சொன்னார்.  

''அந்த பையனுக்கு முதலில் உபநயனம் ஆகவேண்டும். ஏழை என்பதால் நமது மடத்திலேயே போட்டு விடுவோம்'' என்றார்  ஜகதகுரு.  4.5.1930ல்  சிருங்கேரியில் ஸ்ரீனிவாசனுக்கு ஸ்ரீ சாரதா தேவி சந்நிதியில்   டாண்  டாண்  என்ற மணியோசையோடு ப்ரம்மோபதேசம், உபநயனம் முடிந்து  பெற்றோர்கள்   ஸ்ரீனிவாசனோடு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளை  நரசிம்ம வனத்தில் சென்று நமஸ்கரித்து  தரிசித்தபோது  ஸ்வாமிகளின் கருணைக்கண்கள் ஸ்ரீனிவாசன் கண்களை ஆராய்ந்தன. .

ஜகத்குரு  அவனிடம் சில கேள்விகள் கேட்டார். அவன் சொன்ன பதில்கள் ரொம்ப திருப்தி அளித்தது.
''  நீ இங்கேயே  இருந்து படிக்கிறியா?''
ஸ்ரீனிவாசன்  அவருக்கு பதில் சொல்லாமல்  தனது அம்மா அப்பாவை பார்த்து  '' நீங்க என்னை விட்டு விட்டு   ஊருக்கு போங்கோ.  நான் இங்கேயே இருந்து படிக்கப்போறேன்'' பெற்றோர்கள் திரும்பினார்கள்.  

ஸ்ரீனிவாசன் விடிகாலையில்  4.30 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டான். நித்யானுஷ் டானங்கள் முடித்து  காலை  ஆகாரம் உண்டபின் படிக்க ஆரம்பித்தால் நாள் முழுதும் படிப்பான். நடுவில் மாத்யான்ஹிகம்,சந்தியா வந்தனம் இடைவெளிகள் மட்டும்.  பகலில் தூக்கம் கிடையாது. இரவு 10.30க்கு தான் படுக்கை.  அவசியம் ஏற்பட்டால் தான் பேச்சு. மற்றபடி  மௌனம், தியானம். பாராயணம். காயத்ரி ஜபம் எந்நேரமும்.  ஆச்சர்யமாக  கனவிலும் கூட   காயத்ரி மந்த்ர ஜபம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெரியோர்களிடம்,ஆச்சார்யர்கள்,குருவிடம்  பக்தி,மரியாதை,  சாஷ்டாங்க நமஸ்காரம். அவர்களின் மனப்பூர்வ ஆசிர்வாதம் பெறுதல்  இது தான் அவன் வழக்கம்.  இதெல்லாம்  ஜகதகுரு கவனித்துக் கொண்டு வந்தார்.

ஒருநாள்  பாடசாலைக்கு வந்த ஜகத் குரு  மாணவர்களிடம்  ''இங்கே  போஜனம் வசதிகள் எப்படி இருக்கு?'' என்று கேட்டார். சில மாணவர்கள்  சாப்பாட்டின்  அளவு,  காய்கறி வகையறா, ருசி பற்றி  குறையும் நிறையுமாக  பதில் சொன்னார்கள்.  ஸ்ரீனிவாசன் முறை வந்தது. 
''நீ  என்ன சொல்லப்போறே?''  
ஆச்சார்யாளை  நமஸ்கரித்து  தலை ஆட்டினான்.
''வாய் திறந்து உன் அபிப்ராயத்தைச்   சொல்லு''
''குருதேவா , இங்கே  நான் பெறுவது ஆச்சார்யாள் பிரசாதம், அதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை''

