Friday, May 29, 2020

DESIRE




பற்று பற்றி எரியட்டுமே  J K SIVAN
மிதிலையில்  எல்லோராலும் போற்றப்பட்ட  அரசன்  ஜனகன் விசித்ரமானவன். அவன் அரசன் என்ற ஆடையில்  பதவியில்,  அரசவையை அலங்காரத்தை ஒரு பழுத்த துறவி, ஞானி.
அரசனும் ஆண்டியாவான் என்ற வார்த்தை நமக்கு தெரியும்.  ஆனால் ஆண்டி அரசனாக ஆண்ட கதை ஜனகன் கதை.
அரசகுமாரனாக பிறந்து  வெறுத்து  துறவியானவன்  கௌதம புத்தன்.  ஆனால்  அரசன் என்ற கடமையை புரிந்து கொண்டே  ஆண்டியாக வாழ்ந்தவன்  ஜனகன் ஒருவனே.  உலக வாழ்வில் இருந்து கொண்டே தாமரை இலை  தண்ணீராக  இறைவனோடு ஒன்றியவன்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் படித்தவர்கள் அவர் அடிக்கடி '' எல்லோராலும் ஜனகனாக முடியாது. கோடியில் ஒருவன் அவன்.  உலக வாழ்வின் சகல சம்பத்து களுடனும் இருந்து அதே சமயம் அதில் எதிலும் பற்றில்லாமல் வாழ்ந்த ஒருவனைக் காட்டுங் கள் பார்க்கலாம்''  என்பார்.
ஜனகனுக்கு ஒரு குரு உண்டு.  அவரை அடிக்கடி சென்று பார்த்து அறிவுரை பெறுவான் ஜனகன். இப்படி வாழ்ந்த ஜனகன் மேல் பொறாமை கொண்ட ஜீவன்களும் உண்டு. அது தானே உலகம்.
ஒருநாள்  ஜனகன் தனது குருவை க்கான  காட்டுக்குச்  சென்றபோது யாரோ விஷமி அவனது மாளிகைக்கு தீ வைத்து விட்டான்.  நெருப்பு ஜிவாலை விட்டு ஜிகு ஜிகு என்று கட்டுக்கடங்காமல் தீயின் நாக்குகள்  எல்லாவற்றையும் கபளீகரம் பண்ணுகிறது.
எல்லோரும்  எதெல்லாம்  காப்பாற்றமுடியுமோ அதெல்லாம் எடுத்துக்கொண்டு  ஓடினார் கள்.ஜனகனிடம் ஓடிவந்து  விஷயம் சொன் னார்கள்.
ஜனகன் குருவிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந் தான். காதில் விழுந்த விஷயம் அவனை பாதிக் கவில்லை.
குரு கவனித்தார்.
''ஜனகா,  என்ன இது, உன் அரண்மனை மாளிகை  எண்ணற்ற  விலைமதிப்பற்ற  பொருள்களோடு பற்றி எரிகிறது என்கிறார்கள். நீ  அசைவற்று பேசாமல் இருக்கிறாயே? உன் காதில் சேதி விழவில்லையா?
''குருநாதா, எனக்கு எது தேவையோ அதை பெறத்தானே  உங்களிடம் வருகிறேன்.  எனக்கு தேவையற்றவை மீது எனக்கு பற்று ஏது? பற்று  பற்றி எரியட்டுமே!''

RASANISHYANDHINI

ரஸ நிஷ்யந்தினி J K SIVAN

நீ அறிவாயோ?

66 एनं बहवः क्षत्रिया वीर्यवन्तो विविदिपन्ति इति त्वम् 'तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसा' इत्यहम् ।
ஏனம் பஹவ : க்ஷத்ரிய வீர்யவன்தோ விவிதிபந்தி இதி த்வம் தமேதம் வேதனுவசனேன ப்ராம்ஹணா விவிதிஷந்தி யக்னேன தானேன தமஸா இத்யஹம் .
எத்தனையோ ராஜாக்கள், க்ஷத்ரிய வீரர்கள் ராமனின் நட்பை தேடுகிறார்கள் என்கிறாயே தசரதா . க்ஷத்ரியர்கள் மட்டுமா ? எனக்கு தெரிந்து சாதுக்கள், ஞானிகள், ரிஷிகள், அவனை வேதங்களில் மட்டுமா, , தான தர்ம காரியங்களிலும் தேடுகிறார்கள், அறிகிறார்கள், காண்கிறார்கள். வேதம் சொல்வதை அறிந்து செய்தாலே அவன் தெரிவானே. இதை நான் அறிவேன். நீ அறியமாட்டாய் தசரதா .''

67. अयमिन्दीवरश्यामल इति त्वम् अयं 'हिरण्य श्मश्रुः हिरण्यकेशः आप्रणखात् सर्व एव सुवर्ण' इत्यहम् ।

அயமிந்திவர ஸ்யாமள இதித்வம் அயம் ஹிரண்ய ஸ்மஸ்ரு; ஹிரண்யகேசா: ஆப்ரண சுவாத் சர்வ ஏவ சுவர்ண இத்யஹம்

அதோ சில சிறுவர்கள் நிற்கிறார்களே அதில் கருநீலமாக, நீலமாக தெரிகிறானே அவன் தான் என் மகன் ராமன்'' என்கிறாயே தசரதா, ராமன் பொன்னிறத்தவன், ஸ்வர்ண மயமானவன் என்று உனக்கு தெரியுமா? நான் அறிவேன்.

68. अयं साधारणः पुण्डरीकविशाललोचन इति त्वम् अयं यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी इत्युक्तः पुण्डरीकाक्षः इत्यहम् ।

அயம் சாதாரண: புண்டரீகாவிசால லோச்சனா இதித்வம் : அயம் யதா கப்யாசம் பண்டரீகமேவ மாக்ஷிணி இத்யுக்த: புண்டரீகாக்ஷ இத்யஹம்

''அறியாத சிறு குழந்தை, பாலகன், அகன்ற தாமரை விழிகள் கொண்டவன்'' என்று ராமனை கொஞ்சுகிறாயே தசரதா , உன் மகன் ராமனைப் பற்றி வேதங்கள் சொல்வதை ஞாபகப்படுத்தட்டுமா? அவன் கண்களின் அழகை, நிறத்தை, நீள அகலத்தை' எதனுடனும் ஒப்புமை சொல்ல முடியாது.''

