நமது புத்திக்கு எட்டாத கணக்கு --நங்கநல்லூர் J K SIVAN --
''மன்வந்த்ரம் ''
நாம் சொல்லும் சங்கல்ப மந்திரங்களில் ''மன்வந்த்ரம்'' என்கிற வார்த்தை அடிக்கடி காதில் விழுகிறதே அது என்ன என்று கொஞ்சம் தேடினேன். தலையைச் சுற்றும் அளவுக்கும் அதில் விசேஷம் இருக்கிறது மேலெழுந்தவாரியாக சிலவற்றை மற்றும் சொல்கிறேன். எதையாவது கெட்டியாவது பிடித்துக் கொண்டு படிக்கவும். ஒரேயடியாக படிக்க முடியவில்லை யென்றால் விட்டு விட்டு கூட படிக்கலாம். படித்தது அத்தனையும் உங்கள் ஞாபகத்தில் இருக்கும் என்று மட்டும் கனவு காணவேண்டாம். எத்தனை முறை இதை மனப்பாடம் பண்ணினாலும் இந்த கணக்கெல்லாம் நமக்கு அப்பாற்பட்டவை என்று மட்டும் கவனம் இருக்கட்டும். இதைப்படிப்பதாலோ என்ன பிரயோஜனம் என்று கேட்கவேண்டாம். கொஞ்ச நேரம் கொரோனா பயம் மனதில் இடம் பிடிக்க முடியாதே.
1. ப்ரபஞ்சம் என்பது திரும்ப திரும்ப தோன்றி அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும், மறு முறை அழியும். ஆக இது ஒரு சுழற்சியே. இதற்கு தலைவனான ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு.
ப்ரம்மாவின் பிறப்பு, இறப்பு போன்ற காலத்தின் நடுவே வருவது "மஹாகல்பம்".
ப்ரம்மாவின் இறப்பிற்குப் பிறகு வரும் ப்ரளயம்தான் "மஹாப்ரளயம்".
ப்ரம்மாவின் ஒரு வாழ் நாளை "கல்பம்" என்று சொல்கிறோம்.
இந்தக் கல்பம் 14 மந்வந்த்ரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு மனு உண்டு. அந்த மனுவின் வாழ்நாள் தான் ஒரு "மன்வந்திரம்". .
இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன.
2. மனுஷ்ய வருஷம் : 365நம்முடைய நாட்கள் இருக்கிறதே அந்த காலம்: இரண்டு இலைகளை ஒரு ஊசி துளைக்கும் நேரம் "அல்பகாலம்" எனப்படும் . கீழே ஒரு வாய்ப்பாடு தந்திருக்கிறேன். மெதுவாக படியுங்கள்.
30 அல்பகாலம்- 1த்ருதி:
30 த்ருதி- - 1 காலம்;
30 காலம் --1 கஸ்தா;
இந்த ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்:
12 மாதம் --ஒரு வருஷம்;
இந்த ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒருநாள் (அஹோராத்ரம்) ;
300வருஷம்- 1 தேவ வருஷம்;
4800 தேவ வருஷம் --க்ருத யுகம்;
3600 தேவ வருஷம். --த்ரேதாயுகம்;
2400 தேவ.வருஷம்- --துவாபரயுகம்;
1200 தேவ.வருஷம்- -கலியுகம்;
71 சதுர்யுகங்கள் முடிந்ததும் ஒரு மனு முடிவடைகிறது.
அத்தோடு அந்தக் கடவுள் , தேவர்கள் அழிகின்றனர். அக்காலம் ப்ரம்மாவின் ஒரு பகல். இரவில் படைப்பு கிடையாது. 120 ஆண்டுகள் வாழ்ந்ததும் ப்ரம்மாவும் அழிந்துவிடுகிறார்.
