Wednesday, October 7, 2020

HANUMAN CHALIS

 

ஆத்ம ஞானமும்  அமெரிக்க விஞ்ஞானமும்   
J K SIVAN



மஹான் துளசிதாசர் 15ம் நூற்றாண்டு வாழ்ந்தவர்.அக்பர் காலத்தில்.   அக்பர் அவரை சிறையில் அடைத்தான்.  அப்போது நாற்பது நாள் சிறையில் இருக்கும்போது இயற்றியது ஹனுமான் சாலிசா. ஹனுமான் நாற்பது என்கிற அற்புத ஸ்தோத்திரம். துளசி தாசரை  வாலமீகி ரிஷியின் அவதாரம் என்று சொல்வார்கள்.

ஹனுமான் சாலிஸா   என்பது  நாற்பது ஸ்லோகங்கள் கொண்ட  ஹநுமானைப் பற்றிய  ஒரு ஸ்தோத்ரம். வெகு அற்புதமாக இருக்கும் கேட்பதற்கு.  பலர் மனப்பாடம் பண்ணி கடகட வென்று ஒப்பிப்பார்கள். அதில் ஒரு இடத்தில்   ''யுக்  ஸஹஸ்ர யோஜன்  பார் பானு, லீலயோ  தாஹி மதுர பல் ஜானு'' என்று வரும்.
அதை மட்டுமே பார்த்தாலே  போதும்.  எந்த அளவுக்கு நமது ரிஷிக்கள்  ஞானிகள்  அண்ட  சராசர த்தை அளந்து வைத்திருந்தார்கள். இப்போதைய  விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எந்த  தூரக்கண்ணாடி இல்லாமலும், எந்த  உபகரணமும் இன்றி கண்ணை மூடியே  ஆத்மாவில் கண்டு அறிந்தவர்கள் என்பதும் புரியும்.  மேற்கண்ட ஸ்லோகத்தில்  ஒரு யுகம்:   12000 வருஷங்கள்.ஒரு ஸஹஸ்ரம் :  ஆயிரம் ஒரு யோஜனை:  எட்டு மைல்கள் நீளம். இந்த வாய்ப் பாட்டை வைத்துக்கொண்டு பெருக்குவோம்

:யுகம் X ஸஹஸ்ரம்  X யோஜனா:  அது தான்  பார்  பானு.   

சூரியன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்று கணக்கிடுங்கள்:  நமது இப்போதைய  மெட்ரிக் கணக்கில்  ஒரு மைல்    : 1.6 கி.மீ. தூரம் 

12000 x 1000 x 8 miles = 96000000  X 1.6:   1536000000 kms 

 2G ஊழலில் கூட  இத்தனை  சைபர் இல்லை.  இதை எப்படி படிப்பது என்பதே எனக்கு சுத்தமாகத்  தெரியாது. அமெரிக்க  விஞ்ஞான ஆராய்ச்சி கூடம்  NASA  இதை எண்ணிப்பார்த்து விட்டு  ஆமாம்  இது தான்  சரியான  அளவு. சூரியன் அவ்வளவு தூரத்தில் தான் இருக்கிறான் என்று சொல்லிவிட்டதாம் . 

அப்படியென்றால்  சூரியனை ஒரு பழம் என்று நம்பி  குட்டி  ஹனுமான் அவ்வளவு தூரம்  அம்மா அஞ்சனை இடுப்பிலிருந்து தாவி எழும்பி   சூரியனை நெருங்கி  வாயை சுட்டுக் கொண்டு  முகத் தாடையை சிவப்பாக எரித்துக் கொண்டி ருக் கிறான்.  இப்போதும் குளிர குளிர அவனுக்கு சில்லென்று வெண்ணெய்  வாய் மீது  தடவிக்
கொண்டு தானே இருக்கிறோம்

.நான் சொன்னது சும்மா  ஒரு உதாரணத்துக்கு.  நமது  வேதங்கள் சாஸ்திரங்களில் பொதிந்துள்ள  விஷயங்கள் எவ்வளவு அற்புதமான அதிசயமான கருவூலங்கள் என்று எடுத்துக் காட்ட.  

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...