69. अयं साधारण इति त्वम्; अयं 'दिव्यो ह्यमूर्तः पुरुषस्स बाह्याभ्यन्तरो ह्यजः । अप्राणो ह्यमनाश्शुभ्रो ह्यक्षरात् परतः परः' इत्यहम् ।
அயம் சாதாரண இதித்வம்; அயம் திவ்யோ ஹ்யமூர்த்த : புருஷஸ்ய பாஹ்யாப்யந்தரோ ஹ்ருஜ : அப்ராணோ ஹ்யமானஸ் சுப்ரோ ஹ் யக்ஷராத் பரத: பாரா: இத்யஹம் .
சாதாரணமானவன் உன் மகன் என்று நீ நினைக்கிறாய். நிச்சயமாக அது இல்லை தசரதா , அவன் தெய்வீகன், அருவமானவன், உள்ளும் புறமும் தோன்றுபவன், இறப்பற்றவன். மாயையோடு சம்பந்த மில்லாதவன். நம்மைப் போல் ப்ராணன் மூச்சு விட அவசியமில்லாதவன். நம் ஞானம் அறிவுக்கு எல்லையுண்டு. அதை கடந்தவன் ராமன். தூயவன் , புனிதன் .

70. अयमस्मत्तो जात इति त्वम्, 'एतस्माज्जायते प्राणो मनस्सर्वेन्द्रियाणि च, खं वायुयोतिः आपः पृथिवी विश्वस्य धारिणी' इत्यहम् ।
அயமஸ்மந்தோ ஜாத இதித்வம் ;ஏதஸ்சமாஜ்வாயதே ப்ராணோ மன்ஸவேந்தரியாணி ச; ஸ்வம் வாயுயோதி; ஆப ; ப்ரித்வி, விஸ்வஸ்ய தாரிணி இத்யஹம் ;

யார் ராமன் என்று யாரோ கேட்டதற்கு, ''ராமன் எனக்கு பிறந்த என் மகன்'' என்று பெருமையோடு மார் தட்டி சொல்கி றாயே. அவனிடமிருந்து தான் பிராணன், மனது, ஐம்புலன்கள், ஆகாசம், வாயு, ஒளிவகையறா, நீர், பிரபஞ்சத்தையே தாங்கி நிலை நிறுத்தும் சக்தி, பூமி, எல்லாமே பிறந்தவை.
புரிகிறதா? என்று சொல்லி பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி விஸ்வாமித்ரரைப் போல் கணீரென்ற குரலில் சொல்லி பிரசங்கம் செய்தபோது எத்தனை பேர் தசரதர்களாக அந்தக்காலத்தில், கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் மற்றும் எங்கெல்லாமோ, ஆனந்தமாக கேட்டிருப்பார்கள் என்று கற்பனை மனதில் ஓடுகிறது எனக்கு.

THIRUK KOLOOR PEN PILLAI




திருக் கோளூர் பெண் பிள்ளை
வார்த்தைகள் J K SIVAN

65 ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வவாரியாண்டானைப் போலே

ஆளவந்தார் என்கிற யமுனாச்சார்யார் அரையர் சேவையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அரையர்கள் ஒரு பாசுரம் பாடுகையில் ‘அனந்தபுரம் புகுதும் இன்றே’’ என்ற வரியை மூன்று முறை அழுத்தமாக அபிநயித்து காட்டுகிறார்கள். முதல் வரிசையில் ஸ்ரீரங்கத்தில் அதை பார்ததுக்கொண்டிருந்த யமுனாச்சார்யாருக்கு அரங்கன் ஜாடையாக அரையர்கள் மூலம் ''உடனே நீ திருவனந்தபுரம் போ'' என்று கட்டளை இடுவதைப் போல் தோன்றவே, அக்கணமே, தனது பொறுப்புகளை நம்பகமான ஒரு சிஷ்யரிடம் விட்டுவிட்டு பிரயாணத்துக்கு தயாராகும் ஏற்பாடுகள் செய்கிறார். அப்படி பொறுப்பை ஒப்படைத்தது அவரிடம் மிகவும் ஈடுபாடு பக்தி உள்ள சிஷ்யர் தெய்வ வாரி ஆண்டான் என்பவரிடம்.

''தெய்வவாரி ஆண்டான், இனி நீ இந்த மடத்தின் நிர்வாகத்தை நேர்மையாக, நான் திரும்பி வரும் வரை பரிபாலனம் செய். நான் திருவனந்தபுரம் பத்மநாபனிடம் செல்ல வேண்டும்'' என்று கிளம்பிவிட்டார் யமுனாச் சார்யார் .

தெய்வவாரி ஆண்டானுக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வான்? அளவற்ற குருபக்தி கொண்ட அவனால் ஆச்சார்யாரை பார்க்காமல் அவரை தினமும் வணங்காமல் அவர் சொல் கேளாமல் ஒரு நாளாவது இருக்க முடியுமா? அதே நேரம் அவர் சொல்லிய வாக்குக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டாமா?
உள்ளூற அவரை பிரிந்த வருத்தத்தோடு ஆஸ்ரம, மட, நிர்வாகத்தை பொறுப்பாக செய்து கொண்டிருந்தார் தெய்வ வாரிஆண்டான். சரியான தூக்கம், உணவு இன்றி தனிமையில் ஆற்றமாட்டாமல் அழுதார் . உடல் இளைத்தது . படுக்கையில் வீழ்ந்தார் . மருத்துவர்கள் வந்து ஆண்டானை பரிசோதனை செய்தார்கள். மருந்துகள் கொடுத்தார்கள். உடலில் ஒன்றும் குறையில்லை, மனதளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பாதிப்பு உடலில் நலக்குறைவு.

''தெய்வவாரி ஆண்டான் ஸ்வாமிகள், உங்கள் உடலில் குறை தெரியவில்லை, மனதளவில் உங்களுக்கு என்ன குறை ?''

