Monday, December 3, 2012

MORAL STORY 16 முடிவு




   KUTTI KADHAI  16                            முடிவு

பாரதப் போர்  முடிந்து  பல  வருஷங்கள்  ஆகிவிட்டன. கிருஷ்ணனின் குலத்தை சேர்ந்த யாதவர்கள் குடியிலும் மதுவெறி கேளிக்கையிலும்    அராஜகத்திலும் அக்ரம செயல்களிலும் ஈடுபட்டு கிருஷ்ணன் தங்கள் உறவினன்  இருக்கும் கர்வத்தில் எவரையும்  மதிக்காமல் தலை கால் புரியாமல் நடந்துகொண்டதோடு தம்முள் "நீயா நானா" என்று உட் பூசலில்   சண்டையிட்டு அழியலாயினர் தனது  ராஜ்யத்தில்  மது  விலக்கு கொண்டு வந்தான் கிருஷ்ணன் அப்போவே.   யாதவர்கள் அதை கடைபிடிக்கவில்லை  .    கிருஷ்ணனுக்கு  இது  வருத்தத்தை  தரவில்லை. “எதிர்பார்த்தது  நடக்கபோகிறது.”  "கேடு வரும்  பின்னே  மதி கெட்டு  வரும்  முன்னே" ஆரம்பித்து விட்டது யாதவர்களுக்கு!!”  என புரிந்து கொண்டான்  கிருஷ்ணனுக்கு   வலக் கரமாக பாரத போரில்  உதவிய
 உறவினன்  சாத்யகியும்  இந்த  குல சண்டையில்  மாண்டான்குடிவெறி  சண்டையில்  ஒவ்வொருவராக   அனேக யாதவர்களும்  அழிந்தனர்.  சில  காலம்  முன்னே  நடந்த ஒரு சம்பவம் கிருஷ்ணனுக்கு  நினைவு வந்தது........!
*****
த்வாரகையில் ஒருநாள் கிருஷ்ணன்  இளைப்பாறி கொண்டிருந்த  நேரத்தில்  அவனது அரண்மனைக்கு   மூன்று   முனிவர்கள்     வந்தனர்.    செய்தி  அறிந்த கண்ணன்  சேவகனிடம்  அவர்களை தக்க படி உபசரித்து   அமர  செய்யுங்கள்,   “சற்று நேரத்தில் வந்து சந்திக்கிறேன் என  தெரிவியுங்கள்”   என்றான்.
முனிவர்களை  அரண்மனையிலிருந்தோர்  மதிக்கவில்லை.   யாதவர்கள் அவர்களது   அவ செயல்களால் அவமதிப்பும்  வருஷ்ணி  குலத்துக்கே கெட்ட பெயரும்  வாங்கித் தந்தனர்  இந்த  லிஸ்டில்  கிருஷ்ணன் மகன்  சாம்பனும்  விதி விலக்கல்ல.   அவனுக்கு  அப்போது  25 - 26 வயது.   முனிவர்கள்  கண்ணனுக்காக காத்திருந்ததை கண்டதும்   சாம்பனுக்கும்  அவன் நண்பர்களுக்கும் இந்த  முனிவர்களை  விடக்கூடாது என்று  ஒரு  எண்ணம் தோன்றியது.   சாம்பன்   தன் வயிற்றில்  ஒரு பானையை கட்டிக் கொண்டு  ஒரு கர்ப்பிணி பெண்  போல வேஷமிட்டு  நண்பர்களோடு  சேர்ந்து  முனிவர்களிடம்  வந்து வணங்கிவிட்டு  "முனி  ஸ்ரேஷ்டர்களே,  நீங்கள்,  கிருஷ்ணனுக்கு    காத்திருக்கும்  நேரத்தில், இந்த  பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் பிள்ளையா  பெண்ணா   என்று  சொல்லுங்களேன்?என்று  பவ்யமாக கேட்பது போல் நடித்தனர்.  முனிவர்கள்  முக்காலமும்  உணர்ந்த ஞானிகள்.  இந்த யாதவ சிறுவர்கள் தங்களை கேலி செய்வதும் அவமதிப்பதும் புரிந்தது "கிருஷ்ணன்   மகனாக பிறந்தும்,  சாம்பாநீயும்  உன் உறவினர்கள்  இந்த  நண்பர்களும் எங்களை  புண் படுத்த நினைப்பது புரிந்தது.  " உன்  வயிற்றில்  ஒரு  இரும்பு  உலக்கை தான்  பிறக்கும், அதால்  உங்கள் யாதவகுலமே அழியும்" என  சாபமிட்டனர்.
முனிவர்கள்  சாபமிடும்  நேரம்  கண்ணன்  உள்ளே  நுழைந்தான்.  முனிவர்கள் சாபம் பலிக்கபோகிறது  தன்  வம்சமே அழியபோகிறது  இதை  தவிர்க்கமுடியாது அது யாதவர்களுக்கு  நிச்சயம் தேவை தான்  என்று  அறிந்தான்.   கிருஷ்ணனை  கண்டதும்  முனிவர்கள்  கோபம்  பறந்தோடியது .  முனிவர்கள்  வருந்தினர்.  இட்ட சாபம்  திரும்ப பெறமுடியாதேகிருஷ்ணன்  ஒன்று மறியாதவனாய்  அவர்களுடன்  நீண்ட  நேரம் அளவளாவினான்.கடைசியில்  கிருஷ்ணனின்  ஆசியுடன்  முனிவர்கள்   திரும்பினர்.  
