Monday, December 3, 2012

வைத்தியம்




KUTTI KADHAI 
                                                  வைத்தியம் 
நெருக்கி அடித்து கொண்டு எல்லோரும் ஏறிக்கொண்டு  விட்டனர்ரயில்  வண்டி நகரத்தொடங்கியது கூட்டமும்  சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக  அடங்கியது.  
கிடைத்த  இடத்தில் எல்லோரும்  அமர்ந்து கொண்டனர்.   20வயது  திருமூர்த்தி  தன் தாத்தா கோபாலய்யருடன்  ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தான் . 
அவனுக்கு பரம சந்தோஷம். “தாத்தா  இத பாருங்கஎல்லா மரமும்  பின்னாலே ஓடறது” எட்டி பார்த்த  தாத்தா  சிரித்தார் அருகிலிருந்த  தம்பதியர்    அர்த்த புஷ்டியோட  சிரித்தனர்திருமூர்த்தியோ இந்த உலகத்திலேயே இல்லை. " “ஆஹா,  இதை  பாருங்க,  ஒரு  குளம்,  ஒரு  பெரிய  வீடு.   அட,   மேகங்கள்  கூட   நம்மோடு  மேலே  ஓடி 
வருகிறதே."   தம்பதியருக்கு  இந்த  வாலிபனின்  பேச்சும்  போக்கும்   அருவருப்பை  தந்தது. வாலிபன் திடீரெ   ஜன்னலோர  சீட்டிலிருந்து  குதித்தான்.  "  கொம்பு நீளமா  ஒரு  எருமை மாடு  ஓடறது   அடடாமழை ஜோரா   பெய்கிறது.  இதோ பாருங்க  என் கையிலே   தண்ணீ."   தம்பதியருக்கு  எரிச்சல்  
தாங்கவில்லை“ஏங்க  சார்இவ்வளவு  பெரிய  பையனா இருக்கார்ஒரு  நல்ல டாக்டரு கிட்ட  அழைச்சிட்டு போய்  இவருக்கு   வைத்தியம்  பண்ணலாமே."
"அம்மா எவ்வளவோ  பாடுபட்டு  ஆஸ்பத்திரி  ஆஸ்பத்திரியா  அலஞ்சு  ஆபரஷன் பண்ணப்புறம் தான்  நாங்க  டாக்டரு கிட்டே இருந்து  வரோம்.  வாழ்க்கையிலேயே முதல்  முதலா  இப்போ தான்  
கண்ணு  தெரியுதும்மா இருவது  வருஷத்துக்கப்புறம். "
தன் சந்தோஷத்தில்  இதையெல்லாம்  கவனிக்காத திருமூர்த்தி    தாத்தா   இது  தான்  ஆறு என்கிறதா? நதி என்பதா?
என்று  தண்ணியில்லாத  பாலாற்றின் மீது  வண்டி போகும்போது  கேட்டுகொண்டிருந்தான் 

ஆற்றில்  தண்ணீர்  இல்லாவிட்டாலும்   தம்பதியரின்  கண்ணில்  அவர்களின் தவறுக்காக  வருந்தியதில்  நிறைய  கண்ணீர்  ஓடியது       .

நீதி:    அறிவுரை வழங்கு முன் யோசி உன்  அறிவுரை  மற்றவர்க்கு தேவையா, பொருத்தமானதா  என்று.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...