பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் J K SIVAN
10. கும்பகோணம் மடத்தில் நவராத்ரி வைபவம் பால பெரியவர் என்று நாம் பக்தியோடும் அன்போடும் அழைத்து இப்போது காஞ்சி 70 வது காமகோடி பீடாதிபதி யாக இருக்கும் பெரியவா ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதிகள் , ஆரம்பத்தில் மஹா பெரிய வாளிடம் மடத்தில் பாடம் கற்றவர். அவர் என்ன சொல்கிறார்?
''எனக்கு பரமகுரு, ஆரம்பகாலத்தில், ஆதிசங்கர பகவத் பாதாளுடைய ஸுத்ர பாஷ்யத்தை கற்பித்துக் கொண்டிருந்த சமயம் ஒருநாள் நான் அடிக்கடி கேட்கிறேனே என்பதற்காக, அவருடைய பால்ய வயது அனுபவங்களை என்னிடம் சொன்னார். அதில் ஒன்று:
பரமகுருவுக்கு அப்போது 16-18 வயது இருக்கலாம். சாதுர்மாஸ்ய சமயத்தில் எங்கிருந்தெல்லாமோ பண்டிதர்கள் சாஸ்திர வல்லுநர்கள் தேசத்தின் பல பாகங்களிலிருந்து கும்பகோணம் மடத்துக்கு வருவார்கள். அற்புதமான சதஸ் கூடும். தர்க்கம், வாதம், வாக்ய அர்த்த விசாரம் , பிரசங்கம் எல்லாம் விறுவிறுப்பாக நடக்கும். காலை முதல் மாலை, இரவு வரை அதில் அவர்கள் பங்கேற்பார் கள். எல்லோருமே சிறந்த சாஸ்திர ஞானம் கொண்டவர்கள். மஹா பெரியவா அதில் ஆர்வத்தோடு பங்கேற்பார்.
ஒரு சமயம் ஒரு விவாதம், பிரசங்கம் நடந்த பிறகு அது விஷயமாக ஒரு கருத்துக்கு தக்க விளக்கம் வேண்டும் என ஒரு பண்டிதர் கேட்டார். மஹாமஹோபாத்யாய ஹரிஹர சாஸ்திரிகள், பல சமஸ்க்ரித நூல்கள் வெளியிட்டவர், அதற்கு ஒருமணி நேரத்துக்கு மேலாக பேசி விளக்கம் தந்தார். அப்படியும் சில பண்டிதர்களுக்கு அவர் விளக்கத்தில் திருப்தி ஏற்படவில்லை. இன்னும் சரியான விளக்கத்தை எதிர் பார்த்தார்கள். வேறு எந்த பண்டிதரும் சாஸ்த்ர ஞானியும் விளக்க முன் வரவில்லை.
''அதை நான் புரியும்படியாக விளக்குகிறேன்'' என்று நமது பரமாச்சார்யா முன் வந்த போது எல்லோருக்கும் ஆச்சர்யம். எளிமையான சமஸ்க்ரிதத்தில் அந்த கருத்துக்கு அற்புதமாக மஹா பெரியவா தனக்கே உரிய எளிமையோடு விளக்கமளித்தார். ஹரிஹர சாஸ்திரிகள் மற்றும் அநேகரும் மஹா பெரியவாவை நமஸ்கரித்துப் போற்றினர்.
அப்போதெல்லாம் 21வயது முடியும் வரை மேஜர் ஆகாததால் மடத்தின் சொத்துக்களை மஹா பெரியவா நிர்வகிக்க இயலாது என்பதால் ஜில்லா நீதி மன்றம் பொறுப்பேற்றது. சொத்து அப்படி ஒன்றும் பெரிசாக இல்லை என்றாலும் நீதி மன்றம் 1915 மே மாதம் வரை கொளிஞ்சி வாடி C H வெங்கட்ரமண அய்யர் வசம் மடத்தின் சகல சொத்து அதிகாரத்தை ஒப்புவித்திருந்தது.