ஆக ஒரு ப்ரம்மாவின் வயது--முப்பது கோடியே,ஒன்பது லட்சத்து,பதினேழாயிரத்து,முன்னூற்று எழுபத்திஆறு மனித ஆண்டுகள். ஒரு மனுவின் வயது-- 4,32,000 மனித வருடங்கள்
துவாபர யுகத்தில் வ்யாசராக வந்து வேதங்களை உருவாக்குகிறார், கலியுகத்தில் நேர்மையை நிலை நாட்டுகிறார். ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு, இந்திரன், சப்தரிஷிகள்போன்றவர்கள் இருப்பர். மனுவின் மகன்களும் ஒத்துழைப் பார்கள்;
14 மன்வந்திரங்கள் --ஸ்வாயம்பு; ஸ்வரோசிச; உத்தம; தாமஸ; ரைவத; சக்ஷூச; வைவஸ்வத; ஸாவர்ணி; தக்ஷ ஸாவ்ர்ணி; ப்ரம்ம ஸாவர்ணி; தர்ம ஸாவர்ணி; ருத்ர ஸாவர்ணி; ரௌச்ய ஸாவர்ணி; இந்திர ஸாவர்ணி.
1) ஸ்வாயம்பு மனு; ப்ரம்மாவின் மனதில் உதித்தவர்.தேவி சடரூபியை(ப்ரம்மாவின் மகள்) மணந்தார்;நூறு ஆண்டுகள் வாக்பவ மந்திரத்தை உச்சரித்து, தேவியை நோக்கித் தவமிருந்து பல வரங்கள் பெற்றார் . மனுஸ்ம்ருதியை உருவாக்கினார் .
2) ஸ்வரோசிச மனு. . ஸ்வயம்பு மனுவின் மகன்கள் ப்ரியவ்ருதன், உத்தானபாதன். ப்ரியவ்ரதனின் மகனே இம்மனு. தாரிணி தேவியை ஆராதித்தவன்.
4) தாமஸ மனு ;; இவனும் ப்ரியவர்தனின் மகனே. இவன் காமராஜ மந்திரம் ஜபித்து தேவியின் அருள் பெற்றான். ஸ்பத்ரிஷிகள்;;;ஜோதிர்மான், ப்ருது, காவ்ய, சைத்ர, அக்னிவனக, பிவர, நர;
இந்திரன்: சிபி.
7) வைவஸ்வதமனு ; சூர்யனின் மகன். இவனே நமது மனு. ஸத்யவ்ருத மனுவே போன ப்ரளயத்திலிருந்து விஷ்ணுவால் ( மத்ஸ்யாவதாரம்) காப்பாற்றப்பட்டு. வைவஸ்வத மனுவானான் . இவனே சூர்ய வம்சத்தின் முதல் அரசன். இவனும் தேவி உபாசகன்.
9) தக்ஷ ஸாவர்னி மனு:
10) ப்ரம்ம ஸாவர்னி மனு:
11) தர்ம ஸாவர்னி மனு:
12)ருத்ர ஸாவர்னி மனு: இவன் ருத்ரனின் மகன்.
13) ரௌச்ய தேவ ஸாவர்னி (ருசி)
14) இந்திர ஸாவர்னி (பௌமி)மனு:
இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன.
ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவை: க்ருதயுகம் , த்ரேதாயுகம், த்வாபரயுகம்,கலி யுகம்.
ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிந்துவிடுகிறது.. அதைச் சிறிய ப்ரளயம் என்கிறார்கள்.
ப்ரம்மாவின் ஆயுட்காலம் 120 வருடங்கள் ( இந்த வருஷம் நமது 365 நாள் கணக்கு இல்லை. இது படே படே காலம்)
ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120X360 ).
2. மனுஷ்ய வருஷம் : 365நம்முடைய நாட்கள் இருக்கிறதே அந்த காலம்: இரண்டு இலைகளை ஒரு ஊசி துளைக்கும் நேரம் "அல்பகாலம்" எனப்படும் . கீழே ஒரு வாய்ப்பாடு தந்திருக்கிறேன். மெதுவாக படியுங்கள்.