''மருத்துவரே, என்னால் என் ஆச்சார்யனை பிரிந்து உயிர் வாழ முடியவில்லை. பிரிவு தாங்க முடியாமல் மனதளவில் மட்டுமில் லாமல் அது உடலையும் பாதித்து விட்டது. .ஆச்சார்யரைக் காணாவிடில், இன்னும் மோசமடையும் என்றும் கூறினார்.

''இவர் உடனே திருவனந்தபுரம் போக வேண்டும். குருநாதரை காணவேண்டும். அப்போது தான் உயிரோடு வாழ்வார்'' என மருத்துவர்கள் சொல்லி விட்டதால், மற்ற சிஷ்யர்கள் பல்லக்கு தயார் செய் ஆண்டான் திருவனந்தபுரம் செல்கிறார் . அவன் அவரை சந்திக்கும் முன்பே ஆச்சாரியார் வழியில் எதிர்படுகிறார். திருவனந் தபுரம் பத்மநாபா ஸ்வாமியை சந்தித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்பிக் கொண்டிருந்தார் ஆச்சார்யார் .
எதிரே பல்லக்கில் வந்து கொண்டி ருக்கும் தெய்வ வாரி ஆண்டானை கண்டதும் ஆச்சார்யருக்கு அதிசயமும் ஆச்சர்யமும் அருவருப்பும் ஒருசேர அவனைக் கடிந்து கொண்டார்.

''ஆண்டான் நான் உன்னை நம்பித்தானே, ஆஸ்ரம/மடத்தின் நிர்வாகத்தை பொறுப்பாக கவனித்துக்கொள் என்ரறு ஒப்படைத்தேன். எப்படி அதை கவனிக்காமல் இங்கே வந்தாய்?. உனக்கு பரதன் எப்படி ராமன் கட்டளையை கீழ்ப்படிந்து நந்தி க்ராமத்தில் 14 வருஷங்கள் ராஜ்யபாரம் செயது அயோத்திய மாநகரத்தை திறம்பட ஆண்டான் என்பது கவனம் இருக் கிறதா? உன்னை பரதனாக நினைத்தேன். நீ என்ன செய்தாய் பார். என் கட்டளையை மீறி மடத்தின் நிர்வாகப்பொறுப்பை வேறு யாரிடமோ கொடுத்துவிட்டு அதன் மேல் கவனம் இல்லாமல் இங்கே வந்திருக்கிறாயே''

ஆச்சார்யாரை கண்ணார தரிசித்த தெய்வவாரி ஆண்டான், அவரது சொல் நெஞ்சை சுடவே, மூர்ச்சையாகி கீழே விழுந்தார் .

பல்லக்குடன் வந்தவர்கள் யமுனாச் சார்யரிடம் தெய்வவாரியாண்டான் உடல் நிலை அவர் பிரிவால் க்ஷீணித்ததையும் , அவரது பிரிவு தாங்கமுடியாததால் அவன் உயிர் ஊசலாடுவதையும் , மருத்துவர்கள் அறிவுரைப்படி அவரை தாங்கள் அழைத்து வந்ததைப் பற்றியும் சொல்கி றார்கள். ஆண்டானது இணையற்ற குருபக்தியை புரிந்து கொண்ட யமுனாச் சார்யர் மனமகிழ்கிறார் . அவனை ஆசீர்வதிக்கிறார்.

ஆண்டானுக்கு மூர்ச்சை தெளியவைத்து, ஆளவந்தார் ஸ்வாமிகள் (யமுனாச் சார்யார்) வாரியாண்டானை வாரி அணைக்கிறார்.

''ஆண்டான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய், போ, அனந்த பத்மநாபனை தரிசித்து விட்டு வா. எல்லோருமாக ஸ்ரீரங்கம் திரும்புவோம்.''

தெய்வவாரியாண்டான் ஆச்சார்யரை நேரில் தரிசித்ததில் மகிழ்ந்து உளமார மறுபடியும் வணங்கி "ஆரியப் பெரு மானே! (‘ஆரியன்’ என்றால் ‘உய ர்ந்தவர்’) எனக்கு அரங்கனும் நீங்களே, அனந்த பத்மநாபனும் நீங்களே! மீண்டும் உங்களை ஒரு வினாடியும் என்னால் பிரிய இயலாது" என்றார்.

ஆச்சர்யப்பட்ட ஆளவந்தார், வாரியாண் டாருடனும், தனது சீடர்களுடனும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தெய்வ வாரி ஆண்டான் உடல் நிலை குணமாகியது.

இந்த தெய்வவாரி ஆண்டானைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

நமக்கு அவரைப்பற்றி அறிய உதவியது வேறு யாரு மில்லை. எல்லாம் அறிந்த ஞானி நமது திருக்கோளூர் பெண் பிள்ளை தான்.

ஸ்ரீ ராமானுஜரை சந்தித்த அவள் அவர் கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு 81 பேரை அடையாளம் காட்டி ''அவர்களைபோலவா நான்? எந்த விதத்திலாவது பெருமாளிடம் ஆச்சர்யனிடம் பணிவிடை செய்தவள் '' என்கிறாள். அப்படித்தான் இந்த தெய்வ வாரி ஆண்டானை 65 வது உதாரண புருஷராக காட்டுகிறாள். அவரைப் போல் குருவினி டத்தில் பக்தி கொண்டவளாக நான் இருந்த துண்டா, அவருக்காக என் உடல் இளைத்த துண்டா, எனக்கு எந்த விதத்தில் இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வசிக்க அருகதை? என்கிறாள்.

PESUM DEIVAM




பேசும் தெய்வம்  J K SIVAN

      ஸாஸ்வத சொத்து. பர்மனெண்ட்  ப்ராபர்டி. 

''அப்பா  ஒரு சொத்தும் வைத்து விட்டு போகவில்லையே''  என்கிற ஏக்கம் ஏமாற்றம் நிறைய பேருக்கு  இருக்கிறது.  பலருக்கு அப்பா வைத்து விட்டு போன சொத்தால் எவ்வளவு கஷ்டம் என்று  அவர்களுக்கு தெரியாது.    அதே போல் சிலர் வாழ்நாள்  பூரா பொய்  சொல்லி, லஞ்சம் வாங்கி, ஏமாற்றி சொத்து சேர்க்கிறார்கள்... இது அன்றும்  இன்றும் நடக்கும் நிகழ்ச்சி தான்.  

