கீதாஞ்சலி - நங்கநல்லூர் J K SIVAN ---
தாகூர்
51. நள்ளிரவில் ராஜா விஜயம்
51. The night darkened. Our day's works had been done.
We thought that the last guest had arrived for the night and the doors in the village were all shut.
Only some said the king was to come. We laughed and said `No, it cannot be!'
It seemed there were knocks at the door and we said it was nothing but the wind.
We put out the lamps and lay down to sleep.
Only some said, `It is the messenger!' We laughed and said `No, it must be the wind!'
There came a sound in the dead of the night.
We sleepily thought it was the distant thunder.
The earth shook, the walls rocked, and it troubled us in our sleep.
We said in a drowsy murmur, `No, it must be the rumbling of clouds!'
The night was still dark when the drum sounded.
The voice came `Wake up! delay not!' We pressed our hands on our hearts and shuddered with fear.
Some said, `Lo, there is the king's flag!'
We stood up on our feet and cried `There is no time for delay!'
The king has come---but where are lights, where are wreaths?
Where is the throne to seat him? Oh, shame! Oh utter shame! Where is the hall, the decorations?
Someone has said, `Vain is this cry! Greet him with empty hands, lead him into thy rooms all bare!'
Open the doors, let the conch-shells be sounded! in the depth of the night has come the king of our dark, dreary house.
Bring out thy tattered piece of mat and spread it in the courtyard.
With the storm has come of a sudden our king of the fearful night.
இரவு நெருங்க நெருங்க இருள் கவ்வியது. இன்றைய வேலைகள் எல்லாமே முடிந்து விட்டன. ஆச்சு இனிமேல் யாரும் வரப்போவதில்லை, ஊரே அடங்கிவிட்டது. கதவுகள் மூடப்பட்டுவிட்டது எங்கோ ஒரு சில குரல்கள் மட்டும் ''இன்னும் ராஜா வரவில்லையே. எந்நேரமும் வருவார் '' என்று மெலிதாக கேட்டது.
''அதெல்லாம் இல்லீங்க, அவரு எப்படி இங்கே வருவாரு?'' என்றும் சிலர் சிரித்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஒருவேளை ராஜாவோ?''
' யாரோ வரமாதிரி இருக்கே. ஆமாம் யாரோ வந்திருக்காங்க . கதவை தட்டுற மாதிரி இருக்கு. ''
''அட இதென்னப்பா, உன்னோட தொந்தரவு ஜாஸ்தியாயிடுச்சு. சும்மா இரு. , யாருமில்லை காத்து தான் கதவை இடிக்குது''
'எங்கேயோ இடி இடி க்குது அதோட சத்தம் '' என்று சொல்லி புரண்டு படுத்தோம்.
''கட கட வென்று சப்தம் மறுபடி கேட்டது. ஓஹோ இது ஏதோ ஒரு தேர் சக்கர ஒலி தான்''.எல்லோரும் எழுந்திருங்கோ. ராஜா வருகிறார் போல இருக்கு''
''என்னய்யா இது, உனக்கு மேகங்கள் சேர்ந்து இடி இடிப்பது கேட்கவில்லையா, தேராவது,சக்ரமாவது . உளறிக்கிட்டே இருக்கியே ''
இருட்டு நள்ளிரவை தாண்டி எங்கும் காரிருள் அப்பிக்கிடக்கும்போது என் காதில் எங்கோ டமடம என்று முரசு சப்தம் அல்லவோ கேட்கிறது? என்று உரக்க சொன்னேன். எல்லோரும் எழுந்து திண்ணைக்கு சென்று உட்கார்ந்தோம்.
''எழுந்திருங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..என்று கூட்டத்தில் ஒரு குரல். மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. ஒரு மின்னல் வெளிச்சத்தில் யாரோ ''அதோ ராஜாவின் கொடி தெரிகிறது''என்கிறார். எல்லோரும் எழுந்து நின்றோம்.
''ராஜா வந்தாச்சு. எங்கே வெளிச்சம்? விளக்குகள்? எங்கே நாம் வாங்கி வைத்திருந்த மாலைகள்? வரவேற்க என்ன ஏற்பாடு ? ராஜா வந்துவிட்டால் எங்கே அவர் உட்கார ஒரு பீடம்?
''எதற்கு இப்படி வீணாக அர்த்தமில்லாத கூச்சல், நம்மிடம் ஒன்றும் இல்லை என்று தெரியுமல்லவா, வெறும் கைகளை கூப்பி வரவேற்கிறேன். சகல உள்ளன்பு மரியாதை நேசத்தோடு கையைப் பிடித்து உள்ளே அழைத்து வருகிறேன். இருக்கும் கதவு ஜன்னல்களை நன்றாக திறந்து, தரையைச் சுத்தம் செய்து, பூஜை மேடையில் உள்ள சங்கை எடுத்து ஊதுங்கள்'' என்று ஒரு குரல்
இருளில் இருண்ட இந்த வீட்டில் ராஜாவின் வருகை.. ஹா ஹா. மேலே வானில் இடி முழக்கம். பளிச் பளிச்சென்று இந்த இருளைப் பிளக்கும் மின்னல் கீற்றுகள். இருள் மிரள்கிறது. இந்த கூரை வீட்டின் முன் வாசல் முற்றம் வரவேற்பறை. அங்கே அதோ இருக்கும் என் கிழிந்த பாயை விரித்து விட்டேன். பயங்கர காரிருளில் விளக்குகள் அணைந்து போய், அட்டை கருப்பு இருட்டில், நடுக்கும் குளிர் இருட்டில் ராஜாவின் திடீர் விஜயம் துவங்கட்டும். கிருஷ்ணா நீ வருவாய் என்று தெரியுமடா !!
No comments:
Post a Comment