30 அல்பகாலம்- 1த்ருதி:
30 த்ருதி- - 1 காலம்;
30 காலம் --1 கஸ்தா;
30 கஸ்தா -1நிமிஷம்(மாத்ரை);
4நிமிஷம் -1 கணித;
10 கணித -நெடுவீர்ப்பூ;
4நிமிஷம் -1 கணித;
10 கணித -நெடுவீர்ப்பூ;
6 நெடுவீர்ப்பு -1 விநாழிகை;
60 விநாழிகை -1 கடிகை;
60 கடிகை -1 நாள்;
15நாள் -1 பக்ஷம்;
2 பக்ஷம் -1 மாதம்;
60 கடிகை -1 நாள்;
15நாள் -1 பக்ஷம்;
2 பக்ஷம் -1 மாதம்;
இந்த ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்:
12 மாதம் --ஒரு வருஷம்;
இந்த ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒருநாள் (அஹோராத்ரம்) ;
300வருஷம்- 1 தேவ வருஷம்;
4800 தேவ வருஷம் --க்ருத யுகம்;
3600 தேவ வருஷம். --த்ரேதாயுகம்;
2400 தேவ.வருஷம்- --துவாபரயுகம்;
1200 தேவ.வருஷம்- -கலியுகம்;
71 சதுர்யுகங்கள் முடிந்ததும் ஒரு மனு முடிவடைகிறது.
அத்தோடு அந்தக் கடவுள் , தேவர்கள் அழிகின்றனர். அக்காலம் ப்ரம்மாவின் ஒரு பகல். இரவில் படைப்பு கிடையாது. 120 ஆண்டுகள் வாழ்ந்ததும் ப்ரம்மாவும் அழிந்துவிடுகிறார்.
ஆக ஒரு ப்ரம்மாவின் வயது--முப்பது கோடியே,ஒன்பது லட்சத்து,பதினேழாயிரத்து,முன்னூற்று எழுபத்திஆறு மனித ஆண்டுகள். ஒரு மனுவின் வயது-- 4,32,000 மனித வருடங்கள்
ஒவ்வொரு சதுர் யுகத்திலும் வேதங்கள் அழியும். ஸப்த ரிஷிகள் கிழே வந்து வேதங்களை புதுப்பிப்பர். க்ருத யுகத்தில்
மறுபடியும் மனு உருவாவான்.ஆக ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு, தேவர்கள்,ஸப்த ரிஷிகள், இந்திரன் புதிதாக உருவாவார்கள். கல்பகாலத்தின் முடிவில் விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொள்கிறார். பிறகு மறுபடியும் படைப்பு துவங்குகிறது.
க்ருத யுகத்தில் அவர் கபிலராக வந்து "பரமஞானத்தை" போதிக்கிறார். த்ரேதாயுகத்தில் பேரரசனாக வ்ந்து கொடியவர்களை அழிக்கிறார்.
க்ருத யுகத்தில் அவர் கபிலராக வந்து "பரமஞானத்தை" போதிக்கிறார். த்ரேதாயுகத்தில் பேரரசனாக வ்ந்து கொடியவர்களை அழிக்கிறார்.
துவாபர யுகத்தில் வ்யாசராக வந்து வேதங்களை உருவாக்குகிறார், கலியுகத்தில் நேர்மையை நிலை நாட்டுகிறார். ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் மனு, இந்திரன், சப்தரிஷிகள்போன்றவர்கள் இருப்பர். மனுவின் மகன்களும் ஒத்துழைப் பார்கள்;
14 மன்வந்திரங்கள் --ஸ்வாயம்பு; ஸ்வரோசிச; உத்தம; தாமஸ; ரைவத; சக்ஷூச; வைவஸ்வத; ஸாவர்ணி; தக்ஷ ஸாவ்ர்ணி; ப்ரம்ம ஸாவர்ணி; தர்ம ஸாவர்ணி; ருத்ர ஸாவர்ணி; ரௌச்ய ஸாவர்ணி; இந்திர ஸாவர்ணி.
