Saturday, July 4, 2020

THEVITTADHA VITTALA

தெவிட்டாத விட்டலா  J K SIVAN

லக்ஷ்மி கடாக்ஷம்

பாண்டுரங்கன் பக்தர்களில் எல்லோர்  மனதையும் கவர்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது துக்காராம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.  மிகவும்  எளியவர். பணத்தாசை இல்லாதவர். குடும்பம் வறுமையில் தத்தளித்தபோதும் பணத்தை அவர் தேடவில்லை.  அவருக்கு கிடைத்த பணத்தை, பொருள்களை  யாரேனும்  ஏழைகள், பாண்டுரங்க பக்தர்களைக் கண்டால்  கொடுத்து விடும்  தாராளமனம் . அவர் மனது பூரா  பாண்டுரங்கன் மேல் பக்தி ஒன்றே  நிரம்பியிருந்தது. அவரது அபங்கங்கள்  கேட்க  இனிமையானவை. பக்தி ரசம் சொட்டுபவை.
வழக்கம் போல் ஒருநாள் பாண்டுரங்கன் ஆலயத்தில்  வெகுநேரம் இருந்து பஜனையில்  பங்கேற்று ரசித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் துக்காராம்.  வழக்கத்துக்கு  மாறாக  அவர் மனைவி ஏதோ பூஜை செய்து கொண்டிருக் கிறாள்.
"இன்னிக்கு  வீட்டில்  என்ன விசேஷம்?  ஏதோ  பூஜை எல்லாம்  பண்றே?
"லக்ஷ்மி  கடாக்ஷம் வேணும் என்று ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை செய்யறேன் ''
"புரியல்லை,  எதுக்காக திடீர்னு இப்படி  ஒரு  பூஜை?
"நீங்க  கிருஷ்ணனை, பாண்டுரங்கனை  எப்பவும்  பாடுகிறீர்கள்,  ஆடுகிறீர்கள்.   அதுபோல தான் இதுவும்"
"பூஜை பண்றது  நல்லது தான். ஆனால்  காம்யார்த்தமா  எதையாவது கிடைக்கணுனு வேண்டிக்கறது  சரியில்லை. நமக்கு  எது தேவை என்று  விட்டலனுக்கு தெரியும்.   தானே  அதை  நமக்கு  கொடுத்து கொண்டு தானே  இருக்கான். நமது வாழ்க்கை அவ்வாறு தானே  ஓடிக்கொண்டிருக்கிறது?''
கொஞ்சநாள் கழித்து  வீட்டில்  துக்காராம் மனைவி ஜீஜாவுக்கு  எப்படியோ  கொஞ்சம்  பணம்  கிடைத்தது. புதிய  துணிமணிகள்  எல்லாம் தனக்கும்  குழந்தைகளுக்கும்  வாங்கினாள். அடகு வைத்திருந்த  நகைகளை மீட்டு  அணிந்து கொண்டிருந்தாள்.
அன்று வீட்டுக்கு சாப்பிட வந்த  துக்காராம் கண்ணில் இது பட்டது.    சாப்பிட  உட்காரும் போது தான்  கவனித்தார்.  ஜீஜா  குழந்தைகள்  எல்லாம்  புது  துணிமணிகளை  அணித்திருக் கிறார்களே.
''ஜீஜா.  ஏது இதெல்லாம்  எப்படி வந்தது ?"
"ருக்மணிக்கு  லக்ஷ்மி பூஜை பண்ணியதாலே  வீட்டிலே  இப்போ  கொஞ்சம்  சுபிக்ஷம்"
அவள்  உள்ளே  சென்று  அவருக்கு  உணவு கொண்டு  வருவதற்குள்  அவர் சாப்பிடாம லேயே  எழுந்து  வெளியே சென்று விட்டார்.
சரி  அந்த மனுஷனுக்கு  எதோ கோபம்.  தானே  திரும்பி வருவார்  என்று   ஜீஜா காத்திருந்தாள்.
ஒருநாள்,  இரண்டுநாள்,  மூன்றுநாள். துக்கா ராம்  வீட்டுக்கு  வரவே இல்லை.  வழக்கமாக  அவர் செல்லும்  பாண்டுரங்க  பக்தர்கள் நண்பர்கள் கடைத்தெரு எங்கு தேடியும்  "அவர் இங்கு வரவே இல்லையே"  என்ற  சேதி  தான்.  ஒருக்கால்  அடிக்கடி சொல்வாரே  பந்தர்பூர் போகவேண்டும் என்று, அங்கே போயிருக் கலாம் என்று தோன்றியதால் பந்தர்பூர் சென்று விசாரித்தாள். விவரம் கிடைக்கவில்லை.
விட்டலன் முன்  நின்று  ஜீஜா அழுது கொண்டு   " பாண்டுரங்கா, நீ தான்  எனக்கு   என் துக்கா ராமை  திரும்ப தரவேண்டும்" என்று  பிரார்த்தித்தாள். அவள்  மனத்தில் யாரோ உன் வீட்டுக்கு அருகே இருக்கும்  ஒரு  சிறு  குன்றில் சென்று பார் என்று சொல்வது போல் இருக்கவே  உடனே  தனது ஊரான  தேஹூவுக்கு  திரும்பிச் சென்று  ஊருக்கு கடைசியில் உள்ள ஒரு சிறு  குன்றில் சென்று பார்த்தபோது  இளைத்து வாடி  விட்டலன்  மேல் அபங்கங்கள் பாடிக்   கொண்டு துக்காராம் அமர்ந்திருப்பதை கண்டாள். வீட்டை விட்டு  கிளம்பியவர்  அன்ன ஆகாரமே மூன்று நாட்களாக  உட்கொள்ள வில்லை.
கண்ணை திறந்து பார்த்த  துக்காராம்  " ஜீஜா,  இங்கு எதற்கு  வந்தாய்?  நான்  இங்கு  சுகமாக  என் விட்டலன் மேல் அபங்கங்கள் பாடிக் கொண்டு  இருக்கிறேனே?"  என்றார்.
"நீங்கள்  இல்லாமல்  நானும்  குழந்தைகளும்  எப்படி வாழ்வது?"
"அம்மா,  நீ தான் லக்ஷ்மி பூஜை செய்து  குடும்பம்  நடக்க  தேவையான  பொருள் பண்டம்  எல்லாம் பெற்றுக் கொண்டு இருக்கும்போது  நான்  எதற்கு? தேவை இல்லையே"
"இல்லை,  நீங்கள்  தான்  எனக்கு  வேண்டும்"
"சரி, அப்படியே ஆகட்டும்,  தயவு செய்து  அந்த  நகை நட்டு  எல்லாம் கழற்றி ஏழைகளுக்கு  தானம் செய்து விடேன். பழையபடியே இருப்போம்"
அவ்வாறே செய்தாள் ஜீஜா.  அவரோடு  சேர்ந்து  தானும்  விட்டலன் ஸ்மரணையில்  ஆழ்ந்தாள்.
விட்டலன் புன்முறுவலுடன்  தன் ஆசைக்   குழந்தை க ளை  ரசித்தான் என்று  முடிக்கட் டுமா, ரக்ஷித்தான் என்று சொல்லட்டுமா?

