Sunday, December 9, 2012

moral story 36 பரோபகாரம்





Kuttikadhai  36               பரோபகாரம்


.கோபாலசாமி  பிரபல கிரிமினல் வக்கீல்.  தன் பெரிய காரில் ஒரு கிராமம்  கடக்கும் போது தெரு ஓரத்தில்  இருவர்  புல்லை  பிடுங்கி  தின்பதை கண்டு காரை நிறுத்தி  கேட்டார்  
ஏன்  புல்லை  தின்கிறீர்கள்?.
"பணமில்லை  உணவு வாங்க.  பல நாட்கள்  இப்படிதான்  புல்லை தின்று உயிர் வாழ்கிறோம்
"அப்படியாசரி என்னோடு காரில் வா என் வீட்டில் சாப்பிடலாம்
"நன்றி அய்யாஅதோ அந்த மரத்தின்  பின்னால்  என் மனைவியும்  மகனும்  புல் தின்று கொண்டு இருக்கிறாங்க  " 
"ஏன்  அவர்களையும்  உன்னோடு அழைத்து வரலாம்
"அய்யா,   என்  தம்பி  அதோ  இருக்கிறான்ய்யா புல்லை   தின்னுகிட்டு"  
" அட கடவுளே  சரி,  அந்த ஆளையும்  காரிலே  ஏறச்  சொல்லு"  என் காரில்  அனைவருக்கும்  இடமிருக்கிறது  என் வீட்டுக்கு  வரலாம்"
ஏழைகள் குடும்பம் காரில் வீட்டுக்கு வந்த போது வக்கீலிடம் ஏழை சொன்னான்:   "அய்யா  தர்ம பிரபுஎங்கள் மேல்  எவ்வளவு கருணை,  ரொம்ப  நல்ல  மனசு உங்களுக்கு இல்லன்னா  எங்களை மாதிரி   ஏழைகள் 
சாப்பிடவேணும்  என்று  சொல்ல தோன்றுமா?" வக்கீல் சிம்பிளாக  பதிலளித்தார்  : 
"அதெல்லாம் ஒன்னுமில்லையப்பா,  நீங்கள்  எல்லாரும்  ரோடு ஓரத்தில்  அசுத்தமான புல்லை தின்பதை விட  என் வீடு  காம்பௌண்டில்  ஒரு  அடி  உயரத்துக்கு  நல்ல  புல்லாக  வளர்ந்திருக்கிறதை சாப்பிடலாமே  என்று தான் உங்களை எல்லாம்  கூட்டி வந்தேன்". 

தான தர்மம் செய்வதில்  கர்ணன்  வக்கீலுக்கு  ஈடாவானா???

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...