இதைப் பற்றி மஹா பெரியவா என்ன சொல்கிறார் ?

''பெரியவா நீங்க சொல்லுங்கோ, எது சரியான சொத்து.ஸா ஸ்வதமானது? நீங்கள் தான் அழகா புரியும்படியா சொல்வீர்களே.  எங்கே சொல்லுங்கள். எங்களுக்கு புத்தி வரவேண்டாமா?  ஏற்கனவே சொல்லி இருந்தாலும் இன்னொரு தரம் சொல்லுங்கோ:


''அப்பா வைத்துவிட்டுப் போன  வீடு பழசு.  வயசாகி  இடிந்து போகும்.  அடிக்கடி  ரிப்பேர் பண்ணணும், வெள்ளை. அடிக்க,  பெயிண்ட்  பூச, , மர , இரும்பு வேலை அப்படி இப்படி என்று   மாற்றி மாற்றி  செலவு.  

நிலமா இருந்தால்  வருஷா  வருஷம்  கொள் முதல் போட்டு, விதைத்து,   நீர் பாய்ச்சி,  உழைத்தால் தான்   மாசூல் பார்க்கலாம்.    எருப் போட்டு  மாளாது.     பூஸாரம் போய் விடுகிற நிலங்களும் உண்டு. மழை பெய்யாவிட்டாலும்,  Dam திறக்காவிட்டாலும், , பூச்சி, பொட்டு மருந்து   அடிக்கா விட்டாலும்   நஷ்டம் ஒரே யடியாக மழை  பெய்தாலும் அழுகிப் போய்  நஷ்டம். கஷ்டம்.    அரசாங்கத்துக்கு  கட்டவேண்டிய தொகை,   ஆள் காரர்களோடு மல்லுக்கு  நிக்கணும் . கண்  குத்தி பாம்பாக   மேற்பார்வை பண்ணணும் . க்ராமத்திலேயே இருக்க முடியாதே.... நிறைய  வேலை  பட்டணத்தில்... டபுள்  நஷ்டம். மனக்கஷ்டம்.

சரி அப்பா  ரொம்ப  பணமாக   கணக்கில் காட்டாமல் வைத்துவிட்டு போனால்? 

பெட்டியிலே  வைத்திருந்தால் ‘டிவால்யுவேஷன்’ (நாணய மதிப்பு குறைந்து போவது)! பல தினுசு டாக்ஸ்! புதுசாக என்ன டாக்ஸ் வருமோ என்று ஓயாமல் பயம். திருட்டுப் போவது; எங்கே திருட்டுப் போய்விடுமோ என்று ஸதா பயம். அதிகாரிகளுக்கு  அடிக்கடி  லஞ்சம் கொடுக்க வேண்டும்.

ஆகவே  இந்த சொத்துக்கள்  ் ஸாஸ்வதமில்லை.  க்ஷீணித்துப் போகும் . வாரிசுகளுக்கிடையே  கொலைச் சண்டை, கோர்ட்,  கேஸ்.   அலையணும் . ஸொத்தை எப்படியாவது காப்பாற்ற   மனசாட்சிக்கு விரோதமாக  தப்பு செய்ய சொல்லும்.  செய்யணும். சட்டத்தை
மீற  வைக்கும். பிறத்தியாருக்கு நஷ்டம், கஷ்டம் உண்டாக்கி  அதனால்  தனக்கு   லாபம்  தேட வைக்கும்.  லஞ்சம் கொடுக்க,  பொய்க் கணக்கு காட்ட  வைக்கும்.    அரசாங்கத்தை,  சட்டத்தை, அதிகாரிகளை  விலைக்கு வாங்க,  ஏமாற்ற  ‘பினாமி’ ஏற்பாடுகள் செய்ய வைக்கும்.  இன்னும் பல தினுஸான தகிடு தத்தம் செய்யணும் .  இப்படியெல்லாம் தப்பு வழியிலே போய்  சம்பாதிக்கும்  ஸொத்து  இவ்வளவூண்டு கொஞ்சமா இருந்தாலும்,  அதை  அடைய   ஒருவன்  செய்கிற  அக்கிரமம்  பாபம் இருக்கிறதே அது மலை அளவு. 

பூர்வபுண்யத்திலேயோ, ஏதோ அத்ருஷ் டத்திலேயோ அப்பா ஸொத்து நன்றாகவே வளர்கிறது, தப்புப் பண்ணாமலே விருத்தி யாகிறது  எல்லாமே  விதிப்படி,  நியாய மாக, வரி கட்டி, நேர்மையாக, இருந்தால்?  

என்றாலும்  கூட,  கடைசியில் ஒரு நாள் ‘காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’  தானே.   அத்தனைகளையும் விட்டு விட்டுப் போக வேண்டும் . அரண்மனை மாதிரி வீடாகட்டும், ஆயிரம் வேலி முப் போகம் விளைகிற நிலமாகட்டும்,  ஐந்து கோடி-பத்து, நூறு  கோடி என்று ரூபாயாகட்டும், எதுவா னாலும் அதிலிருந்து துளிக்கூட நமக்குப் பிரயோஜ னம் கிடைக்காத படி அத்தனை யையும் விட்டுவிட்டு ஒரு நாள் வெறும் கையோடு  தான் புறப்படணும். 

ஆகவே  அப்பா ஸொத்தொ,  நாமே  தேடி சேர்த்த  ஸொத்தோ  எதுவுமே  சாஸ்வதம் இல்லை.  கூட வராது.