1) ஸ்வாயம்பு மனு; ப்ரம்மாவின் மனதில் உதித்தவர்.தேவி சடரூபியை(ப்ரம்மாவின் மகள்) மணந்தார்;நூறு ஆண்டுகள் வாக்பவ மந்திரத்தை உச்சரித்து, தேவியை நோக்கித் தவமிருந்து பல வரங்கள் பெற்றார் . மனுஸ்ம்ருதியை உருவாக்கினார் .
ஸப்த ரிஷிகள்: மரீசி, ஆங்கிரஸ்,அத்ரி,புலஹ,க்ரௌது, புலஸ்தய, வசிஷ்ட.ர்
மனுவின் மகன்கள்; அக்னிதாரா,அக்னிபாஹு,மேதா,மேதாதிதி,வஸு,ஜ்யோதிஷ்மான், த்யுதிமான், ஹவ்ய, ஸாவன, புத்ர. இவர்கள் உலகை ஆண்டனர்.(ஹரிவம்ச்ம்-7). இந்த மனுவை "ப்ரஜாபதி" மனு என்று அழைப்பர்.இவன் விராட அண்ட/புருஷனிலிருந்து வந்தவன் என்பர். முனிவர் ஸ்யவநர் இவனின் மகளை மணந்தார் . மனுவின் மனைவியின் பெயர் சரஸ்வதி (ப்ரம்மாவின் மனைவி வேறே ஒரு சரஸ்வதி ).
2) ஸ்வரோசிச மனு. . ஸ்வயம்பு மனுவின் மகன்கள் ப்ரியவ்ருதன், உத்தானபாதன். ப்ரியவ்ரதனின் மகனே இம்மனு. தாரிணி தேவியை ஆராதித்தவன்.
ஸப்தரிஷிகள்; ஊர்ஜ்ஜ, ஸ்தம்ப, ப்ரான, ராம, ரிஷப, நிராய, பரீவான்.
மகன்கள்;; சைத்ர, கிம்புருஷ,ஸங்கவதன இந்திரன். விபஸ்சித்.:
தேவர்கள்:- பாராவதர்கள், துசிதர்கள் . ப்ரம்மா இம்மனுவிற்கு ஸாத்வத தர்மத்தை சொல்லிக் கொடுத்தார்.இந்த மனு அதை தன் மகன்களுக்கு சொல்லி கொடுத்தான். ( விஷ்ணு புரா-1-3; ஹரிவம்சம்--7; சாந்தி--348)
3)உத்தம மனு (ஔத்தமி); உத்தமனும் ப்ரியவர்தனின் மகன். இவனும் வாக்பீஜ மந்திரம் கூறி தேவியின் அருள் பெற்றான். (தேவி பாக-10)
ஸப்தரிஷிகள்;; வசிஷ்டரின் ஏழு மகன்களே--ரஜஸ், கோத்ர, ஊர்தவபாஹு, ஸாவன, அநங்க, ஸுடாபஸ், சுக்ர;
மகன்கள்: அஜ, பரஸுதீப்த. என்று மற்றும் பலர்.
இந்திரன்;;; ஸுசாந்தி.
தேவர்கள்:- ஸுதாமன், ஸத்யர், ஜபஸ்,ப்ரதர்தன, சிவ;; ஒவ்வொரு பகுதியிலும் 12 தேவர்கள்.
4) தாமஸ மனு ;; இவனும் ப்ரியவர்தனின் மகனே. இவன் காமராஜ மந்திரம் ஜபித்து தேவியின் அருள் பெற்றான். ஸ்பத்ரிஷிகள்;;;ஜோதிர்மான், ப்ருது, காவ்ய, சைத்ர, அக்னிவனக, பிவர, நர;
இந்திரன்: சிபி.
தேவர்கள்:-ஸுபார,ஹரி, ஸத்ய, ஸுதீ;
ஒவ்வொரு கூட்டத்திலும் 27 தேவர்கள்.