SAMUDHRA MANDHAN




சமுத்திர மந்தனம் J K SIVAN

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று   தாய்லந்து.

தாய்லாந்தில்   இருக்கும்  ஹந்து மதத்தினரை   மொத்த ஜனத்தொகையில்  0.03%  எனலாம்.  நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை . முழுதும்  பௌத்தமதத்தை  சார்ந்த மக்கள் வாழும் தேசம்.  இருந்த போதிலும் ஹிந்து மதம் தாய்லாந்து மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.  அங்கே  ராமாயணம் உண்டு.   அவர்கள் விரும்பும்  ராமாகியன்  நமது ராமாயணத்தின்  சிதைந்த உருவம்.  தாய்லாந்தின் மன்னர்கள்  பின்பற்றும்  ராஜ்ய தேசிய சின்னம்  கருடன். விஷ்ணுவின் வாஹனம்.   14வது நூற்றாண்டு விஷ்ணு  சிலை  அங்கே இருக்கிறது.

தலைநகர் பாங்காக்  அருகே  ஒரு  நகரம் உள்ளதே அதன் பெயர் அயுத்தயா . அயோத்யாவின் மழுங்கிய  பெயர்
.வழிபாட்டின்  போது  விகிரஹங்களுக்கு  சங்கில் அபிஷேகம் செயகிறார்கள்.  ஹிந்து விகிரஹங்களை வழிபடுகிறார்கள்.   இரவன் எனும் ஊரில் உள்ள  கோவிலில் ப்ரம்மா இருக்கிறார்.  இந்திரன், சிவன், பிள்ளையார்  கருடன் உருவங்கள் உண்டு.   சூரின்  என்கிற ஊர்  அருகே  உள்ள 12ம் நூற்றாண்டு கோவில் பிரசத் சிகோரபும்  சுவர்களில்  தாண்டவமாடும் சிவன், பார்வதி, ப்ரம்மா கணேசன் உருவங்கள் இருக்கிறது.

1784ல்  முதலாம் ராமா  என்கிற ராஜா கட்டிய  தேவசதன்  கோவில் இருக்கிறது. அரசு குடும்பம் பிராமணர்களை நியமித்து  பராமரிக்கும் ஆலயம் . பூஜைகள்  அவர்கள் வழிபாட்டு முறையில் இன்னும் நடக்கிறது.

1935 வரை   தாய்லந்தில்  ஒரு பெரிய  ஊஞ்சல் விழா நடந்தது . அதன் பெயர்  வேடிக்கையாக  இருக்கிறது.   த்ரியம்பவை த்ரிபவை   (நமது திருவெம்பாவை  திருப்பாவையின்  கை  கால் ஒடிந்த வடிவம் )   தெ .போ. மீனாட்சிசுந்தரம் எனும் தமிழ் வித்தகர்,    இந்த விழாவை  தாய்லந்து ஹிந்துக்கள்  கொண்டாடும் போது  திருப்பாவை திருவெம்பாவை   பாசுரங்கள்  பாடல்களை  பாடினார்கள்  என்கிறார்.
நம்மூரில் இன்னும் நிறைய பேருக்கு திருப்பாவை திருவெம்பாவை என்றால் என்னவென்றே தெரியாதே.

தாய்லந்து  விவசாய தேசம்.  பிராமணர்களை வைத்து  ஏர் உழும் பண்டிகைகள்  பூஜையோடு துவங்கும் பழக்கம் உண்டு.  அறுவடைக்கு அதே போல் பூஜையோடு விழா. ராஜ பிராமணர்கள் என்று ஒரு வகுப்பு இதற்காகவே  உருவாகி இருக்கிறது.

இப்போதும்  லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் வாழும்  தேசமாக தாய்லந்து விளங்குகிறது.  நமது சாஸ்திரங்கள்  சம்பிரதாயங்கள் அவ்வளவும் தெரியாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

1879ல்  வைத்தி படையாச்சி  என்ற தமிழர்  ஒருவர் பாங்காக்கில்  மாரியம்மன் கோவில் காட்டியிருக்கிறார்.
தாய்லந்து  தலைநகர்  பாங்காக்  விமான நிலையத்தில் ஒரு அற்புத கண் காட்சியே  காத்திருக்கிறது.  பாற்கடலை கடைந்து தேவர்கள் ஒருபுறம், அசுரர்கள் மறுபுறம்,  அம்ருதம் தேடுகிறார்கள்.  மஹா விஷ்ணு பெரிய  கூர்மமாக (ஆமையாக) பாற்கடல் அடியில் படுத்து முதுகில் மந்திர மலையை சுமக்கிறார். அது தான் மத்து  பாற்கடலை கடைவதற்கு.  மத்தை கடைவதற்கு கயிறு வேண்டுமே?   சாதாரண கயிறு எல்லாம் தாங்காது.  வாசுகி எனும்  நீண்ட  சர்ப்பம்  கயிறாக பணி புரிய சம்மதித்தது. அதை மந்திரமலையில் சுற்றி  அதன் தலை பக்கம்  அசுரர்கள் வால் பக்கம் தேவர்கள்  இழுத்து கடைகிறார்கள்.  





இப்படி ஒரு அற்புதமான ஹிந்து சநதனமாத   பாகவத புராண காட்சியை  காட்சியை எவ்வளவு அழகாக நவீன உபகரணங்களை உபயோகித்து  படைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு நமது வந்தனம்.  ஏன் நமது பொது இடங்களில் இது போன்ற காட்சிகளை காணோம்.   0.03% ஹிந்துக்கள் வாழும் இடத்திலேயே இது முடியும் எனும்போது  70%க்கு மேல் உள்ள நமது தேசத்தில்  ஏன் கருடனோ  பாற்கடலோ  தோன்றவில்லை.  காரணம் மனம்...... மனித மனம். அது பொல்லாதது ....செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு  கெட்டுப்போன  குழந்தை களோ நாம்?


  ஒன்றுபடாத னங்களோ?  குட்டி குட்டி ராஜ்யங்களாக இருந்த நமது பாரத தேசத்தை ஒன்றாக இணைத்த  union ஆக பண்ண பாடுபட்ட  சர்தார் படேல் சிலை பொதுமக்கள் ஆதரவில் நன்கொடையில் நிர்மாணிக் கப்பட்டதற்கே  கூச்சல் போடுபவர்கள் நாம்.