ஸாஸ்வதமான ஸொத்து,  அழியாதது ,  ரிப்பேர் தேவையில்லாதது,  டாக்ஸ் கட்டவேண்டாத சொத்து, திருட்டு போகாத ஸொத்து, ‘திருட்டு  பயம் இல்லாத சொத்து , தப்பு வழிகளில் போய்  பொய்சொல்லி, சட்டத்தை மீறாத, லஞ்சம் கொடுத்து  காப்பாற்றிக் கொள்ள வேண்டாத ஸொத்து  அப்பாவால்  கொடுக்க முடியாது.  நாமாகவும் தேடி  சம்பாதிக்க  முடியாது.    குரு   என்கிற ஒருத்தர்தான் ஸாஸ்வதமான அந்த ஸொத்தைத் தருகிறவர். இது நாம் போன பிற்பாடு நம் கூட வராத ஸொத்தில்லை – நம்மையே திரும்பி வரப் பண்ணாத ஸொத்து! எது ஸாஸ்வதமோ அந்தப் பரமாத்மாவுடன் நம்மைப்பிரிக்க முடியாமல் சேர்த்துவிடுகிற ஸொத்து.

ஞானம் என்ற ஸொத்தை குரு அநுக்ரஹிக்கிறார். ஸொத்து க்ஷீணித்துக் கொண்டே போவது, நாம் சிரமப்பட்டு அதை விருத்திபண்ணப் பாடுபடுவது,   இப்படி  பாடுபடுவதில்  பாவ மூட்டையை இன்னும் பெரிசாக்கிக் கட்டிக்கொள்வது என்பதற்கெல்லாம் இடமே வைக்காமல் நாளுக்கு நாள் தானும் வளர்ந்து நம்மையும் வளர்ப்பது குரு தருகிற உபதேச ஸொத்து.

மற்ற ஸொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா ஸுகங்களும் தாற்காலிகம்தான். ‘நித்யானந்தம்’ என்றே சொல்லப்படுவதான ஸாஸ்வத ஸுகத்தைத் தருவது குரு அநுக்ரஹிக்கிற ஞானமொன்றுதான்.''
பெரியவா சொல்லும் இந்த அறிவுரை தெரிந்தவர்களுக்கெல்லாம் நாம் சொல்லவேண்டாமா? 

Thursday, May 28, 2020

LIFE LESSON




                 கொஞ்சம் சிந்திக்க.....J K  SIVAN 

எத்தனை வருஷமானாலும், வயசானாலும்  தெரியாத சில விஷயங்கள் எல்லோரிடமும் இருக்கிறது. இதற்கும்  பிறப்புக்கும், படிப்புக்கும் துளியும்  சம்பந்தமில்லை.  சுய நினைவிலேயே வாழ்வது, பிறர் பேசுவதை கேட்காத காதுகளை  வளர்ப்பது.  பிறரை மதிக்க முயலாதது சில காரணங்கள்.

மற்றவர்களோடு ,  மக்களோடு  பழகுவது என்பது ஒரு சிறந்த  கலை. அதுவும்  வியாபாரத்தில் ஈடுபடுவனுக்கு இது பெரிய மண்டை இடி.  ஆபிசில் கணக்குப்பிள்ளையாகட்டும், வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்ணாகட்டும், மற்றவர்களை வேலை வாங்கி சிறப்பாக  நிர்மாணிக்கும்  கட்டிட கலைஞனாகட்டும், யாராக இருந்தாலும் இது அவசியம் ஒரு நிர்பந்தம்.  என்னதான்  உயர்படிப்பு படித்திருந்தாலும், மற்றவர்களை வைத்து அனுசரித்து கூட்டு முயற்சியாக ஒன்றை  உருவாக்க வேண்டும் என்றபோது ''மற்றவர்களோடு பழகுவது'' எப்படி என்பதை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.


எப்படி மக்களை கவர்வது?  
எப்படி  நம் மேல் கொஞ்சம் கவனம் வைக்கும்படி பண்ணுவது? 
நமது எண்ணங்களை எப்படி அவர்களும்  விரும்பும்படியாக செய்வது?  
இதெல்லாம் புத்தகத்தில் படித்து வரும் ஞானமோ அறிவோ இல்லை. நடைமுறையில் பலரை கவனித்து சந்தித்து அதன் மூலம் தேர்வது. தெரிவது. இதற்கு  மூலதனம்  கடவுள் நமக்கு அளித்த கண், காது, புத்தி எல்லாம் தான்.  நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எப்படி இதெல்லாம் சமாளித்தார்கள் என்பது ஒரு பாடம்.

ராமசாமி நாயக்கரிலிருந்து ராபின்சன் க்ருஸோ வரை ஒவ்வொருவரும் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறிவது படிப்பினை. 

அமெரிக்காவில் ஒரு பயங்கர கொடிய  கொலைகாரன்.  மின்னல் வேகத்தில் துப்பாக்கியால் சுடுபவன். அவனைப் பிடிக்க  போலீஸ் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவன் பிடிபடவில்லை.  ஒருநாள் ஒரு பெண்ணோடு ஒரு கட்டிடத்தில் இருப்பது தெரியவந்து 150-200 போலீஸ் வீரர்கள் துப்பாக்கியோடு அவனிருந்த மாடியறை கட்டிடத்தை சூழ்ந்து கொண்டார்கள். அந்த அறையை தாக்கி சுட்டார்கள். அவன் ஒரு நாற்காலி அடியில் ஒளிந்து கொண்டு அவர்களை திருப்பி சுட்டான்.  அவன் கடைசியில் பிடிபட்டான். பிடிபடுமுன் ஒரு துண்டு காகிதத்தில் ஒரு வாசகம் எழுதி வைத்திருந்தான். உடலில் காயம். ரத்தம் சொட்டியிருந்த அந்த காகிதத்தில் அவன் சொன்னது:  

'''நான் அணிந்திருக்கும் கனமான  கோட்டுக்குள்  ஒரு ஓய்ந்து போன கருணைமிக்க இதயம் ஒன்று இருக்கிறது. அது எவருக்கும் எந்த தீங்கும் செய்யாது.''  

அவனை மின்சார நாற்காலியில் அமர்த்தி பரலோகம் அனுப்பினார்கள். 

அதுசரி  அது பற்றி  சாகும்  முன்பு அவன்  ''நான் பலரைக் கொன்றதற்காக என்று சொல்லவில்லை.  நான் என்னை தற்காத்துக் கொண்டதற்காக'' என்று தான் சொன்னான். தான் தவறு செய்ததற்காக இந்த தண்டனை என்று தன்னைத் தானே குறை பட்டுக்கொள்ளவில்லை.   

