Monday, December 3, 2012

MORAL STORY 12 பழைய ஸ்கூல் பிரெண்ட்



kuttikadhai.12            பழைய ஸ்கூல் பிரெண்ட் 

 ரொம்ப பெரிய  குடும்பஸ்தன்  அவர்.  குழந்தைகள்  என்ன  ஒண்ணா  ரெண்டா!!   பள்ளிக்கூடமே நடத்தலாம்.  இது  அத்தனைக்கும்  வயிறார தினமும்  மூணு வேளை  சாப்பாட்டுக்கே ஒரு மனிஷன்   ஓவர்டைம்  பண்ணி தான்  சம்பாதிக்கணும். ஆனா அவர்  கொண்டுவந்த  சொல்ப   வருமானத்திலேயே  டிவி பார்க்காமே  அவர்  மனைவி ஏதோ  குடும்பத்தை ஓட்டினா.  அடிக்கடி  சொல்வாள்.  “ உங்க பிரெண்ட்,  ரொம்ப பெரிய மனுஷன்,  நல்லவர் என்பீர்களே.    கொஞ்சம்  போய்  பார்த்து  உதவிகேளுங்கோ”    
அதுக்கென்ன,  ஆகட்டும்  ஒருநாள்  போறேன்.”    இது  அடிக்கடி  ஞாபக படுத்தப்பட்டது !!

அந்த ஒருநாள் வந்தது.  நடந்து சென்று  அந்த ஊரை அடைந்தார்.   நண்பன் மாளிகை  வாசலில் செக்யூரிட்டி  ஆட்கள்  உள்ளே  விடலை.  “நான்  அவருடைய   பெஸ்ட் பிரெண்ட்.   நாங்க ஒன்னாவே  ஒரே வாத்யார் கிட்ட படிச்சவா””  
இந்த கிழிசல் வேஷ்டி  ஆசாமி  கொஞ்சம் ஸ்க்ரு லூஸ் போல இருக்கு,  பாவம்” --    அவர்கள் அவரை உள்ளே  விடலை.  ஒருத்தன்  மட்டும்  உள்ளே  சென்று  முதலாளி கிட்டே  விவரம் சொன்னான். யார்  வந்து  வாயிலில்  காத்து கொண்டிருக்கா  என்று  தெரிஞ்சவுடனே  கட்டின துணியோட  கால் செருப்பு  கூட  இல்லாம  ஓடி  வந்தான் வெளியே  அந்த பிரெண்ட்.   அப்படியே இழுத்து பிடிச்சு  நண்பனை கட்டிகொண்டான்செக்யூரிட்டி  ஆட்களுக்கு  ஹார்ட்  அட்டாக்!!!! 
“ நீ   வருவதாக தகவல்  சொல்லவில்லையே  அப்பா”!.  , நண்பனை   தன் கட்டிலில் அமர்த்தி  அவன்   புண் பட்ட  பாதங்களை பிடித்து  விட்டுகொண்டிருந்தான் கண்ணன்.
 “இல்லை, கிருஷ்ணா,   என்னதான்  நாம்  சிறுவர்களாக  இருந்தபோது  சாந்திப ரிஷியிடம்  ஒண்ணாக  குருகுல  வாசம் செய்தாலும்,   நீ   இப்போ  ராஜா   எப்போதும் ராஜ்ய விவகாரங்களில்  அலைந்துகொண்டு  பிரயாணத்தில்இருப்பவன்.  உன்னை  ஒரு  சாதாரணன் எப்படியப்பா  பழைய   ச்நேஹிதத்தை வைத்து உறவு கொண்டாட முடியும்.??”  
“சுதாமா,  நீ  இப்போ   வேறே சுதாமாவாக மாறிவிட்டாயா? . நான் உன்னை  என்  பால்ய   நண்பனாக அல்லவோ பார்க்கிறேன்!!.  
“கிருஷ்ணா, நானும்  மாற வில்லையடா.  நம்  வாழ்க்கை தரம்  தான்  நடுவில் ரொம்ப  தூரத்தை......”
“நிறுத்து  சுதாமா,  வித்தியாசம்  மனதில்  தான்   உண்டாகிறது இயற்கையில்  இல்லை.  உனக்கு  தெரியாததையா  நான் சொல்லபோகிறேன்”.  
“அது சரி,   நீ எனக்கு  அப்போதெல்லாம்  ஏதாவது  உன் வீட்டிலிருந்து  தினமும்  சாப்பிட  கொண்டு தருவாயே.  இன்று  என்ன   கொண்டு வந்தாய்?” 
சுசீலா   கட்டிகொடுத்த சிறு  அவல்  பொரி மூட்டையை  இதுவரை  மறந்தோ    அல்லது  எப்படி  இதை  ஒரு   ராஜாவுக்கு  கொடுப்பது என்றோ  கொடுக்காமல்  இடுப்பில்  வைத்திருந்ததை  கண்ணன்  பார்த்து  விட்டான்.   உரிமையோடு  அதை அவன் இடுப்பிலிருந்து அவிழ்த்து    பிரித்து    பிரித்து   உண்டான்.  
எனக்கில்லையா”  என்று  ருக்மணி  உள்ளேயிருந்து  வந்து  அதை பிடுங்கி கொண்டு போய் விட்டாள். “ருக்மணி  உனக்கு தெரியுமா  எப்போதும்  சுதாமா  தான் எனக்கு  ஏதாவது   கொடுப்பான் நான்  ஒன்றுமே  தருவதில்லை”  என  சிரித்தான் கிருஷ்ணன்.  
ஒரு சில  காலம்  கிருஷ்ணனுடன்  இருந்து விட்டு  சுதாமா புறப்பட்டான்  கிருஷ்ணனின்  தேர்பாகன்  அவனை ஊரில் கொண்டுவிட்டான்..  சுரீர்    என்று   தேள்  கொட்டியது  சுதாமாவுக்கு.  “சுசீலா  உதவி கேட்க சொன்னாளே.  அதற்காக  தானே கிருஷ்ணனிடம்  சென்றோம்.  அதைவிட்டு  வேறு எதெல்லாம் பேசிவிட்டு  வெறுமனே  வீடு  திரும்பினேனே! “  
 
எந்த வீட்டின் முன்  நிறுத்துவது என்று  தேர் பாகன்  கேட்டபோது  சுதாமாவும் அவனோடு சேர்ந்து தன்   வீட்டை தேடினான்!!. அவனுக்கு தலைசுற்றியது  அவன்  இருந்த  பழைய  ஓட்டுவீடு  இருந்த  இடத்தில்  இப்போது ஒரு பெரிய  மாளிகை.  அவன் குழந்தைகளும்  சுசீலாவும் புத்தாடை நகைகள் எல்லாம்   அணிந்து  வெளியே வந்து  அவனை  வரவேற்றனர்  அப்போது  தான் சுதாமாவுக்கு  கிருஷ்ணன்  ருக்மணியிடம் சொன்ன   வார்த்தையின்  அர்த்தம்புரிந்தது.  நல்லவேளை  அவள்  அவன்  மொத்த   அவலையும்
சாப்பிட  விடாமல்  மீதி எடுத்து சென்றுவிட்டாள்.  இதுவே எனக்கு  பெரிய  பாரம்.  இனிமேலும்  என்னால் சுமக்க முடியாது  என  நினைத்தான்  சுதாமா

இறைவனுக்கு  நாம்  என்றும்  அதே  குழந்தைகள்   தான். நாம் ஒரு அடி  அவனை நோக்கி  வைத்தால்  அவன்  பல  அடிகள்  நம்மை  நோக்கி  வருகிறான்.           

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...