Wednesday, May 19, 2021

SURDAS

 ஸூர்தாஸ் --    நங்கநல்லூர்  J K  SIVAN 


46 கண்ணன் வரக்  காணேனடி..

நாம்  எல்லோருமே  சின்ன வயசில் கண்ணா மூச்சி  ஆடியவர்கள்.  சாட் பூட் த்ரீ  போட்டு  யாரு கடைசியில் மாட்டிக்கொள்பவனோ அவன் கண்களை மூடிக் கொள்ளவேண்டும்.  அவன் கண்ணை மூடியது  யார் என்று பெயர் சொல்ல வேண்டும். சொல்லும் வரை மாற்றி மாற்றி பலர் அவன் கண்களை மூடுவா

ர்கள்.  இது வீட்டுக்குள் ளேயே  விளையாடுகிற ஒரு பொழுதுபோக்கு.

பிருந்தாவனத்தில்  ராதா எதையோ யோசித்துக் கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு தனியாக நிற்கிறாள். நிச்சயம் அவள் மனத்தில் கண்ணன் தான் இருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை.  
மெதுவாக அங்கே வந்த கிருஷ்ணன் ராதையின் பின்னால் சென்று சட்டென்று  அவன் கைகளால் அவள் கண்களை மூடுகிறான்.  அவளது அகன்ற நீண்ட கைககளை அவன் சிறு  கைகள் முழுசாக  மூட முடிய வில்லை.  அவன்  விரல்  இடுக்குகள் வழியாக  பளபளக்கும்  நாகத்தின் மணி போல்  பளிச்சென்று ஒளிவீசும்   அவள் விழிகள் கொஞ்சம் கொஞ்சம்  தெரிகிறது. 

வயதான நாகங்கள் நாகரத்னத்தை கக்கும். அதை தனது படத்தின் நடுவே  வைத்திருக்கும்.  நகரத்னத்தைப் போல்  ராதையின் கண்கள் ஒளி வீசின. 
ராகு பளபளக்கும்  சூரியனையும்  அங்காரகனை யும் கவ்வுவது போல்  கிருஷ்ணனின் கைகள் ராதையின் கண்களை முழுதும் மூடப்  பிரயத் தனப்பட்டன . தோற்றன.

கிருஷ்ணா, உனக்கு என்னடா தேவை, உன்னிடம் இல்லாததா? உனக்கு என்று ஒரு தனி விருப்பம்  என்றும் எப்போதும் கிடையாதே.  

தன்னை  நேசிக்கும் பக்தர்களின் அபிலாஷை களை  பூர்த்தி செய்வது ஒன்றே அவன் நோக்கம்.  தன்னை பிரிந்து தேடும் ,நாடும்,  பக்தர்கள் அருகில் தானே  வந்து மகிழ்விப்பது அல்லவோ அவன் வழக்கம்.   

கைகளைப்  பின்னாலிருந்து ராதையின்  கண் களை மூடும்போது அந்த சிறிய  பாலகனின் கண் களும் ராதையின்  கண்கள் அருகே தான் இருந்தன. அவள் முகத்தோடு அவன் முகமும் ஒட்டி இணை பிரியாதிருந்தது.   இரு தாமரைகள் ஒன்றிணைந்த கோலம்.   வெண் தாமரையும் செந்தாமரையும். சந்திரனின் கிரணங்கள் தாமரை இதழ்கள் மேல்  பால் போல் வெளிச்சத் தை வாரி வீசுவது போல் ஒரு பிரகாசம்  ராதையின்  முகத்தில்.

''கண்ணன் வரக்  காணேனடி''  மாதிரி  பாடுகிறாளோ ராதை?  அதைக் கேட்டு தான் அவள் குறையை நிவர்த்திக்க கண்ணன் வந்து கண்மூடி நின்றானோ!

ஆஹா  ஸூர்தாஸ்  எவ்வளவு அழகாக கண்ணில்லாமலேயே  அற்புதமாக  இந்த காட்சியை மனக்கண்ணால் கண்டு களித்து  நம்மையும்  கண்திறந்து பார்க்க வைக்கிறார்.


The Course Of Love
Seeing Radha stand alone, Krishna came from behind and blindfolded her with his hands. But his hands could not fully cover her large and elongated vivacious eyes. They shone out from within his fingers as a serpent's gem which it had disgorged and hid between its fangs;" or as Rahu finding the sun and Mars together, had pounced and held them fast. Krishna does not have any self-interest, for there is nothing for him to desire or achieve. But he removes the grief of separation of those whom he loves. His eyes came close to Radha's, and his lips were on hers. It was as though the lotuses forgetting their opposition to the moon had opened their petals to be kissed by the moon rays. Says Suradasa, Krishna's loving embrace removed from Radha. the sorrow of her parting.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...