ஒருத்தர் மற்றவரை குற்றம் கண்டுபிடிப்பதோ, குறை சொல்வதோ, திட்டுவதோ கூடாது. எல்லோருமே கடவுளின் சிருஷ்டி. வேண்டுமென்றுதான்  ஒவ்வொருவருக்கும் புத்தியை, வெவ்வேறாக வைத்திருக்கிறான்.  இதில் ஒரு வேடிக்கை.  எவனுமே  தான் செய்த தவறுகளை, தப்புகளை பற்றி கண்டுகொள்வதே இல்லை, பிறர் தவறுகளை,  கொசுவாக  அது  இருந்தாலும் மலையாக்கி  காட்டுகிறான்.






RASA NISHYANDHINI


ரஸ  நிஷ்யந்தினி    J K  SIVAN  


                           
                     அற்புத  ராமாயண பாத்திரங்கள்  

ராமாயணத்தில்  கண்ணில் படாத ஒரு பெயர்  ஊர்மிளை.  லட்சுமணனின் மனைவி.  ராமனோடு தான் லக்ஷ்மணனும்   சீதையின்  தங்கை  ஊர்மிளை யை  கல்யாணம் செய்து கொண்டான்.  ஊர்மிளை  ஜனகரின்  இரண்டாவது பெண். சீதையோடு நெருக்கமானவள்.  பாசமிக்கவள்.  சீதையை உலகம் அறிந்த அளவில் கோடியில் ஒரு பங்கு கூட அவள் தங்கை ஊர்மிளை அறியப்படவில்லை. ஆச்சர்யமானவள் அவள் செய்த தியாகத்திற்கு ஈடே இல்லை. 

சீதை  வனவாசம் கணவனோடு சென்றாள் .  அவள் கணவன் ராமன் 14 வருஷம்  வனவாசம் செய்யவேண்டும் என்று தந்தையிடம் சிற்றன்னை பெற்ற  வரத்தால் செல்ல வேண்டிய நிர்பந்தம்.  லக்ஷ்மணன் தானாகவே  14 வருஷம் ராமனோடு வனவாசம் அனுபவித்தான்.  

 ''நானும்  அக்கா  சீதாவோடு உங்களோடு வனவாசம் வரலாமா?''

''கூடாது  ஊர்மிளா.  நீ  இங்கே இருந்து  என் வயதான  தாய் தந்தைக்கு  ஒரு குறைவுமில்லாமல்  பணிவிடை செய்து கொண்டு இரு '' என்றான் லக்ஷ்மணன். 

காரணம் இல்லாமல் அவன் மனைவி  ஊர்மிளை   கணவன் சொல் தட்டாது,  14 வருஷம் கணவனை பிரிந்து '
 என்ற லக்ஷ்மணன் வாக்கை தெய்வ வாக்காக கொண்டு சேவை புரிந்தாள். லக்ஷக்கணக்கான ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தில் ஒரு வார்த்தை கூட ஊர்மிளை  பேசியதாக  காணோம். 

அவளைப்  பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம். 

வனவாசம் 14 வருஷத்தில் ஒரு நாள் /இரவு கூட  லக்ஷ்மணன் தூங்கவே இல்லை.  ராமனை, சீதையை  ஜாக்கிரதையாக காவல் காத்து  பணிவிடை செய்தான்.  இப்படி  உறக்கம் இன்றி செயல்படுவதை கவனித்த  நித்ரா தேவி  (தூக்கத்துக்கு கடவுள்)  லக்ஷ்மணன் முன் தோன்றினாள் .

''லக்ஷ்மணா, இரவு பகல் கண்ணுறங்காமல் நீ  சீதா ராமர் இருவருக்கும் தொண்டு செய்வது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  உன் பக்தியை மெச்சி உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல்?''

''நித்ரா தேவி.  எனக்கு ராமர் சீதைக்கு  சேவை செய்வது ஒன்றே லக்ஷியம்.  என் சேவையை பாராட்டி நீங்கள் எனக்கு ஏதாவது வரம்  கொடுத்து நான் பெற்றுக்கொண்டால்  என் சுயநலத்துக்கு உழைத்ததாக ஆகும். என் சேவைக்கு பரிசு பெற்றதாக இருக்கும். வேண்டவே வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள், அப்படி எனக்கு உதவ நினைத்தால்,  இரவும் பகலும்  என் பிரபுவுக்கும் தாய்க்கும்  நான்  தூக்கமின்றி பணிவிடை செய்ய அருள்புரியுங்கள்.

''லக்ஷ்மணா,  அற்புதமானவன் நீ.  உனக்கு தூக்கமின்மையால்  எந்த  துன்பமும், களைப்பும் வராமல் இருக்க  அருள் புரிகிறேன்''.  உனக்கு  ஏதேனும் வரம் கொடுக்காமல் என்னால் இங்கிருந்து அகல முடியாது. ஏதேனும் கேள்?''

''நித்ராதேவி  தாயே,  என் பிரபு ராமன், தாய்  சீதைக்கு  பணிவிடை செய்ய  அவன் அருள் புரிவான்.  என் மனைவி ஊர்மிளா   அயோத்தியில் என்னை பிரிந்து என் பெற்றோருக்கு   தனியாக, பணிவிடை செய்து   கொண்டிருக்கிறாள். அவளுக்கு கஷ்டமில்லாமல் அருளுங்கள்''    

பரவாயில்லையே  லட்சுமணனுக்கு  மனைவி ஊர்மிளா ஞாபகம் இருக்கிறதே.

நித்ரா தேவி  அயோத்தி சென்று ஊர்மிளா முன் தோன்றுகிறாள்.   

'' ஊர்மிளா, உன் கணவன் லக்ஷ்மணனை சந்தித்தேன். உனக்கு அருள் புரிய என்னை கேட்டுக்கொண்டான்.  என்ன வரம் வேண்டும் கேள்'' என்றாள்  நித்ரா தேவி.