Friday, July 3, 2020

LIFE LESSON

அன்பே வாழ்க்கை        J.K. SIVAN

வாழ்க்கை  ஒரு சக்கரம் என்பது சரிதான்  போல  இருக்கிறது.  பழைய பழக்கங்கள் எல்லாம் திரும்பி வருகிறதே.  வெளியே எதையும் வாங்கி சாப்பிடுவதில்லை.  கடையே கிடையாது அப்புறம் தானே வாங்கி சாப்பிட முடியும்.   வாகனங்கள் இல்லாமல் எங்கேயும் நடை தான்.   டிராமா  சினிமா டான்ஸ்  எதுவுமே  கிடையாது.   அதிகம் மக்கள் கிடையாது.   இப்போது நிறைய பேர் இருந்தாலும்  நெருங்குவதில்லை.  வாயை கையால் பொத்திக்கொண்டு பெரியவர்களிடம் மரியாதையாக  சற்று விலகி இருந்து  பேசுவோம். இப்போது வாயை துணியால் மூடிக்கொண்டு  தள்ளி நின்று கொண்டு பேசுகிறோம்.  முன்பெல்லாம் கை கொடுக்கும் பழக்கம் கிடையாது.  இப்போது அந்த பழக்கம் கூடாது.
குடும்பங்கள் ஒற்றுமையாக ஒன்றாக இருந்தது.  இப்போது எல்லோரும்  ஒரே வீட்டில் வெளியே போகமுடியாமல்  wfh   வீட்டிலிருந்தே வேலை செய். work  from  home.   அப்போதெல்லாம்  pant  ஷர்ட் கிடையாது.வேஷ்டி ஜிப்பா, அரைக்கை சட்டை பனியன் என்று தான் இருந்தது.  இப்போது வீட்டில் துண்டு, லுங்கி, சட்டை இல்லாமல்  வேலை செயகிறார்கள்.  அப்போதெல்லாம்  க்ஷவரம் செய்த்துக்கொள்ள கூட  வபன காலம் எது என்று பஞ்சாங்கம் பார்த்து தான் செய்து  கொள்வார்கள்.  முக்கால்வாசி  வீடுகளில் க்ஷவரம் வாசல் மரத்தடியில். இப்போது  க்ஷவரம் வெளியே செய்ய அனுமதியில்லை.  எல்லோரும்  ரிஷிகளாக காண்கிறார்கள்.   சகோதரர்கள், அப்பா /பிள்ளை  தான் இப்போது  ஒருவருக்கொருவர்  நாவிதர்கள்.   முன்பெல்லாம் நட்பு  நண்பர்கள் என்று அக்கறை உண்டு.  அப்புறம்  எல்லோரும் பிசியாகி பேசவே நேரம் இல்லாமல் போய் விட்டது.  இப்போது  தேடிப்பிடித்து  போனில் '' என்னடா  எப்படி இருக்கே, அங்கெல்லாம்  கொரோனா எப்படி இருக்கு?''     மொட்டை மாடியில்  வாக்கிங் போகும்போது பல   பேர் கைகள் ஆட்டி சிரித்து  புன் முறுவல்  social  distancing.  முன்பெல்லாம் பார்த்து பேசவே நேரமில்லை.   அன்பா,  பாசமா, நேசமா ?
ஒரே வித்யாசம் அப்போதெல்லாம் கோவில் உண்டு, இப்போது இருந்தாலும் மூடி இருக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்  ஆனால்  அதற்காக இந்த கட்டுரை இல்லை. 
 இப்போது ''அன்பு''  பெருகி விட்டதா ? முன்பு   ஒருமுறை  வாழ்கையில் அன்பை பற்றி ஒருவர் என்னிடம் கேட்டதை நினைவு கூர்கிறேன்.
''யார்டா கோபு வந்திருக்கா   வாசல் மணி அடிக்கிறதே  போய்ப்பார். வாசலிலிருந்து   கீச்ச்சு கீச்சு  குரல் கேட்டது. '''மூக்குப் போடி போட்டுண்டு  தும்முவாறே அந்த மாமா''.அவர் உள்ளே வந்துவிட்டார். ''சார் நமஸ்காரம்.  ஞாபகம் இருக்கா.   நான் விஸ்வாமித்திரன், பக்கத்து தெருவில் குடி வந்திருக்கேன்  வணிக வரி அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்று மதுரையிலிருந்து இங்கு என் பெண் வீட்டுக்கு வந்துள்ளேன். உங்களைப் பார்க்க  ரெண்டு தடவை வந்திருக்கேன்.  .

''  ஓ   ஆமாம்  பார்த்திருக்கேன். நமஸ்காரம் ஸ்ரீ விஸ்வாமித்திரன். தங்கள் பெயரே எனக்கு அந்த ரிஷியின் வைராக்யத்தையும் தபோ வலிமையையும் நினைவு படுத்துகிறது..''

விஸ்வாமித்திரன் சிரித்தார். ''உங்களிடம் ஒரு விஷயம் கேட்க ஆசைப்படுகிறேன். சார். வாழ்க்கையில் அன்பின் பங்கு என்ன?''

''என்ன திடீரென்று அன்பை பற்றி ஒரு யோசனை?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

''வீட்டில் மற்றும் வெளியில்  எங்கும்  கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். எவருமே சரியாக நின்று முகம் கொடுத்து பேச நேரமில்லை. வெடுவெடு வென்று ஒரு அருவறுப்போடு, ஸ்வாரஸ்யமில்லாமல் நேரமே இல்லாதவர்கள் போல் காண்கிறார்கள். மனம் விட்டு பேசுவோரே காணாமல் போய்விட்டார்களா? அன்போ பாசமோ, ஒரு இனிமையோ விருப்பமோ மக்களை சந்திக்கும்போது இல்லையே . ஏன் சுவாமி?''

 பக்கத்திலிருந்த ப்ளாஸ்கிலிருந்து வெந்நீர் பருகிவிட்டு தொண்டையைக் கனைத்துக்கொண்டேன் .

''இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே முக மலர்ச்சியோடு சிரிக்க முடியும். இருப்பினும் நிறைய பேர் சிரிப்பை மறந்துவிடுகிறார்கள் ஏன் என்று நானும் யோசித்ததுண்டு. இதற்கெல்லாம் ஆதி காரணம் இருக்கிறது. வாழ்க்கையை ஒரு பாதையாகவோ பயணமாகவோ கருதுகிறோம். ரொம்ப சிம்பிள் உதாரணம்.

வாழ்க்கை ஒரு பாதையானால் மனிதன் ஒரு வண்டி. அந்த வண்டி ஓடுவதற்கான பெட்ரோல் டீசல் தான் அன்பு. அன்புக்கு பதிலாக மனிதன் வேறு குணங்களையும் பண்புகளையும் கொண்டு வாழ்க்கையை துவக்கினான் என்றால் வாழ்க்கைப் பயணம் தடைபடும். சுமுகமாக,  சுகமாக,  ஓட இயலாது. கடா முடா சத்தங்கள் தான் போடும். நகர கஷ்டப்படும். வேறு யார் உதவியோடு தான் அதைத் தள்ள வேண்டியிருக்கும். அர்த்தம் புரிகிறதா என்ன சொல்கிறேன் என்று ?''.

