Thursday, May 20, 2021

RAGAVENDRA SWAMI


 

திவான் வெங்கண்ணா - நங்கநல்லூர் J K SIVAN
அதோனி மற்றும் அதை சூழ்ந்த பிரதேசங்கள் முகலாய பேரரசின் நிர்வாகிகளான சுல்தான்கள் வசம் இருந்து அவர்கள் இஷ்டம் போல் ஆண்டு வந்த காலம்.
அப்படி ஒரு சுல்தான் பெயர் சித்தி மசூத் கான். அதோனி தான் தலைநகரம். அடிக்கடி ராஜ்யத் தின் ஊர்களுக்குள் வருவான். வேண்டியதை பறித்துக் கொண்டு, இழுத்துக்கொண்டு போய்விடுவான். டில்லியில் ஆளும் முகலாய பேரரசுக்கு கப்பம் மட்டும் விடாமல் செலுத்தி விடுவான். மற்றபடி அவனைத் தட்டிக் கேட்க ஆளில்லாத தனிக்காட்டு ராஜா. தனது ராஜ்யத் தை ஒட்டி உள்ள அண்டை சிற்றரசர்களுடன் போரிட்டு வென்று தனது ராஜ்யத்தோடு இணைத்துக் கொள்ளவேண்டும் என்று டில்லி கட்டளை. இந்திய உப கண்டம் முழுதும் முகலாய அரசு பரவ டில்லி விருப்பம்.
சித்தி மசூத் கான் இவ்வாறு பல அண்டை மாநிலங் களை வென்று இணைத்துக் கொண்டதை டில்லி சக்ரவர்த்தி பாராட்டி கடிதங்கள் ஆள் மூலம் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
டில்லி சக்ரவர்த்தியிடமிருந்து வரும் கடிதங்களில் அது எழுதப்பட்ட பாஷை மசூத் கானுக்கு தெரியாது, படிக்க முடியாது. சாதாரணமாகவே எந்த பாஷையில் எழுதினாலும் அவனுக்கு படிக்க தெரியாது என்பது வேறு விஷயம். அவன் எதற்கு படிக்க வேண்டும். அவனைச் சுற்றி எதற்காக படித்தவர்களை காசு கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். அது அவர்கள் வேலை. படித்துச் சொல்லட்டுமே?
அப்படி ஒரு நாள் சுல்தான் சித்தி மசூத்கான் குதிரை மீது ஏறி பரிவாரங்களோடு ஒரு தோனியை சுற்றி ஒரு பிரதேசத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது எதிரே ரெண்டு குதிரை வீரர்கள் அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அதோனியில் டில்லி பாதுஷா அனுப்பிய குதிரை தபால்கள் வந்து இருந்ததை உடனே அவனுக்கு கொடுக்க வந்தி ருக்கிறார்கள்.
வந்த ஓலைச்சுருளை ஆர்வமாக ஆவலோடு பிரித்தான் மசூத்கான். அதில் எழுதியது அவனுக்கு கிறுக்கலாக தெரிந்தது. என்ன என்று புரியவில்லை. அவன் இருந்த இடம் வனாந்தரம். எவரும் இல்லாத இடம். தூரத்தில் ஒரு ஆடு மாடு மேய்ப்பவன் ஒருவன் தான் கண்ணுக்கு தெரிந் தான்.
''கூப்பிடு அவனை ''
''ஆடு மேய்க்கும் வெங்கண்ணாவை பிடித்து இழுத்து வந்தார்கள். அவன் ஞான சூன்யம். சுல்தான் எதற்கு இழுத்துக் கொண்டு வர சொன்னான் என்று தெரியாது. அவனது ஆடு போலவே அவனுக்கும் தலை போய்விடும் என்ற பயம் முகத்தில் தெரிந்தது.தன்னைக் காப்பாற்ற யாரை வேண்டுவான் அப்போது?. அவன் செய்த புண்ய பலன், அவனது குரு ராகவேந்திரரை நினைக்க தோன்றியது.
''குருராஜா, என்னை காப்பாற்று. நான் ஒரு தவறும் செய்யவில்லையே ''
''இந்தா இந்த ஓலைச்சுருளை உடனே படித்து என்ன எழுதி இருக்கிறது என்று சொல்''
சுல்தான் நீட்டிய ஓலையை வாங்கி அதை மிரள மிரள பார்த்தான். சுல்தான் அவன் படிக்கிறான் அர்த்தம் சொல்வான் என்று படு ஆத்திரமாக காத்திருந்தான்.
''என்ன பார்க்கிறாய்? படித்து முடித்து விட்டாயா அதற்குள்? என்ன எழுதி இருக்கிறது அதில் சொல்''
ராகவேந்திரரை மனது சரணடைந்தது. என்ன ஆச்சர்யம்! அந்த க்ஷணமே வெங்கண்ணாவின் கண்களுக்கு பளிச்சென்று வார்த்தைகள் தெரிந்தது. அவனால் படிக்க முடிந்தது. அதன் அர்த்தத்தை எடுத்து சொன்னான்.
''மசூத் கான், உனது வீரச்செயல்கள், நீ மேலும் அநேக பிரதேசங்களை வென்று முகலாய பேரரசுடன் இணைப்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. உனக்கு இன்னும் உயர்ந்த பதவிகள் பரிசுகள் அனுப்பப்பட்டி ருக்கிறது. விரைவில் வந்து சேரும். பெற்றுக் கொள்-- டில்லி பாதுஷா''
வெங்கண்ணா படித்துச் சொன்னதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் சுல்தான் மசூத்கான்.
''இந்த வெங்கண்ணாவை நமது பிரதான மந்திரியாக்க ஏற்பாடுகள் ஆகட்டும் என்று மற்றவர்களுக்கு கட்டளையிட்டான் மசூத்கான். அன்று முதல் ஆடு மேய்த்த வெங்கண்ணா அதோனி திவான் வெங்கண்ணாவானான்..
பூஜ்ய ஸ்ரீ ராகவேந்திரரின் அருளை எப்படி வர்ணிப்பது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...