Thursday, September 17, 2020

DR SHANBAGARAMAN

 பாரதத்தில்  ஒரு மறந்துபோன  ரத்னம்  J K  SIVAN 




இன்று  ஒரு  வினோத இந்திய சுதந்திர வீரனை அறிந்து கொள்வோம்.  அருமையான பெயர்  செண்பகராமன்.  (15.9.1891 -26.5.1934).  43 வயதிலேயே  மறைந்த தமிழ்  மாவீரன்.  வெள்ளையனை இந்தியாவை விட்டு  விரட்டியடிக்க இந்தியா தேசிய தொண்டர்   படை அமைத்து  

ஆப்கனிஸ்தானில்   ஒரு  போட்டி அரசாங்கமாக   சுதந்திரமாக ஒரு ''சின்ன சுதந்திர இந்தியா''  அரசாங்கம் உருவாக்கி,  காபூலில் ராஜா மகேந்திர  பிரதாப் தான்  ஜனாதிபதி,  மவுலானா பர்க்கத்  அலி அதன்  பிரதமர்.  செண்பகராமன்  இந்திய  வெளியுறவு அமைச்சரானார்கள் .  சுதந்திர இந்தியா மேல் என்ன ஆசை, ஆர்வம் பாருங்கள் அவருக்கு !

 திலகரின் '' சுயராஜ்யம் என் பிறப்புரிமை" எனும் மந்திரம் ரொம்ப பிடித்து  பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து  1914ல்   எம்டன் எனும் ஜெர்மன்  நீர்மூழ்கி கப்பலில் சென்னை அருகே வந்து குண்டு வெடித்து இன்றும்  உயர்நீதி மன்றத்தின் சுற்று சுவரில் அதன் அடையாளம் இருக்கிறது.  ஹிட்லர்,   கெய்சர் வில்லியம்  ஆகியோர் நட்பு 
திருவனந்தபுரத்தில் சின்னசாமி பிள்ளை, நாகம்மாள் புத்ரன் ஜெர்மனியில்  பெர்லினில் குடியிருப்பு.

1905ல்   வங்காளம் கிழக்கு மேற்கு எனப் பிரிக்கப்பட்டபோது  அதை எதிர்த்து  பிரிட்டிஷ் மேல் பகைமை வளர்ந்து  அ வர்களை இந்தியாவை விட்டு  அடித்து விரட்ட ஆசை. பன்னிரண்டு மொழிகள் தெரிந்த டாக்டர், இன்ஜினீயர்  டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஆப்ரிக்கா, இத்தாலி,  பர்மா சிங்கப்பூர் என்று பல நாடுகள் சென்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை  எதிர்த்து சுதந்திர இந்தியாவை  நிறுவ பாடுபட்டார். 

 நேரு, காந்தி, படேல், நேதாஜி  ஆகியோரை நன்றாக தெரிந்தும் அவர்கள் உதவி கிடைக்கவில்லை. இந்தியாவை ஒரு சுபிட்ச சுதந்திர இந்தியாவாக காண  தாகம் தீராமலேயே போய்விட்டது.
ஒவ்வொரு கணமும் வாழ்வில் அதற்காகவே தனது  முழு மூச்சையும் அர்ப்பணித்தவர்  செண்பகராமன்.

ஆப்பிரிகா, மியான்மர் (மியான்மர்)முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.

செண்பகராமன் ஹிட்லரோடு  பேசும்போது ஒருமுறை  ஹிட்லர்  சொன்ன ஒரு வார்த்தைக்கு அவர் இப்போது இருந்தால் பலர்  அவர் வாயில் சர்க்கரை போட்டு சர்க்கரை நோயாளியாக்கி இருப்பார்கள்.

''செண்பகராமன், நீங்கள் சொல்வதெல்லாம் சரி, ''இந்தியர்கள்  பிரிட்டிஷ் அரசுக்கு  அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே "   என்று  தாழ்த்தி பேசினார்.   ஷெண்பகராமனுக்கு கோபம் வந்து ஹிட்லரை  மன்னிப்பு கேட்க செய்தார்.   

1933ல் ஜெர்மனி  ஹிட்லர் வசம்  வந்து அவனது சர்வாதிகாரத்தின் பழைய நட்பு மறந்து போய்விட்டது ஹிட்லருக்கு.  நாஜிகள் செண்பகராமன்  வீட்டை  அடித்து நொறுக்கி  அவர் பொருள்களை  சூறையாடி, அவரை அடித்து துன்புறுத்தி  விஷம் கொடுக்கப்பட்டு   ஒரு  மருத்துவமனையில்  26.5.1934ல்  செண்பகராமன்  ஜெர்மனியில்  காலமானார். 

ஜெய்ஹிந்த்  என்று சொல்கிறோமே  அதை வாய் நிறைய சொல்லி எல்லோருக்கும்  பரப்பிய முதல் இந்திய  சுதந்திரவீரர் செண்பகராமன்.

அவரது சிலை சென்னை காந்தி மண்டபத்தில் கிண்டியில் நிறையபேருக்கு தெரியாமலேயே  நிற்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...