Saturday, October 17, 2020

HUMAN PSYCHOLOGY


  தெரிஞ்சுக்கோ.. புரிஞ்சுக்கோ  J K  SIVAN 


 நாம்  எல்லோருமே  தெரிந்தவரோ , தெரியாத வரோ,  வாழ்க்கையில்  பல பேருடன் பழகு கிறோம்.  மனிதர்களோடு பழகுவது மிருகங்க ளோடும்  பறவைகளோடும்  பழகுவது போல் அல்ல.   புலி அருகில் சென்றால்  கொன்று விடும்.  தின்றுவிடும் என  தெரியும்.    பூனை  பிராண்டும்.  நாய் கடிக்க சான்ஸ்  அதிகம்.  குரங்கு  கூட்டுக் குள்ளே  இருந்து பார்க்க  தான் வசதியானது. கிட்டே  போனால்  நமது ஸ்வபாவம் தெரியும்.
பறவைகள்  அவ்வளவாக  மனிதர்க ளிடம் ஒட்டுவதில்லை.  அசந்தால்  தின்றுவிடுவார்கள் என பயம்.   மனிதர்கள்  அப்படி  இல்லை.  
 மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என  அறிந்து கொள்ள  ஆறு  அறிவு  போறாது.  பார்ப்பதது வேறு, பழகுவது வேறு.   நிறைய  வித்யாசம்  இருப்பதால்  கொஞ்சமும்  எடை  போடவே  முடியாது.

 சில மனோ தத்துவ  நிபுணர்கள்   ''இது''  போன்ற  பலரை  அணுகி  பழகி  ஆராய்ச்சி செயது,  ஓஹோ  100ல் பாதிக்கு மேல்   இப்படித்தான்  என   கணித்திருக்கிறார்கள்.  பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ.  அவர்கள் கண்டுபிடிப்பு என்ன?
நாலு  பேர்  உட்கார்ந்து  பேசும்போது குப்புசாமி  ஒரு  சில்லரை  அறுவை  ஜோக்குக்குகூட  விழுந்து விழுந்து  சிரிக்கிறானா?   நிச்சயம்அவன்  உள்ளுக்
குள்ளே '' தனிமையில்  வாடுபவன்'' என்பது  ஆராய்ச்சி முடிவு.
 எப்போது பார்த்தாலும்  கும்பகர்ணனா?  எப்ப வுமே  தூக்கம் தானா?   ''இல்லை  கொஞ்சம்  டயர்டு''   ''வேலை  ஜாஸ்தி. ' ஏதோ  அவன்  பதில்  சொன்னாலும்  குப்புசாமி  மனோ தத்துவ  நிபுணர்கள்  அவனை  அளந்து  வைத்திருப்பது     ' வெளியே சொல்லாமல்  அவன்  உள்ளூர  ஏதோ  துன்பத்தில்,  துக்கத்தில்  புழுங்குபவன்'' 
'
'எங்கே  உங்களை  ரொம்ப நாளாக  காணோம்  ஊரிலே  இல்லையா  என்று  சாதாரணமாக  கேட்டாலும்  ஏதோ  ஒரு  பதிலை  விட்டேத்தி யாக சொல்கிறார்.  ''பாம்பே  போனேன்,  இல்லை  அங்கிருந்து ஹைதராபாத்,  திடீர்னு  பூனே  மாத்தி மாத்தி  ரொம்ப  ஜோலிகள். சில சமயம்  காபி  டீ  குடிக்க மட்டும்  இல்லை,  குளிக்க  கூட  நேரம்  கிடைக்கலே  என்று  வேக வேகமாக  ஏதேதோ  தந்தி பாஷையில்  பேசுகிறாரா  ...  ஜாக்ரதை.  அவர்   சில பல  ரகசியங்களை  முழுங்கி  வெளியே  சொல்லாத  அமுக்கு பூஷணிக்காய் என்பது ஆராய்ச்சி கணிப்பு   

உணர்ச்சிகளை  எதிர்மாறாக  வெளிப்படுத் துபவர்கள்  சிலர்.  எந்த  துக்கம்  வந்தாலும்  மனிஷன்   கண்ணில் ஒரு  சொட்டு  கண்ணீர்  கூட  வராது. இவரை  ஏதோ  கல்  நெஞ்சு  ஆசாமி  என  எடை போடாதீர்கள்.  ரொம்ப பூஞ்சை  மனசு தான்.  

 சாப்பிடும்போது ஒருவர் அதிகமாகவே இலையில்  உணவை  காலி செய்கிறாரா?  மேலும் மேலும்  கேட்டு  சாப்பிட்டு   மறுபடியும் இலை  துடைத்து விட்டாற்போல்  இருக்கிறதா? பசியால் கண்  பஞ்சடைந்தவரோ?  இல்லை.   அவர்  ''டென்ஸ்''   ஆக  இருக்கிறார்  என்று  அர்த்தம்.

 உணர்ச்சிகளை உள்ளே  போட்டு  அமுக்கி  வைத்தி ருக்கிறார். வெளியிட வில்லை  என்கி றார் கள் நிபுணர்கள்.

'' அடடா   அப்பிடியா''  என்று ஒன்றுமில்லாததற்கு  கூட  ஒருவர்   கண்ணில்  காவேரியா? ஓஹோ அவர் ஒரு  அப்பாவி,  மென்மையான  இதயம்,  இரக்க  குணம் கொண்டவர் -  இதை சொல்ல  நிபுணர் தேவையில்லை.  

 எதற்கெடுத்தாலும்  சள்ளு  புள்ளு   கோபமா?
 சின்ன விஷயங்களுக்கு  கூட எரிந்து  விழுகி றாரா? பாவம்  அவர்  அன்புக்கு  ஏங்குகிறார். கோபப்படாமல் நாம் அவரிடம் அன்பாக பழகி னால் சந்தோஷப்படுவார்.

எதற்காக இந்த  விஷயங்களை சொல்கிறேன்?  நாம்  ஒரு  தப்பான  உலகத்தில்  இருக்கிறோம்.  எலுமிச்சம்பழ  ஜூஸ்  வேண்டுமானால்   கெமிகல்  பவ்டர்  (லெமன் எஸ்ஸேன்ஸ்) டிராப்  தண்ணிரில்  கலக்கி குடிக்கும் பொய்  ஆசாமிகள். ஆனால்  கை கழுவ  ஹோட்டலில் இளம் வெந்நீரில்  உண்மையான  எலுமிச்சம்பழத்தை  நறுக்கி  போட்டு கை  தோய்க்கும் முட்டாள்கள்.  என்ன  பண்பாடு இது?  அதனால்  தான்  அண்டை   அசல் அருகில்  எதிரில்  இருக்கும்  ஆசாமிகள் பற்றி  உஷாராக  தெரிந்துகொள்ள  இது  தேவையாக  இருக்கலாமே என  தோன்றியது.  

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...