Monday, December 3, 2012

MORAL STORY 11 முறையீடு



                                                     முறையீடு 

அந்த  கருப்பு பயல்  துரு துரு  வென்று  இருப்பவன்.ஒரு இடத்தில்  நிற்காமல் அலைபவன்.  அவனுக்கு  என்று ஒரு கூட்டம் எப்போதும்  இருக்கும்.  அத்தனை பேரும்  சாமான்யமானவர்கள்  அல்ல.  கண் பார்த்ததை கை எடுக்கும்.
இவர்கள்  அனைவருக்கும்  லீடர்  அந்த  கருப்பு பயல்.  ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாக இருப்பவனையும்  தயார் செய்து விடுவான் அந்த கருப்பு பயல்.  ஒரு வீடு பாக்கியில்லாமல்  அந்த தெரு அதற்கடுத்த தெரு எதிர் தெரு அதன் பின்னால்என்று அந்த  சிறிய  கிராமத்தின்  அனைத்துதெருவுக்கும்  செல்வார்கள்.  எதற்கு?  வீட்டில்  கொஞ்சம்
அசந்து  இருக்கும்  சமயம் பார்த்து அந்தந்த  வீட்டில்  சேமித்து வைத்திருக்கும்  வெண்ணையை  அபேஸ்  செய்ய.  ஒரு தடவை  இரண்டு தடவை வேண்டுமானால்  கோட்டை விட்டு  ஏமாறலாம். விழித்து கொண்ட  தாய்மார்கள்   இந்த பயல்கள்  கைக்கு எட்டாமல்  உயரே   உத்தரத்தில்  ஒரு  கயிற்றில்  உரி கட்டி  அதற்குள்  வெண்ணை  பால் சட்டிகளை  வைத்து விடுவார்கள்.  இந்த  கும்பலுக்கு  இதால்  பெரும்  ஏமாற்றம். என்னடா செய்யலாம்  என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே  தலைவன்.  அவன்   யோசனை கொடுத்தான்

"எந்த  வீட்டில் கொஞ்சம்  அசந்து போய்  இருக்கிறார்கள்  என்று  பார்த்து வந்து சொல்லுங்கள்"  என்றான்  கருப்பு பயல். அன்று  இரண்டு வீடு  தேறியது.  ஆறடி உயரத்தில்  வெண்ணை சட்டி உறியிலே  தொங்க  அந்த  வீட்டுக்காரி  குள த்துக்கு சென்று இருந்தாள்.  விடுவார்களா  தக்க  சமயத்தை.  இந்த  ஐந்தாறு பயல்களும்  அந்த வீட்டில்  நுழைந்தனர்.   லீடர் ஐடியா  குடுக்க,   ஒருவன்  வாசலில் காவல் யாராவது வருகிறார்களா என்றுபார்க்க.  ஒருவன்  கையில்  ஒரு  பாத்திரத்துடன்.   திருடிய  வெண்ணையை  சேமிக்க;   இரு  பெரிய பயல்கள்  மண்டியிட்டு  குனிந்து நிற்க  அனைவரிலும் சிறிய  தலைவன்  அவர்கள் மேல் ஏறி உயரே இருக்கும்  வெண்ணை சட்டியில்  கை விட்டு  அள்ளி  கீழே கொடுக்க பாத்திரக்காரனிடம்  அது போய்  சேரும்.  அடுத்த  நிமிடம்  அனைவரும்  ஒதுக்குபுறமாக யமுனை நதியின்  கரையோரம்  வழக்கமாக  சந்திக்கும்  பகுதியில்  ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு  வெண்ணையை  பாகப்பிரிவினை செய்வார்கள். கேட்கவேண்டுமா.  பெரும் பங்கு  கருப்பு பயலுக்கு தான்.

