Sunday, September 13, 2020

INDIANS OR HINDUS

 


      உலகம் யாவையும்  தாமுள​வாக்கி    J K  SIVAN 

நமது நாடு  புராதனமானது.  இதில் யாருக்குமே  சந்தேகமில்லை. ஆசியாவிற்கு தெற்கே இருக்கும் மூன்று தீபகற்பங்களில் இந்தியா ஒன்று. இந்த விசித்திர தேசத்தில் எண்ணற்ற  ஜாதி, சீதோஷ்ண நிலை, மொழிகள், மக்கள் பழக்க வழக்கங்கள். வடக்கே குளிர், தெற்கே  சூடு.  சிந்து நதி சமவெளி நாகரீகத்தால் சிந்தியா வாக  இருந்து இந்தியாவாக என்றும்  ஆங்கிலத்தில்  ல் indus   என்று  சிந்துவை நாமகரணம் செய்து அதால்  india  என்றும்  ​பெயர் வந்தது என்பார்கள். இப்படி அழைத்தவர்கள்  கிரேக்கர்கள். அலெக்சாண்டர் காலத்தவர்கள். 

நாம்  ஹிந்துக்கள் என்று அப்புறம் வந்த வெள்ளைக்காரனா​ல் நாம்  ஹிந்துக்கள் ஆனோம். 

 ஆயிரமாயிரம் வருஷங்களில் அப்போதிருந்த  கடல் வற்றி  உலோகம் கலந்த மணல் நிரம்பி இருந்தது.  நமது  பாரத தேசத்தில் ராஜபுதனம் பாலையாகியது. மால்வா வுக்கும் பஞ்சாபிற்கும் இடையே  பாலைவனம். மேற்கே இப்படி என்றால் வடக்கே, பனி மலைகள், சிகரங்கள், அதன் அடியே  காடுகள்.   கிழக்கே மலைத் தொடர்கள்.  நடுவே  பரந்த பீட பூமி. விந்திய மலை. தெற்கே  செல்லச் செல்ல  தேசம் குறுகலாக. ஒரு பக்கம்  மேற்குத் தொடர்ச்சி மலைகள், இன்னொரு பக்கம் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.  மேற்கே கரிசல் மண். கிழக்கே  செம்மண். மேற்கு தொடர்ச்சி பகுதியில் கொங்கணம்   என்றும், இப்போதைய  கர்நாடகாவும் பரந்த வளமான பிரதேசங்கள்.    மகாராஷ்டிரா அளவுக்கு  குஜராத்  பூமி வளமுள்ளது அல்ல.   கடலை ஒட்டி  உப்பு  அமோகம்.  தெற்கே  ராமேஸ்வரம் வரை  அமோக விளைச்சல் பிரதேசம். காவிரி  உபயம். தஞ்சாவூர் ஜில்லா உணவுக் களஞ்சியம்.

மேற்கே  கடலை ஒட்டிய  கொங்கண்  மலபார்  பிரதேச மக்கள்  கடலை நம்பி வாழ்பவர்கள். படகு இல்லாதவர்களே  கிடையாது.  மேற்கிலிருந்து அரபு நாடுகளுக்கு  இது கடல் பாதை.   அதனால் அனேக  வெளிநாட்டவர் இங்கே  வர வழைத்து  விட்டது.. தெற்கே  விந்தியா, மேற்குத் தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையே  தக்ஷிண பிரதேசம். முரட்டு  வெளிநாட்டவரால் தோற்கடிக்கப்பட்டு  இங்கு குடியேறியவர்களுக்கு இப்பிரதேசம்  பாதுகாப்பளித்தது.

வெளிநாட்டவர்கள்  பாலைவன ஒட்டக பிரயாணிகள்.  இவ்வளவு வளமான  பளிங்கு நீர் வளமான பிரதேசம் கனவில் கூட கண்டதில்லை.  ஆகவே  சிந்து, கங்கை,  பிரம்ம புத்ரா நதிப் பிரதேசம் அவர்களின்  சொர்க்க பூமி.  புதிய  வாழ்க்கை அமைப்பு, அந்நிய மொழிகள் மெதுவாக எங்கும் பரவின.