''அன்பு ஒன்றினாலே தான் நமது வாழ்க்கை இன்பகரமாகும் என்கிறீர்கள்.''

''பெட்ரோல்,  டீசல்,  மாதிரி அன்பு அரிதான பொருள் அல்ல. நிறைய மண்டிக்கிடக்கிறதே. உபயோகிப்பதில்லை என்பது தான் குறை இதில். இலவசமாகவே பெறலாம். எப்போதும் எங்கும் கிடைக்கக் கூடியது.

''கடை விரித்தேன் கொள்வாரில்லை'' என்று வள்ளலார் ஏங்கினாரே அந்த சாதாரணமான எங்கும் நிறைந்த வஸ்து அன்பு. ஆனால் எவரும் லக்ஷியம் பண்ணாதது.

அன்பை வெளியே எங்குமே போய் தேட வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் மண்டிக்கிடக்கிறது. இருபத்திநாலு மணி நேரமும் அதை எடுத்து பிரயோகிக்கலாமே. அதால் நன்மை தானே விளைகிறது. எல்லா சாஸ்திரங்களும் இயற்கையிலேயே மனிதன் அன்பினால் உருவாக்கப்பட்டவன் தான், மனிதனின் இயற்கை குணமே அன்புதான் என்கிறதே.

என்ன ஒரு வித்யாசம் இதில் என்றால் அன்பு மெதுவாக வளரக்கூடியது. கோபம் த்வேஷம், ஆத்திரம் , வெறுப்பு போன்று உடனே தனது ஸ்வரூபத்தை, வெளிப்பாட்டை, காட்டாது. மனிதனை அடிமையாக்காது.

அன்பை மனிதனிடம் அண்ட விடாமல் மற்ற மேற் சொன்ன குணங்கள் அதை அமுக்கி விடுகிறது. பாவம் அது என்ன செய்யும்? . மனிதன் தான் கெட்டிக்காரனாக நடந்து கொண்டு அதை உணர வேண்டும். ஒரு பொது நோக்கமாக சுயநலம் இன்றி பலரோடு இணைந்தால் அன்பு தலை தூக்கும். இதற்கு காலம் அதிகமாகும். பொறுமை அவசியம். உண்மைக்கும் நேர்மைக்கும் அன்பு நெருங்கிய நண்பன். அதேபோல் மனிதனின் உள்ளே உறையும் ஆத்மா அன்பின் தோழன். இரண்டும் ஒன்று என்று கூட கொள்ளலாம்.

மனம் ஒன்று தான் பொல்லாதது. அது தான் அன்பை அவ்வளவாக கிட்டே சேர்க்காமல் மற்ற தீய சகவாசத்தை நாடுகிறது.

''சார். அருமை. நன்றாக புரிகிறது. ''பயம் பயம்'' என்கிறோமே அதற்கும் அன்புக்கும் எதாவது சம்பந்தம் உண்டா சார் ?

''இது சரியான கேள்வி. இது மனம் சம்பந்தமுள்ளது. நமது இயற்கை ஸ்வபாவம் அன்பு என்றேன். இந்த புத்தி என்பதற்கும் உடம்புக்கும் இடையே மனம் இருக்கிறதே. அது தான் மனிதனை ஆட்டிப்படைக்க வல்லது. ஆத்மாவிடம் செல்லவிடாமல் உடம்பைத் தான் ஆளுமை செய்கிறது. மனம் விவரிக்க முடியாத எல்லை கொண்டது. நல்லது, தீயது, போன்ற சகல உணர்ச்சிகளையும் எழுப்பக்கூடியது. எப்போது எந்த விதத்தில் மனிதனை விழுங்கும் என்று சொல்லவே முடியாது. ஆனால் அந்த மனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வந்து அதில் அன்பைப் புகுத்திவிட்டால், அதைப்போன்று ஒரு சிறந்த சாதனம் எதுவுமே கிடையாது. அந்த மனத்தில் சில எண்ணங்களை தவறாக வளர்த்துக் கொண்டால் அது சில காரியங்களை செய்ய, எண்ணங்களை தூண்டும். அதனால்  விளைவது  தான் பயம்.  பாதுகாப்பு இன்மை. 
அன்பு எதையும் எதிர்பாராமல் வந்து சேர்வது. பயம் எதையாவது எதிர்பார்த்து அதை அடைவதில் தவறான வழியை, மனம் அறிந்து, தவறு என்று தெரிந்தும்,  பயன்படுத்தினால் கிடைப்பது.

மனத்தின் ஒரு இயல்பு அலைபாய்வது. ஓயாமல் ஒழியாமல் ஓடுவது. தாவுவது. எதிலும் நிரந்தர பற்றுதல் இல்லாதது. இதனால் தான் மனம் ஒரு குரங்கு என்பார்கள். ரோலர் கோஸ்டர் என்று விளையாட்டு தெரியுமா? திடீரென்று மேலே தூக்கி செல்லும், அடுத்த கணம் அதல பாதாளம் போல் கீழே இறக்கும். பயமாக இருக்கும். அடி வயிற்றில் ஐஸ் பாறை. ஜில்லென்று மூச்சை நிறுத்தும்.

அவ்வளவுக்கவ்வளவு ஆத்மா நிதானமானது. அசையாதது. பொறுமையானது. அமைதி நிரம்பியது. அதன் ஆகாரம், ஏன் ஆதாரம், அன்பு ஒன்றே.

விஸ்வாமித்ரன்,  அன்பைப்பற்றி  அதி  முக்யமான ஒரு  விஷயம் தெரிந்து கொள்ளவேண்டும் சார், நீங்கள்அன்பைப் பொறுத்தவரை   அதை ஒருவருக்கு, ஒருவரிடம்  கொடுத்தால் தான்  ரெட்டிப்பாக பெறலாம். இதில் என்ன அதிசயம் என்றால், கொஞ்சம் கொடுத்து விட்டு பதிலுக்கு நிறைய கூட பெறமுடியும்.

விதை விதைத்தால் தானே அறுவடை செய்ய முடியும். அதைப்போல. முதலில் எல்லோரிடமும் , அவர்கள் மனதில் அன்பை நாம் விதைக்க வேண்டும்.

அன்பை காசு கொடுத்து வாங்க முடியாது. அதிகாரத்தால் பெற முடியாதது. உலகமே அன்புக்காக ஏங்குகிறது. நிறைய எதிர்பார்க்கிறது. கொடுக்க தான் தயக்கம், என்ன காரணம்? அதன் உண்மை புரியாததால், அதன் மேன்மை  அறியாததால்.

