Wednesday, April 25, 2018

GITANJALI. 7



ரபீந்திரநாத் தாகூர் -- J.K. SIVAN

கீதாஞ்சலி 7

My desires are many and my cry is pitiful,
but ever didst thou save me by hard refusals;
and this strong mercy has been wrought into my life through and through.

Day by day thou art making me worthy of the simple,
great gifts that thou gavest to me unasked---
this sky and the light, this body and the life and the mind---
saving me from perils of overmuch desire.

There are times when I languidly linger and times
when I awaken and hurry in search of my goal;
but cruelly thou hidest thyself from before me.

Day by day thou art making me worthy of
thy full acceptance by refusing me ever and anon,
saving me from perils of weak, uncertain desire.
_______________________________

ஆசை என்பதே அலைபோல தான். நாம் எல்லோரும் ஓடம்போல அதன் மேல் ஆடி அலைக்கழிக்கப்
படுபவர்கள். வாஸ்தவம். ஆசை நேரவேண்டும் என்ற தாகம், வேகம், அது நிறைவேற தாமதமானாலும் நடக்காவிட்டாலும் சோகம்......எவ்வளவோ அழுதுவிட்டேன் கிருஷ்ணா, கண்ணீர் வற்றிப் போய்விட்டது.

என் ஆசை நிறைவேறவில்லை என்று ஏங்கி நொந்தேனே. அது நிறைவேறாமல் நீ காத்து அருளியிருக்கிறாய் என்று அப்புறம் தானே புரிகிறது. குழந்தையின் நல்வாழ்வுக்கு உடல் நன்மைக்கு உதவாது என்றறிந்து அது இனிப்பு கேட்டால் தாய் கண்டிப்பாக கொடுப்பதில்லையே.

''கிடையாது போ. நடக்காது '' என்று பலமுறை நீயும் என் தாயாக என் ஆசை வெள்ளங்களுக்கு அணைபோட்டவன். கடின இதயம் உனக்கு இந்த விஷயத்தில். நீ எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய்.
இந்த உறுதியான உன் கருணையை நான் என்வாழ்க்கையில் பல முறை அநுபவித்தவன்

ஒவ்வொரு நாளும் நான் கேட்காமலேயே எத்தனை அருமையான பரிசுகள் தருகிறாய். இதோ மேலே பார்த்து மயங்குகிறேனே இந்த பரந்த நீல நிற அளவற்ற ஆகாயம், அதில் சூரிய சந்திர நக்ஷத்ர ஒளி ஒன்று விட்டு ஒன்று. இதோ இந்த அற்புதமான விந்தை பல கொண்ட உடம்பு, தேகம், அதற்குள் உன் அம்சமாக ஒரு உயிர், இதற்காக உன்னை நன்றியுடன் நினைக்க ஒரு மனம், ஒரு அன்பு நிறைந்த இதயம். ஆமாம் தந்திருக்கிறாய் .....ஆசையில் இருந்து விலக எத்தனையோ வழிகள்.. நான் எங்கே இதை எல்லாம் அறிந்தேன்?

''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய் வரும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே .....

ஆமாம் நிறைய திருமூலர் படிப்பேன். படிப்பதோடு சரி. உள்ளே விஷயம் போனதில்லை, போனாலும் அதே வேகத்தில் எங்கோ வெளியேறிவிட்டது. மனதில் நின்றால் தானே பலன்?
நிறைய தடவை அப்பப்பா, உன் மேல் எவ்வளவு கோபம் பட்டிருக்கிறேன். நீ மட்டும் என் கையில் அப்போது கிடைத்திருந்தால்.......அப்போது ,தேடியது எதற்கோ. இப்போது உன்னை தேடுவது வேறு எதற்கோ....

பாதி தூக்கத்தில் கூட எழுந்து உட்கார்ந்து என் லக்ஷியம் எது என்று புரியாமலேயே அதை தேடுபவன் நான்.
நீ நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டு தேடினாலும் எட்டாதவன், கிட்டாதவன் என்னிடம் மாட்டாதவன்.
கடின நெஞ்சம் கொண்டவன்.

நான் முட்டாள் கிருஷ்ணா, அப்புறம் தான் நிதானமாக புரிந்தது. நீ எப்படி கொஞ்சம் கொஞ்சமாக என் உலக ஆசைகளை எப்படியோ நிறைவேறாமல் தடுத்து, விலக்கி உன் பால் என்னை இழுத்து என் பலஹீனங்களை புரிந்து கொண்டு, என் மற்ற எண்ணங்களை நிறைவேறாமல், அழிய, உதவியவன். இல்லை கிருஷ்ணா, நீ என்னை காப்பாற்றியவன், காப்பாற்றுகிறவன், என்றும் காப்பாற்றுபவன்.


உன்னை நன்றியோடு வணங்குகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...