மகன்கள்: க்யாதி, கேதுரூப, ஜானுஜங்க என்று பலர் உண்டு
மகன்கள்: க்யாதி, கேதுரூப, ஜானுஜங்க என்று பலர் உண்டு
5) ரைவத மனு . இவன் தாமஸனின் கடைசி தம்பி.இவன் காமபீஜ மந்திரம் ஜபித்து தேவி அருள் பெற்றவன்.
ஸப்தரிஷிகள்: ஹிரண்யரோம, வேதஸ்ரீ, ஊர்தவபாஹு, வேதபாஹு, ஸுதாம, பரஞ்சய, மஹாமுனி.
இந்திரன்: விபு.
தேவர்கள்: அமீதாபர்கள், பூதரயஸ், வைகுந்த, ஸுமேத. ஒவ்வொரு கூட்டத்திலும் 14 தேவர்கள்;
மகன்கள்: பாலபந்து, ஸம்பாவ்ய, ஸத்யக, என்று பலர்.சிறந்த அரசர்களாக இருந்தனர்;;
6)சாக்ஷுச மனு: அங்கனின் மகன். ராஜரிஷி புலஹரின் உபதேசத்தால், தேவியை உபாசித்து மனு பதவி பெற்றான். ஸப்தரிஷிகள்: ஸுமேதர் , விரஜஸ், ஹவிஸ்மான், உத்தம, மது, அதிநாமன், ஸஹிஷ்னு,
இந்திரன்: மனோஜவர் ..
தேவர்கள்: ஆக்யர், ப்ரஸுதர், பாவ்ய, ப்ருதுக, லேகர். ஒவ்வொரு கூட்டத்திலும் 8 தேவர்கள்.
வம்சாவளி. துருவன் அவன் மனைவி ஸாம்பு இருவருக்கும் இரண்டு மகன்கள். ஸிஸ்டி, பாவ்ய. ஸிஸ்டியின் மனைவி சுச்சயாவிற்கு ஐந்து மகன்கள்; ரிபு, ரிபுஞ்சயன், விப்ர, வ்ர்கல, வ்ர்கதேஜஸ்;;ரிபுவின் மனவி ப்ரகதியின் மகன் சாக்ஷுச;;விரான ப்ராஜபதியின் மகள் புஷ்கரணி இவனின் மனைவி; இவர்களின் மகன் மனு; இவன் வைராஜ ப்ரஜாபதியின் மகள் நட்வலாவை மணந்தான். இவர்களுக்கு குரு, புரு, ஸதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், ஸுசி, அக்னிஸ்தோமன், அதிராத்ர, ஸுத்யும்னன், அபிமன்யு , என10 மகன்கள்;;ஆக்னேயி (குருவின் மனைவி)க்கு அங்(ம்)க, ஸுமனஸ், க்யாதி, க்ரௌது, ஆங்கிரஸ்,சிபி என 6 மகன்கள்; சுனிதா(அம்கனின் ம்னைவி) வேனாவை பெற்றெடுத்தாள்.ப்ருது வேனாவின் மகன்;; வைன்ய எனவுமழைப்பர்;; இம்மனுவின் மகன்கள் "வரிஷ்டர்கள்" என புகழப்பட்டனர்.
7) வைவஸ்வதமனு ; சூர்யனின் மகன். இவனே நமது மனு. ஸத்யவ்ருத மனுவே போன ப்ரளயத்திலிருந்து விஷ்ணுவால் ( மத்ஸ்யாவதாரம்) காப்பாற்றப்பட்டு. வைவஸ்வத மனுவானான் . இவனே சூர்ய வம்சத்தின் முதல் அரசன். இவனும் தேவி உபாசகன்.
ஸப்தரிஷிகள்: வசிஷ்ட, காஸ்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதம, விஸ்வாமித்ர, பாரத்வாஜர்.
இந்திரன்: புரந்தரன்.