புத்தர் ஒரு சீடனிடம் சொன்னார், ''அப்பனே, கொடுப்பதில் உள்ள சுகத்தை என் போல் நீயும் உணர்ந்தால், ஒரு கவளம் சோற்றைக் கூட மற்றவனோடு சேர்ந்து பகிர்ந்து கொள்ளாமல் நீ உனக்காக சாப்பிடமாட்டாய்.''

விஸ்வாமித்ரன் வாயைப் பிளந்து யோசித்தார். ஜிப்பா பாக்கெட்டுக்குள் கை விட்டு பொடி டப்பாவை தேடினார். கிடைத்தது. ஒரு சிட்டிகை எடுத்து இடது நாசிக்குள் பீரங்கி குழாயில் வெடி மருந்து போல் திணித்தார். காரம் கண்களில் நீர் வரவழைக்க, ஒரு பெரிய அதிர்வேட்டு தும்மல். தலையாட்டி விட்டு என்னை வணங்கி விட்டு விச்வாமித்ரன் விடைபெற்றார். அவர் மனதில் நாமும் புத்தர் சொன்னது போல் செய்வோமா, நாம் அவசியம் அப்படி செய்யவேண்டாமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கலாம். நம் மனத்திலும் எழ வேண்டாமோ?

GITANJALI

கீதாஞ்சலி      ஜே   கே   சிவன்  
தாகூர் 

                     5   கண்ணா  கருமை நிற வண்ணா.....

 5. ASK FOR A moment's indulgence to sit by thy side.

The works that I have in hand I will finish afterwards.
Away from the sight of thy face my heart knows no rest nor respite,
and my work becomes an endless toil in a shoreless sea of toil.
To-day the summer has come at my window with its sighs and murmurs;
and the bees are plying their minstrelsy at the court of the flowering grove.
Now it is time to sit quiet, face to face with thee,
and to sing dedication of life in this silent and overflowing leisure.

தாகூரை  எழுத்துக்கு எழுத்து மொழி பெயர்த்து பயனில்லை.  அவர் எழுத்தின்  பலத்தை, சக்தியை, உணர்வை முடிந்தவரை நாம் வெளிப்படுத்த  இயலுமானால்  எந்த யுக்தி, உத்தியை வேண்டுமானாலும் கைக் கொள்ளலாம்.  பாரதியை  தாகூரை  ரசிக்க அவர் உணர்வு நமக்குள் இருக்க வேண்டும். அதுபோதும். வார்த்தைகள்  அவற்றின் அடையாளங்கள். அவ்வளவு தான்.

++
கொஞ்சம் நான் சொல்வதை செவி மடுக்கிறாயா கிருஷ்ணா...!  உன் பக்கத்தில்  அமரட்டுமா? கொஞ்சம்  அனுமதி.  நான் உன் பக்கத்தில் உட்காரவேண்டுமானாலும்  அனுமதித்தால்  ஓடி வந்து அமர்கிறேன். அப்படி  நீ  என்னை சரி என்று அனுமதித்தால்,  அப்புறம் கூடவா என் கையில் உள்ள புத்தகங்களையோ,  நான் எழுதுவதையோ  தொடர்ந்து கொண்டிருப்பேன். அப்படியே  வீசிவிட்டு அப்புறம்  பார்த்துக்கொள்ளலாம் என்று  பறக்க மாட்டேனா.    கரையே  இல்லாத கடல் போல் வேலைகள்  இருந்தாலும் அஞ்சவில்லை. நீ இருக்கையில் அவை என்னை அச்சுறுத்தாது.

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல. அப்படி உன்னை நினையாத நாள் ஏதாவது இருந்தால் அது பிறவா நாளே. என்னால்  உன்னை நினைக்காமல், உன்னை  காணாமல்  இருப்பது  என்பது  நரகவேதனை.  உன்  முகம்  மனதில் காணாதபோது கூட,  அப்பப்பா, என் இதயம் துடிப்பதை எப்படி சொல்வேன்.  நிலை கொள்ளாது தவிக்கும் நேரம் அது.  


மாரிக்காலம்  ஓய்ந்து    வசந்தம் தேய்ந்து   பனிக்காலம் மறைந்து,  இதோ வேனில் காலம் வந்துவிட்டது. சூரியன் தங்கச் சிலம்பாக கிழக்கில்  காட்சி அளித்து  அவன் கோடிக்கணக்கான கிரணங்களால் உள்ளே வர   ஜன்னலை தட்டுகிறான்,   சாளரத்தில் நுழைகிறான். 

 உன்னை  என் எழுத்தில் வடிப்பதற்கு எல்லை ஏது ?  என் பாடல், சொல்லாடல், கதை, காவியம், கட்டுரை, சொல்   எல்லாவற்றிலும் நீயே அல்லவோ என் நாயகன், நீ அதில்  காணாவிட்டால்  எனக்கு  தீராத தாகம், எங்கோ  கடும் பாலைவனத்தில் நீரில்லாமல் தவிப்பது போல் என்று வைத்துக் கொள்,  கரையே  இல்லாத கடலில் தத்தளிப்பது போல் என்றும் சொல்லலாம்.

 வெயில் இரக்கமின்றி  கொளுத்த  ஆரம்பித்து விட்டது. கோடை காலம். ஜன்னலில் கம்பி வழியாக  நுழைந்து சுள்ளென்று என்ன பாடு படுத்துகிறது பார். எதை பற்றவைக்கலாம் என்றல்லவா  தேடுகிறது?   ஜன்னல் வழியாக என் தோட்டம் நல்லவேளை பச்சையாக தெரிகிறது. அதில் கருவண்டு கூட்டங்கள் ம்ம்ம்ம் என்று ரீங்காரம் செய்து  கொண்டு   நீதி மன்றத்தில் கருப்பு கோட்டுகள்  சுற்றி சுற்றி வருவதைப் போல, பூக்களை வட்டமிடுவது பார்க்க ரசிக்கிறது.

எங்கும் அமைதி, நிசப்தம்.  இதோ உன்னைக்கண்டு விட்டேன், உன் எதிரிலே, ஒட்டிக்கொண்டு உட்காரும் நேரம். உன் முகத்தையே அசையாமல்  பார்க்கிறேன். அது ரொம்ப பிடிக்கும் எனக்கு. என் ஜீவனையே உனக்கு அர்ப்பணித்து மனத்தில் அன்போடு  நான்  பாடுகிறேன்.. கேள், எங்குமே  ஆனந்தம் , அமைதியெல்லாதென் மனத்தில் அமைதி பொங்குகிறது.. உன்னை கண்மூடி ஏன் பாடுகிறேன் தெரியுமா. என் கண்ணுக்குள் கண்ணான கண்ணன் அல்லவா நீ. அதனால் தான்.......                                         

Thursday, July 2, 2020

TAMIL POETS



                 
    இறவா வரம் பெற்ற  ஒரு பாடல்   J K   SIVAN  

அவர் ஒரு கவிராயர்.   சிறந்த    ராம பக்தர்.   தமிழில் அற்புதமாக  எளிமையாக  கவிகள், நாடகங்களாக  தொகுத்து அளிக்கும் தனித்திறமை வாய்ந்தவர்.     