ஆரம்பகாலத்தில்  கற்களை,  மிருக எலும்புகளை  ஆயுதமாக கருவிகளாக பயன்படுத்தி வாழ்ந்த காலம் தான் கற்காலம். அவர்கள்  மலை அடிவாரங்கள்,  குகைகள், மரங்கள் இயற்கை அளித்த பெரும் பொந்துகள்  அளித்த  பாதுகாப்பில் மட்டுமே வாழ்ந்தவர்கள். வீடு வாசல் அமைக்க தெரிந்து கொள்ளவில்லை. மண்ணை உபயோகிக்க, மண் பாண்டங்கள் செய்ய தெரியாதவர்கள்.   மிருக தோல்களை அணிந்து, புல் தரையை மெத்தையாக்கி படுத்தவர்கள். அந்தமான் நிகோபார் தீவுகளில் பழங்குடியினர் இன்னும் இருக்கிறார்கள்.  வேட்டையாடி மீன் பிடித்து வாழ்கிறார்கள். 

நமது உலகம் எப்படியெல்லாம் மக்களை ரக்ஷிக்கிறது பாருங்கள்.  வடக்கே பனி மலைகள், பள்ளத்தாக்குகள், காஷ்மீர் ஒரு உதாரணமே போதும்.

இருண்ட கண்டம் எனும் ஆப்பிரிக்காவில் மக்கள் கருமையான திடகாத்திர உடலோடு, சப்பை மூக்கோடு, சுருண்ட கேசத்தோடு இன்னும்  இருக்கிறார்கள். அவர்கள் மொழிகள் விசித்திரமாக இருக்கிறது கேட்பதற்கு.  இதேபோல்   தெற்கு  பசிபிக் சமுத்திர கரைகளில் வாழ்பவர்கள் உண்டு. இன்னும் மேலே  சீனர்கள் மாதிரி மஞ்சள் நிறம், சிறிய கண்கள், சுருக்கமில்லாத ரோமம், குறுகிய உருவம் அமுக்கியது மாதிரி கொஞ்சம் உள்ளடங்கிய மூக்கு மக்கள்.  திபெத்தியர், நேபாளிகள், பூட்டான் தேசத்தவர் என்று. அவர்களே பரவலாக  மேல் கிழக்கிலும் அஸ்ஸாம் பகுதியிலும். என்ன ஒரு கலந்து கட்டியாக பகவானின் படைப்பு.  வித்யாசமான நாகரிக வாழ்க்கை முறை.

ஒரு இடத்திலிருந்து சிலர்  மற்ற இடங்களுக்கு சென்று தங்களது நாகரிகம், பண்பாட்டை அங்கே பரப்ப அங்கிருப்பவர்கள் இங்கே வந்து அவர்களது வழிமுறைகளை பரப்ப எங்கும் எதுவுமாகிவிட்டது.
சுப்ரமணிய சர்மா சற்று வேறு  மாதிரியாக காட்சியளிப்பதற்கு  அவரது  சில முன்னோர்களை தேடி கண்டு​ ​பிடித்து காரணம் அறிய யாருக்கு நேரமிருக்கிறது. அதனால் தான் நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
​ஜாதி வித்யாசம்  ஆரம்பத்தில் இல்லையே, இனியும் வேண்டாம். நாம்  ஆரம்பத்தில் மக்கள் கண்டபடி இந்தியர்களாக இருப்போம். யார்  ஆரியர்  திராவிடர் என்று கூறு போடுவது அதைப் பேசியே  வயிறு வளர்ப்பது. பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ளையருக்கு தான் இருந்தது என்பது போய்  கொள்ளையர்க்கும் அது தந்திரமாகிவிட்டதோ?

யாரோ  ஒரு போலீஸ்கார  பையன் பொதுநல மனப்பான்மையோடு நம்மை வழிநடத்த முன் வந்திருக்கிறானாமே, இன்னும் பல  படித்த  இளைஞர்கள் வரவேண்டாமா ?  படிக்காதவன் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் நடத்தி பணம் பிடுங்கி நாம் எப்படி உருப்படுவோம்?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...