ஒரு நாள்  ஜகத்குரு   ஸ்ரீ  தக்ஷிணாமுர்த்தி மேல் ஒரு ஸ்லோகம் இயற்றினார்.  ''இதற்கு அர்த்தம் சொல்லுங்கோ'' என்று மாணவர்களைக்  கேட்டார்.     வழக்கமாக   ''பரமேஸ்வரன் தான் தக்ஷிணாமூர்த்தி, மௌனகுரு,  சின்முத்திரை காட்டி  ஆத்மா ஒன்று தான்  ப்ரம்மம்.  இரண்டாவதாக எதுவும் இல்லை, எங்கும் எதிலும் எப்போதும் நிறைந்தது.   தக்ஷிணாமூர்த்தி கைகளில்,  புஸ்தகம், சர்ப்பம்,  அக்னி, இதெல்லாம் சத்யம் என்று சாட்சியாக உள்ளது''  என்ற  வகையில்  அர்த்தம் சொன்னார்கள்.  ஜகதகுருவுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஸ்ரீனிவாசனை  நோக்கினார்.  ''நீ என்ன அர்த்தம் சொல்லப்போகிறாய்?'' என கேட்டார்.

ஸ்ரீனிவாசன் கைகட்டி வாய் பொத்தி  ''குருநாதா,  ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின்   கரங்களில் உள்ள மூன்று வஸ்துக்கள்  மூலம்   வேத சாஸ்திரம்,ஸ்வாத்ம விசாரம், அனுபவம்   மட்டுமே  பிரம்மத்தை புரிந்து கொள்ள வைக்கிறது 
என்று உபதேசிக்கிறார் '' என்றான்.  ஆச்சார்யர்  முகமலர்ந்தார். 

ஒருநாள்  மாணவர்களை  காலபைரவ ஆலயம் கூட்டி சென்றார் ஜகதகுரு.  ஒரு ஸ்லோகம் சொன்னார்:
 सतू े सकू रयवु  त: सतु शतम य तसभु ग ं झ ट
त । क रणी  चराय सतू े सकलमह  पलला लतं ॥
sūtē ūkarayuvatiḥsutaśatamatyantasurbhagaṁ jhaṭiti |kariṇī cirāya sūtē sakalamahīpilalālitaṁ
''இதற்கு என்ன அர்த்தம் ?என்று கேட்டார்.   யாரும் பதில் சொல்லாததால்   தானே  விளக்கினார்: 

''சுத்தம் இல்லாத பன்றி வதவதவென்று  பல குட்டிகள்  போடும். கம்பீரமான சுத்தமான யானை ஒரே ஒரு குட்டி தான் போடும். ராஜாக்கள் சந்தோஷமாக அதை ராஜாவின் பட்டத்து யானையாக  அலங்கரித்து ஏற்றுக்  கொள்வார்கள்'
''குழந்தைகளே, நான்  ஏன் இந்த ஸ்லோகத்தை சொன்னேன் என்று தெரியுமா?'' என்று ஜகத் குரு கேட்டபோது மாணவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. விழித்தார்கள்.ஸ்ரீனிவாசன் கை  தூக்கினான்.
''நீ சொல்லு, இதற்கு என்ன அர்த்தம்?''
''குருநாதா,  பெரிய பள்ளிக்கூடங்கள்  பல கட்டிடங்களோடு  வசதிகளோடு  நூற்றுக்கணக்கான  மாணவர் களை உருவாக்கினாலும் உண்மையான  பாடம் கற்பிக்கவோ, கற்றுக்கொள்வதற்கோ அங்கே வழி  இல்லை,  கல்வியின் பயன் கிட்டுவதில்லை.  சின்னதாக இருந்தாலும்  இதுபோன்ற பாடசாலை  மாணவர்களை அதி புத்திசாலிகளாக , சிறந்த உண்மையான ஸாஸ்வதமான  கல்வி பெறச்செய்து  பயனுள்ள மனிதர்களாக  மாற்றமுடியும்''
''ஆஹா  அற்புதமப்பா உன் விளக்கம்'' என்று மகிழ்ந்தார்  குருதேவர்.
பக்கத்தில் நின்றிருந்த வைத்தியநாத சாஸ்த்ரியிடம்  ''எங்கோ ஒரு தாய் தான்  பரிபூரண   தெய்வானுக்
கிரஹத் தால் இம்மாதிரி   மஹா ராஜாக்களும், சக்ரவர்த்திகளும் காலில்   விழுந்து வணங்கக்கூடிய  மகோன்ன தமான சிசுவைப் பெற முடியும்''  என்கிறார்.    அன்று மாலை  ஸ்ரீனிவாசனைப் பார்க்க வந்த அவன் தாய்க்கு இந்த விஷயம்  காதில் விழுந்ததும்   ஆனந்தக்கண்ணீர்  வடித்து  மகிழ்ந்தாள்.