வெள்ளைக்கார,  ஹிந்துஸ்தானி,  வடமொழி,  மற்ற மொழி கவிஞர்கள்,  பலர் நமக்கு  ஞாபகம் வரும் அளவுக்கு,   பாரதியைத்  தவிர  மற்ற பக்தி கீர்த்தனங்களை பாடிய தமிழ் கவிஞர்கள் நினைவுக்கு ஏனோ வருவதில்லை.

தமிழ்  தெரிந்த  உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்.   உங்களில் எத்தனை பேருக்கு அருணாசலக் கவிராயரை  (1711-1779) தெரியும் ?   அருணாசலமா?  யார் திருவண்ணாமலையில் இருந்த ரமணரா? என்று ரமணரைப்பற்றியும் தெரியாதவர் குறுக்கு  கேள்வி வேறு கேட்பார். உடுமலை நாராயணகவியா, அண்ணாமலை ரெட்டியார் என்பவரா? என்றெல்லாம் பதில் கேள்விகள் வேறு வரும்.

என் தாய்வழி முன்னோர்கள் வாழ்ந்ததே இந்த அருணாச்சல கவிராயரின் ராமநாடக கீர்த்தனைகளை பாடியும் நாடகம் நடித்தும் தான். நான் அவரைப்பற்றி சொல்ல கடன், அல்ல, கடமைப் பட்டிருக்கிறேன்.

கவிராயர்   பிறந்தது சீர்காழியில் 1711 ல். தில்லையாடி என்னும் ஊரில். கார்காத்த வேளாளர் குலம். இளமையிலேயே  கவிபாடும் புலமையும், இசையுடன் பாடும் ஆற்றலும் இருந்ததால் தருமபுர ஆதீனத் தலைவர் ஆதரவு கிடைத்தது. சீர்காழியில் குடும்பம் வசதியாக தங்க ஆதீனம் உதவியது.

கர்நாடக இசையில் அற்புத பாட்டுகள் மெட்டமைத்தவர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் காலத்துக்கும் முந்தியவர். முதலில் இருந்தவர் முத்து தாண்டவர். (1525-1625) . அப்புறமாகதான் அருணாச்சலாகவிராயர் மற்றும் அவரது சம காலத்தவரான மாரிமுத்துப் பிள்ளை (1717-1787). அருமையான முத்தான தமிழ் கீர்த்தனைகள் படைத்தவர்கள் இந்த மூவரும். இன்றும் பாடப்பட்டு வருகிறது.

இராம நாடகக் கீர்த்தனை (சங்கீத ராமாயணம்) 258 இசைப்பாடல்களை நாடக வடிவில் கொண்டது. இந்த கீர்த்தனைகளை தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பல பிரசித்த ராகங்களில் அமைத்தார். மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடுகிறார்கள்.

அருணாசல கவிராயர்  இதிகாச கதையை கீர்த்தனைமூலமாக மக்களிடம் பரப்பிய முதல் கவிஞர் எனலாம். 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.  அது இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

"இராம நாடக கீர்த்தனைகள்" பூர்த்தியானபின் முன்பு கம்ப நாட்டாழ்வார் தனது கம்ப ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றியது போல அங்கேயே கொண்டு சென்று அரங்கேற்றினார்.

"ஏன் பள்ளிகொண்டீர் ஐயா, ஸ்ரீ ரங்கநாதா" எனும் மோகன ராக கீர்த்தனை எண்ணற்ற பரத நாட்டியக் கலைஞர்களால் அபிநயம் பிடித்து பிரபலமானது. இன்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது. எத்தனையோ சங்கீத வித்துவான்கள் பாடியது.  

ராமன்  யார்.  நாராயணன் , அவனே ஸ்ரீ ரங்கம் ரங்கநாதனாக  பாம்பணையில் பள்ளி கொண்டவன்.  அவனை நேரில் ஸ்ரீரங்கத்தில் பார்த்த  கவிராயர்  என்ன   செய்தார்?  நம்மைப்  போல்  கடிகாரத்தைப்    பார்த்துக்கொண்டே  வரிசையில் உள்ளே சென்று கன்னத்தில்  பட்  பட்   என்று  போட்டுக்   கொண்டு கண்கள் எங்கேனும் பிரசாதம் கிடைக்குமா  என்று தேட  சிற்பக்   கலைகளை ரசிக்க தெரியாமல் வெளியே வருவோம்.  

கவிராயர்  அப்படியல்ல.  ராமா  நீ  தான் கிருஷ்ணனும்  கூட.  

எதற்காக  இப்படி காலை  நீட்டி  அதிகமாக வேலை செய்தவன் களைத்து இளைப்பாறுவது போல்  ஜம்மென்று படுத்துவிட்டாய்?  ஒருவேளை நீ செய்த காரியங்களால் களைத்து விட்டாயோ, இளைத்து விட்டாயோ என்று வரிசையாக  இதனாலோ அதனாலோ என்று  அநேக சம்பவங்களை  நினைவு கூர்ந்து கேட்கிறார்.  

ஏனய்யா  ரங்கநாதரே  நீர்  இப்படி நெடுஞ்சாண்கிடையாக  படுக்க சரியான இடத்தை  ரெண்டு  ஆறுகளுக்கு நடுவே   குளுகுளுவென்று  அமைதியான இடமாக  கண்டுபிடித்து  காலை நீட்டி படுத்துவிட்டீர்.?  

