Friday, December 21, 2012

MORAL STORY 54 குதிரை வீரன்




குட்டிகதை 54         குதிரை வீரன் 

தலைகள்  ஆனந்த பக்தி பரவசத்தில்   ஆடின.  சிறிய அந்த  கூடத்தில் விட்டலன்  இடுப்பில்  கையோடு துக்காராமின் அபங்கத்தில்  திளைத்து கொண்டிருந்தான். முகலாய சாம்ரஜ்யத்திற்கே  சிம்ம சொப்பனமாக  இருந்த  மகாவீரன் சத்ரபதி  சிவாஜி மகாராஜாவும்  அந்த  கூட்டத்தில்  தன்னை மறந்து  சேர்ந்து  பாடிக்கொண்டு  விட்டல்  நாம சங்கீர்த்தனத்தில்  மூழ்கிகொண்டிருந்த போது ஒரு ஒற்றன் , மெதுவாக  கூட்டத்தில்  இடித்து முன்னேறி  சிவாஜி அருகில்  அவர்  காதில் சேதி சொன்னான்.  முகலாயர்  படை  வெளியே  வந்துகொண்டிருக்கிறது.  நீங்கள்  இங்கிருப்பது தெரிந்து  கொண்டு  வந்துகொண்டிருக்கிறார்கள்
"துக்காராம்  சுவாமிஜி,   இந்த  இடத்தின்  தூய்மையும்  அமைதியும்  கெட  விரும்பவில்லை.  நான்  உடனே  புறப்படுகிறேன்."
"மகாராஜ்,   விடோபாவின்  அபங்கத்தில்  பாதியில் நிறுத்தி  வெளியேற கூடாது.  முடியும்  வரை  சற்று காத்திருக்கலாமே."
"அவ்வாறே  சுவாமிஜி"  என்றார்  சிவாஜி.  விட்டல் அபங்கத்தில்  ருசியும்,  தன்னுயிர் போகும்போது  இறைவன்  நாமத்திலே போகட்டுமே  என்ற எண்ணம் தான்  சிவாஜிக்கு. எந்த எதிர்ப்பும்  இல்லாமல்  முகலாயர் படையிடம்  தன்னை ஒப்புவித்தால்  மற்ற பக்தர்களுக்கு  எந்த  இடையூறும்  இருக்காதல்லவா."  
சிவாஜி  மீண்டும்  அபங்க  பஜனையில்  கவலையின்றி  ஈடுபட்டார்.

முகலாய படைத் தலைவன்  குதிரைப் படையுடன் 2000  ஆயுதம் தாங்கிய  வீரர்களோடு  இந்த  ஊரில்  நுழைந்தான்.  வெகுகாலமாக  பிடிக்க  முடியாத  சிவாஜி இந்த  ஊரில்  இன்று  கட்டாயம்  உயிரோடோ  அல்லது  பிணமாகவோ பிடிப்பது நிச்சயம்.    ஊர்  எல்லையிலேயே தக்க  தருணத்தில்  சிவாஜியின்  படை  அவர்களை  எதிர் கொண்டது.  ஒரு  குதிரையின்  மேல்  சிவாஜி  உருவிய  வாளுடன்  அவர்களை  மோதி  அழிப்பதை கண்டு  அனைத்து  படைகளும்  சிவாஜியின்  குதிரையை மட்டுமே  குறி வைத்தன.  தனி ஒருவனாக  அவர்களை  எதிர்ப்பது  அறிவின்மை  என்று  உணர்ந்த  சிவாஜி தன  படை வீரர்களிட மிருந்து  விலகி  காட்டுப்பாதையில்  குதிரையை  விரட்டவே  அவரை  தொடர்ந்து  படை  சென்றது.  
மின்னல்  வேகத்தில்  செல்லும்  சிவாஜியை  எவ்வளளோ  முயன்றும்  சுல்தான்  படை  நெருங்க முடியவில்லை. நேரம்  நழுவியது.  சூரியன் அஸ்தமனம்  ஆகும்  சமயம்.  சிவாஜிக்கு  மலை எலி  என்று  பெயர்.  அந்த  பகுதியின் அனைத்து  மலைதொடர்களும்  அத்துபடி. அதன்  கணவாய்கள்,  குகைகள்  அனைத்தும்  அறிந்த  சிவாஜி  எங்கு  சென்றார்  எப்படி மாயமாக  மறைந்தார்  என்று  தெரியாமல்  ஏமாற்றத்தோடு  படை வீரர்கள்  திரும்பி சுல்தான் முன்  தலையை  தொங்க போட்டுகொண்டு நிற்கவெட்கமாயில்லைநீங்கள் எல்லாம்  வீரர்களா? ?2000  பேர்  சிறந்த  குதிரை படை  வீரர்கள்  என்று  சொல்லிக் கொள்கிறீர்கள்,  ஒரு தனி மனிதனை  பிடிக்க  யோக்யதை இல்லை   அவமான சின்னங்களா"   என்று  திட்டு  வாங்கி கொண்டிருக்கும் போது  அபங்கம்  முடிந்து  அனைவரும்  பிரசாதம்  பெற்று சந்தோஷமாக  அந்த  பஜனை கூடத்திலிருந்து  வெளியேறினர்.  சிவாஜி  துக்காராம்  காலில்  விழுந்து வணங்கி எழுந்தபோது ஒரு ஒற்றன்  ஓடோடி வந்து  மகாராஜ்  உங்கள் வீரத்தின் முன்  முகலாய படை சுருண்டு ஓடி  எங்கோ  மலைப்பாதையில்  சென்று விட்டது.  உங்கள்  குதிரையை  அவர்களால் பிடிக்க முடியவில்லை. எப்படி அதற்குள்  இங்கு  வந்துவிட்டீர்கள்.  நீங்கள்  மின்னலை காட்டிலும்  வேகமான தலைவர்”  என்று  புகழ்ந்தான்.  சிவாஜி  திகைத்தார்.  அவரது  இரு கரங்களும்  விட்டலனை  வணங்கின.  கண்களில்  கண்ணீர்  பெருக்கு  நன்றி பெருக்காக வழிந்தது.     
விட்டலன் சிரித்தான்.  அவனைத்தான்  சிவாஜி ரூபத்தில் குதிரை வீரர்கள் இன்னமும்  மலைகளுக் கிடையில்    தேடிக் கொண்டி ருக்கிறார்களே!  .     

நம்பினார்  கெடுவதில்லை 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...