Monday, December 3, 2012

MORAL STORY ஜோசியம்



KUTTIKADHAI  

ஜோசியம்
தஞ்ஜாவூருக்கும் கருதட்டாங்குடிக்கும்  இடையே  ஒரு   வரப்பு பாதையில் பல  மெடல் களும்  பதக்கங்களும்  வாங்கி  நிறைய  ஜோதிட புத்தகங்கள்  எழுதி  நிறைய பேருக்கு  ஜோசியம்  பார்த்த சுப்புசாஸ்திரி  ஜோசியர்  ஒரு மாலை பொழுதில்  ஆகாயத்தை பார்த்துகொண்டு  நட்சந்திரங்களை பற்றி யோசித்துக்கொண்டே நடக்கும்போது  கீழே ஒரு திறந்த கிணற்றில் விழுந்து விட்டார்.  ஆழமான கிணறு,   மேலும்  ஜோசியர் நீச்சல்  தெரியாதவர்.  
அவர் செய்த புண்யம்  அங்கே  ஆடு மேய்க்கும்  அனந்த கிருஷ்ணன்  இதை பார்த்து விட்டு  ஓடி  வந்து கிணற்றில் குதித்து  ஜோசியரை மேலே கொணர்ந்தான்.  குடித்த நீரெல்லாம் கக்கிய பின் கைகூப்பி  வணங்கி  சுப்புசாஸ்திரி   சொன்னார் " அப்பனே,   ஒரு  சிறந்த  ஜோசியனை
காப்பாற்றி விட்டிருக்கிறாய்.  நான்  நிறைய  பணம்  வாங்கி தான்  ஜோசியம் சொல்பவன்ஆனால்  நீ  செய்த உதவிக்கு  உனக்கும்  உன் குடும்பத்தாருக்கும்   இலவசமாகவே ஜோசியம்  சொல்லுவேன் " "
 அனந்த கிருஷ்ணன்   சிரித்தான்.  "  
“ ஏன்  சிரிக்கிறாய்?" என்றார் ஜோசியர்.  
"  அய்யா,   இன்று  ஒரு  பேராபத்து  --  நீங்கள்  சொல்வீர்களே  ஜலகண்டம்  என்று.  அதில்  உங்கள்  உயிர்  போக   சான்ஸ் இருக்கிறது  என்று   கூட அறியாத  உங்களின் எதிர்கால ஜோசியம் எங்களுக்கு வேண்டாமய்யா. "கடவுள் குடுத்த   இந்த  உடம்பு  மத்தவங்களுக்கு  உதவி செய்யறதுக்கு என்று  எங்க அப்பாரு   அடிக்கடி சொல்வாருங்க என்றான்  ஆனந்தம்.
யார் வீட்டிலோ  கல்யாணமோ  எதோ விழாவோ,  காது  பொடிபட சினிமா  பாட்டு  ஒன்று  காற்றில்  மிதந்து வந்தது 
" நடக்கும்   என்பார்  நடக்காது,  நடக்காதென்பார்  நடந்துவிடும்....." 

நீதி:      கற்றது  கை மண்ணளவு

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...