Monday, December 3, 2012

MORAL STORY 6 விருந்து



குட்டிகதை- 6
    
விருந்து

ஊரெல்லாம்   மக்கள்  குதூகலமாக உலவினர்.   கூடி கூடி  பேசினர்.  
யுத்தம் வரும்போல் தான்  இருக்கிறது.   
கிருஷ்ணன் கூட வந்திருக்கிறானாமே?? .
என்னமோ நடக்க போகிறது!!.
கிருஷ்ணன்  யுத்தம் நடக்காமல் செய்தால்  நமக்கெல்லாம்  நல்லதல்லவா?”   
அதெப்படி சொல்லலாம்.  யுத்தம்  நடந்து  தர்மன்  ராஜாவானால் நமக்கு என்ன குறையா வந்துவிடும்? . கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!!.  
 துரியோதன ராஜா  மட்டும் என்ன  நமக்கு கெடுதி செய்தான்? 
 நம்மை ஏதாவது பாடு படுத்தினானா??.  
அவர்களுக்குள்ளே அண்ணன் தம்பி  சண்டை----
வீட்டுக்கு வீடு இருக்கிறது.   ராஜாக்கள் வீட்டில்  நடந்தால் பெரிதாக படுகிறது.  
விஷயம் ஒன்றுதானே.  உருவம் தானே பெரிசு   -
கிருஷ்ணன்  அதி புத்திசாலிஎப்படியாவது  சுமுகமாக காரியத்தை முடிப்பான் பார்க்கலாம்””  .
-  ஊர் மக்கள் அவரவர் மன நிலைக்கு தக்கவாறு இவ்வாறு  சிந்திக்கையில் கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தில்  சமாதான   பேச்சுக்கு வந்துவிட்டான்.   நாளை  காலை ராஜ  தர்பாரில்  விவாதம் கார சாரமாக இருக்கபோகிறது.   பீஷ்மர்     கையை  பின்கட்டி தலையை அசைத்து தனக்குள்ளேயே ஏதோ கேள்வி பதில  சொல்லிக்கொண்டு  குறுக்கும்  நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்.   துரியோதனனும்   கர்ணனும் மற்ற   சில சகோதரர்களுடனும் நாளை  நிகழ்ச்சியை  ஒத்திகை பார்த்துகொண்டிருந்தனர்.   கிருஷ்ணனுக்கு  என்று ஒரு  சிறப்பான  வரவேற்பு ஒன்றும்  கொடுக்க கூடாது என்று சிலர் வாதிக்க, கிருஷ்ணனுக்கு தக்க மரியாதை   எள்ளளவும்  குறையக் கூடாது என்று   சிலரும் போதிக்க   கடைசியில் கிருஷ்ணனுக்கு  துரியோதனன்  அரண்மனையில் ஒரு   மாளிகை தயார் செய்யப்பட்டது   

கிருஷ்ணனின்  ரதம்  ஊருக்குள் நுழைந்து விட்டது. “”ரதத்தை  மெதுவாக செலுத்து””   என்றான் கிருஷ்ணன்.    அமைதியான  அந்த    நகரத்தை  முழுதும் ரசித்து  பார்த்தபோது  பழைய,  பழகிய இடங்கள்,  மக்களின் களிப்பு  எல்லாம் அவனை கவர்ந்தது.   இவற்றுக்கு  தீங்கு நேரக்கூடாது  என    மனதில்  தோன்றியது.  துரியோதன   மகாராஜா அரண்மனையை  நோக்கி ரதம்  திரும்பியது.  “ நில்” என்றான்   கிருஷ்ணன்.   “அரண்மனைக்கு  எதிரில்  இருந்த வீதியில் வளைந்து  செல்லும்  பாதைக்கு செல்”    என்றான்.   தொலை  தூரத்தில் இருந்த  ஒரு  சிறிய பழைய  பர்ணசாலை   கண்ணில் பட்டதுஅந்த வீதியில்   நடமாட்டம் கிடையாது.   முதியவர் விதுரன் மட்டும் தான்  அந்த பர்ணசாலையில் வாழ்ந்து வந்தார்.  அவர்  வீட்டின் முன் ரதம்   நின்றதும் உள்ளேயிருந்து  ஆச்சர்யத்துடன் யார்  இங்கு  வருகிறார்கள் என்று பார்க்க  வெளியே வந்த  விதுரன்  கிருஷ்ணன்  தேரிலிருந்து தனியே  இறங்கி  வருவது கண்டார்.  “ “கிருஷ்ணா!!! என்  கண்களையே நம்பமுடியவில்லையே??.  நீயா????  இங்கு இந்த ஏழையின் இல்லத்துக்கு வந்தவன்?”

