பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
''சேரவேண்டிய இடம் சேர்ந்த புடவை''.
கிராமங்களில் மழை உயிர் நாடி. நன்றாக மழை பெய்தால் ஒரு சொட்டு கூட வீணாகா மல் குளம் ஏரி குட்டை என்று நிரப்பி விடுவார் கள். கிணறுகள் விளிம்பு வரை ஜலம் நிறைந்தி ருக்கும். எங்கும் வயல்கள் என்பதால் நிலத்தடி நீர் செழுமையைத் தரும். பார்க்கும் இட மெல்லாம் பச்சைப் பசேல் என்று காட்சி அளிக்கும். இதற்கு யாருக்கு நன்றி தெரிவிப் பார்கள் என்றால் ஊருக்கு ஊர் தாயாக நின்று காக்கும் அம்மன். அவள் பெயர் மாரி அம்மன். மாரி என்றால் மழை. மழை தரும் அம்மன். நீரின்றி அமையாது இவ்வுலகம் அல்லவா?
மஹா பெரியவாளுக்கும் மாரியம்மனுக்கும் நிறைய சம்பந்தமுண்டு. மாரி சாதாரண நீரை மழை தருபவள். பெரியவா அருள் மழை, கருணை வெள்ளம் தருபவர். இருவருமே தாய்க்கு சமானம் . எதுவேண்டுமானாலும் அவர்களைக் கேட்க ஓடிவருவார்கள். ஊரில் எல்லோரையும் நோய் நொடியின்றி காப்பாற்ற மாரியம்மனை வேண்டிக் கொள்வார்கள். மொத்தத்தில் மாரியம்மன் கிராமத்தை ரக்ஷிப்பவள். மஹாபெரியவா இந்த ஜகத்தையே ரட்சிக்கும் ஜகத்குரு. அம்மனிடம் நாம் வேண்டியது நடந்தால் நிறைவு பெற்றால் காணிக்கை செலுத்து கிறோம். மஹா பெரியவா எந்த காணிக் கையும் இல்லாமல் எதையும் எல்லாவற்றை யும் நிறைவேற்றுபவர். அது ஒன்றே வித்யாசம்.
இனி வருவது நான் படித்து மகிழ்ந்த ஒரு சம்பவம்.
காஞ்சிபுரத்தில் ரெண்டு காமாக்ஷிகள் ஒரு காமாக்ஷியை பெரியதாக ஒரு கோவிலில் தரிசிக்கலாம். இன்னொரு காமாக்ஷி மடத்தில் எளிமையாக காட்சி தரும் மஹா பெரியவா.
சென்னையில் ஒரு பணக்காரருக்கு ஏதோ குறை. கஷ்டம். அது நிவர்த்தியானால் நேரே ஓடிவந்து ''காமாக்ஷி உனக்கு பட்டுப்புடவை சாத்துகிறேன்'' என்று வேண்டிக்கொண்டார்.. அவர் எண்ணியது நிறைவேறிய மகிழ்ச்சியில் குடும்பத்தோடும் அர்ச்சனைக்கு புஷ்பங்கள், பழங்கள், காணிக்கை, இதோடு அவர் வேண்டிக்கொண்ட ஒரு உயர்ந்த பட்டுப் புடவையோடு காஞ்சிபுரம் புறப்பட்டார். எப்போதும் காஞ்சி மஹா பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டு அப்புறம் அருகே இருக்கும் காமாக்ஷி ஆலயத்துக்குப் போவது அவரது வழக்கம்.
அன்று ஆடி வெள்ளிக்கிழமை. நல்ல கூட்டம். ஒரு சித்த ஸ்வாதீனம் அற்ற ஒரு ஏழை பெண்மணி ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி, சிரித்துக்கொண்டு தெருவில் அலைந்து கொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்க பலர். பரிதாபப் பட சிலர். தலை சிக்கு பிடித்து கிழிந்த ஆடையோடு அழுக்காக நின்றாள். அவளை சிலர் விரட்ட நேரே நடந்து காஞ்சி சங்கரமட வாசலில் வந்து நின்றாள். மடத்தில் பணியாற்றிய சிலர் ''இங்கே நிற்காதே போ'' என்று விரட்டினார்கள். அவள் மசியவில்லை. அங்கேயே வெகு நேரம் நின்று கொண்டிருந் தாள். சில நேரம் உட்கார்ந்து கொண்டிருப் பாள் .
''என்னடா அங்கே சத்தம்?'' மஹா பெரியவா குரல்.