''தாயே  நித்ரா தேவி, எனக்கு நீங்கள் கேட்டது பெருமையாக இருக்கிறது.  எனக்கு களைப்பு, துன்பம் எதுவும் இல்லை.   என்  கணவனின் கட்டளை  சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறேன்.   ஒரே  ஒரு வேண்டுகோள். என் கணவன் என்னை பற்றி கவலைப்பட்டு  எனக்கு ஏதேனும் உதவ  உங்களை இங்கே அனுப்பினார் .  அவருக்கு பாவம் என் மேல் கவலை இருப்பதால் அங்கே அவருக்கு  ராமர் சீதை இருவருக்கும் முழு மனதாக பணிவிடை செய்ய இயலாதோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது. இந்த பதினாலு வருஷமும் என்னைப்பற்றி எண்ணமோ, கவலையோ,  அவர் மனதில் எழாமல் நீங்கள் அருளவேண்டும்''

 லக்ஷ்மணன் ஏகாக்ர  சிந்தையோடு ராமர் சீதை இருவருக்கும்  பணிவிடை செய்ய   ஊர்மிளையின் இந்த வேண்டுகோளால்  நித்ரா தேவி அருளிய  வரம் உதவியது.  

++ 

 விஸ்வாமித்ரர் இதுவரை அறுபது காரணங்கள் காட்டி ராமனின்  தெய்வீக தன்மையை  தசரதனுக்கு உணர்த்துவதை பார்த்தோம். 
விஸ்வாமித்ரர் சற்று நிறுத்தினார். சிறிது நீர் பருகினார். எல்லோரையும் ஒரு தரம் பார்த்தார். அனைவரும் கண்ணாலேயே ''மகரிஷி இன்னும் சொல்லுங்கள்'' என்று கெஞ்சுவது போல் தெரிந்தது. தசரதர் அவர் கால்கள் அருகிலேயே அமர்ந்தார்.

தசரதன் கைகளால் வாய் பொத்தி விஸ்வாமித்ரரிடம் மெதுவாக சொல்கிறான்:
''மகரிஷி என் மகன் ராமன் என்ற நினைப்பு இப்போது புதிய பரிமாணம் பெற்றுவிட்டது . ராமனைப் பற்றிய மஹத்வம் நீங்கள் கூறும்போது என் செவிகளில் இன்பத் தேனாக பாய்கிறது. மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஆசை அதிகரிக்கிறது.''

''தசரதா , கேட்கும் உனக்கு மட்டும் அல்ல, சொல்லும் எனக்கும் அவனைப்பற்றி நினைக்க நினைக்க புது தெம்பு, உற்சாகம், சந்தோஷம் ஆறாக பெருகுகிறது. சொல்கிறேன் கேள்''

பருத்தியூர் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மனித உருவத்தில் மகரிஷி விஸ்வாமித்ரர் ஸமஸ்க்ரிதத்தில் மேற்கொண்டு ஆடிமாஸ காவேரியாக ப்ரவாஹிக்கிறார். 
  ரஸ   நிஷ்யந்தினியில் மற்றும் ஐந்து ஸ்லோகங்களை  ரசிப்போம்.  61-65. 

61. अयमन्य इति त्वम् अयमात्मेत्यहम् ।
அயமன்ய இதித்வம் அயமாத்மேத்யஹம்.

 '' ராமன் நம்மைப் போல ஒருவன் என்று நினைக்காதே. முற்றிலும் மாறுபட்டவன். நம்முடைய ஆத்மா, அங்கம் அவன்''

62. एष प्रज्ञावानिति त्वम्; अयं 'प्रज्ञानं ब्रह्म इत्यहम् ।
ஏஷ  பிரஞாவாநிதித்வம்; அயம் பிரஞ்ஞான் ப்ரம்ம இத்யஹம்

''தசரதா , நன்றாக கல்வி கற்றவன் ராமன் என்று சொன்னால் அது  போதுமா? உலகத்தில், இந்த பிரபஞ்சத்தில் ஞானம் என்ற உருவமற்ற ஒன்று ஒரு உருவம் எடுத்தால் அது தான் ராமன். இதை நான் அறிவேன், நீ அறியாய்.''

63. एनं स एषोऽयमिति त्वम्; एनं तत्त्वमसि इत्यहम् ।
ஏனம் ச யேஷோ அயமிதித்வம் ;  ஏனம்  தத்வமஸி இத்யஹம்
ராமன் எங்கே என்றால் ''இதோ என்னருகே நிற்பவன், என்னெதிரில் உட்கார்ந்திருப்பவன்'' என்று சுட்டிக்காட்டி சொல்கிறாயே. தசரதா , உனக்கு  உண்மையில்   ராமன் யார் என்று  தெரியுமா? ஒவ்வொரு ஜீவராசியிலும் இருந்து அதனின்றும் வேறுபடாதவன்.''

64. एनमयमिति त्वम् एनमहमित्यहम् ।
யேனமயமிதி த்வம் ஏன மஹமித்யஹம்
''தசரதா,   ''ராமா, '' வா, போ, நில், உட்கார்'' என்று இதுவரை நீ அவனை வேறு ஒரு மனித உருவமாக எண்ணி பழகுகிறாய்.   என்னைப் பொறுத்தவரையில் ராமனை நான் ''நானாகவே'' பார்க்கிறேன்.ஏன்  தெரியுமா?   . அவனில் நம் போல் எண்ணற்றவர்கள்  அடக்கம்.  நம்முள் அவனும்  அடக்கம். ''

65. एष आसीनश्चेन्न दूरं गच्छेत्; शयानश्चेत् न सर्वतो यातीति त्वम्। 'अयमासीनो दूरं व्रजति शयानो याति सर्वत' इत्यहम् ।
ஏஷ ஆஸினஸ்சேன்ன  தூரம் கச்சேது;  சாயனஸ்சேது ன சர்வதோ யாதீதி த்வம்;  அயமாசினோ தூரம்  வ்ரஜதி  ஸயானோ  யாதி சர்வத இத்யஹம் .

