Friday, May 14, 2021

KAVI KUNJARA BARATHI


 பழமை நினைவுகள்   --    நங்கநல்லூர்  J K  SIVAN 



கவி குஞ்சர பாரதிகள் 

எங்கள்  அஷ்ட சஹஸ்ர வகுப்பில் ஒரு முக்கி யமான  மைல்  கல்   கவிகுஞ்சர பாரதிகள்.   இவர் காலம்  1810-1896.  சிறந்த  தமிழ்  கவிஞர். கர்நாடக சங்கீத வித்துவான். வாக்கேயகாரர்.   கர்நாடக சங்கீத  கீர்த்தனை  சிருஷ்டி கர்த்தா.  நிறைய கீர்த்தனைகள்  ஸ்வாமிகள் மேல் எழுதி இருக்கிறார். இன்றும் பல வித்வான்கள்  அவர் கிருதிகளை பாடி வருகிறார்கள்.   சங்கீத பரம்பரையில் தோன்றியவர்.  ஆரம்பத்தில் திருநெல்வேலி பூர்வீகம்.   கவி  குஞ்சரபாரதியின்  பெற்றோர்   ராமநாதபுரத்தில்  பெருங்கரை  கிராமத்தில் வாழ்ந்தவர்கள்.   அந்த கிராமமே  மஹாராஜா ரகுநாத சேதுபதியால்  1670 ல்  சதுர்வேதி  மங்கலமாக  பிராமண குடும்பங்க ளுக்கு தானமாக  கொடுக்கப்பட்டது.  கவி குஞ்சரபாரதி என்பது  க்ரிதிகளுக்கு அவர் வைத்துக் கொண்ட  பெயர். அவரது இயற்பெயர்   கோடீஸ்வர ஐயர் எனும் கோடீஸ்வர பாரதி.   அவரது தாத்தா பெயர்.   அவரது அப்பா பெயர்  சுப்பிரமணிய பாரதி.   தமிழ் சமஸ்க்ரிதம் நன்றாக அறிந்த  சங்கீத வித்வான்கள்.     தாய் மாமன் பெயர்  நந்தனுர் நாக பாரதி.  
சுப்ரமணிய பாரதிக்கு  நெடுநாள்  புத்ரபாக்யம் இன்றி,  கொடுமளுர்  (பெருங்கரை அருகே) முருகன் கோவிலில்  வாரா வாரம் சென்று த்யானம் செய்து வேண்டிக்கொண்டார்.   முருகன் அருளால் தான் கோடீஸ்வர பாரதி பிறந்தார்.    12  வயதிலேயே    கீர்த்தனைகளை   இயற்றுவது,  சங்கீத ஞானத்தோடு பாடுவது  என்று சிறந்த  திறமை  இருந்தது.   அக்காலத்தில் மதுரகவி பாரதி என்று ஒரு கவிஞர் இருந்தார். அவரோடு இணைந்தார்.  முருகன்  மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீது பல பாடல்கள்.  

18வயதில் கொடுமையான நோய் கொண்டு  கனவில் முருகன் தன் மீது பாடச்  சொல்லி  அப்படியே அவர் பாட உடல் நலமடைந்ததாக சொல்வார்கள்.   கோடீஸ்வர ஐயர்  எனும் கவிகுஞ்சர பாரதியின் சிறந்த படைப்பு அழகர் குறவஞ்சி. 1840ல்  இயற்றியது சிவகங்கை ஜமீன்தார் முன்பு  அரங்கேறியது.  பிறகு எங்கும் பிரபலமானது.  சிவகங்கை ராஜா  கௌரி வல்லபன்  சபை கூட்டி  கோடீஸ்வரய்யரை  நிகழ்ச்சிகள் நடத்துமாறு  அழைத்தார்.   அப்போது  சிவகங்கை ராஜா கொடுத்த விருது தான்  ''கவிகுஞ்சரம்'' .கோடீஸ்வரய்யர்  ஆஸ்தான வித்வான் ஆனார்.

மஹாராஜா ஒரு பதினாறு அடி  வேங்கையை வேட்டையாடிய  போது   ராஜாவின்  வீரத்தை புகழ்ந்து ''வேங்கை கும்மி''  இயற்றினார்.  ராஜாவுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.  ஒரு சின்ன கிராமம்  ''கொட்டாங்கச்சி ஏந்தல்'' என்கிற கிராமமே  பரிசளித்தான்.  ராஜாவின் பல்லக்கில் பயணம் கிடைத்தது. 

ராமநாதபுரம்  ராஜாவும்  அவரை அழைத்து ஆஸ்தான வித்வான் ஆக்கினார்.   ராஜாவின் விருப்பப்படி அவர் இயற்றியது தான்  ''ஸ்கந்த புராண  கீர்த்தனைகள்' '  86 வயதில்   புகழுடன் வாழ்ந்த  கவிகுஞ்சர பாரதி  மறைந்தார்.  கவிகுஞ்சர பாரதிகளின் கீர்த்தனைகள்  ''பேரின்ப கீர்த்தனைகள்'' என்ற புத்தகமாக வெளிவந்தது. 72 மேலகர்த்தாக்களில் கீர்த்தனைகள்.   அவரது முத்திரை   ''கவிகுஞ்சரம்'' 

 S G  கிட்டப்பா பாடிய  ''எல்லோரையும் போலவே  நீ''  என்ற சுத்த சவேரி பாடல், அவர் இயற்றிய பிரபல பாடல்.  மற்றவை சில;  ''என்னடி பெண்ணே  உனக்கு ''  பித்தனவன் , சிங்காரவேகத்துக்கும்  சந்நிதி கண்டு ''

அழகர் குறவஞ்சி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

 எங்கள் தாத்தா  ப்ரம்ம ஸ்ரீ  புராணசாகரம்  வசிஷ்ட பாரதிகள் சிவகங்கைக்கு தனது தமையனார்  சீதாராம பாகவதரோடு ஒரு சமயம் சென்றபோது   பெருங்கரை  கிராமத்துக்கு சென்று  கவிகுஞ்சர பாரதிகளைச் சந்தித் தார்கள்.    கவிகுஞ்சர பாரதிகளின்  ஸ்காந்த புராண  கீர்த்தனைகளில் சிலவற்றை  சீதாராம பாரதிகள் பாடிக்காட்டினதில்  கோடீஸ்வரய்யர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...