கிருஷ்ணன் மகன்  சாம்பன் வயிற்றிலிருந்து  ஒரு இரும்பு  உலக்கை  வெளிப்பட்டது.கிருஷ்ணனிடம் சென்று  மன்னிப்பு கேட்டு  தங்களது அழிவை தடுக்க யோசனை  கோரினர்  “மன்னிக்கமுடியாத தவறை  செய்துவிட்டீர்கள்வேண்டுமானால்  இந்த  இரும்பு உலக்கையை பிரயாசை பட்டு உடைத்து பொடி பொடியாக்கி  கடலில் கலந்து விடுங்கள் என்றான் கிருஷ்ணன்  சாம்பனும்  உறவினரும்  உலக்கையை  னும்   உறவினரும் உலக்கையை முழுதும் பொடி செய்ய முயற்சித்து முடியாமல்இரும்பின்  ஒரு   பகுதியை கடலில் வீசினர். முனிவர்கள் சாபமிட்டபடி  இரும்பு   கடலில்  இருந்து  மெதுவாக கரை நெருங்கியது....."  
***
சாத்யகியின்  மறைவுக்கு பிறகு கண்ணன் உணர்ந்தான்.  " என்  வேலை  எல்லாம்  முடிந்தது  இனியும்  நான்  இருப்பதில்   என்ன பயன் என்று  யோசித்தான்.  யாதவ  குலம்  பூண்டோடு  அழிந்ததில்   அண்ணன்  பலராமனும்  மன மொடிந்தான்.  நம்  குலமே  அழிந்தபிறகு  நான் இருந்து என்ன செய்யபோகிறேன்   “போதும்,     இது போதும்   என    சில  காலத்தை  காட்டில்  தவமிருந்து  முடித்து  விரைவிலேயே மறைந்தான்.
“பலராமனும் முடிந்தான்.  நான் அவனை   சென்றடைய எனக்கும்  நேரம்  வந்துவிட்டது”. கிருஷ்ணன் தீர்மானித்து விட்டான். தனியனாய்  கண்ணன் வனம் நோக்கி நடந்தான். ஒரு   அழகிய அமைதியான  இடம்   கண்டான் ஒரு மரத்தின்  அடியில் அமர்ந்து  தியானம்  செய்தான்  தனது  அவதாரம் முடிந்து விட்டதை  உணர்ந்தான் கிருஷ்ணன்.  ஏனோ,  அந்த ஒரு சம்பவம்  நினைவுக்கு வந்தது.
**********
நூறு  பிள்ளைகள்  அவர்கள் குடும்பம்  எல்லாம்  போரில்  மடிந்தபோது  காந்தாரி  கதறினாள்.  
“கிருஷ்ணா,   நீயே  இதற்கு  காரணம்.  உன் குலமும்  இவ்வாறே  ஒருநாள்  ஒருவர் கூட மிஞ்சாமல்  அழியட்டும்  
“தாயே  நான்  அல்ல  காரணம்.  எவ்வளவோ  புத்திமதி சொன்னேன். ஐந்து  கிராமம்  அல்ல  ஐந்து வீடாவது கொடு பாண்டவர்களுக்கு,  யுத்தத்தை  தவிர்    என்றேன். கேட்கவில்லை உன்  மக்கள் “
“இல்லை,   இல்லை  நீ  கடவுள்,  நீ  நினைத்திருந்தால்   இந்த அழிவெல்லாம்  இருந்திருக்காது.  பாண்டவர்க்கு  உதவவே  என் மக்களை  அழித்தாய் .  உன்  குலமும் இவ்வாறே ஒருவரும்  மிஞ்சாமல் நாசமாகட்டும்
 ********
இது பூமியில் எனது  கடைசி வாசஸ்தலம்” . தியானம் முடிந்து கண்ணன்  படுத்தான்.  
கடல் கரையில்  ஒரு  இரும்பு துண்டை கண்ட  ஒரு  வேடன்  “ அட!   இதில்  ஒரு   நல்ல அம்பு செய்யலாமே என்று கூரான அம்பு செய்து  முதலில் அதன் மூலம்  ஒரு  மான் வேட்டை ஆடலாம் என  வனத்தில்  நுழைந்தான்.  கிருஷ்ணனின்  இடது பாதம்  தூரத்தில்  அவனுக்கு  ஒரு  அழகிய  பட்சியின்  உருவமாக  தோன்றியதில்  இதையே முதலில் வேட்டை ஆடலாம் என  அம்பை செலுத்தினான்சத்தம்  எதுவும் வராததால்  அருகே  நெருங்கி  தனது தவறை உணர்ந்தான்.
“பிரபு,   என்னை  மன்னியுங்கள்  தவறு செய்துவிட்டேன்” 
“நீ  தவறே செய்ய வில்லை.  எது எப்படி நடக்க  வேண்டுமோ அது  அவ்வாறே  நடந்தது”  தவ ஸ்ரேஷ்டர்களின்,  பதிவ்ரதைகளின்  வாக்கு என்றும் பொய்யாகாது.” வேடனை  புன்னகையுடன் கையமர்த்தி கண்ணன்  ஆசி கூறினான் . கிருஷ்ணனிடம்  பூவுலகில் கடைசி  ஆசி  பெற்ற வேடன் நடந்தான்     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...