''பெரியவா, யாரோ ஒரு பைத்தியக்காரி வாசலில் வந்து உட்கார்ந்துண்டு நகரமாட் டேங்கிறா .அழிச்சாட்டியம் பண்றா''பெரியவா முகத்தில் புன்னகை.
"அவளை யாரும் தொந்தரவு பண்ணாதேங் கோ. அவள் இஷ்டப்படி விட்டுவிடுங்கள் அவள் மடத்தில் நுழைந்தாலும் தடுக்க வேண்டாம்''
மடத்தில் உள்ளவர்களுக்கு இது மஹா பெரியவா கட்டளை. இந்த சமயத்தில் தான் மேலே சொன்ன பணக்காரர் குடும்பத்தோடு நேரே மடத்திற்கு வந்து கொண்டிருந்தார் தெரு முக்கில் அவர் குடும்பத்தோடு கைகளில் தட்டுக ளோடு அவர் குடும்பம் நடந்து வந்து கொண்டிருந்தது. ஒரு தட்டில் சிவப்பு நிற பட்டுப்புடவை. அந்த பைத்தியக்காரி அவரையும் தட்டுகளையும் பார்த்துவிட்டாள் . அவர்களிடம் ஓடினாள். அருகே வந்து கூச்சல் போட்டாள் .
''புடவையைக் கொடு'. எனக்கு புடவை வேண்டும்'' .
குடும்பத்தார் விரட்டினார்கள். அவள் போகாமல் தொடர்ந்தாள் .
'இது காமாக்ஷி அம்மனுக்கு சாற்றுவதற்கு வைத்திருக்கும் புடவை. தூரப்போ'' என்கிறார் பணக்காரர். அந்த பைத்தியம் பணக்காரர் மனைவியிடம் கெஞ்சியது
'அவளுக்கு புடவைக்கு என்ன பஞ்சம் எனக்கு அந்த புடவையைக் கொடுக்கச் சொல்லு ''
அந்த செல்வந்தர் அவளோடு பேசாமல் விடுவிடுவென்று வேகமாக நடந்து நேரே மடத்திற்குள் நுழைந்தார். அந்த சித்த ஸ்வாதீ னமற்ற பெண்ணும் கூடவே வந்துவிட்டாள் .
ஏற்கனவே பெரியவா அந்தப்பெண்ணை யாரும் தடுக்க வேண்டாம் என்று மடத்தில் உள்ளவர் களுக்கு அறிவுறுத்தி இருந்ததால் எந்த தடையும் இல்லாமல் அந்தப் பெண் மடத்திற்குள் நுழைந்தாள். இது தெரியாமல் பணக்காரர் மடத்து சிப்பந்திகளிடம்
''இதை ஏன் உள்ளே விட்டீர்கள் ?'' என்று உரக்க கோபமாக கேட்டார்
''பெரியவா உத்தரவு '' என்று பதில் வந்தது.
இதற்குள் பெரியவாளை தரிசனம் செய்த பணக்காரர் நடந்ததை எல்லாம் பெரியவாளி டம் சொன்னார். அந்த பெண்ணும் உள்ளே வந்துவிட்டாள் . சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருந்தாள். பெரியவாளையும் அவள் விட வில்லை.
'அவளுக்கென்ன புடவைக்கு பஞ்சமா, எனக்கு அந்த புடவையை கொடுக்க சொல்லு'' என்று கேட்டாள்.
பெரியவா அவளுக்கு பதில் சொன்னார்:
''உனக்கு அதுதான் சந்தோஷம் னா நீ யே அந்த புடவையை வாங்கிக்கோ''.இது பணக்காரருக்கு பெரிய ஷாக். ''
''பெரியவா க்ஷமிக்கணும். இது அம்பாளுக்கு எடுத்த புடவை. இதை அந்த பொண்ணு கிட்ட கொடுக்க சொல்றேளே''
"நீ அவள் கேட்ட அந்த புடவையைக் கொடுத் துடு. அது சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்து விடும்'' என்று பணக்காரர் மனைவியிடம் பெரியவா கண்டிப்பாக சொல்லிவிட்டார். .
மஹா பெரியவா தீர்க்கமாய் சொன்னபிறகு அப்பீல் ஏது? இருந்தாலும் ரொம்ப தயக்கத் துடனே அந்தப் புடவையை பணக்காரர் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அந்த பெண்ணும் அதை வாங்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு சிரித்துக்கொண்டே வெளியே ஓடியது.
