Monday, May 24, 2021

pesum deivam





 


பேசும் தெய்வம் --    நங்கநல்லூர்  J  K  SIVAN  

 6.   '''இந்த புதர் நிலம் கொடுத்தால்  போதும்''


வெள்ளைக்காரர்கள் ஆட்சி  பலம் பெற்று  எங்கும்  வேகமாக பரவிக் கொண்டிருந்த   காலம். அவர்களதுநிர்வாகிகளாக  சிற்றரரசுகள் குறுநில மன்னர்கள்  இயங்கி அவர்கள் அதிகாரத் தில்  செயல்பட்ட காலம். 

18ம்   நூற்றாண்டில் இவ்வாறு,  தஞ்சாவூர்  மராத் திய  ராஜாக்கள் வசம் இருந்தது.  முகலா யர்கள் ஆக்கிரமிப்பு, அக்ரமங்களிலிருந்து   தற்காப்புக் காக  காஞ்சி  காம கோடி  பீட நிர்வாகம்  காஞ்சி யிலிருந்து  தஞ்சை ஜில்லாவுக்கு இடம் பெயர்ந் தது.  

அப்போதிருந்த   62வது பீடாதிபதியை   உடை யார்பாளையம்  சிற்றரசர் அவர்கள்  சமஸ்தா னத்திற்கு அழைத்து   உபசரித்து  சிலகாலம்  தங்கி  கௌரவிக்க விரும்பினார்.   பீடாதிபதிகள் அழைப்பை ஏற்று  உடையார்   பாளையத்திலும் தஞ்சாவூரிலுமாக  வாசம் செய்து கொண்டி ருந்தார்.   தஞ்ஜாவூர் மராத்திய ராஜா   காவிரிக் கரையில் ஒரு மடம் கட்டிக்  கொடுத்தார். பீடாதிபதிகள் அங்கே  சென்று தங்கி,  கும்ப கோணம்  மடம்   நிர்வாகத்தை  நடத்திக் கொண்டி ருந்தது.  பீடாதிபதிகள்  ஒரு முறை  திண்டிவனத்தில் மூன்று நாள்  வாசம் செய்தார். அவரது பூர்வாஸ்ரம பெற்றோர்  வாழும் இடம் அது.  எண்ணற்றபக்தர்கள்  பெரியவா அன்றாடம்  நிகழ்த்தும் சந்திரமௌலீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள் பூஜையை தரிசிக்க கூடினர். பிரசாதம் பெற்றார்கள்.
+++

1907ல்   மஹா பெரியவா  திண்டிவனம்  சென்ற போது  எப்போதுமில்லா  பக்தர் கூட்டம்.  திண்டிவனத்தில்  மஹா பெரியவாளை  சிறு குழந்தையாக கண்டவர்கள், அவரை  ஜகத் குருவாக தரிசிக்க கூட்டமாக  கூடினார்கள்.   ஆர்காட்  அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூல்  கிறிஸ்தவ   ஆசிரியர்களும் இந்த சந்தர்ப்பத்தை விடாமல் தமது பழைய மாணவன் தற்போது லோக குருவை தரிசித்தனர்.  அவர்களுக்கும்  பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்   தக்க  பரிசுகள்  அளித்து வாழ்த்தினார் மஹா பெரியவா.

++
கும்பகோணம்  மட நிர்வாகம்  மஹா பெரியவா 68 வது பீடாதிபதியாக பட்டம் ஏற்றதைக்  கொண் டாட பெரிய  விழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள்.   

பிலவங்க வருஷம்   சித்திரை  மாதம்  27ம் நாள்   9.5.1907  அன்று   பெரிய விழாவாக அந்த வைபவம்  நடந்தது. தேசத்தில் பல பாகங்களிலிருந்தும் அநேகர்  வந்து பங்கேற்றார்கள். 

தஞ்சாவூர் சிவாஜி மகாராஜா தனது  இரு  பட்ட மகிஷிகளை  தனது சார்பில் அனுப்பி  ராஜ மரியாதைகள் செய்தார்.   எல்லா கோவில்க ளிலும் விசேஷ பூஜைகள் நிகழ்ந்தன.  ஆயிரக் கணக் கானோருக்கு  அன்னதானம் வழங்கப் பட்டது.   வித்வான்கள் கலைஞர்கள் எல்லோ ருக்கும்  விருதுகள் அளிக்கப்பட்டன.

குறிப்பிட்ட முகூர்த்த காலத்தில்  நாட்டின் பல புண்ய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரால் மஹா பெரியவாளுக்கு   பட்டாபி ஷேகம்  செய்யப்பட்டது. சிம்ஹாசனத்தில் அமர்த்தப்பட்டார்.  மஹா பெரியவாள் படம் எங்கும்  மடத்து  யானை மேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மொத்தத்தில் மறக்கமுடியாத ஒரு கோலாகல நிகழ்ச்சி .
++  
மடத்து பீடாதிபதிகள்  ஜகத் குரு  என்பதால்  அடிக்கடி திக் விஜயம் செய்து பல பிரதேசங்களில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து வாழ்த்தி,  ஆசிர்வ திப்பது வழக்கம்.   ஆகவே  மஹா பெரியவா  திருவானைக்காவல் ஆலயம் சென்றார்.   கோச்செங்கட் சோழன் கட்டிய  பழைமையான  சங்ககாலத்தை சேர்ந்த  ஆயிரம் வருஷ த்துக்கு மேற்பட்ட  ஆலயம்.   ஆதிசங்கரர் இங்கே  அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்த ஆலயம்.