ஓஹோ   அந்த விஸ்வாமித்ரன்  உம்மை நடத்தி காட்டில் யாக சாலைக்கு அழைத்துக்கொண்டுபோன  களைப்பா?
யாகங்களுக்கு இடையூறு செய்த அரக்கி தாடகை மார்பில்  அம்பு தொடுத்தற்காக உனக்கு வருத்தத்திலா?
யாராலும்  எடுத்து தூக்க கூட முடியாத சிவ தனுசை  எடுத்து உடைத்த களைப்பினாலா?
வழியில் எதிர்த்த பரசுராமன் கர்வத்தை   அடக்கி அவன் வில்லை  உடைத்ததாலா?
சீதையோடு கானகமெல்லாம் அலைந்ததால் இளைத்துபோய் விட்டாயோ?
தூய இதயம் கொண்ட குகனோடு  படகில் அமர்ந்து கங்கையைக் கடந்த களைப்பா உனக்கு?
சித்ர கூட மலைமீது நடந்ததால்  வந்த  களைப்பா உனக்கு ?  ஒருவேளை  
வேகமாக உனக்கு பாய்ச்சல் காட்டி ஓடிய  மாரீச  மாயமானை துரத்தக்கொண்டு  ஓடினாயே அதற்காக இப்போது இளைப்பாறுகிறாயா?
சீதையை காணோம் என்று   மூலை முடுக்கெல்லாம் ஓடி தேடி  அலுத்து  களைத்துவிட்டாயோ?
சுக்ரீவன் நம்பிக்கை கொள்ள  இழு மராமரங்களை  ஒரே அம்பால் துளைத்தாயே  அந்த களைப்பினாலா?
சமுத்திரத்தை அடக்க ஒரே அம்பினால் சமுத்திரராஜன் சொன்ன லட்சியத்தை அழித்தாயே அந்த செயல் தந்த களைப்பா?
இலங்கை  எனும்  மா நகரத்தை  அழித்ததால்  மனதில் ஏற்பட்ட வருத்தத்தாலா?
வானம் சேனைகளோடு  இலங்கை சென்று ராவணன் முதலாகிய அனைத்து ராக்ஷஸர்களையும்  வதம் செய்தாயே  அந்த  வீராவேச செயல் தந்த  களைப்பினாலா?
இதோடு விடவில்லை கவிராயர் 
கிருஷ்ணனாக  அவன் செய்த லீலைகளையும் ஒன்று விடாமல் சொல்லி அவை தந்த களைப்பினால் இப்படி சௌகர்யமாக காலை நீட்டி சுகமாக  படுத்துக்கொண்டு விட்டாயா  என்று  ரங்கநாதனை கேட்கிறார். 
கடைசியில்   போதும் நீர் படுத்தது. கொஞ்சம்   எழுந்து  உட்காருங்கள்,  வாருங்கள் என்னை பாருங்கள், என்னிடம் கருணை காட்டி வரம் தாருங்கள்,  மஹாலக்ஷ்மியோடு சேர்ந்து என்னை ரக்ஷியுங்கள்  என்று முடிக்கிறார். 

எவ்வளவு எளிதான அற்புத  தொகுப்பு இந்த கவிஞரின் பாடல் பாருங்கள்:  பாடுங்கள்.  
 
''ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர்
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-
அவதரித்த இரண்டாற்று நடுவிலே
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
 பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே
வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே
கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின்
மிசை கிடந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி
தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி
 இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
 இலங்கை என்னும் காவல் மாநகரை
 இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
(மதுரையிலே வரும் களையோ?
முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ?
 கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின்
 உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை
இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி
மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி
 தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
படி தனிலே மெத்தவும் நானே உம்மை
பரம் எனவே அடுத்தேனே
அடிமை கொள்வீர் என்னைத்தானே
 செம்பொன் அணி அரங்கப்பெருமாளே!
ததம் உரைந்த கரும் பாறை சாபமது
தடுத்து ரக்ஷித்தீரே!
விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு
 கண் விடுத்து ரக்ஷித்தீரே!
கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத்
துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே!
மடுவில் ஆனை முன் ஓடி முதலையை
மடித்து ரக்ஷித்தீரே
அதுபோல்
வாரும் க்ருபை கண்ணாலே
 பாரும் மனக்கவலை தீரும்
நினைத்த வரம் தாரும்
தாரும் என் சாமி
வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன்
 பெரும் பக்ஷமாக என்னை
ரஷிக்க எழுந்திரும்

Wednesday, July 1, 2020

GITANJALI




கீதாஞ்சலி  4        J K   SIVAN  தாகூர்
4    உள்ளமெனும் கோவில்
4. Life of my life, I shall ever try to keep my body pure,
knowing that thy living touch is upon all my limbs.
I shall ever try to keep all untruths out from my thoughts,
knowing that thou art that truth which has kindled the light of reason in my mind.
I shall ever try to drive all evils away from my heart and keep my love in flower,
knowing that thou hast thy seat in the inmost shrine of my heart.
And it shall be my endeavour to reveal thee in my actions,
knowing it is thy power gives me strength to act.

''ஜானகி, இன்னிக்கு  சாயந்திரம்   ஆறுமணிக்கு  என்  ஆபீசர் நம் வீட்டுக்கு வருகிறார்.  ரவா கேசரி  பஜ்ஜி பகோடா  ஏதாவது பண்ணு '  என்று  சொல்லிக் கொண்டே  வீட்டுக்குள்  மேலே தொங்கும் ஒட்டடைகளை அடித்து,   கொடியில் தொங்கும்   துணிகளை எல்லாம் எடுத்து கண் காணாமல் எங்கோ ஒளித்து  வைத்து,  கண்ணில் பட்ட கண்டான் முண்டான் சாமான்களை எல்லாம் அள்ளி  உள்ளே எங்கோ  ஒரு  கட்டில் அடியேயோ, பரணிலோ போட்டு,  தரையெல்லாம் பெருக்கி , மேலே  பேன் FAN   ரெக்கையை தூசி தட்டி,  துடைத்து,   நாற்காலி  சோபா, பெஞ்ச்  எல்லாம்  அழகாக நகர்த்தி அதன் மேல்  இருப்பதில் ஒரு நல்ல  கலர் கலரான   பெட்ஷீட் போர்வை போர்த்தி   வீட்டை  அழகு படுத்தி  ஆபிசருக்கு நமது வீடு, உபசாரம் பிடித்து  பாஸ் மார்க் வாங்க முயற்சி செயகிறோம்.