 ''தசரதா ,  ராமன் படுக்கையில் படுத்திருந்தால் வேறெங்கும் அதே சமயத்தில் இருக்கமுடியாமல், நம்மைப் போல் அந்த படுக்கை அறையில் மட்டும் இருப்பவனா ? எங்கேயாவது உற்கார்ந்திருந்தால் அதே சமயத்தில் வேறே எங்கேயாவது தூரத்தில் போகமுடியாமல் அங்கேயே நம்மைப்போல் உட்கார்ந்திருப்பவனா? ராமன் ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுபவன் .   ஒரு இடத்தில் படுத்திருந்தாலும் பல இடத்தில் காணப் படுபவன் ராமன் என்று எனக்கு தெரியும்''  

மேலே ராமனை அனுபவிப்போம்.

Wednesday, May 27, 2020

MORAL




                    பொது இட  சுத்தம்.... J K  SIVAN 
                                        

நாம் எப்படிப்பட்டவர்கள் என்று தீர்மானிக்க, தெரிந்து கொள்ள  இந்த கதையை முதலில் படிக்கவேண்டும். அப்புறம். நாம் அந்த சூழ்நிலையில்  இருந்தால் என்ன செய்திருப்போம்?  என்று யோசிக்கலாம். நம்மை மாற்றிக்கொள்ள ஒரு வழி இது. 

குப்புசாமிக்கு வழி தெரியவில்லை.   நீண்ட பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு நடக்கிறான்.  கிழக்கு மேற்கு தெரியாத   யாருமில்லாத   எங்கும்  வீடே தெரியாத வெட்டவெளி.  கொளுத்தும் வெயில்.  இடது காலில்  கிழிந்த செருப்போடு    விந்தி விந்தி நடை.   வெயில் சுட்டெரிக்கும்போது தாகம் வராதா? 

''கிருஷ்ணா கிருஷ்ணா''
அம்மாவை நினைத்துக்கொண்டான். 

'டேய்  குப்பு எப்போ எல்லாம் உனக்கு கஷ்டம்னு  தோணுதோ அப்போ கிருஷ்ணா கிருஷ்ணா''ன்னு சொல்லு. கூப்பிடு.  ஹெல்ப் பண்ணுவான்''    அம்மா  சொல்வாளே .

விடாது '' கிருஷ்ணா கிருஷ்ணா''. கிழிந்த செருப்போடு நடந்த குப்புவின் கண்ணில் ஒரு பழைய சின்ன வீடு  சீக்கிரத்திலேயே   தென்பட  மெதுவாக அங்கே போனான் ... ஜன்னலில்லாத, கதவில்லாத, யாருமில்லாத ஒரு ஓட்டு வீடு. பின் வாசல் சுவற்றின் பக்கம்  ஒரு தண்ணீர் பம்ப்.   தெருவில் பெண்கள் கெட்டவார்த்தையில் ஒருவரை திட்டிக்கொண்டு சண்டைபோட்டுக்கொண்டு  தண்ணீர் பிடிக்க  கையால் அடிப்பார்களே அது போல குழாய்..
 பக்கத்திலேயே  சின்ன  ஆழமான குட்டி கிணறுபாதாளத்தில்  தண்ணீர் கண்ணில் பட்டு முகம் தெரிந்தது.   தெய்வத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது குப்புவுக்கு.

''லொட்டு லொட்டு ''என்று கைப்பிடியை இழுத்து பம்ப்  அடித்தான். குழாய் ஏப்பம் விட்டது.
 தண்ணீர் மட்டும் வரவில்லை.  சக்தி ஏற்கனவே குறைந்து தாகத்தில் தவிக்கையில் ...
''அட  இது கண்ணில் படாமல் போனதே ''என்று  ஓரமாக இருந்த ஒரு  அலுமினிய  சொம்பை பார்த்தான். அதில் நீர்.  மேலே  ஒரு தகர  தட்டு. அதில் ஏதோ எழுதியிருந்தது.

''இந்த சொம்பில் உள்ள நீரை குழாயில் ஊற்றி பம்ப்அடி . தண்ணீர் வரும். மறக்காமல் போகும் முன்பு  மீண்டும் சொம்பை நீரால் நிரப்பி வை.''

குப்பு என்ன செய்தான். தாகத்தில் தவிக்கும்போது இருக்கும் சொம்பு நீரை குடித்துவிட்டு கிளம்பினானா? குழாயில் கொட்டி பம்ப் அடித்து அதில் நீர் வந்து குடித்துவிட்டு மீண்டு சொம்பை நிரப்பினானா?     இருக்கும் தண்ணீரை குடிக்காமல் எந்த முட்டாளாவது ஏப்பம் விடும் குழாயில் ஊட்டி வீணடிப்பானா?''

குப்பு  கெட்டிக்காரன்.  தன்னைப் போல் இனி வரும் எவனும் கஷ்டப்படக்கூடாது என்று தகரம் சொன்னபடியே சொம்பு  நீரை குழாயில் கொட்டி பம்ப் அடித்து நீர் வந்து குடித்து விட்டு சொம்பை மீண்டும் நிரப்பியதோடு அல்லாமல்  ஒரு வரி தகரத்தில் எழுதிவைத்தான். 

''தாராளமாக சொம்பை காலி பண்ணலாம். நம்பலாம். குழாய் வேலை செய்கிறது '

ரயில்களில் துர்கந்தம்.  கழிவறை பக்கமே  நகரமுடியவில்லை. 

''உபயோகித்தபின் மறக்காமல் தண்ணீர் ஊற்றவும்'' 
என்று ரயிலில் கழிவறையில் படித்தும் நீர் ஊற்றாத  ரொம்ப  படித்தவர்களாயிற்றே நாம். கழிவறையை அடுத்த பெட்டியில் துர்நாற்றத்தோடு  பிரயாணம் பண்ண தயங்கமாட்டோமே. 

\''துப்பாதே, குப்பை போடாதே, பூ பறிக்காதே''  
என்றெல்லாம் படிப்போம், அர்த்தம் மட்டும் புரியாதே.  பொது இடங்கள் சுத்தமாக இருந்தால்  நாமும் சுத்தமாவோம். 
கொரோனா  ஓடிவிடும்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...