Monday, December 24, 2012

MORAL STORY 61 வேறு வழி



குட்டி கதை  61         வேறு  வழி 

"அண்ணா,  என் வயிற்றில் ஒரு மாவீரன் வளர்கிறான்  உனக்கு  தெரியுமா?"  இது  சுபத்ரை.
"அப்படியென்றால் இனி  உன் வீட்டில்  ரெண்டு  அர்ஜுனர்கள்!!!  அடே அப்பா,  பாண்டவ குலத்துக்கு  தான்  எவ்வளவு பெருமை" ஒரு  அர்ஜுனன்  இருக்கும்போதே  பாண்டவர்களை  எவரும்  வெல்ல முடியாது அப்பறம்  ரெண்டு  அர்ஜுனர்கள்  என்றால்  கேட்கவே வேண்டாம்...'   என்று  சிரித்தான் கிருஷ்ணன் 
"வா, அர்ஜுனா  தக்க  சமயத்தில்  வந்தாய்.  நாங்கள்  உன்  வீர  வாரிசை  பற்றி தான்  பேசிக் கொண்டிருந்தோம்" என்று  அர்ஜுனனை  வரவேற்றான்  கிருஷ்ணன்.
"கிருஷ்ணா,  நாம்  இன்று  சக்ர வியுஹம்  அமைக்கும்  சேனையை  அழிப்பது  பற்றி  பேசுவதாக இருந்தோமல்லவா.  அது  பற்றி  நன்றாக  யோசித்தேன். ஒரு  யுத்தத்தில் எதிரிப்படை  சக்ர வியுஹம் அமைத்தால்  அதை நாம்  எந்த  வியுஹம்  அமைத்து  எதிர் கொள்வதுஎப்படி  முன்னேற வழி என்பதை உன்னோடு  கலந்து பேசத்தான்  வந்தேன்" .
கிருஷ்ணன் சக்ர வியுஹத்தை  உடைத்து  முன்னேறுவதில்  எத்தனை  முன்னெச்சரிக்கை தேவை. யார்  யார்  அதன்  ஒவ்வொரு  முனைப்பிலும்  தாக்க கூடும்,  எந்த இடத்தில் முதலில்  தாக்கி வியுஹத்தை  உடைக்க முடியும்  என்று  விலாவாரியாக  கிருஷ்ணன் அர்ஜுனனிடம்  எடுத்து சொல்லிக்கொண்டிருந்தது  அத்தனையும்  சுபத்ரா வெகு ஆர்வமாக  கேட்டுகொண்டிருந்தாள்.  அவள் மட்டுமா  கேட்டாள்?  அவள் வயிற்றில் இருந்து கொண்டு  வீர  அபிமன்யுவும்  ஆர்வமாக  கேட்டு கொண்டிருந்தான் ?
"உனக்கு  தூக்கம்  வருகிறது சுபத்ரா,  இது  எங்கள் பாடு, பாவம், நீ  ஏன்  மெனக்கெடுகிறாய்.  உள்ளே  போய்  தூங்கு"  என்று  சுபத்ரையை  உள்ளே அனுப்பிவிட்டான்  கிருஷ்ணன்
பிறகு  அர்ஜுனனும்  கிருஷ்ணனும்  அந்த  சக்ர வடிவ  வியுஹத்தை  எப்படி உடைத்து  உள்ளே யிருந்து  வெளிவருவது  என்பது பற்றியும்  விவாதித்தனர்.

மகாபாரத  யுத்தத்தில் 13ம்  நாள்  யுத்தத்தில் அபிமன்யு   வீராவேசமாக துரோணரின்  சக்ர வியுகத்தை  தாக்கி கொண்டிருந்தான்.  அர்ஜுனன் ஒரு புறம்  சைந்தவ சேனையுடன் போர்  புரிய அபிமன்யு யுதிஷ்டிரருடன் சேர்ந்து சக்ர வியுஹத்தை உடைத்து  உள்ளே  முன்னேறிவிட்டான்.  தர்மன்   "அபிமன்யு  உள்ளே  செல்லாதே,  அர்ஜுனன் வந்த பிறகு  உள்ளே போகலாம்”  என்றதை  அவன்  காதில் போட்டுக் கொள்ளவே யில்லை"
பாவம்,  அந்த  சிறுவன்  வெளியே  வர  வழி தெரியாமல்  மாண்டான்
கிருஷ்ணனிடம்  பிற்காலத்தில்  இது பற்றி கேட்டவுடன்  தான்  கிருஷ்ணன் வருத்தத் தோடு சொன்னான்.
“அர்ஜுனன் மகன் அபிமன்யு  சந்திரனின்  அம்சம்.  முனிவர்  கர்கரால்   சாபம் பெற்றவன் அவனுக்கு  16 வயதில்  மரணம் என்பது முடிவான விஷயம்.  சக்ர வியுஹத்தில் அவன்  உள்ளேறிய  அன்று  அவன்  பதினாறு வயதை பூர்த்தி செய்து விட்டான். அவனை  யாரும்  காப்பாற்ற முடியாது. இதற்காகவே, அவன்  சுபத்ரை வயதில் இருந்தபோதே  அவன்  சக்ர வியுஹத்தில்  இருந்து வெளியேறும்  வழியை  கேட்டு  தெரிந்து கொள்ளாமல்  இருக்க  சுபத்ரையை  தூங்க செய்தேன். அவனுக்கு  உன் உதவியோ  என் உதவியோ  கிடைக்காத வாறு  நாம்  அவனை  தனியே  விட்டு விட்டு சென்று விட்டோம்.  இது  விதி.   வருவதை  எதிர்கொள்ள  தயங்க கூடாது" என்றான் கிருஷ்ணன் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...