Friday, May 7, 2021

chanakya

 


சாணக்கியன்.    --    நங்கநல்லூர்  J K  SIVAN --

சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.

श्रुत्वा धर्मं विजानाति श्रुत्वा त्यजति दुर्मतिम् ।
श्रुत्वा ज्ञानमवाप्नोति श्रुत्वा मोक्षमवाप्नुयात् ॥

சமூக தர்மம், தனிமனித தர்மம்,எல்லாம்  எப்படி  அறியமுடியும்?   ஒரு  குருவின் மூலம்  கேட்டு தான் தெரிந்து கொள்ளவேண்டும்.  அதன் மூலம்  பிறருக்கு  தீங்கு செய்யும் எண்ணம்  அகலும்.   ஞானம் வளரும்.  சம்சார பந்தம் கொஞ்சம் கொஞ்சமாக  பிரியும். 

पक्षिणः काकश्चण्डालः पशूनां चैव कुक्कुरः ।
मुनीनां पापश्चण्डालः सर्वचाण्डालनिन्दकः ॥

பறவைகளில்  காகம்   மிகவும்  அருவருப்பானது.  மிருகங்களில்  நாய்.    அவற்றையெல்லாம் விட  மோசமானது  சந்நியாசி, யோகி என்று சொல்லிக்கொண்டு  அருவருப்பாக ,வெறுப்பூட்டும் செயல்களை செய்பவன்,  கடவுளை  நிந்திப்பவன்,  இவர்களைத் தான்  சண்டாளன் எனலாம் என்கிறார் கௌடில்யர்.

भस्मना शुद्ध्यते कास्यं ताम्रमम्लेन शुद्ध्यति ।
रजसा शुद्ध्यते नारी नदी वेगेन शुद्ध्यति ॥

பித்தளை பாத்திரத்தை  பளபளப்பாக்க   சாம்பலை வைத்து கரகரவென்று  தேய்ப்பார்கள். புளியைத்  தேய்த்தால்  செம்பு, தாமிர பாத்திரங்கள்  அழகாக மினுக்கும்.  ஸ்த்ரீ தர்மங்களை அனுஷ்டிக்கும்  பெண்  ஜொலிப்பாள் .  ஓடும்  நீர் தான் நதிக்கோ, ஆறுக்கோ  அழகு. 

भ्रमन्सम्पूज्यते राजा भ्रमन्सम्पूज्यते द्विजः ।
भ्रमन्सम्पूज्यते योगी स्त्री भ्रमन्ती विनश्यति ॥

ராஜா,  பிராமணன்,  வெளி பிரதேசங்களுக்கு செல்லும் சன்யாசி, யோகி,  ஆகியோருக்கு  என்றும் மரியாதை  மதிப்பு  உண்டு.  வெளியே சுற்றும் பெண்  அழிந்து போகிறாள் என்று நான் சொல்லவில்லை, சாணக்கியர் மேலே கொண்ட ஸ்லோகத்தில் சொல்கிறார்.

यस्यार्थास्तस्य मित्राणि यस्यार्थास्तस्य बान्धवाः ।
यस्यार्थाः स पुमाँल्लोके यस्यार्थाः स च पण्डितः ॥

ஏழைக்கு  நண்பர்கள்  கம்மி.  பணக்காரனைத் தேடி  சேர்பவர்கள் அவன் நண்பர்கள். செல்வந்தனுக்கு உறவும் அதிகமாக தோன்றும்.  தனவந்தன்  தான் மனிதனாக  மதிக்கப்படுகிறான்.  வசதியுள்ளவர்கள் தான்  பண்டிதர்களாக  ஏற்றுக் கொள்ளப் படுகிறார்கள்.   கற்றவன் ஆயினும்   பணம் இல்லாத  போது  செல்லாது அவன் வாயில் சொல்.

तादृशी जायते बुद्धिर्व्यवसायोऽपि तादृशः ।
सहायास्तादृशा एव यादृशी भवितव्यता ॥

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.   ஒருவனது புத்தி, அறிவுத்திறன், நன்றாக பிறருக்கு உபயோகமானதாக  பயன்பட்டால், அதற்கு பின்னே  இறைவன் அருள் அவனுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.  பகவான் அருள், கிருபை இருப்பவனுக்கு  உதவ  நிறைய பேர்  அமைவார்கள். 

நன்றிடா கிருஷ்ணா உனக்கு. என்னால் முடிந்தவரை நான்  பிறருக்கு உதவ அருள்  புரி .


कालः पचति भूतानि कालः संहरते प्रजाः ।
कालः सुप्तेषु जागर्ति कालो हि दुरतिक्रमः ॥

கால தேவன்  எல்லா உயிரினங்களையும்,  ஜீவன்களையும்  வழி நடத்திச்  செல்கிறான்.  அழிக்க வேண்டியவற்றை, ஜீவன்களை அழிக்க  ஒரு கணம் கூட  காலன்  தயங்குவதில்லை.  உலகில் மற்றவை  தூங்கும்போது, விழித்திருப்பது காலம் மட்டுமே.  காலத்தை வெல்ல எவனாலும் முடியாது .


இன்னும் சாணக்கியன் சொல்லட்டும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...