மடத்தில்  ஸ்ரீனிவாசனை  அவன் வந்த நாள் முதல் சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்.
ஸ்ரீனிவாசன் ஒரு நாள்  வெகுநாளாக மனதில் இருந்த சந்தேகம் சிலவற்றை  ஒருநாள் .ஆச்சார்யர்  வைத்யநாத சாஸ்த்ரியிடம் கேட்டான்: 

1) நமது சாஸ்திரங்கள் சம்பிரதாயப்படி  குடும்பத்தில் மூத்த மகன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டுமா?

2) நமது பரம குரு நன்றாக  கல்வி பயின்றபிறகு தானே  சன்யாசம் மேற்கொண்டார்?  சன்யாசம் பெறுவதற்கு முன்பே  கல்வி அவ்வளவு முக்கியமா?

3)உலகத்தில் பிறந்தவனுக்கு மூன்று கடமையாமே. முதலில் பித்ருக்கள், பெற்றோர்க்கு சேவை ரெண்டாவது  தேவதா  உபாசனை மூலம் பயன் பெறுதல், மூன்றாவதாக  குழந்தைகள் பெற்று வம்ச வருத்தி செய்வது.  இது உண்மையில்  சரியா  முறையா சுவாமி?,

4) ஒருவன் சீடனாக  குருவிடம் நீண்ட காலம்  பணி புரியவேண்டும். அப்போது தான் அடுத்த ஆஸ்ரமம் செல்ல அவனுக்கு தகுதி,  ஆஸ்ரம தர்மம்  என்பது  சரியா?''

5)  என்னை மாதிரி ஒரு சிறுவன் சன்யாசம் பெற வழி உண்டா?

6) ஒருவேளை என் பெற்றோர்கள் நான் சன்யாசம் பெற அனுமதிக்காவிட்டால், அதை மீறி நான் சந்நியாசியாக முடியுமா?

இதெல்லாம் ஸ்ரீனிவாசன் மனதில் பல காலமாக  எழுந்த  விளைவுகள் என்பதை குரு வைத்யநாத சாஸ்திரி புரிந்து கொண்டார். அவனுக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல்   தவித்தார். ஒரு வாரகாலம் ஓடியது.   

ஒருநாள்  ஸ்ரீனிவாசன் வைத்யநாத சாஸ்திரி இருவரையும் பரமகுரு  காலபைரவர் ஆலயத்துக்கு  தன்னுடன் கூட்டிச்  சென்றார்.  அங்கே சாயந்திரம்  வகுப்பு நடத்தினார். அப்போது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

ஸ்ரீனிவாசனின் கேள்விகளுக்கு  சாஸ்திரத்தில் மேற்கோள் காட்டி  அவனுக்கு  திருப்திகரமாக பதிலளித்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்   ஸ்ரீனிவாசனோ, அவனது ஆச்சார்யர்  வைத்யநாத  சாஸ்திரியோ  அவன் கேள்விகளை  ஜகத்குருவிடம் கொண்டு போகவில்லை.  

ஸ்ரீனிவாசன் குரல் தெளிவாக வைத்யநாத சாஸ்திரிக்கு கேட்டது:  ''சம்சாரம் இவ்வளவு துன்பமயமானது என்றால் எனக்கு இத்தகைய  வாழ்க்கை வேண்டாமே''.  

 சிருங்கேரி வருவதற்கு முன் பெங்களூரில் அவனும்   நண்பர்களும் விளையாடும்போது  ஒவ்வொரு வரும்  தான்  என்னவாக வாழ்க்கையில் இருக்க ஆசை என்று பேசிக் கொள்வார்கள்.   அப்போதே  ஸ்ரீனிவாசன் '' நான்  சந்நியாசியாக போறேண்டா'' என்பான். எல்லோரும் சிரிப்பார்கள்.   

