Tuesday, September 22, 2020

SAMARTH RAMDAS

 


                 ஹிந்து சனாதன தர்ம ஸ்தாபகர்  J K SIVAN


ரெண்டு  ராமதாஸ் ஸ்வாமிகள்  சரித்திர மஹா புருஷர்கள். ஒருவரைப் பற்றி மட்டும் நமக்கு நிறைய தெரியும்.  அவர்  பத்ராசலத்தில் ராமர் கோயில் கட்டி அரசாங்க பணத்தை தவறாக  உபயோகித்ததாக  கோல்கொண்டா சுல்தானால் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் வாடி, ராமரே அவர் செலுத்த வேண்டிய  கடனை சுல்தானிடம் கட்டி விட்டு அவரை  விடுவித்தார் என்று தெரியும்.  அவர்  இயற்றிய  தெலுங்கு கீர்த்தனைகள்  பத்ராசசல ராமதாஸ் கீர்த்தனைகள் என்று மேடைகளில்  சங்கீத  வித்வான்களால்  இன்றும் பாடப்பட்டு வருகிறது.  கோல்கொண்டா  கோட்டையில் வில் அவர் சிறைப்பட்ட அறை  இன்னும் இருக்கிறது. பார்த்திருக்கிறேன்.பத்ராசலம் ஒரு புண்ய க்ஷேத்ரம்.


இன்னொரு ராமதாஸ்?  சமர்த்த ராமதாஸ்.  உங்களுக்கு அவரைத் தெரியுமா??  நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே  இல்லை. 

இவர்  73 வயது வாழ்ந்த ஒரு   ப்ரம்ம  ஞானி.  மஹா புருஷர். சிவாஜி மகாராஜாவின் குரு.   இயற்பெயர்   நாராயணன்.  மஹாராஷ்டிராவில்  ஜம்ப் எனும் ஊரில்  சூர்யாஜி - ராணுபாய் தோஸர் எனும் தம்பதியருக்கு பிறந்தவர்.  எட்டு வயதில் அப்பாவை இழந்து  ஆன்மீகத்தில் நுழைந்தவர்.  ராமர் தரிசனம் பெற்று.  ராமநாம ஸ்மரணையில் ஈடுபட்டு  ''ராம தாஸர் ' 'என்ற பெயரால்  அறியப்படுபவர். 12 வது வயதில் கல்யாணம்.  திருமணம் நடக்கும்போது பிராமணர்கள் சொல்லும் மந்திரம் அவர் காதில் ராமநாமமாகவே விழுந்து பாதி கல்யாணம் நடக்கும்போது ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடிவிட்டார்.  ஓடினவர்  நின்ற இடம் நாசிக்  

.அங்கே  12 வருஷம்  அன்ன  ஆகாரமின்றி ராம த்யானம்.  ராமர்   நேரில் தர்சனம்  தந்து உபதேசிக்கிறார். ராமதாஸரை  ஊக்குவித்தவர் அவர் மனதில் இருந்த  ஹனுமார். க்ஷேத்ராடனம் செய்து  முடிந்து மஹாபலேஸ்வர் வந்து சேர்கிறார்.   மசூர்  என்கிற  கிராமத்தில் ராமநவமி கோலாகலமாக  கொண்டாடுகிறார். சீடர்கள் பலர்  சேர்ந்துவிடுகிறார்கள்.  ஹிந்து சனாதன தர்மத்தை  பரப்புவதில்  மும்முரமாக  ஈடுபடுகிறார்.பல நூற்றாண்டுகளாக  முஸ்லீம்  ஆட்சியில் ஹிந்து தர்மம் சிதைந்திருப்பதை உணர்ந்து அதை சீர்படுத்தி புனருத்தாரணம் செய்வதில்  முழு கவனம் செலுத்துகிறார்.

 தெற்கே நமக்கு  முஸ்லீம் ஆட்சியின் கொடூரம் அதிகம்  தெரியவில்லை. வடக்கே  அதனால்  அவதிப்பட்ட வர்கள்  அழித்தவர்கள், உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கை   சிதைந்து மறைந்த கோயில்கள் கணக்கற்றவை. 


ராமதாஸர் மஹாராஷ்டிராவில் அங்கபூர் எனும்  ஊரில்  க்ரிஷ்ணாநதியில் ராமர் சிலை நிறுவுகிறார். சபல் எனும் ஊரில் ராமர் கோவில் கட்டி  ராமநவமி  உத்சவம் நடத்துகிறார்.

ஒருநாள் ஒரு ராஜா அவரை சந்திக்கிறான். ''சுவாமி என்னை  சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று வேண்டுகிறான் 
''நீ யாரப்பா?''
''சிவாஜி ''என்பார்கள்'

சிவாஜியை வழி நடத்தி  ஹிந்து சாம்ராஜ்யம் உருவானது. 
''இந்த  ராஜ்யத்தை வழி நடத்துபவர்  சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள். நான் ஒரு கருவி'' என்கிறார் சிவாஜி மஹாராஜா.  காவி நிற கொடியை  சிவாஜிக்கு அளித்தவர்  சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள்.  ராமதாஸர் விருப்பப்படி  11  ஹனுமான் கோவில்கள் உருவாகி  வழிபாடு நடந்து  வருகிறது. . 

ராமதாசர் கர்நாடகா செல்கிறார் . போகும் வழியில் மிராஜ் எனும் ஊரில்  ஒரு மடம் நிறுவி  வேணா பாய் எனும் பெண்மணியை  மடாதிகாரியாக நியமிக்கிறார்.  தஞ்சாவூர் வந்திருக்கிறார்.  சிவாஜியின் சகோதரர் வியங்கோஜி  தான் தஞ்சாவூர் ராஜா .  அவர்   ஸ்வாமிகளை வரவேற்று உபசரிக்கிறார். ஸ்வாமிகளின் சீடராகிறார். பண்டிட்  ரகுநாத் என்பவரும் சீடராகிறார்.   ஸ்வாமிகள் தன்னுடைய  ஊரான சஜ்ஜன்கட்  திரும்புகிறார்.  ''தஸ் போதா ''எனும் நூல் இயற்றுகிறார்.  அம்பாளுக்கு சிவாஜி மகாராஜாவின்   பிரதாப் கோட்டையில்  ஒரு  ஆலயம் உருவாகிறது. 

சிவாஜி மகாராஜாவின் மரணத்துக்கு பிறகு அவர் மகன் சாம்பாஜிக்கு  ஹிந்து ந்து ராஜ்ய பரிபாலனம் எப்படி நடக்கவேண்டும் என்று  அறிவுரை கடிதம் எழுதியது இன்றும் ஒரு ஆச்சர்யமான தீர்க்க தரிசன விஷயம். ஹிந்து சமய புனரமைப்புக்கு  தனது கடமையை புரிந்த பிறகு அந்த மஹான் பரப்ரம்மத்துடன் இணைந்துவிட்டார்.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...