தேவர்கள்:-ஆதித்யர், வஸு, ருத்ரன்
மகன்கள்: தார்மீக புத்திரர்கள். இக்ஷ் வாஹு, ந்ருக, த்ருஷ்ட,ஸர்யாதி, நரிஸ்யந்த, நாபாக, அரிஸ்ட, கரூஸ, ப்ரஸ்த்ர;;(யாவரும் மனுக்கள்);வேனா, த்ருஷ்ணு, நரிஸ்யந்த, நாபாக, இக்ஷவாஹு, கரூச, ஸர்யாதி, இலா, ப்ரஸ்த்ர, நாபாகாரிஷ்ட; த்ரேதாயுகத்தில் சூர்யன் இம்மனுவிற்கு "ஸாத்வத தர்மம்" போதித்தான். இவன் அதை இக்ஷ்வாஹுவிற்கு உபதேசித்தான்.
இனி மேலே சொன்ன நமது மானுக்கு அப்புறம் வரப்போகும் மனுக்கள் :
8) ஸாவர்னி மனு: முற்பிறவியிலேயே இவன் தேவி பக்தன். முற்பிறவியில் சைத்ர வம்சத்தில் பிறந்த சுரதாவே ஸாவர்னி மனு. ப்ரம்மாவின் மகன் அத்ரி; அத்ரியின் மகன்நிஸாகரன்;ராஜசூய யாகம் செய்தவன். இவனின் மகன் புதன்; புதனின் மகன் சைத்ர( சைத்ர வம்சத்தின் முதல் அரசன்). இவனின் மகன் சுரத;இவன் போரில் தோற்று காட்டில் அலைய, முனிவர் ஸுமேதஸ் உபதேசத்தால் தேவி அருள் பெற்று அரசை மீட்டதோடு, மறு பிறவியில் மனுவானான். சூர்ய வம்சத்தில் பிறந்தவன்.

சூர்யனுக்கு ஸம்ஞா மூலம் யமா, யமி,மனு என மூன்று மகன்கள். சூர்யனுக்கு சாயா மூலம்--சனீஸ்சர,ஸாவர்னி, தபதீ என மூன்று குழந்தைகள்.
ஸப்தரிஷிகள்: தீப்திமான், காலவ, ராம, க்ருப, அஸ்வத்தாம, வ்யாஸ, ரிஷ்யஸ்ருங்கர்.
இந்திரன்;மஹாபலி;
தேவர்கள்: ஸுடாபஸ், அமீதாபர், முக்ய என தேவர்கள்--ஒவ்வொரு கூட்டத்திலும்12 தேவர்கள்;;
மகன்கள்: விரஜஸ், உர்வரீயான், நிர்மோக, என பலர்;
மகன்கள்: விரஜஸ், உர்வரீயான், நிர்மோக, என பலர்;
9) தக்ஷ ஸாவர்னி மனு:
ஸப்தரிஷிகள்: ஸாவன, த்யுதிமான், பாவ்ய, வஸு, மேதாதிதி, ஜ்யோதிஸ்மான், ஸத்யர்.
இந்திரன்: அத்பூதன்
தேவர்கள்:-பாரஸ், மரீசிகர்ப, ஸுதர்மன். இக்கூட்டத்தில் 12 தேவர்கள் (ஒவ்வொன்றிலும்)
மகன்கள்: த்ருதகேது, தீப்திகேது, பஞ்சஹஸ்த, நிராமய, ப்ருதுஸ்ரவஸ்,
10) ப்ரம்ம ஸாவர்னி மனு:
ஸப்தரிஷிகள்;; ஹவிஸ்மான், ஸுக்ருத, ஸத்ய, தபோமூர்த்தி, நாபாக,அப்ரதிமௌஜஸ், ஸத்யகேது
இந்திரன்: ஸாந்தி
தேவர்கள்:ஸுதமன், விஸுத்தாஸ். ஒவ்வொரு கூட்டத்திலும் 100 தேவர்கள்.
மகன்கள்: பத்து பேர். அதில் ஸுக்சேத்ர, உத்தமௌஜஸ், பூதிஸேன இவர்களே அரசர் ஆவார்கள்.