''சன்யாசியாப்போனால் என்னடா பிரயோசனம் ஸ்ரீநிவாஸா?  ராஜாவாக இருந்தால்  எல்லோரும் மதிப்பார் கள், நிறைய  பணம் காசு, சௌகர்யம்,பேர் புகழ், மதிப்பு, எல்லோரும் வணங்குவார்கள். நிறைய வேலைக் காரர்கள் இருப்பார்கள் '' என்றான் ஒருவன்.

''நீ நினைக்கிற  மாதிரி  ராஜா  சந்தோஷமா இருக்க முடியாது. எந்த நிமிஷமும் அவன் பதவி, உயிர், பணம், அதிகாரம் எல்லாம் இன்னொருத்தனுடையதாகிவிடும். நான் சன்யாசியானால் , அமைதியாக உட்கார்ந்து தியானம் பண்ணலாம், பகவானை நேரில் பார்க்கமுடியலாம், அவன் என்னைகாப்பாற்றுவான். எனக்கென்ன பயம்''  என்றான் ஸ்ரீனிவாசன்.

மடத்து நந்தவனத்தில் ஒரு மான் ஓடிவந்து ஒருநாள் ஸ்ரீனிவாசனை முட்டித் தள்ளி விட்டது. அன்று இரவு நல்ல ஜுரம்.  ரெண்டு மூணு நாள்  இருந்தது.  நாட்டு வைத்தியத்தில் குணமாகவில்லை. குறையவில்லை. மடத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்காவது  உடம்பு சரியில்லை என்றால்   எந்த வியாதியும் உடனே குணமாக
  ஜகத்குரு  ஆசார்யாள் மந்திர திருநீறு , பஸ்மம், கொடுப்பார். ஆச்சர்யமாக  ஸ்ரீனிவாசனுக்கு  ஆச்சார்யாளிடமிருந்து பஸ்மம் தரப்படவில்லை.  ஜூர வேகத்திலும் தாபத்திலும்  நினைவிழந்தும் கூட  அவன் வாய்  ''ஸ்ரீ குரோ பாஹிமாம்''  என்று   ஸ்மரணை  யின்றி  சொல்லிக்கொண்டே இருந்தது.   

அடுத்தநாள் காலை  ஐந்து மணிக்கு  மஹா சன்னிதானம்  ஆச்சார்யாள் நேரே ஸ்ரீனிவாசன் படுத்திருந்த அறைக்குள்  வந்துவிட்டார். அங்கே அவனைத்தவிர யாருமில்லை. முடியாமல்  அவன் எழுந்து அவர் பாதங்களில் விழுந்தான். கண்களில் ஆறு.  பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.  அவன்  சிரசில் கைகளை வைத்து  ஆசிர்வதித்தார். 

''இன்னுமா ஜுரம்.?  கவலைப் படாதே.  சீக்கிரம் சரியாயிடுவாய். தூங்கு '' பாடசாலை வாத்தியார்  வைத்யநாத சாஸ்திரிக்கு   அதிர்ச்சி.  ஆச்சர்யம். இதுவரை ஜகத்குரு இப்படி  நேரில்  யாரையும் பார்க்க  வந்ததில்லை, தொட்டு ஆசிர்வதித்ததில்லை.  மடத்தின் சரித்திரத்தில் யாரும்  ஜகதகுருவை தொட்டதில்லை.   ஸ்ரீனிவாசனைப் போல   அவர்  பாதங்களை கெட்டியாக  யாரும்  கையால் தொட்டு பிடித்ததில்லை. 

''சந்த்ரமௌலீஸ்வரா,  பரமேஸ்வரா, பரம தயாளா,  ஸ்ரீனிவாசனை குணப்படுத்து. என் சிஷ்யனை எனக்குத் தா'' என்று  ஜகத்குரு  வேண்டினார்.   அன்றிரவு ஜகத் குரு கனவில்  அவரது குரு  ஸ்ரீ  சச்சிதானந்த, சிவாபினவ  நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகள் தோன்றி  ஸ்ரீனிவாசனை அடுத்த  பீடாதிபதியாக ஏற்க  சம்மதம் தெரிவித்தார்.  

அடுத்தநாள் சிருங்கேரி மட நிர்வாகி  ஸ்ரீகண்ட சாஸ்திரிகளிடம்  தனது எண்ணத்தை ஆச்சார்யாள் தெரிவித்தார்.  ஸ்ரீனிவாசன் பெற்றோருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்மதம் உடனே பெறப்பட்டது.    