இந்த அதிர்ச்சி கொஞ்சநேரம் இருந்தது. மஹா பெரியவா வேறு எதுவும் பேசவில்லை. பிரசாதம் கொடுத்து அனுப்பினார் பணக் காரர் குடும்பத் தோடு அடுத்த முறை வரும்போது புடவை காணிக்கை செலுத்த மனதில் வேண்டிக் கொண்டு காமாக்ஷி ஆலயம் சென்றார். தனக்கு முன்னால் அந்த சித்த ஸ்வாதீனமற்ற பெண் ணும் போவதைக் கண்டார். அவருக்கு ஒரு சின்ன நப்பாசை. நைச்சியமாக பேசி கொஞ்சம் பணம், பழம் கொடுத்து அந்த புடவையை அந்த பெண்ணி டமிருந்து மெதுவாக வாங்கிக் கொண்டு விடலாமே. அம்பாளுக்கு வேண்டிக் கொண்ட படி சாற்றி விடலாமே! ''மனைவியிடம் சொன்னார்:
''என் மனசுலே வருத்தமா இருக்கு. நான் போய் அந்த பெண் கிட்ட அந்த புடவையை எப்படி யாவது திரும்பி வாங்கிட்டு வந்துடறேன். நாம வேணும்னா வேற சேலை எடுத்து அந்த பொண்ணுக்கு கொடுத்துடுவோம்''.
''ஆமாங்க. எனக்கும் மனசு சரியில்லைங்க. அம்பாளுக்கு செய்ய வேண்டியதுன்னு வேண்டிக்கிட்டு இந்த பொண்ணுக்கு கொடுத்துட்டதாலே அபசகுனமாயிடுத்தே. ஏதேனும் தெய்வ குத்தம் வந்துடுமோன்னு தோணுது. நீங்க போயிட்டு எப்படியாவது கேட்டு சேலையை வாங்கிட்டு வந்துருங்க''
பணக்காரர் அந்த பெண்ணைப் பின் தொடர்ந்தார். அவள் காது கேட்க உரக்க '' அந்த புடவையை குடுத்துடும்மா . நான் உனக்கு வேற புடவை வாங்கி தரேன் '' என்று திருப்பி திருப்பி சொன்னார். அவள் வேகமாக நடந்தாள். அடுத்த தெருவில் நுழைந்தாள் . ஒரு இடத்தில் அந்த பெண் திரும்பி நின்றாள். அவரைப் பார்த்தாள் . அவளைப் பார்த்த பணக்காரர் அப்படியே மயக்கம்போட்டு மூர்ச்சையாகி தரையில் விழுந்தார்.
நேரமாகவே, அவருக்காக காத்திருந்த மனைவி அவரைக் காணோமே என்று கலக்கமடைந்து மடத்திற்கு சென்று அங்கே உள்ளவர்களி டம் விஷயத்தை சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு தன் கணவனைத் தேடிச் சென்றார்.
தெரு வளைவில் சற்று தூரத்தில் மூர்ச்சை யாகி கிடந்த கணவரை மடத்தில் உ ள்ளவர்கள் உதவியுடன் தூக்கிக் கொண்டு மடத்திற்கு வந்தார்கள்.
மயக்கம் தீர்ந்து கண் திறந்தார் பணக்காரர். பெரியவாளைப் பார்த்தார். இரு கரங்களை யும் சிரத்திற்கு மேல் கூப்பினார். பேச முடியவில்லை.
"என்ன? இப்ப உன் சந்தேகம் தீர்ந்துடுத்தா? என் மேல நம்பிக்கை இல்லாம தானே அந்த பொண்ணு கிட்ட புடவையைத் திரும்ப வாங்கப் போனே?''
''பெரியவா என்னை மன்னிச்சுடுங்க. தெரியா ம தப்பு பண்ணிட்டேன். இனிமேல் இது மாதிரி செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்க பெரியவா '' . கதறினார் பணக்காரர்.
"நான் உன்கிட்ட என்ன சொன்னேன் நீ அந்த புடவையை அந்த பொண்ணு கிட்ட கொடு அது சேர வேண்டிய இடத்துல போய் சேர்ந்துரும்னு சொன்னேன் இல்லையா. நீ விழுந்த தெருக் கோடியில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு அங்க போய் பாத்துட்டு வா இப்போ உன் சந்தேகம் முழுசாவே தீர்ந்துடும்"
No comments:
Post a Comment