11) தர்ம ஸாவர்னி மனு:
ஸப்தரிஷிகள்: வ்ரஜ, அகனிதேஜஸ், வப்ஸ்மான், க்ருணி, ஆருனி, ஹவிஸ்மான், அநகர்
இந்திரன்: விகங்கமஸ், காமக, நிர்வானரதி --ஒவ்வொரு கூட்டத்திலும் 30 தேவர்கள்.
மகன்கள்: ஸர்வத்ரக, ஸுதர்மா, தேவானிகர் என பலர்;
12)ருத்ர ஸாவர்னி மனு: இவன் ருத்ரனின் மகன்.
ஸப்தரிஷிகள்: தபஸ்வி, ஸுடாபஸ், தபோமூர்த்தி, தபோரதி, தபோத்ருதி, தபோத்யுதி, தபோதன:
இந்திரன்: ருதுதாமன்
தேவர்கள்: ஹரிதர் , ரோஹிதர் , ஸுமனஸ், சுக்ரமன், சுபாரன் --ஒவ்வொரு கூட்டத்திலும்10 தேவர்கள்.
மகன்கள்: தேவவான், உபதேவ, தேவஸ்ரேஷ்ட, என பலர்.
13) ரௌச்ய தேவ ஸாவர்னி (ருசி)
ஸப்தரிஷிகள்; நிர்மோக, தத்வதர்ஸி, நிஸ்ப்ரகம்ய, நிருத்ஸக, த்ருதிமான், அவ்யய, ஸுடாபஸ்;
இந்திரன்: திவஸ்பதி
தேவர்கள்: ஸுத்ராமன், சுகர்மன், ஸுதர்மன்; ஒவ்வொரு கூட்டத்திலும் 33 தேவர்கள்
மகன்கள்;;; சித்ரஸேனன், விசித்ரன் என பலர்.
14) இந்திர ஸாவர்னி (பௌமி)மனு:
ஸப்தரிஷிகள்: அக்னிபாஹு, சுசி, சுக்ர, மாகத, அக்னிதார, யுக்த, ஜிதன் .
இந்திரன்:சுசி
தேவர்கள்: சாக்ஷுச, பவித்ர, கனிஸ்த, ப்ராஜக, வாசவ்ர்த்தர்.
மகன்கள்: உரூ, கம்பீரபுத்தி, என பலர்
மற்றவைகள்:-ஒன்பதாவது மனுவிலிருந்து கடைசி மனுவரை உள்ள மனுக்கள், வைவஸ்வத மனுவின் மகன்களான கரூச, ப்ரஸ்தர, நாபாக, திஸ்த, ஸார்யதி, த்ரிசங்கு., இவர்களின் மறு பிறப்பே."ப்ரமராம்பிகாவின் " அருளால் இவர்கள் மனு பட்டம் பெற்றனர். விஷ்ணுவின் சக்திகளாகிய ஆபூதி, அஜீத, ஸ்த்ய,ஹரி, மாநஸ, ஸம்பூதி, ரைவத,வாமன என்பவைகளே
மன்வந்திரங்களை ஆளுகின்றன.
இதற்கு மேல் நான் விஷயங்களை திரட்டவில்லை. நிறைய இருக்கிறது இன்னும். ஒரு கேள்வி ? எப்படி இனி எப்போதோ வரப்போகும் மனுக்கள், மன்வந்தர்களில் அந்த மன்வந்தர ரிஷிக்கள், அப்போதைய இந்திரன் (ஒரு கவர்னர் மாதிரி பதவி) சப்தரிஷிகள் : மினிஸ்டர்ஸ் மாதிரி. மகன்கள் பேர் எல்லாம் எப்படி இப்போதே சொல்லமுடியும்? பதில்: நமக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. அந்த கணக்கு நமக்கு எத்தனை மன்வந்தரம் சொல்லிக்கொடுத்தாலும் புரியாது.
No comments:
Post a Comment