ஒரு ஸாதாரண மனிதன்  நம்  வீட்டுக்கு சில நிமிஷங்கள் வருவதற்கே இந்த தடபுடல்.
நான் சதா சர்வகாலமும்  நினைத்து  மகிழ்ந்து போற்றும்  கிருஷ்ணன்  வரப்போகிறான், என்  இதயத்தில்  வந்து வசிக்கப்போகிறான் என்றால் எப்படி இருக்கும் ஏற்பாடுகள்?
ஹே . கிருஷ்ணா  என்  உயிரின் உயிரே,  என்  உடம்பு  தான் க்ஷேத்ரம் . அதில் குடியிருக்கும் நீ க்ஷேத்ரஞன்.  உன் ஆலய மான என்  உடலையும்  உள்ளத்தையும்  உனக்கேற்றபடி  பரிபூர்ண, பரிசுத்தமாக வைத்துக் கொள்வேன். ஆமாம் உன் விரல்  நுனிகள்  படும் அங்கமல்லவா இது.
என் எண்ணங்களில் உண்மையல்லா ததை எல்லாவற்றையும்  ஒட்டு  மொத்த மாக மூட்டை கட்டி வெளியே எறிவேன். அதற்கெல்லாம் அங்கே இனி இட மில்லை
ஏனென்றால், நீ தான் என் உள்ளத்தில் [பூரா  வியாபித்து  உறையும்  சத்யம்,
உண்மை, என்  மனதை முழுசாக  ஆட்கொண்டு  என்  புத்தியை,  அறிவை  அன்பின் சக்தியால் இயக்குபவன். என் மனத்தை செலுத்துபவன்.என்னை வழி நடத்துபவன்.
என் இதயத்தை  பட்டாக  துடைத்து  அதில் கண்ட  தீயவை,   தகாதவை  வேண்டாதவை  எல்லாவற்றையும்  தேடிப்பிடித்து  அகற்றி  வெளியே  விரட்டுகிறேன்.   ஏன் என்றால், என்  உள்ளம், இதயம் மனம்  என்று அதை எப்படி சொன்னாலும் அது பூரா  உன்மேல்  எனக்கான  பக்தி  அன்பு மலர்களால்  அலங்கரித்து நிரப்புவேன் .   ஏன் எனக்கு அதில் இவ்வளவு கவனம்  தெரியுமா  கண்ணா? அது  தான்  நீ அமரும் ஆசனம். என்  இதய பீடம். உள்ளமெனும் கோவில்  கர்ப்ப கிரஹம்.
கிருஷ்ணா, நான் மேலே சொன்னதெல் லாம் வெறும் வார்த்தை இல்லை.  நீயே பார்ப்பாய். என் ஒவ்வொரு செயலிலும் எண்ணத்திலும் கிருஷ்ணா நீ தான்  அதுவாக  வெளிப்படுவாய்.
அது என்னால் முடியும், காரணம் என்ன தெரியுமா,  அந்த சக்தியை கொடுத்ததே நீ தானே கிருஷ்ணா! நீயின்றி நான் ஏது? எனும்போது நான்  நீயாக முயன்று   என்னை  உனக்கு அர்ப்பணிக்க வேண்டாமா?

ASHADA EKADASI

விட்டலா  பாண்டுரங்க விட்டலா  J K SIVAN    

ஏகாதசிக்கு மிஞ்சிய விரதம் இல்லை.   ஒவ்வொரு ஏகாதசியும் தனித்துவம் வாய்ந்தது. சாதுர் மாஸ்ய காலத்தில் வருகின்ற ஏகாதசி  சயனி ஏகாதசி எனப்படும்.  இந்த ஏகாதசி நாளில் தீப தானம் செய்வது சிறப்பாகும். ஆஷாட மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிக்கு தேவசயனி ஏகாதசி என்று பெயர். சயனம் என்றால் உறங்குதல் திருமால் ஆடி பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரை உறங்குகிறார். அதனால் இக்காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர்.

இந்த நாள்களில் சன்னியாசிகள் ஒரே இடத்தில் தங்குகிறார்கள். இந்த நாளைப் பற்றி கார்த்திகை மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. பித்தளை, வெங்கலம், வெள்ளி ஆகிய தனிமங்களில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட விளக்கினை எடுத்து தட்டின் நடுவே வைக்க வேண்டும். அந்த விளக்கினை நெய்யால் நிரப்பி திரியிட்டு ஏற்ற வேண்டும். வேதம் கற்றவர்களுக்கு அதனை தானமாக தந்தால் ஞானமும், செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் யோக நித்திரையில் ஆளும் மகாவிஷ்ணு பின்பு கார்த்திகை மாதத்தில்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பதாக ஐதிகம். இதைத் தொடர்ந்துவரும் பௌர்ணமியிலிருந்து சாதுர்மாஸ்ய விரதம் தொடங்குகிறது. தேவசயனி ஏகாதசிக்குப் பின்வரும் பௌர்ணமியிலிருந்து நான்கு மாத காலம் மேற்கொள்ளப்படும். இந்தக் காலம் மிகவும் புனிதமான காலமாகப் போற்றப்படுகிறது.

பண்டரிபுரத்திலும்  மற்ற  பாண்டுரங்கன்  ஆலயங்களிலும் இந்த  ஆஷாட ஏகாதசி ரொம்ப விசேஷம் பாண்டுரங்க பக்தர்கள் அநேகர் அற்புதமான அவர்கள் வாழ்க்கையில் பாண்டுரங்கன், விட்டலனும் ஒரு குடும்ப அங்கத்தினர் போல் பழகி இருக்கிறான்.  அவனைப்பற்றிய மஹாத்ம்யயத்தை ''தெவிட்டாத விட்டலா என்ற புத்தகத்தில் தமிழிலும்  ''விடோபா தி நெக்டார்'' VITOBA THE NECTAR  என்று ஆங்கிலத்திலும்  100 கதைகள் எழுதி புத்தகமாக வெளிவந்தது. 
ஒரு சிறந்த பாண்டுரங்க பக்தர்  கோரா கும்பர்  அவரது சரித்ரம் தமிழிலும் பிற மொழிகளும் படமாக வந்தாலும்  ''பக்த கும்பரா'' என்கிற கன்னட படம்  கண்களில் நீர் வரவழைத்தது.  கோரா கும்பர். மண்பாண்டம் செய்யும் குயவர். கையும் காலும் தான் மண்ணில் இருந்ததே தவிர மனமெல் லாம் கண்ணனாகிய பாண்டுரங்க விட்டலினிடம்.

ஒரு நாள் மண் பிசைந்து குழியில் மிதித்து குழைவாக்குகிறார். மனம் விட்டலின் மேல். ஒன்று- ஒன்றரை வயது குழந்தை தூளியில் தூங்குகிறது. ''குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் இதோ வந்து விடுகிறேன்'' என்று அவள் எங்கோ அவசரமாக போகிறாள். ''விட்டலா விட்டலா'' என்று பாடிக் கொண்டே குழியில் மண்ணை மிதித்துக் கொண்டு கண் மூடி விட்டலனை நினைத்து ஆடுகிறார். குழந்தை தோழியை விட்டு இறங்கி தவழ்ந்து தாயைத் தேடி, காணாமல், தந்தை வாசலில் குழியில் ஆடுவதை பார்த்து நெருங்கி குழியில் இறங்குகிறது. களிமண்ணோடு சேர்த்து அதையும் மிதித்து குழந்தை மறைகிறது. கதை நீள்கிறது. சொல்ல இங்கே நேரமோ இடமோ இல்லை. 
இந்த   கன்னட படம்  பக்த கும்பரா என்று சக்கை போடு போட்டது கன்னடத்தில். சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கோரா கும்பர். PB  ஸ்ரீனிவாஸ் பாடல்கள் சூப்பர் ஹீட் . அதில் ஒரு பாடலை  அற்புதமாக  பாண்டுரங்கன் மேல் பாடி இருக்கிறார்.  அந்த பாடலை  நானும்  பாடிப்பார்த்தேன் . அதை நினைவு கூர்கிறேன்   யு ட்யூப்  லிங்க்    https://youtu.be/ShlnGEB1t1M 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...