இது தொடர்ந்து நடப்பதால்  அனைத்து கோபியர்களும்  அந்த கருப்பு பயல் வீட்டுக்கு  வந்தனர். அவன் தாயிடம் முறையிட்டு  இந்த  கொள்ளையை எப்படியாவது நிறுத்த.
இதோ வந்துவிட்டார்கள்  திமு திமு வென்று.   அவன்  தாய்  யசோதைக்கு புரிந்து விட்டது.  அனைவரும்  வந்தால்  அது அந்த பயல்  சம்பத்தப்பட்ட ஒரு  கம்ப்ளைன்ட் தானே வழக்கம்போல.  
அவன் அவர்களை பார்த்த  கணத்திலேயே புரிந்து கொண்டான்  நண்பர்கள்  போட்டு கொடுத்து விட்டார்கள் என்று.  ஒன்றுமரியாதவனாக  தன  தாய் பின்னால் சென்று  நின்று கொண்டு  அவள் கால்களை  கட்டிக்கொண்டு  நின்றான்
"வாருங்கள்  என்ன  விஷயம்"  என்றாள்  யசோதை 
வந்த கோபியர்   யார்  முன்னால்  விஷயத்தை சொல்வது என்று  ஒருவருக்கொருவர்  பார்த்து கொண்டனர்.அனைவரும்  பண்றதை எல்லாம்  பண்ணிவிட்டு   "ஒன்றும்  தெரியாத அப்பாவி" யாக  அம்மா பின்னால்ஒளிந்துகொண்டிருக்கும்  பயலையும் பார்த்தனர்.
கண்கள் சந்தித்தன.  என்ன  காந்த சக்தியோ??  பெரிய  வட்ட விழிகள்.  அவை  பேசும்  மொழியோ  ஏராளம்இன்றெல்லாம்  பார்த்துக்கொண்டே இருக்கலாம்  என்று  தோன்ற வைக்கும்  கருவூலம்அந்த கடலினும் பெரிய  கண்கள். மெதுவாக  தலையை ஆட்டிக்கொண்டே  அந்த  விழிகள் அம்மாவின் பின்னால்  ஒளிந்து கொண்டே  பேசின " ப்ளீஸ்  சொல்லாதே, சொல்லாதே"  என்று.
"என்னவிஷயம்  சொல்லுங்கள்  ஏன்  எல்லாரும்  பேசாமலேயே  நிற்கிறீர்கள்?  அமருங்கள்
என்றாள்  யசோதை."ஒன்று மில்லையம்மா. நாம்  அடிக்கடி சந்திக்க முடியாமல்  வேலை இருக்கிறதே. அதான்  எல்லாரும்ஒன்று சேர்ந்து உன்னை பார்த்து விட்டு  போவோம்  என்று வந்தோம்."
அந்த விழிகள் செய்த மாயம்  அல்லவா இது?  
"பார்வை ஒன்றே  போதுமே!!!!"- ஊத்துக்காடு வேங்கட சுப்பய்ர் !!

 பாலை காய்ச்சி அது ஆறினவுடன்  சிறிது தயிரோ மோரோ கலந்தவுடன்  அது  தெளிந்து  இறுகி அசைவற்று  தயிராகிறது.  தயிரை  கடைந்தபின் அது வெண்ணை. இது  உபமானம்.  கொந்தளிக்கும்  மனதை கொஞ்சம் கொஞ்சமாக  உணர்ச்சிகளி னின்றும்  ஆறவைத்து,  அதில் தன்னலமற்ற எண்ணம்  புகுத்தி 
நிலை நிறுத்தினால் மனம் உறுதிபடுகிறது.  மனதை  நன்றாக அலசி கடைந்து தேவையற்றதை  (ஆசை, மோகம், குரோதம்  லோபம், மாற்சர்யம்) நீக்கினால்  பெறுவது  நிர்மலமான  தன்னலமற்ற 
தூய்மையான  மனம்அதுவே  இறைவன் ஆசையாக தேடும்  வெண்ணை

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...