 “கிருஷ்ணன்  நான்   ஒருவன் தானே விதுர மாமா?  வேறு யாரவது என்  பெயரில்     உங்களுக்கு  தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?””
“”கிருஷ்ணா,  உன்   வேடிக்கை பேச்சை கேட்டு எத்தனை   காலம் ஆகிவிட்டது?? ---. கிருஷ்ணா!  நான்  பாக்யவான். நீ   வரப் போகிறாய் என்று   அறிந்தேன்  உன்னிடம் பேசமுடியுமா”” என்ற   ஐயம்  இருந்தது
“”பேசமுடியுமாவா??”     பேசுவது மட்டும்  இல்லை இங்கு  உங்களோடு தங்கவும் தான்  வந்திருக்கிறேன். இடம் கொடுப்பீர்களா??”
“கிருஷ்ணா,    என்  மனத்திலேயே  இடம் பிடித்த நீ  என்  குடிசையில்  தங்க இடம்  கேட்கவேண்டுமா "
“மாமா,   அரண்மனை வாழ்வு  எனக்கும்  அலுத்து விட்டது.  இங்கேயே தங்கிவிடலாமோ  என்றும் தோன்றுகிறது””
கிருஷ்ணா  நீ  செய்ய  வேண்டியது நிறைய இருக்கிறதே.  உனக்கேது ஒய்வு””. நீ  ஒய்வு  எடுத்தால் உலகே ஓய்ந்து விடாதா??”  
மாமா, அதெல்லாம்  சரி, பசியோடு வந்திருக்கிறேன். ஏதாவது   பருகவும்  உண்ணவும்  தருவீர்களா.  தருவீர்களா??.    
கண்ணா,உன்னை  கண்டவுடன்   எனக்கு  ஆனந்ததத்தில்  கையும்  காலும்  ஓடவில்லையப்பா   தருவதற்கென்றே நிறைய  பழங்கள்   வைத்திருக்கிறேன்”.
விதுரன்  பழங்களை எடுத்து  பக்குவமாக அடுக்கி அவைகளின்  தோல் நீக்கி எறிந்து விட்டு   ஒரு  தட்டில் கண்ணன் எதிரே வைத்தான் 
 இருவரும்  ராஜ்ய வியவகாரங்களையும் தர்ம ஞாயங்கள்  பற்றியும்  நேரம்போவது தெரியாமல் பேசினர்கடைசியில்  கண்ணன்  சொன்னான்  
“ மாமா, வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான்  மிக்க மகிழ்ச்சியுடன் வயிறார உண்டேன்!!.   ஹஸ்தினா புரத்திலிருந்து   த்வாரகை திரும்பும்  வரை பசியே இருக்காது  போல் தோன்றுகிறது”.  
“நான்  என்ன  உனக்கு விருந்தா வைத்தேன்?” .   இந்த  ஏழையின்  குடிசையில்  கொஞ்சம் பழங்கள் தான்  இருந்தது”   என்று சொல்லிக்கொண்டு  விதுரன் கண்ணன்  முன்  இருந்த  தட்டை  பார்த்தான்    பழங்கள்  தோல்  உறிக்கப்பட்டு வீசியதில் வெளியே சிதறிக் கிடந்தன.  பழ தோல் எல்லாம்  தட்டில் நிரம்பியிருந்தது”    அவற்றை கண்ணன்  ஒன்று  விடாமல் உண்டிருக்கிறான்!!!! 
“கிருஷ்ணா,   நான்   எத்தகைய மஹா பாவி,  உனக்கு  பழங்களை கூட  அளிக்க யோக்யதை அற்றவனானேனே !!!”   நீயும் ஏன் கண்ணா வெறும் தோல் மட்டும்  உண்டாய்
"மாமா,   எனக்கு   என்னவோ ஒரு  பழக்கம்  யார்  எதை அன்போடு கொடுத்தாலும்  ஏற்றுகொள்வது.  பழங்கள் போல்  தோலும்  எனக்கு  இனித்தது  மாமா. நீங்கள்   கொடுத்த துளசி ஜலம் பூரண  திருப்தியை  அளித்தது. வேன்றோண்டும் எனக்கு வேண்டாம் "  

பாரத  போர்  ஆரம்பத்தில்  இதையே  கண்ணன்  அர்ஜுனனுக்கும்  ஏன் அதன்மூலம்  நமக்கும் சொன்னானே!!!!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...