Wednesday, December 5, 2012

பிர்லா கொடுத்த காசோலை




KUTTI KADHAI            

பிர்லா கொடுத்த  காசோலை 

ராஜுவின்  கம்பெனி ஏகப்பட்ட  கடனையும்  கவலையும் தந்து நஷ்டத்தை  தவிர தலைவலியும்  தந்ததால்  ஒரு  பப்ளிக் பார்க்கில்  தலைமேல் கைவைத்து பெருமூச்சு விட்டான்.
"என்ன  தம்பி  கவலை உனக்கு"  எனக்கேட்ட ஒரு முதியவருக்கு  யாரிடமாவது சொல்லி அழுதால் தேவலை என்றிருந்த  ராஜு  தன் கம்பெனி  தந்த பண  கவலையை  கொட்டினான்
"இவ்வளவு தானே அப்பா,  உன் பெயர் என்ன சொன்னாய் என்று கேட்டு தன்  பையில்  இருந்து ஒரு செக் எடுத்து (ராஜுவின்  பேரில்  ஐந்து லட்சத்திற்கு ) எழுதி கையெழுத்திட்டார்.  இந்த பணம் 
உன்னுடைய  கஷ்டத்திலிருந்து  உன்னை  காப்பாற்றும் . இன்றிலிருந்து ஒரு வருஷம் கழித்து இந்த இடத்தில் என்னை வந்து பார்.  அப்போது  எனக்கு  பணத்தை  திருப்பி கொடுஎன்று சொல்லி செக்கையும் ஒரு  விலாசம் எழுதிய  காகிதத்தையும்    ராஜுவின்  கையில் திணித்து விட்டு தூரத்தில்  ஒரு  பெண்  வருவதை  பார்த்து விட்டு அந்த மனிதர் வேகமாக  நகர்ந்தார்.  அதிர்ச்சியில் ஆழ்ந்த  ராஜு செக்கை மீண்டும் பார்த்தான். தன்னை  ஒரு தடவை  கிள்ளி  பார்த்துகொண்டான்.  ஒரு வேளை  பார்க்கில்  தூங்கி போய்விட்டேனா?   "பிர்லா"  என்ற கையெழுத்து  அவன் தலையை  "கிர்ர்என்று சுழற்றியது.  வீடு சென்ற ராஜு புதிய மனிதனானான்.  இரவும்  பகலும்  உழைத்தான்.  முடங்கி கிடந்த சரக்குகளை விற்றான்.  தேக்கம்  தந்த  பொருட்களை  அகற்றி வந்த விலைக்கு விற்று  லாபம் தந்த  செயலில் தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு  மற்றவர்களின்  உழைப்பாலும்  கம்பனி  முன்னேற  வைத்தான்
"இந்த  செக்கை  உபயோகிகாமலேயே  சமாளிப்பேன்  என்று  வைராக்கியம் கொண்டான்ஒரே வருடத்தில்  கடன் எல்லாம் அடைத்துவிட்டு,  கம்பனியில்  மாற்றங்கள் செய்து  அசுர வேகத்தில் 
புது திருப்பம்  காட்டியதில்  உபரி பணம்  ஆறு லக்ஷம்  கையிருப்பில்  நின்றது.  ஒருவருடம் கழிந்து அந்த  பிர்லாவின்  விலாசத்தை  தேடி  அலைந்தான்.  அது ஒரு மருத்துவ  மனை.  ஒரு  நர்ஸ்   என்ன  என்று கேட்டாள்.  முதியவர்  பற்றி  சொல்லி  அவரை பார்க்க  வேண்டுமே என்றான்.    அவள் அவனை  ஒரு  பெரிய  டாக்டரிடம்  அழைத்து போனாள்.  பெரியவரை  காண வேண்டும் என்ற போது  என்னிடமே  விஷயம் சொல்லல்லாம்  என்றார்  அவர்  . தான்  செய்த முயற்சிகளையும்,  பிர்லா கொடுத்த செக்கை  தொடாமலேயே  முன்னேறியதையும்  சொல்லி  அவர் கொடுத்த  செக்கை  டாக்டரிடம்  
கொடுக்கும்போது டாக்டர்  சொன்னது 
"கோவிந்தசாமி  ஒரு  வங்கியில்  வேலை செய்தவர்.  மனநலம் குன்றியவர்.  கொஞ்சம்  அசந்து போனால் இப்படி தான் அடிக்கடி வெளியேசென்று  விடுவார்தன்னை  ஓர்  பிரபலமானவராக  நினைத்து கொண்டு எதாவது செய்துவிடுவார்"   இதுபோல்  நாலைந்து தடவை  நடந்துவிட்டது.  
சாரி சார் உங்களை  இவர்  ஏதாவது  தொந்தரவு செய்திருந்தால்  மன்னித்து விடுங்கள்"  என்று  சொல்லி  "பிர்லாவை"  இனி  வெளியில்  விட்டால்  உன்  வேலை  போய்விடும் என்று  நர்சை  திட்டினார் .
சிலையாக  நின்ற  ராஜு  ஒரு கணம்  யோசித்தான். "அது  செல்லாத செக் அல்லஅது என்னுடைய மறுவாழ்வு,புத்துயிர்
நீதி: தன்னம்பிக்கை,  உழைப்பு  இவையே  நம்மை எல்லா  கஷ்டத்திலிருந்தும் காத்து  மீட்பது"

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...