22. 5.1931 சிருங்கேரி  மஹாஸன்னிதானம் முன்னிலையில் அடுத்த பீடாதிபதியாக ஸ்ரீனிவாசன் அங்கீகரிக்கப் பட்டான்.  அவன் குடும்பத்தார் அனைவரும் வந்திருந்தார்கள்.  பெற்றோர் காலில் கடைசியாக  ஸ்ரீனிவாசன் விழுந்து நமஸ்கரித்தான். ஆசி பெற்றான்.  அன்று இரவு  அவனுக்கு ஆச்சர்யமான ஒரு கனவு. 

ஸ்ரீனிவாசன் தனியாக சாரதாம்பாள் சந்நிதி செல்கிறான்.  அங்கே பெரிய கும்பல் ஆயிரக்கணக்கானோர் நிற்கிறார்கள். நடுவில் கும்பலில் ஸ்ரீனிவாசன் நிற்கிறான்.  அந்த கும்பலில் ஒரு   கை  அவனைப் பிடிக்கிறது. யார் என்று பார்த்தால்  மஹாசன்னிதானம்  ஆச்சார்யாள் தான்.  அவனை அணைத்தவாறு  சாரதாம்பாள் முன்னே  நிற்க  வைக்கிறார்.  கதவு சாத்தப்படுகிறது.   

ஸ்ரீ  சாரதாம்பாள்  அவனை அழைக்கிறாள்.    ''வா  உன் நல்ல வேளை இனி  துவங்கிவிட்டது.  மஹாராஜாதி ராஜாக்கள் உன்னை வணங்குவார்கள். அதற்காக  பெருமையோ,  கர்வமோ  படாதே.  என்னை விடாமல்  வணங்கு. தொழுது  கொண்டு   இரு.  உன் பரமகுருவை விட்டு எங்கும்  நகராதே . நிழல்மாதிரி இரு.  என் ஞாபகம் எப்போதும் இருக்க இந்த ஸ்படிகமணி மாலையை தரித்துக் கொள்.  அவன் கழுத்தில் அம்பாள் தானே ஒரு ஸ்படிகமணி மாலையை  அணிவித்தாள் .   அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.  ஸ்ரீனிவாசன் கழுத்தை தொடுகிறான். கழுத்தில் இருந்த ஸ்படிகமணி மாலையைக்   காணோம்''   விசித்திரமான  இந்த   கனவு  கலைந்து விருட்டென்று ஸ்ரீனிவாசன் எழுந்தான்.       ''எங்கே  என் மாலை?''  ....  இதற்கு மேலும்  தனக்கு  யாரும் நடக்கவேண்டியதை   நினைவூட்ட வேண்டாம் என்று அவனுக்கு தோன்றியது. 

இனி உலகமறிந்த உண்மையை  நினைவு படுத்துகிறேன்.   22.5.1931. ஸ்ருங்கேரியில்  சரித்திர முக்யத்துவம்    வாய்ந்த  பீடாரோஹணம்  சடங்கு நடந்தது.  ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளின் அடுத்த பீடாதிபதியாக  சிஷ்ய ஸ்வீகாரமாக   ஸ்ரீநிவாஸன்  ஏற்கப்பட்டான். இனி அவன் அல்ல. ''அவர்''   '' ஸ்ரீ  அபிநவ வித்யாதீர்த்த பாரதி ஸ்வாமிகள்' .   பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குழுமி இருக்க  தங்க வெள்ளி பல்லக்கில்  தர்பார் ஆடையோடு   மஹா சன்னிதானம்,  குட்டி சன்னிதானம்  ஒரு சேர அமர்ந்து  தரிசனம் தர  காத்திருந்
தார்கள்.   13 வயது  குட்டி ஆச்சார்யரை  கையைப்பிடித்து பல்லக்குக்கு அழைத்துச் சென்றார்   மஹா சன்னிதானம். 

ஸ்ரிங்கேரி   35வது   சாரதா பீட மஹாஸன்னிதானம் ஜகதகுரு  ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகள்  21.9.1989  அன்று சித்தி அடைந்தார்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...