கானாடுகாத்தானை சேர்ந்த   ஸ்ரீ   ராம் என்பவர்  குடும்பம்  லக்ஷக்கணக்கான ரூபாய்களை செலவழித்து  கும்பாபிஷேகம் செய்த  ஆலயம்.  1908 பெப்ருவரி யில் கும்பாபிஷகம்.   சிருங்கேரி  சாரதா பீடாதிபதி   ஜகதகுரு ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள்  வந்திருந்து   கும்பாபிஷேகத்தில்  பங்கேற்று  கௌரவித்தார். 
 
மஹா பெரியவாளுக்கு  அழைப்பு அனுப்பி  இருந்ததால்  முதல் திக்விஜய  யாத்திரையாக  கும்பகோணத் திலிருந்து   திருவானைக்காவல் சென்றார்.   ஒருவாரம் முன்னதாகவே சென்று  ஏற்பாடுகளை கவனித்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்க உதவினார். 

பிறகு  ஒரு  காலத்தில்  சோழர்கள் தலைநகரான உறையூர் அருகே உள்ள   பாண்டமங்கலம் கிராம  அக்ரஹாரத்தில்  சிலநாட்கள் வாசம். 

அங்கி ருந் து கிளம்பி  மஹா பெரியவா ராமநாத புரம் ஜில்லாவில்  இளையாத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ள  65வது பீடாதிபதி  ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தை தரிசிக்க விரும்பினார்.  போகும் வழியில்   கடியாப்பட்டி , கோணப்பட்டு , கீழ சேவல் பட்டி,  போன்ற  செட்டிநாடு கிராமங் களுக்குச் சென்று  பக்தர்களுக்கு தரிசனம் தந்து  வாழ்த்துகள்  ஆசிகள் அருளினார்.  பக்தர்கள்  விருப்பத்திற்கிணங்கி புதுக்கோட்டையில் 15 நாட்கள் தங்கி முகாம் போட்டார்.  .  அவ்வூர் மக்கள்  காஞ்சிமடத்தோடு நெருங்கி யவர்கள். இளம்  ஜகதகுருவைக்  கண்டு மகிழ்ந்து  வரவேற்று உபசரித்தார்கள்.  

செட்டிநாட்டில் இளையாத்தங்குடி  கிராம  சிவாலயத்தில்  சிவன் பெயர்  கைலாசநாதர்.    அம்பாள்  நித்யகல்யாணி.  இந்த  கோவில் மிகப் பழமை வாய்ந்தது. நகரத்தார் அனைவரும் கொண்டாடும் ஆலயம். பின்னர் செட்டிநாடு   8 பிரிவுக ளாக பிரிந்தது. மாத்தூர்,  வைரவன் கோயில், இரணியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி என்று கிராமங்களாக  செட்டிநாடு பிரிந்தது. 
65வது பீடாதிபதி  ஸ்ரீ மகா தேவேந்திர  சரஸ்வதி செட்டிநாடு பிரயாணத்தின் போது  இளையாத் தங்குடி கிராமத்தில்  சில  மாதங்கள்  தங்கினார். நகரத்தார்  அவரை வரவேற்று சிறப்பித்து மகிழ்ந்தனர்.  

ஒருநாள்   கிராமத்தில் ஆலயத்தை சுற்றி   நடந்து செல்லும்போது  ஒரு முட்புதர் கண்ணில் பட்டது. அங்கேயே சிறிது நேரம் நின்றார். மறுநாள்  அந்த  ஊர்  தேவஸ்தான நிர்வாகிகளைக்கூட்டி  இந்த முட்புதர் நிறைந்த இடத்தை  மடத்துக்கு அளிக்க முடியுமா என்று கேட்டார்.  

''இந்த முட்புதர் நிலம் எதற்கு  வேறு நல்ல இடம் தருகிறோம்''  என்று நிர்வாகத்தார்  பதிலளித் தார்கள்.   

''இல்லை, இந்த இடம் தந்தால் போதுமானது'' என்று பதிலளித்தார் பீடாதிபதிகள்.   இளை யாத்தங்குடி ஆலய நிர்வாகத்தார் அவர் சுட்டிக்காட்டிய முட்புதர் நிலத்தை மடத்துக்கு  அளிக்க  ஒப்புதல் தந்தனர்.

அடுத்து ஒருவாரத்தில் வினோத சம்பவங்கள் நடந்தன.  65வது பீடாதிபதிகள் உடல்நிலை பலஹீனம் அடைந்து க்ஷீணித்தது.   

விரோதி வருஷம் பங்குனி மாதம்  எட்டாம்நாள்  அமாவாஸ்யை அன்று  பீடாதிபதி சித்தி அடைந்தார்.  நகரத்தார் பக்தர்கள்  ஸ்வாமிகள் சுட்டிக்காட்டிய  இடத்தில் புதர்களை நீக்கி  அவரது அதிஷ்டானத்தை அமைத்து அங்கே ஒரு சிவலிங்கம்  மற்றும்  ஆதிசங்கர  சிலா  ஸ்தாப னம் செய்தார்கள்.  இன்றும் அந்த அதிஷ்டானம்  இளையாத்தங்குடி தேவஸ்தான நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...