1915 சங்கர ஜெயந்தி அன்று 21 வயது முடிந்த மஹா பெரியவாளின் ஆளுமைக்கு கோர்ட் மடத்தையும் அதன் சொத்துக்களையும் நிர்வாகம் முழுப் பொறுப்பேற்க தீர்ப்பளித்தது. மஹா பெரியவாளுக்கு நிர்வாக பொறுப்பில் ஸ்ரீ பசுபதி ஐயர் பெரிதும் உதவியாக இருந்தார். அவர் திருப்பாதிரிப்புலியூர் காரர். நல்ல அனுபவ சாலி. எந்த ஆவணத்திலும் மகா பெரியவா கையெழுத்து கிடையாது. ஸ்ரீமுகம் முத்திரை மட்டுமே வைக்கப்பட்டது.
1915ம் வருஷம் மகா பெரியவா ஜெயந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாக சாஸ்திரங்கள் விளக்கமளிக்கப்பட்டு ''ஆர்ய தர்மம்'' என்ற மாதாந்திர இதழ் மடத்தின் ஆதரவில் ஸ்ரீ T K பாலசுப்பிரமணிய ஐயரால் ஸ்ரீரங்கம் வாணிவிலாஸ் பிரின்டிங் பிரஸ் மூலம் வெளியிடப்பட்டது. T K கோபிநாத ராவ் என்பவர் மேற்பார்வையாளராக இருந்தார்.
1916ம் வருஷம் ஆக்டொபர் மாதம் நவராத்ரி வைபவம் கும்பகோணம் மட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒன்பது நாளும் தினமும் ஸ்தோத்திரங்கள், நெய்த்தீபங்கள், தினமும் லக்ஷ அர்ச்சனை. பூஜைகள் அன்னதானம் அற்புதமாக நடந்தது.
நமது முண்டாசு கவிஞர் பாரதியார் கூட இந்த நவராத்ரி வைபவத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுனார் . அதில்:
“ It is common around the land to celebrate the Goddess and her splendor during the spring season when she showers her blessings. It is a common and great practice to worship her during these nine days. There was flash news in a newspaper that special celebrations were to be conducted on this occasion at the Kumbakonam Sankara mutt. Even though it was a common practice, I was curious about Sankara mutt and started to read the news. More than half the article was about Shastras and it was amazing to see the Shastras in a commercial newspaper. But the Shastras were truthful and I was thrilled to read the story”.
''நவராத்ரி விழா கொண்டாடுவது பொதுவாக நமது வழக்கம் தான். நாடெங்கும் ஒன்பது நாளும் கோலாகலமாக மூன்று தேவிகளையும் வழிபடுவார்கள். ஒரு ஆங்கில பத்ரிகையில் இந்த வருஷம் (1916) கும்பகோணம் சங்கரமடம் நவராத்ரி விழாவை விமரிசையாக கொண்டா டப் போகிறார்கள் என்று கொட்டையாக ஒரு பெட்டிச் செய்தி வந்ததைப் படித்து வியந்தேன். அந்த கட்டுரையில் பாதிக்கு மேல் சாஸ்திரம் பற்றி, விதி முறைகள் பற்றி எழுதி இருந்தது. ஒரு வியாபார பத்ரிகையில்சாஸ்திரங்கள் பற்றிய இவ்வளவு விவரங்கள் வந்தது ஆச்சரியமளித்தது. சாஸ்திரங்கள் வாஸ்தவம் தான்
உண்மையானவை தான். இதை அந்த கட்டுரை தெளிவாக ஆச்சர்யமாக வெளியிட்டிருந்தது.''
நவராத்ரி வைபவத்தை சிறப்பாக கொண்டாட தஞ்சாவூர் நிலச்சுவான்தார்கள், குறிப்பாக பில்லூர் அபிராமி ஐயர் , வில்லியனூர் வைத்யநாத ஐயர் கோட்டூர் கிருஷ்ணய்யர்,, கொத்தன்குடி ஸ்ரீனிவாச ஐயர் , கல்லூர் வெங்கப்ப ஐயர் , M R ராமசேஷ ஐயர் , சென்னை கணேஷ் கம்பெனி முதலாளி, சித்தமல்லி சுப்ரமணிய ஐயர் ஆகியோர் இதில் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு நிதி உதவி செய்ய முன்பவந்தவர்களில் சிலர் திருப் பனந்தாள் காசி மடம் , ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான், ஆண்டிபட்டி ஜமீன்தார், SRMC பெத்தாச்சி செட்டியார், நங்கவரம் ராஜப்ப ஐயர் ஆகியோர்.
நவராத்ரி வைபவத்தை தொடர்ந்து விவரமாக அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment